Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 21)

ஜாஃபர் அலி

நேர்ந்த துன்பத்துக்காக மரணத்தை ஆசிக்காதே.

1717. உங்களில் எவரும் தமக்கு நேர்ந்த ஒரு துன்பத்தின் காரணத்தினால் மரணத்தை விரும்ப வேண்டாம். அவ்வாறு மரணத்தை விரும்பித்தான் ஆகவேண்டும் என்றிருந்தால், ‘இறைவா! (நான்) உயிர் வாழ்வது எனக்கு நன்மையாக இருப்பின், என்னை உயிர் வாழச் செய்வாயாக! நான் இறந்து விடுவதே எனக்கு நன்மையாக இருப்பின், எனக்கு இறப்பைத் தருவாயாக!” என்று கேட்கட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6351 அனஸ் (ரலி). 1718. நான் …

Read More »

அல்லாஹ்விடம் கேட்கும் துஆ.

1715. நீங்கள் பிரார்த்தித்தால் வலியுறுத்திக் கேளுங்கள். ‘அல்லாஹ்வே! நீ நினைத்தால் எனக்கு வழங்கு” என்று சொல்ல வேண்டாம். (வலியுறுத்திக் கேட்பது இறைவனை நிர்ப்பந்திப்பதாகாது.) ஏனெனில், அவனை நிர்பந்திப்பவர் யாருமில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6338 அனஸ் (ரலி). 1716. நீங்கள் இறைவா! நீ நினைத்தால் என்னை மன்னிப்பாயாக. இறைவா! நீ நினைத்தால் என் மீது அருள் புரிவாயாக” என்று பிரார்த்திக்க வேண்டாம். மாறாக, கேட்பதை …

Read More »

அல்லாஹ்வின் திருநாமங்கள்.

1714. அல்லாஹ்விற்கு தொண்ணூற்று ஒன்பது நூற்றுக்கு ஒன்று குறைவான – பெயர்கள் உண்டு. அவற்றை (நம்பிக்கை கொண்டு) மனனமிட்டவர் யாரும் சொர்க்கம் நுழையாமல் இருப்பதில்லை. அல்லாஹ் ஒற்றையானவன். ஒற்றைப்படையையே அவன் விரும்புகிறான்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6410 அபூஹூரைரா (ரலி).

Read More »

இறை நினைவு.

இறை நினைவு, பிரார்த்தனை, பாவமீட்சி, பாவமன்னிப்பு 1713. உயர்ந்தோன் அல்லாஹ் கூறினான்:என் அடியான் என்னைப் பற்றி என்ன நினைக்கிறானோ அதற்கேற்ப அவனிடம் நான் நடந்துகொள்வேன். அவன் என்னை நினைவு கூரும்போது நான் அவனுடன் இருப்பேன். அவன் என்னைத் தன் உள்ளத்தில் நினைவு கூர்ந்தால் நானும் அவனை என் உள்ளத்தில் நினைவு கூருவேன். அவன் ஓர் அவையோர் மத்தியில் என்னை நினைவு கூர்ந்தால் அவர்களைவிடச் சிறந்த ஓர் அவையினரிடம் அவனை நான் …

Read More »

மறுமை நாளின் அடையாளங்கள்.

1709. ‘கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” . புஹாரி : 80 அனஸ் (ரலி). 1710. மறுமை நாளுக்கு முன் ஒரு காலக்கட்டம் வரும். அப்போது அறியாமை நிலவும்; கல்வி அகற்றப்பட்டு விடும்; ‘ஹர்ஜ்’ பெருகிவிடும். ‘ஹர்ஜ்’ என்பது கொலையாகும் என நபி (ஸல்) …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-3)

மறுமை நம்பிக்கையும், உலக வாழ்வும் அல்லாஹ் அறிவும், ஞானமும் உள்ளவன். நீதியாளன். எனவே இந்த உலகோடு வாழ்வை முடித்து விடாது, இன்னுமொரு உலகையும் அமைத்திருக்கிறான். இது தெளிவு. எனினும் முரண்பாடுகளும், குழப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிரைந்த இந்த உலக வாழ்வுக்குஎன்ன பொருள்? அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? இவ்விஷயத்தை மிக அழகான முறையில் அல்குர்ஆன் விளக்குகிறது. மனித வாழ்வுக்கு மிகச் சரியானதொரு அர்த்தத்தை அல்குர்ஆன் இங்கு கொடுக்கிறது. வாழ்வு ஒரு சோதனை. …

Read More »

யூத கிறிஸ்தவர்களைப் பின்பற்றுதல்.

1708. ”உங்களுக்கு முன்னிருந்த (யூதர்கள் மற்றும் கிறிஸ்த)வர்களின் வழிமுறைகளை நீங்கள் சாண் சாணாக, முழம் முழமாகப் பின்பற்றுவீர்கள். எந்த அளவிற்கென்றால், அவர்கள் ஓர் உடும்பின் பொந்துக்குள் நுழைந்தால் கூட நீங்கள் அவர்களைப் பின்பற்றி நுழைவீர்கள்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். நாங்கள், ‘இறைத்தூதர் அவர்களே! (நாங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்று) யூதர்களையும் கிறிஸ்தவர்களையுமா (நீங்கள் குறிப்பிடுகிறீர்கள்)?’ என்று கேட்டோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘வேறு யாரை?’ என்று …

Read More »

முத்தஸாபிஹாத் வசனங்கள் பற்றி….

அறிவு. 1705. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘(நபியே!) அ(ந்த இறை)வனே இந்த வேத நூலை உங்களுக்கு அருளினான். (இதில்) தெளிவான கருத்துள்ள (முஹ்கமாத்) வசனங்களும் உள்ளன. அவைதாம் இவ்வேதத்தின் அடிப்படையாகும். பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய வேறு சில (முதஷாபிஹாத்) வசனங்களும் (இதில்) உள்ளன. யாருடைய இதயங்களில் ‘கோணல்’ உள்ளதோ, அவர்கள் குழப்பம் செய்ய விரும்பியதாலும், (சுய) விளக்கம் அளிக்க நாடியதாலும் பல பொருள்களுக்கு இடமளிக்கக்கூடிய (வசனத்)தையே பின்தொடர்கின்றனர். ஆனால், …

Read More »

குழந்தைகள் இயற்கை மார்க்கத்தில் பிறக்கின்றன.

1702. ”ஒரு விலங்கு எப்படி முழு வளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போன்று, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)திலேயே பிறக்கின்றன. விலங்குகள் அங்கக் குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவது போல்) பெற்றோர்கள் தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.”பிறகு அபூ ஹுரைரா(ரலி), எ(ந்த மார்க்கத்)தில் அல்லாஹ் மனிதர்களைப் படைத்தானோ அதுவே …

Read More »

விபச்சாரத்தில் ஆதமின் மகனின் பங்கு.

1701. விபசாரத்தில் மனிதனுக்குள் பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபசாரம் மட்டுமல்ல. கண்ணும் நாவும் கூட விபசாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது. இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 6243 அபூஹுரைரா …

Read More »