Featured Posts
Home » Tag Archives: தவறு

Tag Archives: தவறு

88. இஸ்லாத்திலிருந்து வெளியேறியோர்

பாகம் 7, அத்தியாயம் 88, எண் 6918 அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார். ‘யார் இறைநம்பிக்கை கொண்டு பிறகு தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலந்திடவில்லையோ அவர்களுக்கே உண்மையில் அமைதி உண்டு. மேலும், அவர்களே நேர்வழி அடைந்தவர்கள் ஆவர்’ எனும் (திருக்குர்ஆன் 06:82 வது) இறைவசனம் அருளப்பெற்றபோது நபித்தோழர்களுக்கு அது சிரமமாக இருந்தது. மேலும், அவர்கள் ‘எங்களில் யார்தாம் தம் நம்பிக்கையுடன் அநீதியைக் கலக்கவில்லை?’ என்று கூறினர். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் …

Read More »

[பாகம்-9] முஸ்லிமின் வழிமுறை.

மனதுடன் நடந்து கொள்ள வேண்டிய முறை. ஒரு முஸ்லிம் இம்மை, மறுமையின் ஈடேற்றம் தன்னுடைய மனதைத் தூய்மைப்படுத்துவதில் – பண்படுத்துவதில் தான் இருக்கின்றது என்று நம்ப வேண்டும். அல்லாஹ் கூறுகிறான்: மனதைத் தூய்மைப்படுத்தியவர் திண்ணமாக வெற்றியடைந்து விட்டார். அதனை நசுக்கியவர் திண்ணமாகத் தோற்றுவிட்டார். (91:9-10) காலத்தின் மீது சத்தியமாக மனிதன் உண்மையில் நஷ்டத்தில் இருக்கிறான். ஆனால் எவர்கள் இறைநம்பிக்கை கொண்டும் நற்செயல்கள் புரிந்து கொண்டும் மேலும் ஒருவருக்கொருவர் சத்தியத்தை எடுத்துரைத்தும் …

Read More »

இஸ்லாத்தின் அடிப்படைகள்

தூய இஸ்லாத்திற்கு இரண்டு அடிப்படைகள் உண்டு. ஒன்று: லாஇலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர இறைவன் இல்லை. நபி (ஸல்) அவர்கள் தூதராவார்கள்) என்ற திருக்கலிமாவை வாழ்க்கையில் மெய்ப்பித்துச் செயல்படுத்திக் காட்டுதல். அதிலும் குறிப்பிடத்தக்கது அல்லாஹ்வுடன் யாரையும் இணையாக்காமல் இருத்தல். அப்படியென்றால் அல்லாஹ்வை நீ நேசிப்பது போல வேறு எந்த சிருஷ்டியையும் நேசிக்கலாகாது. அல்லாஹ்வை நீ ஆதரவு வைத்து வாழ்வது போல வேறு எந்த சிருஷ்டிகளின் மீதும் ஆதரவு …

Read More »

ரஸூல்மார்களின் பணிகள் யாவை?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் போதனைகளை மக்களுக்குச் சேர்த்து வைக்கின்ற ஓர் இடையாளராக இருந்திருக்கிறார்கள். அதனால் தான் ஹிதாயத் எனும் நேர்வழியை அடியார்களின் உள்ளத்தில் சேர்த்து வைக்கும் பொறுப்புரிமை அல்லாஹ்வுடையது. அது நபியவர்களுக்கு உரியது அல்ல. அதற்கு சக்தி உடையவன் அல்லாஹ் ஒருவனே. திருத்தூதர்களால் இவ்வாறான வேலைகளைச் செய்ய முடியாது.

Read More »

ஒரு ஸஹாபி அறிவிக்கும் ஹதீஸைக் கொண்டு சட்டம் விதிப்பதற்கு மற்ற ஸஹாபிகளின் ஒப்புதலும் வேண்டும்.

ஒரேஒரு ஸஹாபியின் விளக்கத்தை மட்டும் வைத்து காரியங்களை நாம் தீர்மானித்து விடக் கூடாது. ஒரு அறிவிப்பாளர் அறிவிக்கும் ஹதீஸில் உள்ள நேருரையின் கருத்தும், அறிவிப்பாளர் அது விஷயத்தில் விளங்கியிருக்கும் விளக்கமும் வித்தியாசமாகக் காணப்பட்டால் ஹதீஸின் உரையைத்தான் நாம் எடுக்க வேண்டும். அவ்விஷயத்தில் ஸஹாபியின் விளக்கம் சான்றாக எடுக்கப்பட மாட்டாது.

Read More »

வஸீலா ஷபாஅத் என்னும் வார்த்தைகளில் ஏற்பட்ட சந்தேகங்கள்

வார்த்தைகளைப் பற்பல கருத்துக்களுக்குப் பிரயோகிப்பதை அறியாதவர்களும், புரட்டியும், திருப்பியும் சொற்களைக் கூறக் கூடியவர்களுமான சிலரிடத்தில் வஸீலா, தவஸ்ஸுல், ஷபாஅத் போன்ற சில வார்த்தைகள் கிடைத்தபோது அவற்றிற்கு அல்லாஹ்வும், ரஸூலும், ஸஹாபாக்களும், தாபியீன்களும், இமாம்கள் ஆகியோரெல்லாம் விலக்கியிருந்ததற்கு மாற்றமான கருத்துக்களைக் கொடுத்து மக்களை தவறின்பால் திருப்பி விட்டார்கள். இதனால் பலர் தவறினார்கள். இவ்வார்த்தையின் உட்கருத்தைப் புரிந்து கொண்டவர்கள் மிகச் சிலரே. பொதுவாக கல்வி என்பது நன்றாக ஆராய்ந்து கற்று அறிந்து கொள்வதாகும். …

Read More »

‘நபியைக் கொண்டு வஸீலா தேடுவது’ ஸஹாபாக்களின் கருத்து

நபித்தோழர்களான ஸஹாபிகளின் சொற்களில் காணப்படுகின்ற, மேலும் அவர்களின் பேச்சுகளில் பரிமாறப்பட்ட வஸீலா என்ற வார்த்தையின் தாத்பரியத்திற்கு வருவோம். ஸஹாபிகள் பற்பல சம்பவங்களைக் கூறும்போது நாயகத்தைக் கொண்டு அல்லாஹ்வை நெருங்கியதாகவும், அவர்களைக் கொண்டு அவனிடம் வஸீலா தேடியதாகவும் (உதவி கோரியதாகவும்) அல்லாஹ்வின்பால் முன்னோக்கியதாகவும் கூறுவார்கள். பற்பல இடங்களில் இப்படிக் காணப்படுகின்றன.

Read More »

நபிகள் பெருமானார் (ஸல்) அவர்களின் மதிப்பு.

நபிகள் (ஸல்) அவர்கள் எல்லா மக்களுக்கும் பரிந்து பேசி அல்லாஹ்விடம் சிபாரிசு செய்வார்கள். புகழுக்கு உரிய உன்னதமான ஸ்தானமும் அவர்களுக்கு உண்டு. பரிந்து பேசுகின்ற அனைத்து சிபாரிசுகாரர்களை விட மதிப்பிலும், அந்தஸ்திலும் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்களாவார்கள். அவர்களின் அந்தஸ்தின் அருகில் எந்த நபிகளும், எந்த ரசூலும் நெருங்க முடியாது. இவர்கள் அல்லாஹ்விடம் எல்லோரையும் விட மதிப்புக்குரியவர். யார் யாருக்கு அவர்கள் இறைவனிடம் துஆச் செய்து மன்றாடி சிபாரிசு …

Read More »