Featured Posts
Home » மதங்கள் ஆய்வு (page 18)

மதங்கள் ஆய்வு

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-6)

திருக்குர்ஆன் பைபிளிலிருந்து காப்பியடிக்கப்பட்டதா? திருக்குர்ஆனிலுள்ள கூறப்பட்டுள்ள தீர்க்கதரிசிகளின் வரலாறுகள் பலவும் பைபிளில் சொல்லப்பட்ட தகவலை ஒத்து அமைந்திருக்கிறது, எனவே திருக்குர்ஆன் பைபிளைத் தழுவி முஹம்மது நபி (ஸல்) அவர்களால் காப்பியடிக்கப்பட்டதே! என்ற கிறித்தவ சபைகள் பிரச்சாரம் செய்து வருகின்றன. இதில் எந்தளவுக்கு உண்மை உள்ளது என்பதைப் பின்வரும் சான்றுகளின் அடிப்படையில் ஆராய்வோம்.

Read More »

குர்ஆன் – அது என்ன?

வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்கு வழங்கப்பட்ட இறைச்செய்தியின் பதிவே திருக்குர்ஆன்! முஹம்மத் (ஸல்) அவர்கள், தான் மனனம் செய்த இந்த இறைவசனங்களை தம்முடைய தோழர்களிடம் கூறினார்கள். பின்னர் அவர்களில் எழுதத் தெரிந்தவர்களைக் கொண்டு இறைவசனங்கள் எழுதி வைக்கப்பட்டன. பின்னர், அதனை முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது வாழ்நாளிலேயே சரிபார்த்து அங்கீகரித்தார்கள்! திருக்குர்ஆன் 114 அத்தியாயங்களைக் கொண்டது. பல நூற்றாண்டுகள் கடந்துவிட்ட பின்னரும் அதன் …

Read More »

இஸ்லாம் முழங்குவது எதனை?

வணக்கத்துக்குரிய ஏக இறைவன் ஒருவனை மட்டுமே வணங்கும்படி இஸ்லாம் அழைக்கின்றது. மேலும், தன்னுடைய அறிவு ஞானத்தைக் கொண்டு சிந்தித்து உணருமாறு மனிதனுக்கு திரும்ப திரும்ப கட்டளையிடுகின்றது. இஸ்லாம் பரவிய ஒரு சில வருடங்களுக்குள்ளாகவே உலகின் மாபெரும் நாகரிகங்களும், பல்கலைக்கழகங்களும் வளமானதொரு வாழ்வை நோக்கி நடைபோடத் துவங்கின. “அறிவைத் தேடிப்பெறுவது ஒவ்வொரு முஸ்லிம் ஆண்-பெண் மீதும் கடமை” – எனும் முஹம்மத் (ஸல்) அவர்களின் அமுதமொழி இம்மாபெரும் புரட்சிக்கு அடிகோலியது! இதன் …

Read More »

முஹம்மத் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக ஆனது எப்படி?

அப்பொழுது அவருக்கு வயது 40! வழக்கம்போல் ஹிரா குகையில் தியானத்தில் ஆழ்ந்திருந்த வேளை அது! வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலம் வஹீ எனப்படும் இறைச்செய்தி முதன் முதலாக இறங்கிற்று. அவருடைய வாழ்வில் 23 வருடங்கள்வரை இறங்கிய இந்த இறைச்செய்தியே திருக்குர்ஆன் எனப்படுகின்றது. வானவர் தலைவர் ஜிப்ரயீல் (அலை) அவர்கள் மூலமாக தான் பெற்ற இறைச்செய்தியான திருக்குர்ஆனை தன் சமூகத்தாரிடம் எடுத்துரைக்கத் தொடங்கினார்கள். ஒரு சிறிய கூட்டம் அவருடைய …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-3)

இஸ்லாம் கூறும் நல்லறங்களும் தீயவைகளும் அல்லாஹ்வின் பொருத்தத்தை பெற அவன் தன் படைப்பினங்களுக்கு குர்ஆன் நபிமொழி மூலம் வழங்கிய அறிவுரைகளில் முழுமையாக ஒரு மனிதன் வாழ்வில் கடைபிடிக்க வேண்டிய அத்துணை அம்சங்களையும் அழகுபட விவரிக்கின்றான். நல்லறங்களை ஒருவன் தன்னால் இயன்ற அளவு செய்வதையும் தீய செயல்களை முற்றிலும் தவிர்ந்து கொள்வதுதான் அவனது திருப்பொருத்தத்தை பெறும் அடிப்படையாக உள்ளது.

