Featured Posts
Home » Tag Archives: மக்கா (page 4)

Tag Archives: மக்கா

63.அன்சாரிகளின் சிறப்புகள்

பாகம் 4, அத்தியாயம் 63, எண் 3776 ஃகைலான இப்னு ஜரீர்(ரஹ்) அறிவித்தார் நான் அனஸ்(ரலி) அவர்களிடம், ‘(அவ்ஸ் மற்றும் கஸ்ரஜ் குலத்தாரான உங்களுக்கு) ‘அன்சார் உதவியாளர்கள்’ என்னும் பெயர் வந்ததைப் பற்றி எனக்குக் கூறுங்கள். உங்களுக்கு அந்தப் பெயர் (குர்ஆனுக்கு முன்பே) சூட்டப்பட்டிருந்ததா? அல்லது அல்லாஹ் உங்களுக்கு அந்தப் பெயரைச் சூட்டினானா?’ என்று கேட்டேன். அவர்கள், ‘அல்லாஹ் தான் எங்களுக்கு (‘அன்சார்’ என்று திருக்குர்ஆன் 9:100-ம் வசனத்தில்) பெயர் …

Read More »

56.அறப்போரும் அதன் வழிமுறைகளும்

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2782 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) கூறினார். நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! நற்செயல்களில் சிறந்தது எது?’ என்று கேட்டேன். அவர்கள், ‘தொழுகையை அதற்குரிய வேளையில் தொழுவது” என்று கூறினார்கள். ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன் அவர்கள், ‘பிறகு தாய்தந்தையருக்கு நன்மை செய்வது” என்று பதிலளித்தார்கள். நான், ‘பிறகு எது (சிறந்தது?)” என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ‘இறைவழியில் அறப்போரிடுவதாகும்” என்று …

Read More »

45.கண்டெடுக்கப்பட்ட பொருள்

பாகம் 3, அத்தியாயம் 45, எண் 2426 உபை இப்னு கஅப்(ரலி) அறிவித்தார். நான் ஒரு பணப்பையைக் கண்டெடுத்தேன். அதில் நூறு தீனார்கள் இருந்தன. (அதை எடுத்துக் கொண்டு) நபி(ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள், ‘ஓராண்டுக் காலம் அதைப் பற்றி நீ (பொது) அறிவிப்புக் கொடு” என்று கூறினார்கள். நானும் அதைப் பற்றி அறிவிப்புக் கொடுத்தேன். அதை அடையாளம் புரிந்து கொள்பவர் எவரையும் நான் காணவில்லை. பிறகு, மீண்டும் நான் …

Read More »

40.வகாலத் (கொடுக்கல் வாங்கல்களுக்காக பிறருக்கு அதிகாரம் வழங்குதல்))

பாகம் 2, அத்தியாயம் 40, எண் 2299 அலீ(ரலி) அறிவித்தார். அறுக்கப்பட்ட ஒட்டகங்களுக்கு அணிவிக்கப்பட்டிருந்த சேணங்களையும் தோல்களையும் தர்மம் செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள். பாகம் 2, அத்தியாயம் 40, எண் 2300 உக்பா இப்னு ஆமிர்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் சில ஆடுகளைத் தம் தோழர்களுக்குப் பங்கிட்டுக் கொடுக்குமாறு என்னிடம் கொடுத்தார்கள். (அவ்வாறே நான் பங்கிட்டு முடித்தபின்) ஓர் ஆட்டுக்குட்டி எஞ்சியது. அது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் …

Read More »

37.வாடகை மற்றும் கூலிக்கு ஆள் அமர்த்துதல்

பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2260 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். “தமக்குக் கட்டளையிடப்பட்ட (தர்ம) காரியத்தை மனப்பூர்வமாக நிறைவேற்றக் கூடிய, நம்பகமான கருவூலக் காப்பாளர் தர்மம் செய்பவர்களில் ஒருவராவார்!” என அபூ மூஸா அல் அஷ்அரீ(ரலி) அறிவித்தார். பாகம் 2, அத்தியாயம் 37, எண் 2261 அபூ மூஸா(ரலி) அறிவித்தார். நானும் அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த மற்றும் இருவரும் நபி(ஸல்) அவர்களிடம் சென்றோம்; (அவர்கள் இருவரும் நபி(ஸல) அவர்களிடம் …

