Featured Posts
Home » பொதுவானவை » நுட்பம் » இணையம் » பாமினி to யுனிகோடு (சீர்மை)

பாமினி to யுனிகோடு (சீர்மை)

Bamini/Sarukesi to Unicode (improved version)

பாமினி, சாருகேசி, ரோஜா, சரஸ்வதி, தென்றல், அருவி, ஃபிர்தவ்ஸ், ஜாஸ்மின், சிங்காரம் இன்னும் இதனை ஒத்த பல்வேறு எழுத்துருக்களில் எழுதப்பட்ட கட்டுரைகளை யுனிகோடில் மாற்றும்போது ஏற்பட்ட பிரச்சினைகளை சரிசெய்துள்ளேன். முக்கியமாக கமா(,) பிரச்சினை இனி இருக்காது. இந்த எழுத்துரு மாற்றிக்கு முன்னோடி நண்பர் சுரதா என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இனி மேலும் பல பாமினி/சாருகேசி எழுத்துரு இணையதளங்கள் யுனிகோடு இணையதளமாக மாற்றம் அடையும் என்று நம்பலாம்.

கீழ்கண்ட சுட்டியை சொடுக்கி எழுத்துருமாற்றியை பயன்படுத்திக்கொள்ளுங்கள். உங்கள் கணினியிலேயே சேமித்தும் பயன்படுத்திக்கொள்ளலாம். இணையதளங்களில் இறக்கி மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தலாம்.

bamini2unicode (Cheermai)

இப்புதிய எழுத்துரு மாற்றியின் பயனை அறிந்துக்கொள்ள, கீழ்கண்ட வரியை தனியே இட்டு பாமினி அல்லது சாருகேசி எழுத்துருவாக மாற்றுங்கள். விடை சரியாக வருகிறதா?

cs;@hpy;> ‘g+l;L”> mt;t+L> ah`{> [{yp> ]{> m/J

விடை:
உள்ளூரில், ‘பூட்டு’, அவ்வூடு, யாஹு, ஜுலி, ஸு, அஃது

பாமினி/சாருகேசி எழுத்துருக்களாக மாற்றப்பட்ட அச்சொற்களை ஏற்கனவே உங்களிடம் உள்ள பாமினி to யுனிகோட் மாற்றியில் அல்லது பாமினி மறுமொழி பெட்டிகளில் இட்டால் முழுமையாக மாற்றம் ஆகாமல் இருப்பதை காண்பீர்கள்.

அப்படியே இப்புதிய எழுத்துரு மாற்றியிலும் இட்டு பாருங்கள். விடைகள் சரியாக வருவதை காண்பீர்கள்.

பாமினி தட்டச்சு முறையை பயின்றவர்கள் இதனை பல்வேறு வகையில் பயன்படுத்திக்கொள்ளலாம்.

8 comments

  1. Many Thanks for your help.

  2. சர்தார்

    தொடர்ந்து கலக்குங்க முஃப்தி!

  3. மதி கந்தசாமி (Mathy)

    thanks a lot. this would be very useful for a project of mine. Has been fighting with it.

    Could u pls do all of us a favour?

    Can u ask suratha to add this to his code, so that we could use it in all his seyali?

    thanks.

  4. முஃப்தி

    ஸ்ரீரங்கன், சர்தார், மதி கந்தசாமி உங்கள் அனைவருக்கும் எனது நன்றிகள்.

    மேடம்!
    நான் ஏற்கனவே சுரதா அவர்களுக்கு மின்னஞ்சல் (suratha@hotmail.com) செய்துவிட்டேன். பதிலோ, கருத்துகளோ வரவில்லை.

    சுரதா.காம்-இல் பாமினிtoயுனிகோட் மாற்றிகளில் உள்ள பழைய Code-களுக்கு பதில் இதனை இடவேண்டும் என்பதே எனது ஆசை.

    மேலும் தனியாக bamini2unicode ஒன்றும் அங்கு அமையவேண்டும். இதனையே எனது அனுமதியாக எடுத்துக்கொண்டு சுரதாவுக்கு தெரிவிக்கலாமே.

    -முஃப்தி-

  5. நன்றி

    பாமினி எழுத்துருவில் இரண்டு வகை உள்ளது ஒன்று பழையது(Bamini) மற்றையது புதியது (Baamini).பழைய பாமினியில் உதாரணமாக ளூவன்னா இல்லை.அதனால்தான் அதை நான் எனது பொங்குதமிழில் ளு+h என்று சேர்த்திருந்தேன்.அதேபோல் பூவன்னாவை சிலர் G+ என்று எழுதுவார்கள் சிலர் g+ என்று எழுதுவார்கள் அதேபோலத v
    ூ இந்த எழுத்தும் புதிய பாமினியில் ஓரிடத்திலும் பழைய பாமினியில் ஓரிடத்திலும் இருக்கின்றது.பலர் 95 வீதத்தினர் இன்னும் பழைய பாமினி எழுத்துரு வடிவம் கொண்டுதான் எழுதுகிறார்கள்.அதனால்தான் ஈ கலப்பைக்கும் பாமினி கலப்பையை பழைய பாமினி வடிவு கொண்டு அமைத்திருந்தேன் ..

    இது ஒரு குழப்பமான விடயம் அதனால்தான் என்னால் உடனேயே பதில் அளிக்க முடியவில்லை.

    .
    உங்கள் ஊக்கத்திற்கும் உடனடி முயற்சிக்கும் பாராட்டுக்கள்.இரண்டையும் சேர்த்து இணைக்கமுடியுமா என பார்க்கிறேன்.

    அன்புடன்
    சுரதா

  6. அபூ முஹை

    பெஸ்ட் கண்ணா பெஸ்ட்

  7. ஜாபர் (சபாமர்வா)

    உங்கள் ஊக்கம் தொடர வாழ்த்துகிறேன்!!!

  8. நான் முதன் முதலாக தமிழ் இனையத்தை பயன்படுத்துகிறேன். ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *