Featured Posts
Home » Tag Archives: நோன்பு (page 8)

Tag Archives: நோன்பு

பயணத்தில் நோன்பு நோற்கலாமா?

684. ஹம்ஸா இப்னு அம்ர் (ரலி) நபி (ஸல்) அவர்களிடம், ‘பயணத்தில் நான் நோன்பு நோற்கலாமா?’ என்று கேட்டார். அவர் அதிகம் நோன்பு நோற்பவராக இருந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், ‘நீ விரும்பினால் நோன்பு நோற்றுக் கொள்; நீ விரும்பினால் விட்டுவிடு” என்றார்கள். புஹாரி: 1943 ஆயிஷா (ரலி). 685. ”நாங்கள் நபி (ஸல்) அவர்களின் பயணமொன்றில் வெயில் மிகுந்த ஒரு நாளில் அவர்களுடன் சென்றோம். கடும் வெப்பத்தின் …

Read More »

நோன்பு நோற்காதோர் அதிக நன்மை பெற்றது.

683. (ஒரு பயணத்தில்) நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். (அன்று) தம் ஆடையால் தமக்குத் தாமே நிழலிட்டுக் கொண்டிருந்தவரே எங்களில் அதிக நிழல் பெற்றவராய் இருந்தார். (அந்த அளவுக்கு வெயில் கடுமையாக இருந்தது. ஒதுங்க இடமில்லை.) நோன்பு நோற்றவர்கள் எந்த வேலையும் செய்யவில்லை. நோன்பு நோற்காமல் விட்டுவிட்டவர்கள் வாகனங்களை (ஒட்டகங்களை) எழுப்பி, (தண்ணீர் புகட்டியும் தீனி போட்டும்) வேலை செய்தார்கள். நோன்பாளிகளுக்கு (ஓய்வெடுக்க கூடாரம் அடித்தும்) பணி புரிந்தார்கள். …

Read More »

பயணிகள் நோன்பை விடுவது.

680. ”நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்; அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். ‘கதீத்’ எனும் இடத்தை அடைந்ததும் நோன்பைவிட்டார்கள்; மக்களும் நோன்பைவிட்டனர்!” புஹாரி : 1944 இப்னு அப்பாஸ் (ரலி). 681. நபி (ஸல்) அவர்கள் ஒரு பயணத்தில் இருந்தபோது, ஒருவர் நிழலில் தங்க வைக்கப்பட்டு மக்கள் (அவரைச் சுற்றிலும்) குழுமியிருந்ததைக் கண்டார்கள். ‘இவருக்கு என்ன நேர்ந்தது?’ என்று கேட்டார்கள். ‘இவர் நோன்பு நோற்றிருக்கிறார்!” என்று …

Read More »

நோன்பாளி குளிப்பு கடமையானவராகயிருத்தல்.

677. ”நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தாம்பத்திய உறவில் ஈடுபட்டு, குளிப்பு கடமையானவர்களாக ஃபஜ்ரு நேரத்தை அடைவார்கள். குளித்துவிட்டு நோன்பைத் தொடர்வார்கள்!”. புஹாரி : 1930 ஆயிஷா (ரலி).

Read More »

நோன்பு நோற்ற நிலையில் மனைவியை முத்தமிட்டால்…

675. ”நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் தம் மனைவியரில் ஒருவரை முத்தமிடுவார்கள்!” என்று சொல்லிவிட்டு ஆயிஷா (ரலி) சிரித்தார்கள். புஹாரி : 1928 ஆயிஷா (ரலி). 676. ”நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்ற நிலையில் (தம் மனைவியரைக்) கட்டியணைப்பார்கள்; முத்தமிடுவார்கள்! உங்களில் எவரையும் விட தம் (உடல்) உணர்ச்சியை அதிகம் கட்டுப்படுத்திக் கொள்பவர்களாக அவர்கள் இருந்தார்கள்!” புஹாரி : 1927 ஆயிஷா (ரலி).

Read More »

தொடர் நோன்பு நோற்க தடை.

670. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். நபித்தோழர்கள், ‘நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘நான் உங்களைப் போன்றவன் அல்லன்; நிச்சயமாக நான் உண்ணவும் பருகவும் வழங்கப்படுகிறேன்” என்றார்கள். புஹாரி : 1962 இப்னு உமர் (ரலி). 671. நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். ‘இறைத்தூதர் அவர்களே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே?’ என்று முஸ்லிம்களில் ஒருவர் …

Read More »

63.அன்சாரிகளின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் …

Read More »

56.அறப்போரும் அதன் வழிமுறைகளும்

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2782 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று …

Read More »

32.லைலத்துல் கத்ரின் சிறப்பு

பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2014 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்ததும் நோன்பு நோற்கிறவர் (அதற்கு) முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்! லைலத்துல் கத்ரில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நின்று வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 32, எண் 2015 இப்னு உமர்(ரலி) அறிவித்தார். நபித்தோழர்களில் சிலருக்கு, (ரமளானின்) கடைசி ஏழு நாள்களில் …

Read More »

31.தராவீஹ் தொழுகை

பாகம் 2, அத்தியாயம் 31, எண் 2008-2009 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் ரமளான் (மாதத்தின் சிறப்பு) பற்றி கூறினார்கள். “ரமளானில் நம்பிக்கையுடனும் நன்மையைய் எதிர்பார்த்தும் (தொழுது) வணங்குகிறவரின், முன்னர் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்!” என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். “(ரமளானின் இரவுத் தொழுகையை அவரவர் தனியாகத் தொழுது கொள்ளும்) இந்நிலையில் மக்கள் இருக்கும்பொழுது நபி(ஸல்) அவர்கள் மரணித்தார்கள். அபூ பக்ர்(ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் உமர்(ரலி) அவர்களின் ஆட்சியின் ஆரம்பக் காலத்திலும் …

Read More »