Featured Posts
Home » ஜாஃபர் அலி (page 62)

ஜாஃபர் அலி

மதுபானங்கள் செத்த விலங்குகள் பன்றி விக்கிரகங்கள் விற்க தடை.

1018. நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின்போது, “நிச்சயமாக அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மதுபானம், செத்தவை, பன்றி, உருவச் சிலைகள் ஆகியவற்றை விற்பனை செய்வதைத் தடை செய்துள்ளனர்!” என்று கூறினார்கள். அப்போது அவர்களிடம், ‘இறைத்தூதர் அவர்களே! செத்தவற்றின் கொழுப்புகள் கப்பல்களுக்குப் பூசப்படுகின்றன. தோல்களுக்கு அவற்றின் மூலம் மெருகேற்றப்படுகிறது; மக்கள் விளக்கெரிக்க அவற்றைப் பயன்படுத்துகின்றனர்; எனவே, அதைப் பற்றிக் கூறுங்கள்!’ எனக் கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், ‘கூடாது! அது …

Read More »

மதுபானங்கள் விற்கத் தடை.

1017. ‘பகரா’ அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள். புஹாரி :459 ஆயிஷா (ரலி).

Read More »

இரத்தம் உறிஞ்சி எடுக்க கூலி.

1015. அனஸ் (ரலி) அவர்களிடம் குருதி உறிஞ்சி வாங்குபவருக்குக் கூலி கொடுப்பது குறித்துக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குருதி உறிஞ்சி எடுத்துள்ளார்கள். அவர்களுக்கு அபூ தய்பா என்பவர் குருதி உறிஞ்சி வாங்கினார். நபி (ஸல்) அவர்கள் அவருக்கு(க் கூலியாக) இரண்டு ‘ஸாஉ’ உணவு கொடுத்தார்கள். மேலும், அபூ தய்பாவின் எசமானர்களுடன் நபி (ஸல்) அவர்கள் பேசியதையடுத்து (அவர்களுக்கு அவர் செலுத்த வேண்டிய வரியை) அவர்கள் குறைத்தார்கள். …

Read More »

கற்பனைக்கு எட்டாதவன்!

மனிதனுக்குக் ‘கற்பனா சக்தி’ என்றொன்றை அல்லாஹ் வழங்கியுள்ளான். அந்தக் கற்பனா சக்தி எல்லோருக்கும் ஒரேவிதமாக அமைவது இல்லை. ஒவ்வொருவரது அறிவு, அனுபவம், திறமை, ஆர்வம் என்பவற்றுக்கமைய அது வித்தியாசப்படும். அத்தகையவர்களுள் ஆன்மீக ஆர்வம் மேலிட்டு அதில் அதிக ஈடுபாடு கொண்ட பல மதத்தைச் சேர்ந்தவர்கள் இறைவனைப் பற்றிய கற்பனையில் ஈடுபடலாயினர். அத்தகைய ஈடுபாடுகள் மூலமே விதவிதமான விக்கிரகங்கள் தோற்றம் பெற்றன.

Read More »

நாய் வளர்க்கத் தடை.

1012. கால்நடையைப் பாதுகாப்பதற்காகவோ, வேட்டையாடுவதற்காகவோ அல்லாமல் நாய் வைத்திருப்போரின் நற்செயலி(ன் நன்மையி)லிருந்து ஒவ்வொரு நாளும் இரண்டு ‘கீராத்’கள் அளவு குறைந்து விடும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5480 இப்னு உமர் (ரலி). 1013. நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர என …

Read More »

நாய் விற்ற காசு.

1010. ”நபி (ஸல்) அவர்கள் நாய் விற்ற காசையும் விபச்சாரியின் கூலியையும் ஜோதிடரின் தட்சணையையும் தடை செய்தார்கள்!” புஹாரி :2237 அபூ மஸ்ஊது அல் அன்சாரி (ரலி). 1011. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் நாய்களைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். புஹாரி :3323 இப்னு உமர் (ரலி).

Read More »

தேவைக்கு அதிகமான நீரைத் தடுக்காதே.

1009. (தேவைக்கு மேல்) எஞ்சியுள்ள தண்ணீரைத் தடுக்காதீர்கள். (அவ்வாறு தடுத்தால், அப்பகுதியில்) தேவைக்கு மேல் உள்ள புல் பூண்டுகளைத் தடுத்தவராக நீங்கள் ஆகிவிடுவீர்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2354 அபூஹுரைரா (ரலி).

Read More »

கடனைத் திருப்பிச் செலுத்த வசதியுள்ளவன் பற்றி….

1008. ”செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரின் கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒத்துக் கொள்ளட்டும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி : 2288 அபூஹுரைரா (ரலி).

Read More »

அவதாரம் எடுத்தல்!

சில மதங்களில் இறைவன் மனித அவதாரம் எடுத்து வருவதாகக் கூறப்படுகின்றது. இக்கருத்து இஸ்லாமிய இறைக்கருத்துக்கு நேர் எதிரானதாகும். அல்லாஹ், ஒருபோதும் ஒரு மனிதராகவோ, அல்லது வேறு ஏதாவது உயிரினமாகவோ அவதாரம் எடுத்து வருவது இல்லை. காரணம், அவன் அழிவே இல்லாதாவன். ஏனைய எல்லாமே அழியக்கூடியன. மனிதனும் மற்றைய உயிரினங்களும் பிறந்து இறந்து விடுவன. மற்ற இயற்கைப் படைப்புகளும் என்றோ அழியக்கூடியன. எனவே, அழியக்கூடியவை மூலமாக அழிவே இல்லாதவன் அவதாரம் எடுத்துத் …

Read More »

கடனாளிக்கு அதிக கால அவகாசமளித்தல்.

1006. ”உங்களுக்கு முன்னர் வாழ்ந்த ஒரு மனிதரின் உயிரை வானவர்கள் கைப்பற்றி, அவரிடம் ‘நீர் ஏதேனும் நல்லது செய்திருக்கிறீரா?’ எனக் கேட்டனர். அதற்கு அம்மனிதர், ‘வசதியானவருக்கு அவகாசம் அளிக்கும்படியும் (அவர் கடனைத் திருப்பிச் செலுத்த தாமதம் செய்வதை) கண்டு கொள்ளாமல் விட்டுவிடும்படியும் நான் என்னுடைய ஊழியர்களுக்குக் கட்டளையிட்டிருந்தேன்!” என்று கூறினார். உடனே, ‘அவரின் தவறுகளைக் கண்டு கொள்ளாமல்விட்டு விடுங்கள்!’ என்று அல்லாஹ் வானவர்களுக்குக் கட்டளையிட்டான்!”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். …

Read More »