Featured Posts
Home » Tag Archives: பிக்ஹுல் இஸ்லாம்

Tag Archives: பிக்ஹுல் இஸ்லாம்

பெருநாள் தொழுகை தொழும் முறை | பெருநாள் தொழுகை – 3 [பிக்ஹுல் இஸ்லாம்-047]

பெருநாள் தொழுகை இரண்டு ரக்அத்துக் களைக் கொண்டதாகும். ஏனைய தொழுகைகளை விட மேலதிகமாக சொல்லப்படும் 12 தக்பீர்களால் அது வேறுபடுகின்றது. தக்பீரதுல் இஹ்ராமுடன் ஏனைய தொழுகைகள் போன்று தொழுகை ஆரம்பிக்கப்படும்.பின்னர் கிராஅத் ஓதுவதற்கு முன்னர் ஏழு (7) தக்பீர்கள் கூறப்படும்.பின்னர் சூரதுல் பாதிஹாவும் பின்னர் மற்றுமொரு சூறாவும் ஓதப்படும். அதன் பின்னர் ஏனைய தொழுகைகள் போன்று ருகூஃ, சுஜூதுகள் செய்யப்படும்.பின் இரண்டாம் ரக்அத்துக்காக எழும்புவதற்கான தக்பீர் கூறப்படும்.பின்னர் முதல் ரக்அத்தில் …

Read More »

பெருநாள் தொழுமிடம் |பெருநாள் தொழுகை – 2 [பிக்ஹுல் இஸ்லாம்-046]

பெருநாள் தொழுகையை மஸ்ஜிதில் நடத்துவதா அல்லது திறந்த வெளியில் நடத்துவதா என்ற சர்ச்சை தற்போது பரவலாக உள்ளது. இலங்கையில் பரவலாக திறந்த வெளியில் பெருநாள் தொழும் நடைமுறை அதிகரித்தும் வருகின்றது. பள்ளி சிறந்த இடம்: பொதுவான இடங்களை விட மஸ்ஜித்கள் சிறப்பான, புனிதமான இடம். எனவே, மஸ்ஜிதில்தான் பெருநாள் தொழுகை தொழப்பட வேண்டும் என சிலர் நினைக்கின்றனர். மஸ்ஜித்கள் ‘புயூதுல்லாஹ்’ இறை இல்லங்கள் என அழைக்கப்படுகின்றன. பொதுவான இடத்தை விட …

Read More »

பெருநாள் தொழுகை | [பிக்ஹுல் இஸ்லாம்-045]

“ஈத்” என்றால் பெருநாள் எனப் பொருள்படும். முஸ்லிம்களுக்கு ‘ஈதுல் பித்ர்” – ஈகைத் திருநாள் எனும் நோன்புப் பெருநாள், “ஈதுல் அழ்ஹா” – தியாகத் திருநாள் எனும் ஹஜ்ஜூப் பெருநாள் என இரண்டு பெருநாட்கள் உள்ளன. இந்தப் பெருநாள் தினங்களில் விசேடமாகத் தொழப்படும் தொழுகைக்கே ‘ஸலாதுல் ஈத்” – பெருநாள் தொழுகை என்று கூறப்படும். ‘ஸலாதுல் ஈதைன்” என்றால் இரு பெருநாள் தொழுகை என்று அர்த்தப்படும். பெருநாள்: மனிதனின் மன …

Read More »

ஜும்ஆப் பிரசங்கத்துக்கு முன் மஃஷர் ஓதுவது பற்றிய மார்க்கத் தீர்ப்பு | ஜூம்ஆத் தொழுகை-5 [பிக்ஹுல் இஸ்லாம்-043]

மஃஷர் முஅத்தின் சுன்னத்துத் தொழச் சொல்லி மக்கள் எல்லாம் எழுந்து தொழுத பின்னர் முஅத்தின் அஸாவைப் பிடித்துக் கொண்டு அரபியிலும் தமிழிலும் ஒரு குட்டி குத்பா செய்வார். அதுதான் மஃஷர் ஓதுதல் என்று மக்களால் கூறப்படுகின்றது. அந்தக் குட்டிக் குத்பாவில் ‘யா மஃஷரில் முஸ்லிமீன்’ என அவர் ஆரம்பிப்பார். அதில் மஃஷரில்” என்று வருவதால் மக்கள் மஃஷர் ஓதுதல் என்று இதற்குக் கூறுகின்றனர். அதில் அவர் குத்பாவை காது தாழ்த்திக் …

Read More »

ஜும்ஆவின் முன் சுன்னத்து | ஜூம்ஆத் தொழுகை-4 [பிக்ஹுல் இஸ்லாம்-042]

ஜும்ஆவின் முன் சுன்னத்து முதல் அதான் கூறப்பட்ட பின்னர் முஅத்தின் ஜும்ஆவின் முன் சுன்னத்தை தொழுமாறு கூறுவார். அதன் பின் எல்லோரும் எழுந்து ஜும்ஆவின் முன் சுன்னத்துத் தொழுவர். இந்தப் பழக்கம் இலங்கையில் மட்டுமல்லாது மற்றும் பல நாடுகளிலும் உள்ளது. சென்ற இதழில் நபி(ச) அவர்கள் காலத்திலும் அபூபக்கர், உமர்(வ) இருவர் காலத்திலும் உஸ்மான்(வ) அவர்களின் ஆட்சியின் ஆரம்ப காலத்திலும் ஜும்ஆவுக்கு ஒரு அதான் மட்டுமே கூறப்பட்டு வந்தது. அந்த …

Read More »

குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-040]

குத்பாவுக்குச் செல்வதின் ஒழுங்கு குத்பாவுக்குச் செல்வது, அங்கு அமர்வது தொடர்பிலும் இஸ்லாம் எமக்கு வழிகாட்டியுள்ளது. இவற்றில் பெரும்பாலானவற்றை நாம் இன்று மீறும் விதத்திலேயே நடந்து கொள்கின்றோம். 1. நேரத்துடன் பள்ளிக்குச் செல்வது: ஜும்ஆவுக்காக நேரகாலத்துடன் பள்ளிக்குச் செல்வது சுன்னாவாகும். இந்த சுன்னா இன்று பெரும்பாலும் மீறப்பட்டே வருகின்றது. ஜும்ஆ ஆரம்பிக்கப்படும் போது பள்ளியில் கொஞ்சம் பேர்தான் இருக்கின்றனர். இரண்டாம் ஜும்ஆ முடியும் தறுவாயில் பள்ளிக்கு வெளியிலும் மக்கள் நின்று கொண்டிருக்கின்றனர். …

Read More »

ஜூம்ஆ நாளின் சிறப்புகள், பேண வேண்டியவைகள், தொழுகைக்கு தயாராகுதல் | ஜூம்ஆத் தொழுகை [பிக்ஹுல் இஸ்லாம்-039]

ஜூம்ஆத் தொழுகை வெள்ளிக்கிழமை ழுஹருடைய நேரத்தில் ஊரிலுள்ள அனைத்து ஆண்களும் ஒரு மஸ்ஜிதில் ஒன்று கூடி இரண்டு குத்பா மற்றும் இரண்டு ரக்அத்துக்கள் தொழுவதை ஜும்ஆ தொழுகை என்று கூறப்படும். அரபியில் ‘யவ்முல் ஜும்ஆ’ என்றால் வெள்ளிக் கிழமை என்பது அர்த்தமாகும். ஸலாதுல் ஜும்ஆ என்றால் வெள்ளிக்கிழமை தொழப்படும் தொழுகையைக் குறிக்கும். ‘ஜமஅ’ என்றால் ஒன்று சேர்த்தான் என்பது அர்த்தமாகும். வெள்ளிக் கிழமையில் தான் ஆதம்(ர) அவர்கள் படைக்கப்பட்டார். ஆதம்-ஹவ்வா …

Read More »

வரிசையை சீர் செய்வதும்… இடைவெளியை நிரப்புதலும்… | ஜமாஅத்துத் தொழுகை-8 [பிக்ஹுல் இஸ்லாம்–38]

உண்மை உதயம் மாதஇதழ் (ஜூன் – 2018) -ஆசிரியர்: S.H.M. இஸ்மாயில் ஸலபி- வரிசையை சீர் செய்வதும் இடைவெளியை நிரப்புதலும் தொழுகையில் சிலர் வரிசையில் நேராக நிற்பதில்லை. சிலர் இடைவெளி விட்டு நிற்கின்றனர். மற்றும் சிலர் முன் வரிசை பூரணமாகாமலேயே அடுத்தவரிசையை ஆரம்பித்து விடுகின்றனர். இவை தவறான வழிமுறைகளாகும். இறைத்தூதர்(ச) அவர்கள் கூறினார்கள்: ‘உங்களின் வரிசைகளை நேராக அமைத்துக் கொள்ளுங்கள்! இல்லையெனில் அல்லாஹ் உங்கள் முகங்களை மாற்றி விடுவான்.’ என …

Read More »

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? | ஜமாஅத்துத் தொழுகை-7 [பிக்ஹுல் இஸ்லாம் – 37]

ஜமாஅத் அணியில் இமாம், மஃமூம்கள் எப்படி நிற்க வேண்டும்? இமாம் உயர்ந்த இடத்தில் நிற்பது: மஃமூம்கள் அனைவரை விடவும் பிரத்தியேக மாக இமாம் மட்டும் உயர்ந்த இடத்தில் இருந்து தொழு விப்பதை பெரும்பாலான அறிஞர்கள் வெறுக்கத்தக்க தாகப் பார்க்கின்றனர். எனினும் பின்னால் இருப்பவர் களுக்கு தொழுகையைக் கற்றுக் கொடுத்தல் போன்ற காரணங்களுக்காக உயர்ந்த இடத்தில் இருந்து தொழுவதில் குற்றமில்லை. ‘நபி(ச) அவர்களின் மிம்பர் எந்த மரத்தினாலானது என்று சர்ச்சை செய்த …

Read More »

ஜமாஅத் அணியில் எப்படி நிற்க வேண்டும் | ஜமாஅத்துத் தொழுகை-6 [பிக்ஹுல் இஸ்லாம் – 36]

ஜமாஅத் தொழுவதாக இருந்தால் ஒருவர் இமாமாக தொழுகையை நடத்த வேண்டும். இமாமின் தகுதி என்ன? யார் இமாமத் செய்ய வேண்டும் என்ற விபரம் அவசியம் அறிந்திருக்க வேண்டிய தொன்றாகும். காரீஆ? பகீஹா? இமாமத் செய்பவர் அல்குர்ஆனை அழகிய முறையில் ஓதக் கூடியவராக இருக்க வேண்டும் என இமாம்களான அபூ ஹனீபா மற்றும் தவ்ரீ அஹ்மத் ஆகியோர் கருதுகின்றனர். அழகிய தொனியில் ஓதுவதை விட சட்டதிட்டங்கள் பற்றிய அறிவு அதிகம் உள்ள …

Read More »