Featured Posts
Home » அபூ முஹை (page 12)

அபூ முஹை

மரணிக்கும் போது நபியின் சொத்துக்கள்.

ஏகத்துவப் பிரச்சாரத்தை துவக்கிய ஆரம்பக் காலங்களில் அப்பிரச்சாரத்தைக் கைவிடும்படி அன்றைய மக்கா நகர அறிஞர்கள் செல்வந்தர்கள் அனைவரும் கோரினார்கள். அதற்கு பகரமாக பொன் – பொருட்களை நபி (ஸல்) அவர்களின் காலடியில் வைக்கவும் தயாரானார்கள் – பெண் தேவையுள்ளவராக இருந்தால் உலக அழகிகளையும் உமக்குத் தருகிறோம் – ஆட்சிதான் வேண்டுமென்றால் உம்மை எங்களுக்குத் தலைவராக்கிக் கொள்கிறோம். என்றெல்லாம் வாக்குறுதி தந்து – ஓரிறைக் கொள்கைப் பிரச்சாரத்தை கைவிடும்படி வேண்டினார்கள். ஒரு …

Read More »

நரகம் பற்றிய பயமேன்? 4

மறுமையை நம்பாதவர் எவரும் முஸ்லிமாக இருக்க முடியாது. மறுமையின் நம்பிக்கையில் நரகத்தை நம்புவதும் அடக்கம். திருக்குர்ஆனில் பல இடங்களில் ”நரக நெருப்புக்கு அஞ்சிக் கொள்ளுங்கள்” என அல்லாஹ் எச்சரிக்கிறான். அல்லாஹ்வின் எச்சரிக்கையின் அடிப்படையிலேயே முஸ்லிம்கள் நரகத்தை நம்புகிறார்கள் – நரக நெருப்புக்கு பயப்படுகிறார்கள். ஒரு வாதத்துக்காக மறுமை – நரகம் என்றெல்லாம் கிடையாது என்று வைத்துக் கொண்டாலும் அதனால் முஸ்லிம்களுக்கு எந்த இழப்பும் ஏற்பட்டு விடப்போவதில்லை. அல்லாஹ்வின் தண்டனைக்கு அஞ்சி, …

Read More »

நரகம் பற்றிய பயமேன்? 3

பகுத்தறிவு வழங்கப்பட்ட மனிதன் அந்த அறிவைக் கொண்டு நன்மையைத் தேர்ந்தெடுப்பது போல, நன்மையெனக் கருதி தீமையையும் தேர்ந்தெடுத்து விடுகிறான். தான் சரிகண்டு – தேர்ந்தெடுக்கும் ஒரு செயல் தனக்கு நன்மையாக இருந்தால் போதும், (பிறருக்கும் தீமையாக இருந்தாலும் பராவாயில்லை) என்று அவனின் அறிவு ஏற்றுக் கொள்கிறது. மனிதனின் அத்தியாவசியத் தேவைகள்.மனிதனின் வாழ்வாதாரத் தேவைகளில் மிக முக்கியமானது உணவாகும். இந்த உணவைப் பெற்றுக் கொள்வதில் அவன் பல வழிகளில் முயற்சிக்கிறான், அவன் …

Read More »

நரகம் பற்றிய பயமேன்? 2

தண்டிக்கும் கடவுள்களெல்லாம் அன்புக்கு மாறிவிட்டனவாம், இனி மனிதர்களுக்கு கடவுள் தண்டினை என்பது இல்லவே இல்லை, எல்லாமே அன்புதான். மிச்சம் – மீதமிருந்த கடவுள் பயத்தையும் துடைத்தெறிந்துவிட்டு மனிதர்கள் பஞ்சமா பாதகங்களை துணிந்து செய்யலாம் கடவுள் தண்டிக்கவே மாட்டார், மாறாக அன்பையேக் காட்டுவார். //*முதலாவது காரணம், தண்டிக்கும் கடவுளிலிருந்து, அன்புவடிவான கடவுளுக்கு அனைத்து மதங்களும் மெல்ல நகர்ந்துவிட்டன. ருத்ரன் சிவனானது போல – ஜெஹோவாவுக்கும் கர்த்தருக்குமான பரினாம வளர்ச்சியைப் போல. ஆனால் …

Read More »

நரகம் பற்றிய பயமேன்? 1

ஒருவன் தனதுத் தந்தையை நோக்கி ”நீ எனக்குத் தந்தையே இல்லை” என்று தன்னைப் பெற்றத் தந்தையைப் நிராகரித்தானாம். ஆனால் தந்தையின் சொத்தில் மட்டும் எனக்கு வாரிசுரிமையுண்டு என்று உரிமை கொண்டாடினானாம். இதையொத்ததாகவே இருக்கிறது ஓரிறைக் கொள்கையை மறுத்து நிராகரித்து விட்டு, ஒரே இறைவன் ஆயத்தப்படுத்தியுள்ள பரிசுகளில் பங்கு கேட்பதும். மறைவானவற்றை நம்புதல்.ஓரிறைக் கொள்கையின் நம்பிக்கையில் ஒன்றுதான் ”அவர்கள் மறைவானவற்றின் மீது நம்பிக்கை கொள்வார்கள்” (2:2) என்பதும் அடங்கும். மறைவானது – …

Read More »

தலைமைக்குக் கட்டுப்படல் நிர்ப்பந்தமா?

திருக்குர்ஆன் 4:59ம் வசனத்தைச் சுட்டிக்காட்டி அந்த வசனத்தில் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ விளங்கிக் கொள்ள முடியாதக் கருத்தை,(நிர்ப்பந்திக்கிறது) தமது கைச் சரக்காகச் சேர்த்து முன் வைத்திருக்கிறார். இது நேசகுமாரின் நுனிப்புல் மேயும் தன்மையைத்தான் வெளிப்படுத்துகிறது. 4:59 வசனத்தை விளங்குவதற்கு முன், திருக்குர்ஆன் வசனங்களை விளங்குவதற்கு, திருக்குர்ஆன் என்ன நிபந்தனை விதிக்கிறது என்பதை விளங்குவோம். 25:73. இன்னும் அவர்கள் தங்கள் இறைவனுடைய வசனங்களைக் கொண்டு நினைவூட்டப்பட்டால் செவிடர்களையும், குருடர்களையும் போல் அவற்றின் …

Read More »

கற்காலம் ஓர் விளக்கம் -1

கற்காலம் கட்டுரை பற்றி, கற்காலம் சொல்லும் கருத்து(!?) என்ற பதிவில் சில முரண்பாடுகளை சுட்டிக் காட்டியிருந்தோம். இந்த பதிவில், அக்கட்டுரையில் ”திருக்குர்ஆனின் ஆதாரங்கள்” என்று குர்ஆன் வசனங்களுக்குத் தவறானக் கருத்தையே விளக்கப்பட்டிருக்கிறது. 24:5 இறைவசனத்தில் ”திருந்தி மன்னிப்பு கேட்பவர்களை மன்னிக்க வேண்டும்” என்ற வாசகத்தை ”விபச்சாரம் செய்தவர்கள் திருந்தினால் மன்னிக்க வேண்டும்” எனப் பொருத்தியிருப்பது தவறான விளக்கம் என்பது பற்றி பார்ப்போம். பெண்களின் கற்புக்கும், ஒழுக்கத்திற்கும் எதிரான வதந்திகளை ”அப்படித்தான் …

Read More »

திசை திருப்பும் உள் நோக்கம்.

ஒட்டு மொத்த உலக முஸ்லிம்களையும் முட்டளாக்கும் முயற்சியில், அவதூறுகளை சுமந்து களமிறங்கிய நேசகுமார் ”தனியொருவனாக பதிலளிப்பதின் சங்கடங்கள்” என்று இப்போது புலம்புகிறார். மந்தையில் அமர்களமாய் புகுந்த தனி நரியைப்போல, இஸ்லாத்தின் மீது அவதூறுச் சேற்றை வாரியிறைக்க தமிழ்மணம் வலைப்பதிவில் 3.12.2004ல் ”நபிகள் நாயகத்தின் வாழ்வு” என்று தொடங்கி.. நேசகுமார் தனி நபராகத்தான் வலிய களமிறங்கினார். நொங்கு தின்ன ஆசைப்பட்டவன், நோண்டித்தின்ன சங்கடப்பட்டானாம்.இஸ்லாத்தின் மீது பெய்யானக் குற்றங்களை அடுக்கடுக்காய் சுமத்துவதில் நேசகுமார் …

Read More »

இது இஸ்லாம், இவர் முஸ்லிம்.

கொள்கைகளால் வேறுபட்டு பல மதங்களாக பிரிந்திருந்தாலும், மனிதயினத் துவக்கம் ஒரு மனிதரிலிருந்தே பல்கிப் பெருகிப் பரவியது என்றே இஸ்லாம் கூறுகிறது. மனிதர்களே! அவன்தான் உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்தான். (திருக்குர்ஆன், 4:1, 7:189, 39:6) சாதி, இனம், மொழி, கொள்கையென்று வேறுபட்டு – பிரிந்து கிடந்தாலும் மனிதர்கள் அனைவரும் ஒரு தந்தை வழித் தோன்றிய, ஒரேகுடும்பத்தினரே என்பதை இஸ்லாம் அழுத்தமாகச் சொல்கிறது. //” இறைவன் ஒருவனே என்ற இந்த அழுத்தமான …

Read More »

நேசகுமாரும், ஹமீத் ஜாஃபரும்.

ஒருவரின் கருத்தை மறுக்கவில்லை என்பதால், அக்கருத்தில் முழு உடன்பாடு உண்டு என்பது அர்த்தமல்ல. சகோதரர் ஹமீத் ஜாஃபர், சகோதரர் நேசகுமாருக்கு எழுதியது, அதற்கான எதிர் கருத்தை நேசகுமார், ஹமீத் ஜாஃபருக்கு எழுதியது. இருவரும் ஒருவருக்கொருவர் விவாதித்துக் கொண்டிருக்கிறார்கள். என்பதாலும், மேலும் இஸ்லாத்தைப் பற்றி ஹமீத் ஜாஃபர் தமது சார்பாக முன் வைத்தக் கருத்தை சகோதரர் நேசகுமார் விமர்சித்தபோது, அதற்கான தக்க பதிலை அளிப்பது மீண்டும் ஹமீத் ஜாஃபருக்கே கடமையாகிறது. எனவே …

Read More »