Featured Posts
Home » நூல்கள் » மறுமை நாள் (Book)

மறுமை நாள் (Book)

மறுமை நாள் (அத்தியாயம்-10) இறுதிப் பகுதி

ஷபாஅத் பரிந்துரை செய்வது என்பது ஷபாஅத் என்பதன் பொருளாகும். அதாவது மறுமை நாளில் மனிதர்களைத் தண்டனையிலிருந்து காக்கவும், தண்டனையைக் குறைக்கவும் பிரதானமாக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தலை இது குறிக்கிறது. அல்லாஹ் கருணை நிறைந்தவன். எனவே முடிந்தளவு அதிகமான மனிதர்கள் சுவர்க்கத்துக்குச் செல்வதையே அவன் விரும்புகிறான். அதற்கு அவன் பல்வேறு வழிகளை வைத்துள்ளான். அவற்றில் ஒன்றாகவே ஷபாஅத் (பரிந்துரை செய்தல்) அமைந்துள்ளது. அதேவேளை அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்தல், அப்பரிந்துரையை அல்லாஹ் ஏற்றுக் …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-9)

விசாரணை மஹ்ஷர் வெளியில் மிக முக்கிய அம்சம் அங்கு நடக்கும் விசாரணையாகும். மனிதர்கள் அனைவரும் தமது இறுதியான உலகுக்குப் போகும் முன்னால் அவர்கள் அங்கு செல்வதற்கான நியாயத்தை முன்வைப்பதே இந்த விசாரணையின் நோக்கமாகும். இந்த விசாரணை குறித்து அல்குர்ஆன் பல இடங்களில் மிகத் தெளிவாக விளக்குகிறது : “நிச்சயமாக அவர்கள் எம்மிடமே மீண்டு வர வேண்டும். அத்தோடு அவர்களை விசாரணை செய்வதும் எமது பொறுப்பேயாகும்.” (ஸூரா வாகியா : 25, …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-8)

மஹ்ஷர் வெளியும், அதன் நிகழ்வுகளும் பிரபஞ்ச அழிவின் பிறகு மனிதன் மீண்டும் எழுப்பப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுகிறான். மனிதர்கள் அனைவரும் ஒரு வெட்டவெளியில் திரட்டப்பட்டு அந்த விசாரணை நடைபெறும். அவ்வாறு மனிதர்கள் ஒன்று திரட்டப்படும் வெட்டவெளியை ‘மஹ்ஷர்’ என அல்குர்ஆனும் சுன்னாவும் அழைக்கின்றன. இவ்வாறு மனிதர்கள் மீண்டும் எழுப்பப்பட ஒரு ஸூர் ஊதப்படும் என அல்குர்ஆன் கூறுகிறது. உலக அழிவு அந்த ஸூர் ஊதப்படுதலோடு தான் ஆரம்பமாகும் எனவும் குர்ஆன் கூறுகிறது. …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-7)

உலக அழிவும், மறுமை நாளின் தோற்றமும். மறுமை நாளின் தோற்றம் இவ்வுலகின் அழிவோடு ஆரம்பமாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. அதாவது அது இன்னொரு உலகின் தோற்றம். மனிதனின் இன்னொரு வாழ்வின் ஆரம்பம். அது பிரபஞ்சத்தின் வித்தியாசமான இன்னொரு தோற்றப்பாடு. மனிதனுக்கு அது வித்தியாசமான இன்னொரு வாழ்வு! இரு கட்டங்களின் பிறகு மனிதனின் அந்த இரண்டாவது வாழ்வு உருவாகும் என அல்குர்ஆனும், ஸுன்னாவும் விளக்குகின்றன. ஒன்று இவ்வுலகின் அழிவு. மற்றொன்று, …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-6)

மறுமை நாள் எப்போது தோன்றும்? மறுமை நாள் எப்போது தோன்றும்? இந்தக் கேள்விக்கான பதிலை ஒரு முஸ்லிம் எப்படி விளங்கிக் கொள்வது என்பது மறுமை நாள் பற்றிய அறிவில் அடுத்த முக்கிய அம்சமாகும். மறுமை எப்போது தோன்றும் என்பது அல்லாஹ் மட்டுமே அறிந்த உண்மையாகும். அல்லாஹ் அதுபற்றி தன் தூதர்களுக்குக் கூட அறிவிக்கவில்லை. “மக்கள் உம்மிடம் அந்த இறுதி வேளை பற்றி கேட்கின்றனர். அது பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-5)

