Featured Posts
Home » பொதுவானவை (page 139)

பொதுவானவை

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 5

வேண்டாம் அற்புதங்கள்! பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு நான் காயல்பட்டினத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது என்னுடன் திருப்பூர் மொய்தீனும், முஹம்மது ஹூசைன் நயினார் அவர்களும் வந்திருந்தார்கள். நாங்கள் மூவரும் முஹம்மது நபி விழாவிலே பேசினோம். அப்பொழுது அந்த விழாவிலே பேசிய ஒருவர் இஸ்லாமிய கதை என்று ஒன்றைச் சொல்லி குர்ஆனுக்கும் அதற்கும் சம்பந்தப்படுத்தி விளக்கினார். யாரோ ஒருவர் காட்டு வழி செல்கையில், தனது செருப்பையும், கைத்தடியையும் மற்றொருவருக்குத் தானம் கொடுக்கும்படி ஆண்டவன் கட்டளையிட்டாராம். …

Read More »

மாமனிதர் [தொடர்.. 3]

முஹம்மது நபி ஒரு ஆன்மீக தலைவராக மட்டும் இருந்துவிட்டால் அவரின் அடக்கமான பண்பிற்கு ஆச்சர்யப்பட ஒன்றுமில்லை. ஒரு வல்லரசின் அதிபதியாக இருந்துக்கொண்டு மக்கள் பணத்தில் பகட்டு வாழ்க்கை வாழவில்லை என்பதுதான் இங்கு குறிப்பிடப்படவேண்டிய ஒரு விஷயமாகும். வியக்க வைக்கும் புரட்சிப் பிரகடனம்நபிகள் நாயகத்தின் தலைமைச் செயலகமாக இருந்த பள்ளிவாசலின் மூலையில் ஸகாத் என்னும் பொதுநிதிக்குச் சொந்தமான பேரீச்சம் பழங்கள் குவிந்து கிடந்தன. ஒரு முறை நபிகள் நாயகத்தின் பேரர் அவற்றிலிருந்து …

Read More »

மாமனிதர் [தொடர்.. 2]

பஞ்சு தலையணை இல்லாத அரசர்.கூளம் நிரப்பப்பட்ட தோல் தலையணை தான் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் சாய்ந்து கொள்ளும் தலையணையாக இருந்தது (2) என்றும் முஹம்மது நபி(ஸல்) அவர்களிடம் ஒரு பாய் இருந்தது. அதைப் பகலில் விரித்துக் கொள்வார்கள். இரவில் அதை கதவாக பயன்படுத்திக் கொள்வார்கள் (1) என்றும் நபிகள் நாயகத்தின் மனைவி ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். முஹம்மது நபி(ஸல்) அவர்கள் பாயின் மேல் எதையும் விரிக்காமல் படுத்திருந்தார்கள். இதனால் விலாப்புறத்தில் பாயின் …

Read More »

நூல் விமர்சனம்

நூல் பெயர்: அடுத்த விநாடிஆசிரியர்: நாகூர் ரூமி இந்த நூலை ஒவ்வொருவரும்(மனிதனும் அல்லது தமிழ் படிக்க தெரிந்த எவரும்) படித்தே ஆக வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து. திருக்குரானில் ஒரு வசனம் வரும், ‘மனிதர்கள் தங்களுக்கு தாங்களே தீங்கிழைத்து கொள்கிறார்கள்’ என்று- எவ்வளவு உண்மை. அதாவது வாழ்க்கையில் ஒருவனுக்கு ஏற்படும் கஷ்டங்களுக்கு அவனே பொறுப்பாளி. ஏனெனில் இறைவன் வாழ்க்கையை மிகவும் எளிதாக்கி வைத்திருக்கிறான். வெற்றியின் இரகசியங்கள் இந்த நூலை …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 4

“நபிகள் நாயகம்தான் கல்கி அவதாரம்!”(?) (“மக்களுக்கு வழிகாட்ட இறைவனே மனித வடிவில் பிறக்கிறான்” எனும் அவதாரக் கொள்கையை இஸ்லாம் ஒப்புக் கொள்வதில்லை. மனிதர்களுக்கு வழிகாட்ட மனிதர்களில் இருந்தே தன் தூதர்களை இறைவன் தேர்ந்தெடுக்கிறான் என்பதே இஸ்லாம் கூறும் தூதுத்துவம். இறுதித்தூதர் வர இருக்கிறார் எனும் முன்னறிவிப்பு எல்லா வேதங்களிலும் சொல்லப்பட்டுள்ளது. இந்து வேதத்திலும் “கல்கி” பற்றி கூறப்பட்டுள்ளது. அந்த “கல்கி” வந்துவிட்டார், அவர்தாம் முஹம்மது நபி(ஸல்) என்று இந்துமத அறிஞர் …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 3

