Featured Posts
Home » Tag Archives: வியாபாரம் (page 2)

Tag Archives: வியாபாரம்

விற்ற ஒட்டகத்தில் சவாரி செய்யலாமா?

1029. (ஒரு போரிலிருந்து திரும்புகையில்) நான் களைப்படைந்து விட்ட என்னுடைய ஒட்டகம் ஒன்றில் சென்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் சென்று அதை அடித்தார்கள். மேலும், அதற்காக பிரார்த்தித்தார்கள். உடனே, அது இதற்கு முன் இதுபோல் எப்போதும் நடந்ததில்லை என்னும் அளவிற்கு வேகமாக நடக்கத் தொடங்கியது. பிறகு நபி (ஸல்) அவர்கள், ‘இதை எனக்கு ஓர் ஊக்கியாவுக்கு நீங்கள் விற்று விடுங்கள்” என்று கேட்டார்கள். அவ்வாறே, என் வீட்டாரிடம் …

Read More »

உணவு தானியங்களை விற்றல்.

1024. நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரைக் கைபரின் ஆளுநராக நியமித்தார்கள். அவர் நபி (ஸல்) அவர்களிடம் உயர்ரகப் பேரீச்சம் பழங்களைக் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள், ‘கைபரில் உள்ள பேரீச்சம் பழங்கள் அனைத்துமே இதே தரத்திலமைந்தவையா?’ என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீது ஆணையாக! ‘இல்லை இறைத்தூதர் அவர்களே! மட்டமான பேரீச்சம் பழத்தில் இரண்டு ஸாவுக்கு இந்தத் தரமான பேரீச்சம் பழத்தில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சம் …

Read More »

தங்கத்துக்கு பகரம் வெள்ளியை விற்றல் பற்றி..

1022. பராஉ இப்னு ஆஸிப் (ரலி), ஸைத் இப்னு அர்கம் (ரலி) ஆகியோரிடம் நாணயமாற்று பற்றிக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் கடனாக வெள்ளிக்குத் தங்கத்தை விற்பதைத் தடை செய்தார்கள் என அவ்விருவரும் பதில் கூறினார். பிறகு இருவரும் மற்றவரைச் சுட்டிக் காட்டி, ‘இவர் என்னைவிடச் சிறந்தவர்’ என்றனர். புஹாரி :2180 அபூ அல் மின்ஹால் (ரலி). 1023. நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கு வெள்ளியை, தங்கத்திற்குத் தங்கத்தைச் சரிக்கு …

Read More »

கனிகள் பழுக்கும் முன் விற்காதே.

1002. மரத்திலுள்ள கனிகள் பக்குவம் அடைவது வரை விற்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் ‘பக்குவமடைவது என்றால் என்ன?’ என்று கேட்கப்பட்டதற்கு ‘சிவக்கும்வரை” என்று விடையளித்துவிட்டு, ‘அல்லாஹ் மரத்திலுள்ள கனிகளை அழித்துவிட்டால்…? எந்த அடிப்படையில் உங்களில் ஒருவர் தம் சகோதரரின் பொருளை எடுத்துக் கொள்ள முடியும்?’ எனக் கேட்டார்கள். புஹாரி :2198 அனஸ் பின் மாலிக் (ரலி).

Read More »

பிறருக்கு குத்தகை நிலத்தை தானமாக வழங்குதல்.

998. நான் தாவூஸ் (ரஹ்) அவர்களிடம், ‘(விளைச்சலில் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டு) நிலத்தைக் குத்தகைக்கு விடுவதை நீங்கள் விட்டுவிட்டால் நன்றாயிருக்கும். ஏனென்றால், நபி (ஸல்) அவர்கள் நிலத்தைக் குத்தகைக்கு விட வேண்டாமென்று மக்களைத் தடுத்தார்கள் என்று சிலர் எண்ணுகிறார்கள்” என்றேன். இதைக்கேட்ட தாவூஸ் (ரஹ்) (என்னிடம்) சொன்னார்கள்: அம்ரே! (என்னுடைய நிலத்தை அவர்களுக்குக் குத்தகைக்கு விடுவதால்) அவர்களுக்கு நிலத்தைக் கொடுத்து நான் உதவுகிறேன். ஏனெனில், ‘நபி (ஸல்) அவர்கள் அதைத் …

Read More »

உணவுக்காக குத்தகைக்கு விடுவது கூடாது.

