Featured Posts
Home » ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி (page 13)

ஷைய்க் S.H.M. இஸ்மாயில் ஸலபி

கண்டிக் கலவரத்தின் பின்னணி

கண்டிப் பகுதியில் முஸ்லிம்களுக்கு எதிராகக் கட்டவிழ்த்து விடப்பட்ட இனவாதத் தாக்குதல் ஒரு திட்டமிட்ட செயற்பாடு என்பதைத் தெளிவுபடுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகும். இலங்கையின் அரசியல் பின்னணி: இலங்கையின் உள்ளாட்சித் தேர்தல் இடம் பெற்றது. இதில் முன்னாள் ஜனாதிபதியின் கட்சி அதிக ஆசனங்களைக் கைப்பற்றியது. இலங்கையின் ஜனாதிபதி ஒரு கட்சியாகவும், பாராளுமன்றம் வேறு ஒரு கட்சியாகவும் உள்ளாட்சி சபை மற்றோர் கட்சியாகவும் உள்ளது. இச்சூழலில் இலங்கை அரசியல் திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது. …

Read More »

இஸ்ராவும் மிஃராஜும்

நபி(ச) அவர்களது வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதங்களில் இஸ்ராவும் மிஃராஜூம் அடங்கும். இது தொடர்பான சில விளக்கங்களை இக்கட்டுரையூடாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். இஸ்ரா: “அஸ்ரா” என்றால் இரவுப் பயணம் செய்தல் என்பது அர்த்தமாகும். நபி(ச) அவர்கள் ஒரு நாள் இரவு மஸ்ஜிதுல் ஹரமில் இருந்து பலஸ்தீனத்தில் பைத்துல் முகத்திஸ் பள்ளிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். இதுவே இஸ்ரா என்று கூறப்படுகின்றது. “(முஹம்மதாகிய) தனது அடியாரை மஸ்ஜிதுல் ஹராமிலிருந்து, …

Read More »

சுன்னாவுக்கும் பித்ஆவுக்கும் மத்தியில் ரஜப் மாதம்

அல்லாஹுத்தஆலா சில நாட்களை சிறப்பித்துள் ளான். அவ்வாறே சில மாதங்களையும் சிறப்பித்துள்ளான். அல்லாஹ்வினால் போர் செய்வது தடுக்கப்பட்ட புனித மாதங்கள் நான்கில் ரஜப் மாதமும் ஒன்றாகும். “அல்லாஹ்விடம் நிச்சயமாக மாதங்களின் எண்ணிக்கை, வானங்கள் மற்றும் பூமியைப் படைத்த நாள் முதல் அல்லாஹ் வின் பதிவேட்டில் பன்னிரெண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு புனிதமான வையாகும். இதுதான் நேரான மார்க்கம். இவைகளில் (போர் செய்து) உங்களுக்கு நீங்களே அநியாயம் செய்து கொள்ளாதீர்கள். இணைவைப்போர் …

Read More »

சந்தேகம் களைந்து சமூக நல்லிணக்கம் வளர்ப்போம்

  இலங்கை முஸ்லிம்கள் நெருக்கடி நிறைந்த சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர். ஒரு புறம் அரசியல் வாதிகளின் அரசியல் நலன்களுக்காக அவர்கள் நசுக்கப்படுகின்றனர். மறுபுறம் வியாபார நோக்கங்களுக்காக அவர்கள் நெருக்கப்படுகின்றனர். இன்னொரு புறம் இனவாத, மதவாத சக்திகளின் வன்முறைகளையும் வசைபாடல்களையும் அவர்கள் எதிர்நோக்குகின்றனர். இத்தனைக்கும் மத்தியில் இலங்கை மக்கள் மத்தியில் அவர்கள்தான் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்படுகின்றனர். ஒரு நாடு இருந்தால் அதில் பல குற்றங்கள் புரிகின்றவர்கள் இருப்பார்கள். ஒரு இனத்தையோ மதத்தையோ சார்ந்தவர் …

Read More »

தேர்தல் முடிவுகள் பலவீனமும்… படிப்பினைகளும்…

திரிசங்கு நிலைக்குச் சென்றுள்ளது இலங்கை அரசியல். ஜனாதிபதி ஒரு கட்சியிலும் பாராளுமன்றம் இன்னொரு கட்சி வசமும், உள்ளாட்சி மன்றங்கள் மற்றுமொரு கட்சி வசமும் சிதறிச் சென்றுள்ளன. வட்டாரமும் (60) விகிதாசாரமும் (40) கலந்த இந்த தேர்தல் முறையில் நடந்த முதலாவது உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் நாட்டில் பாரிய அரசியல் அதிர்வுகளை ஏற்படுத்தி வருகின்றது. இந்தத் தேர்தல் முடிவுகளில் ஏற்பட்ட பலங்கள் என்ன என்பதைக் கட்சித் தலைமைகள் மக்கள் மத்தியில் கூறி …