Read More »

25.ஹஜ்

பாகம் 2, அத்தியாயம் 25, எண் 1529 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மதீனா வாசிகளுக்கு துல்ஹுலைஃபாவையும் ஷாம் வாசிகளுக்கு ஜுஹ்ஃபாவையும் யமன் வாசிகளுக்கு யலம்லமையும் நஜ்த் வாசிகளுக்கு கர்னையும் இஹ்ராம் அணியும் எல்லைகளாக நிர்ணயித்தார்கள். இவ்வெல்லைகள் இவர்களுக்கும் ஹஜ் உம்ராவுக்காக இவ்வழியே வருபவர்களுக்கும் உரியனவாகும். இந்த வரையறுக்கப்பட்ட எல்லைகளுக்குள் இருப்பவர்கள், தாம் வசிக்குமிடத்திலேயே எங்கேனும் இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் என்றும் மக்கவாசிகள் மக்காவிலேயே இஹ்ராம் அணிந்து கொள்ளலாம் …

Read More »

20.மக்கா மதினாவுடைய பள்ளிவாயிலில் தொழுவதின் சிறப்பு

பாகம் 1, அத்தியாயம் 20, எண் 1188 அபூ ஸயீத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்களிடமிருந்து நான்கு செய்திகளை கேட்டேன். (1197வது ஹதீஸில் இது விவரமாகக் கூறப்படுவதைக் காண்க) பாகம் 1, அத்தியாயம் 20, எண் 1189 இறைத்தூதர்(ஸல்) அவர்கள் அறிவித்தார்கள்: ‘மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதன் னபவி, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிகளைத் தவிர (அதிக நன்மையை எதிர்பார்த்து)ப் பயணம் மேற்கொள்ளக் கூடாது. என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

Read More »

18.கஸ்ருத் தொழுகை

பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1080 இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் (மக்காவில்) பத்தொன்பது நாள்கள் தங்கினார்கள். அந்நாள்களில் கஸ்ருச் செய்தார்கள். நாங்களும் பத்தொன்பது நாள்களுக்குப் பயணம் மேற்கொண்டால் கஸ்ருச் செய்வோம். (அதை விட) அதிகமானால் முழுமையாகத் தொழுவோம். பாகம் 1, அத்தியாயம் 18, எண் 1081 யஹ்யா இப்னு அபீ இஸ்ஹாக் அறிவித்தார். ‘நாங்கள் மதீனாவிலிருந்து மக்காவை நோக்கி நபி(ஸல்) அவர்களுடன் புறப்பட்டோம். நபி(ஸல்) அவர்கள் …

Read More »

17.குர்ஆனிலுள்ள ஸஜ்தா வசனங்கள்

பாகம் 1, அத்தியாயம் 17, எண் 1067 இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று ‘இவ்வாறு செய்வது எனக்குப் போதும்’ என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன். பாகம் 1, …

Read More »

மினா துயர சம்பவத்திற்கு பொறுப்பாளி யார்? (Mina Stampede 2006)

கடந்த 12-ந்தேதி ஜனவரி 2006 (துல்ஹஜ் பிறை 12) மதியம் 12.30லிருந்து 1.30க்கு இடைப்பட்ட நேரத்தில் மினாவில் கூட்ட நெரிசலில் நசுங்கி இறந்த 363 பேர்களின் இறப்புச் செய்தி பலரை துயரத்தில் ஆழ்த்திவிட்டது. ஊடகங்களால் மேம்போக்காக பார்க்கப்படும் இந்நிகழ்ச்சி மற்றும் அதனை பிரதிபலிக்கும் மக்களின் மனநிலை இவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதோடு, இதுபோன்ற துயர சம்பவம் இனிமேலும் நடவாமல் இருக்க ஒரு துரும்பையாவது நகர்த்த வேண்டும் என்ற எண்ணத்திலேயே இதை எழுதுகிறேன். …

Read More »