அறிஞர்கள் போற்றும் பெருமானார் முஹம்மது நபியின் வெற்றிக்கு முதல் காரணம், அவர்கள் கொண்டிருந்த உறுதியும் ஊக்கமும். இத்தகைய உறுதி அந்தக் காலச் சூழ்நிலையில் ஏற்படுவது எளிதன்று. இரண்டாவது காரணம். இஸ்லாம் போதிக்கும் சமத்துவமும் சகோதரத்துவமுமாகும்.– ஜவஹர்லால் நேரு – துவேஷம் என்னும் கருமேகக் கூட்டத்தை விலக்கி விட்டு உண்மையென்னும் கதிரவன் ஒளிபரப்பும் நன்னாள் ஒன்று வரலாம். அப்போது மேல் நாட்டு ஆசிரியர்கள், ‘முஹம்மது ஒரு சரித்திர நாயகர்’ என்று கூறுவதோடு …

Read More »

மேல்மாடி மின்னல்கள்

கங்காவின் “தினம் ஒரு ஸென் கதை” விஷயங்கள் மேல்மாடி Capacity பிரச்சினையால் மண்டையில் ஏறுவதில்லை. ஆனால் “ஆமைகளின் சுற்றுலா” என்ற தலைப்பு ஈர்த்ததால் சொடுக்கி பார்த்தபோது மேல்மாடியில் பல மின்னல்கள் எழுந்தன. கங்கா தனது பதிவில் இட்ட அக்கதை இதுதான்: ஆமைகளின் சுற்றுலா ஒரு ஆமைக் குடும்பமானது சுற்றுலா செல்ல முடிவெடுத்தது. குடும்பத்தில் இருந்த எல்லா ஆமைகளும் சுற்றுலாவுக்கு வருவதற்கு சம்மதிக்க ஏழு வருடங்கள் பிடித்தன. இயல்பிலேயே மிகவும் மந்தமாக …

Read More »

இஸ்லாம் – முஸ்லிம் அல்லாதோர் பார்வையில் – 2

அண்ணல் நபி பற்றி அறிஞர் அண்ணா தமிழகத்தில் இஸ்லாம்பலாச்சுளையை சுவைக்க முற்படுவோர், முதலில் மேல் தோலைநீக்கி, பிசிறுகளைக் களைந்துவிட்டு, பிறகு சுளையை எடுத்து அதிலுள்ள கொட்டைகளையும் நீக்கிவிட்டே தின்பார்கள். அதுபோன்றே மதக்கருத்துக்களையும் உணரவேண்டும். சிலர் பலாப்பழத்தின் முன்தோலையே மதம் என்கிறார்கள். அவர்களுக்காகப் பரிதாபப்படுகிறோம். சிலர் பிசிறுகளை ஒட்டிக் கொண்டு மதம் என்று அலைகிறார்கள். அவர்களைக் கண்டால் நமக்கு அருவருப்பாக இருக்கிறது. மற்றும் சிலர் கொட்டையுடன் பலாச்சுளையை விழுங்க முற்படுகிறார்கள். அவர்களைக் …

Read More »

"கோலங்கள்" காட்டாதீர்கள் குழந்தைகளிடம்

உடை உடுத்துவது தொலைக் காட்சிக்கு முன் – தலை வாருவது தொலைக் காட்சிக்கு முன் – சாப்பிடுவது தொலைக் காட்சிக்கு முன் – விளையாடுவது தொலைக் காட்சிக்கு முன் – படிப்பது தொலைக் காட்சிக்கு முன் http://chudar.blogspot.com/2005/03/blog-post_20.html ஒரு காலத்தில் தெருக்களில் குழந்தைகளின் விளையாட்டு சப்தம் இருக்கும். அதுவே அவர்களுக்கு உடற்பயிற்சியாக – கிட்டுப்பிள்ளை, சில்லுக்கோடு, ஓடிப்பிடிச்சி, கபாடி மற்றும் பம்பரம் என சீசனுக்கு தகுந்தார்போல் மாறுவதுண்டு. கடைசியாக பம்பரம் …

Read More »

பாமினி to யுனிகோடு (சீர்மை)

Bamini/Sarukesi to Unicode (improved version) பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இனி மேலும் பல பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் …

Read More »