Read More »

கொடுப்பதால் குறையாது [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-18]

முன்னொரு காலத்தில் யெமன் தேசத்தின் சன்ஆவுக்கு அருகிலுள்ள கிராமம் ஒன்றில் ஒரு நல்ல மனிதர் வாழ்ந்து வந்தார். அவர் மிகப் பெரும் செல்வந்தராவார். அவருக்குச் சொந்தமான பல தோட்டங்களும் விவசாய நிலங்களும் இருந்தன. அவருக்கு மூன்று ஆண்பிள்ளைகளும் இருந்தனர். இந்த நல்ல மனிதர் தனது தோட்டத்தில் அறுவடை செய்வதை மூன்றாகப் பிரிப்பார். 1) மீண்டும் பயிரிடுவதற்கு முதலுக்காக. 2) அடுத்த அறுவடை வரை தானும் தன் குடும்பமும் உண்பதற்கு. 3) மூன்றாம் …

Read More »

இலங்கை முஸ்லிம்கள் கவனத்திற்கு – “பொதுபலசேனா” வஹாபிகளுக்கு மட்டும் எதிரான அமைப்பா?

-அஷ்ஷைக் SHM இஸ்மாயில் ஸலபி பாரம்பரிய முஸ்லிம்களுக்கும் எமக்கும் இடையில் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாம் வஹாபி, ஸலபி முஸ்லிம்களைத்தான் எதிர்க்கின்றோம் என்ற போலியான ஒரு புரளியை இனவாத பௌத்த அமைப்புக்கள் கிளறி வருகின்றன. இதற்கு சமூகத் துரோகிகள் சிலர் துணை போயுள்ளனர். இனவாதிகளின் இந்த வாதம் பொய்யானதாகும். முஸ்லிம் சமூகத்தைப் பிளவு படுத்துவதற்காகவே இந்த வாதத்தை முன்வைக்கின்றனர். முதன் முதலில் அனுராதபுரத்தில் நானூறு வருடம் பழைமை வாய்ந்த சியாரத்தை …

Read More »

இஸ்மாயில் நபியும்… ஆடும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-17]

நபி இப்ராஹிம்(அலை) அவர்கள் முற்காலத்தில் வாழ்ந்த ஒரு நபி ஆவார்கள். இவர்களுக்கு நீண்ட காலமாக குழந்தைகள் எவரும் இருக்கவில்லை. நன்றாக வயது சென்ற பின்னர்தான் இஸ்மாயில் என்றொரு ஆண் குழந்தை கிடைத்தது. அதற்கும் பல வருடங்கள் கடந்த பின்னர் இஸ்ஹாக் என்றொரு குழந்தையும் கிடைத்தது. இப்ராஹீம் நபி இயல்பிலேயே மிகவும் இரக்க குணம் கொண்டவர். உங்களைப் போன்ற குழந்தைகள் மீது அதிக அன்பு கொண்டவர். தனது வயோதிக காலத்தில் கிடைத்த …

Read More »

மூஸா நபியும் ஹிள்ர் நபியும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-16]

மூஸா நபியும் சமைத்த பின் உயிர்பிழைத்த அதிசய மீனும் முன்னொரு காலத்தில் மூஸா என்ற பெயரில் ஒரு மனிதர் வாழ்ந்து வந்தார். அவருக்கு அல்லாஹ் ‘தவ்ராத்’ எனும் வேதத்தைக் கொடுத்து பனூ இஸ்ரவேலருக்கு நபியாகவும் அவரை ஆக்கினான். அந்த நபி தவ்றாத் வேதத்தைப் போதித்து மக்களை நல்வழிப்படுத்த படாதபாடு பட்டார். அவர் நல்ல நாவண்மை பெற்றிருந்தார். ஒரு நாள் அவர் மக்களுக்கு உரையாற்றிக் கொண்டிருந்தார். அவரது அறிவையும் ஆற்றலையும் கண்டு …

Read More »

இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு – இஸ்மாயில் ஸலபி

இலங்கை முஸ்லிம்களின் கவனத்திற்கு – SHM இஸ்மாயில் ஸலபி ஆசிரியர், உண்மை உதயம் மாத இதழ் 09-03-2018 இன்றைய ஜும்ஆ குத்பா பேருரை இடம்: ஜாமிஉத் தவ்ஹீத் ஜும்ஆ மஸ்ஜித் பறகஹதெனியா – இலங்கை நன்றி: JASM Media Unit இலங்கையில் அரங்கேறிய இனவாத செயல்களும் முஸ்லிம்கள் நடந்து கொள்ள வேண்டிய முறையும்!! அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் தீர்ப்பு சரியானதா? கலவர சூழலில் செய்திகளை பாரிமாற்றம் செய்வதின் …

Read More »