997. ”எங்களுக்கு உதவியாக இருந்த ஒன்றைக் கூடாது என்று இறைத்தூதர் எங்களைத் தடுத்தார்கள்” என்று (என் தந்தையின் சகோதரர்) ளுஹைர் (ரலி) கூறினார். (உடனே), ‘இறைத்தூதர் சொன்னதே சரியானது” என்று கூறினேன். (அதற்கு) அவர் சொன்னார்; ஒரு முறை என்னை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து, ‘நீங்கள் உங்கள் வயல்களை என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்டார்கள். நீரோடைகளின் கரைகளின் ஓரமாக விளைபவற்றை எங்களுக்குக் கொடுத்து விட வேண்டும் என்னும் நிபந்தனையின் …

Read More »

விளைச்சல் நிலத்தை குத்தகைக்கு விடுதல்.

993. எங்களில் சிலருக்கு உபரி நிலங்கள் சில இருந்தன. அவர்கள், ‘நாங்கள் அவற்றை அவற்றின் விளைச்சலில் மூன்றிலொரு பங்குக்கோ, கால் பங்குக்கோ, அரைப் பங்குக்கோ குத்தகைக்கு விடுவோம்” என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், ‘விளைச்சல் நிலம் வைத்திருப்பவர் அதில் தானே பயிரிடட்டும்; அல்லது தன் சகோதரருக்கு (மனீஹாவாகக்) கொடுத்து விடட்டும். அப்படிக் கொடுக்க மறுத்தால் அவர் தம் நிலத்தைத் தம்மிடமே வைத்துக் கொள்ளட்டும்” என்றார்கள். புஹாரி :ஜாபிர் பின் …

Read More »

முகாபரா முஹாகலா முஸாபனா விற்பனை முறை தடை.

992. நபி (ஸல்) அவர்கள் முகாபராவையும் பலன் உறுதிப்படாத நிலையிலுள்ள, மரத்திலுள்ள கனிகளை விற்பதையும் தடை செய்தார்கள் மேலும், பொன் நாணயத்திற்கும் வெள்ளி நாணயத்திற்கும் (பகரமாக) மட்டுமே (அவற்றை) விற்க வேண்டும் என்று கட்டளையிட்டார்கள். (மரத்திலுள்ள கனிகளுக்குப் பகரமாக சேமிக்கப்பட்ட, உலர்ந்த கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். எனினும்) ‘அராயா’வில் மட்டும் அப்படி விற்பதற்கு அனுமதியளித்தார்கள். புஹாரி :2381 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி).

Read More »

மகரந்த சேர்க்கை.

991. ”மகரந்தச் சேர்க்கை செய்யப்பட்ட பேரீச்ச மரத்தை யாரேனும் விற்றால் அதன் கனிகள் விற்றவருக்கே சேரும்; வாங்கியவர் (தமக்குச் சேர வேண்டுமென்று) நிபந்தனையிட்டிருந்தால் தவிர!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :2204 இப்னு உமர் (ரலி).

Read More »

குத்துமதிப்பாக கணக்கிட்டு விற்க தடை.

985. ”நபி (ஸல்) அவர்கள் மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பாகக் கணக்கிட்டு விற்பதை அராயாவில் (மட்டும்) அனுமதித்தார்கள்!” புஹாரி :2188 ஜைது பின் தாபித் (ரலி). 986. ”நபி (ஸல்) அவர்கள் உலர்ந்த பேரீச்சம் பழங்களுக்காக மரத்திலுள்ள கனிகளை விற்பதைத் தடை செய்தார்கள். அராயாவில் (மட்டும்) அதற்கு அனுமதி வழங்கினார்கள். அராயாக்காரர்கள் (அராயா அடிப்படையில் மரங்களைப் பெற்றவர்கள்) மரத்திலுள்ள கனிகளை குத்துமதிப்பதாகக் கணக்கிட்டு விற்கலாம்! அதை வாங்கியவர்கள் செங்காயாக புசிக்கலாம்! புஹாரி …

Read More »