Read More »

யார் இந்த முஹம்மத் (ஸல்)?

கி.பி. 570….! ஐரோப்பா கண்டம்! கிறிஸ்துவம் முழுமையாக பரவியிராத காலகட்டம் அது! நாம் மேலே சொன்ன இந்த புனித மக்கா மாநகரில் தான் முஹம்மத் (ஸல்) அவர்கள் பிறந்தார்கள். தன்னுடைய பிறப்புக்கு முன்னரே தந்தையையும், பிறந்த சிறிது காலத்துக்குள்ளாகவே தாயையும் இழந்தார்கள். அரபுலகில் கண்ணியத்துக்கு உரியதாகக் கருதப்பட்ட குறைஷிக் குலத்தில் பிறந்த அவர், தம்முடைய சிறிய தந்தையாரின் கண்காணிப்பில் வளர்ந்தார்கள். தன்னுடைய வாய்மைக்காகவும், நேர்மைக்காகவும், உயர் பண்புகளுக்காகவும் போற்றப்படத்தக்க வகையில் …

Read More »

இதுதான் இஸ்லாம் (பகுதி-2)

இஸ்லாம் ஒரு இனிய மார்க்கம் இஸ்லாம் என்பது ஒரு மதமல்ல. அது ஒரு வாழ்க்கை நெறி. இறைவனால் உலகுக்கு அனுப்பப்பட்ட பல்வேறு இறைத்தூதர்களின் சமுதாயத்திற்குப்பின் இறுதியாக அனுப்பப்பட்ட இறைத்தூதரின் சமுதாயம் நாம்தான். படைத்த இறைவனால் பரிபூரணமாக்கப்பட்ட வாழ்கை நெறியே இஸ்லாம். இந்த வாழ்க்கை நெறியாகிய இஸ்லாம் மட்டுமே இறைவானால் பொருந்திக் கொள்ளப்பட்ட மார்க்கமாகும். இதனைத்தவிர மற்றைய எல்லா சமயங்கள் மதங்களின் வாழ்க்கை நெறிகளும் இறைவனால் அங்கீகரிக்கப்பட்டதல்ல என்பதைக் குர்ஆன் கூறுவதைப் …

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-5)

யோசேப் அறியாத ராம்சேஸ் பட்டினம் 2. இஸ்ரவேலர்களால் உருவாக்கப்பட்ட பித்தோம், ராமசேஸ் என்னும் இரண்டு பண்டகசாலைப் பட்டணங்களைக் குறித்து பைபிள் கூறுகின்றது. யாத்திராகமத்தில் காணப்படுவதாவது,

Read More »

கஅபா – அது என்ன?

ஏறக்குறைய நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நடந்த நிகழ்ச்சி இது: இறை இல்லம் ஒன்றை நிர்மாணிக்கும்படி தனது தூதரான இப்ராஹீம் (அலை) அவர்களுக்கும் அவருடைய மகனார் இஸ்மாயீல் (அலை) அவர்களுக்கும் இறைவன் கட்டளையிட்டான். இறைக்கட்டளையை சிரமேற்கொண்டு அவ்விருவரும் கட்டியெழுப்பியதுதான் இந்த ‘கஅபா’ ஆலயம்! இந்த இறைஇல்லம் கல்லைக் கொண்டு கட்டப்பட்டதாகும்! இந்த இறைஇல்லம் ஆதம் (அலை) அவர்கள் காலந்தொட்டே இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Read More »

திருக்குர்ஆன் மற்றும் பைபிளில் காணப்படும் வரலாற்றுத் தகவல்கள் – ஓர் ஒப்பீடு (பகுதி-4)

பைபிள் கூறும் ”தாண்” என்ற ஊரும் முரண்பாடும் 5. வரலாறுகள் என்று பைபிள் கூறும் செய்திகள் மிகுந்த பலஹீனம் உடையதாகவும் உறுதியற்றதாகவும் உள்ளன. ஆனால் திருக்குர்ஆனில் சொல்லப்பட்ட வரலாற்றுச் செய்திகளில் எதுவுமே உறுதியற்றவை என்று இதுவரை எவராலும் நிரூபிக்க இயலவில்லை. பைபிள் கூறும் சில சம்பவங்களில் காணப்படும் முரண்பாடுகளைக் காண்போம்.

Read More »