மரணமும், அதனைத் தொடரும் (B)பர்ஜக் வாழ்வும் மரணம் யாராலும் தவிர்ந்து கொள்ள முடியாததொரு நிகழ்வு. மனிதனின் இயலாமையைத் தெளிவாகக் காட்டும் உண்மை. அவனால் என்றுமே அம்மரணத்தை வெற்றிக் கொள்ள முடியாது. அது ஓர் பயங்கர அனுபவம். எனவே, எல்லா மனிதர்களையும் அந்த மரண பயம் பீடித்தவாறே உள்ளது. அனைவரும் இதனை இயன்றளவு பிற்போட முயற்சிக்கின்றனர். இத்தகைய மரணம் குறித்து அல்குர்ஆன் சொல்லும் விளக்கத்தை இங்கே தருகிறோம்: முதலில் அல்குர்ஆன், “ஆத்மாக்களை …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-4)

மறுமை நாள் என்ற நம்பிக்கை பகுத்தறிவு ரீதியானது. அது மனித இயற்கை வேண்டுகின்ற ஒரு அம்சம். அத்தோடு இறை நம்பிக்கை கொண்டவன் தவிர்க்க முடியாமல் மறுமை நம்பிக்கையையும் ஏற்க வேண்டியவனாகிறான். மறுமை நாள் நம்பிக்கையை ஏற்காதவன் இறைவனை மிகச் சரியான முறையில் நம்பிக்கைக் கொள்ள முடியாது. அந்நிலையில் அவன் இணைவைத்தலோடு அல்லது நிறைய பிழையான கருத்துக்களோடு தான் இறைவனை நம்பக் கூடியவனாக இருப்பான். அல்லது மறுமை நாள் நம்பிக்கைப் புரிந்து …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-3)

மறுமை நம்பிக்கையும், உலக வாழ்வும் அல்லாஹ் அறிவும், ஞானமும் உள்ளவன். நீதியாளன். எனவே இந்த உலகோடு வாழ்வை முடித்து விடாது, இன்னுமொரு உலகையும் அமைத்திருக்கிறான். இது தெளிவு. எனினும் முரண்பாடுகளும், குழப்பங்களும், ஏற்றத்தாழ்வுகளும் நிரைந்த இந்த உலக வாழ்வுக்குஎன்ன பொருள்? அதனை எவ்வாறு நோக்க வேண்டும்? இவ்விஷயத்தை மிக அழகான முறையில் அல்குர்ஆன் விளக்குகிறது. மனித வாழ்வுக்கு மிகச் சரியானதொரு அர்த்தத்தை அல்குர்ஆன் இங்கு கொடுக்கிறது. வாழ்வு ஒரு சோதனை. …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-2)

மறுமை வாழ்வென்பது பகுத்தறிவு ரீதியான உண்மை என வாதிக்கும் அல்குர்ஆன் அந்த நம்பிக்கையை இரு சிந்தனைகள் ஊடாக முன்வைக்கிறது. ஒன்று இறை நம்பிக்கையோடு தொடர்பு படுகிறது. இங்கு அவ்விரு சிந்தனைகளும் விளக்கப்படுகிறன: (1) இறை நம்பிக்கையும், மறுமை நம்பிக்கையும்: அல்குர்ஆன் மறுமை நாள் நம்பிக்கை என்பது இறை நம்பிக்கையின் ஒரு பகுதி என விளக்குகிறது. அதாவது இந்தப் பிரபஞ்சத்தை ஆராய்பவன் இதனைப் படைத்த ஒரு மாபெரும் படைப்பாளன் உள்ளான் என …

Read More »

மறுமை நாள் (அத்தியாயம்-1)

மறுமை நாள் அவசியமா? பூமி என்ற இச்சிறிய கோளில் மனித ஆயுள் வரையறுக்கப்பட்ட ஒரு குறுகிய காலம் மட்டுமே! ஆனால் வாழ வேண்டும் என்ற ஆசையோ அவனை விட்டு பிரிவதே இல்லை. நிரந்தரமாக அழியாது வாழ வேண்டும் என்ற எண்ணம் அவனது உள்ளத்தில் ஆழப்பதிந்து விட்ட இயற்கை உணர்வு. அவன் உள்ளத்தில் உள்ள ஆசைகளோ எல்லையற்றவை. நிறைய ஆசைகள், எதிர்பார்ப்புகள், இலட்சியங்களோடு அவன் வாழ்கிறான். சொந்தங்களையும், உறவுகளையும், தோழர்களையும் உருவாக்கிக் …

Read More »