Featured Posts
Home » மதங்கள் ஆய்வு (page 29)

மதங்கள் ஆய்வு

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-2

முன் பதிவின் தொடர்ச்சி… பலதாரமணத்தை தடை செய்திருக்கும் இடங்களிலெல்லாம் சமூக அமைப்பு எவ்வாறு செயல்படுகிறது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டும். உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் பல இலட்சம் ஜெர்மானியர்கள் செத்து மடிந்த போது அவர்களின் விதவைகளுக்கு மறுவாழ்வு கொடுக்கும் நோக்கில் பலதாரமணத்தை சட்டமாக்கிட கோரிக்கை எழுந்தபோது , கிறிஸ்தவ தேவாலயங்களால் அது முற்றாக நிராகரிக்கப்பட்டது. விளைவாக, இன்று விபச்சாரம் அங்கு ஒரு தொழிலாகவே அங்கீகரிக்கப்பட்டு விட்டது. பாலியல் தொழிலாளர்கள் …

Read More »

பலதாரமணம்: பாவமா? பரிகாரமா? பகுதி-1

பலதாரமணம்: பாவமா ? பரிகாரமா? இஸ்லாமும் பெண்களும் என்று விவாதம் வரும்போது பிற மத சகோதரர்களாலும் , ஏன் பாமர முஸ்லிம்களாலும் சரியாகப் புரிந்து கொள்ளப்படாத ஒரு விடயமாக முஸ்லிம் ஆண்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ள ‘பலதாரமணம் ‘ (Polygyny) உள்ளது. உலகில் மிக அதிகமாக விவாதிக்கப்பட்ட விஷயங்களுள் ஒன்றின் கருப்பொருளாக ‘பலதாரமணம் ‘ (Polygyny) என்பதும் இருக்கிறது. எந்த அளவுக்கு அது விளங்கிக் கொள்ளப்படாததாக இன்னமும் இருந்து வருகிறதோ அந்த அளவுக்கு …

Read More »

பெருநாள் தர்மம் – பித்ரு ஸகாத்.

பெருநாள் தர்மமும் அதன் நோக்கமும். பித்ரு ஸகாத் நோன்பாளி வீணான காரியங்களில் ஈடுபட்டதனால் ஏற்படும் பாவத்தைத் தூய்மைப் படுத்துவதாகவும், ஏழைகளுக்கு உணவுக்கு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது, யார் அதனை தொழுகைக்கு முன்பே கொடுத்து விடுகிறாரோ அதுதான் ஒப்புக் கொள்ளப்பட்டப் பெருநாள் தர்மமாகும் யார் பெருநாள் தொழுகைக்குப்பின் அதனை வழங்குகிறாரோ அது (பெருநாள் தர்மமாகாது மாறாக அது சாதாரண) தர்மமேயாகும், என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிக்கும் நபித்தோழர், இப்னு அப்பாஸ் …

Read More »

இஸ்லாம் வழங்கும் இறைத்தூது -1

(இஸ்லாமிய மார்க்கத்தின் முக்கிய கோட்பாடுகளில் ஒன்று இறைத்தூதர்களை ஏற்று அவர்கள் வாழ்ந்த வழியில் நாமும் வாழ்வதாகும். இஸ்லாம் அல்லாத இதர மதங்களில் இறைவன் புறத்திலிருந்து செய்திகளை கொண்டு வரும் இறைத்தூதர்கள் பற்றிய உண்மை நிலைகள் கண்டறியப்படவே இல்லை. ஆனால் இஸ்லாம் தனது கொள்கையின் அஸ்திவாரங்களில் ஒன்றாக இறைத்தூதர்களையும் அவர்களை அறிந்து கொள்வதின் அறிவு நிலையையும் ஆக்கியுள்ளது. அந்த தூதுத்துவத்தின் நிலைப்பாடு என்ன? அது உலகில் ஏற்படுத்திய மாற்றங்கள் என்ன? அதை …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-14

இரும்பைப் பொழியும் வானம்! -14 ஏ.கே.அப்துர் ரஹ்மான் மானிட சமுதாயம் முதலாவதாகப் பயன்படுத்திய உலோகம் எது என்ற வினாவிற்கு ‘தங்கம்’ என்ற வியப்பிற்குரிய பதிலைத்தான் நாம் பெறுகிறோம். ஏனைய உலோகங்களைப் போன்று தங்கம் பிற உலோக தாதுக்களுடன் (Minerals) இணைந்து விடாமல் சுத்த நிலையில் கிடைப்பதால் அதைத் தாதுக்களிலிருந்து பிரித்தெடுப்பது எளிது. எனவே முதலாவதாக மானிடப் பயன்பாட்டிற்குள் தங்கம் குடியேறிவிட்டது. இதற்கடுத்தபடியாக செம்பும், அதன் கூட்டுப் பொருளாகிய (Alloy) வெண்கலம் …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-13

ஈர்க்கும் பூமி 13 ஏ.கே.அப்துர் ரஹ்மான் பரந்து விரிந்து கிடக்கும் நமது பூமி மானிட உள்ளங்களில் தட்டை வடிவம் கொண்டிருந்தபோது அது எதன் மீது நிலை பெற்றிருக்கிறது என்ற வினாவும் எழத்தான் செய்தது. இதற்கு விடை காண முயன்ற சில கற்பனை காவியங்களும், சில போதைக் கனவுகளும் நமது பூமியை பன்றியின் மூக்கின் மீது நிற்பதாகக் கண்டன. மேலும் நில கற்பனைகள் நமது பூமியை ஒரு மீனின் வாலின் மீது …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-12

சுழற்றும் பூமி -12 ஏ.கே.அப்துர் ரஹ்மான் சென்ற கட்டுரையில் நாம் கேட்டிருந்த கேள்வியைக் கேட்டதும் அவை ஒரே நேரத்தில்தான் தரையிறங்கும் என்று கூறியிருப்பார்கள். அதே நேரத்தில் அந்த பதிலைத் தொடர்ந்து, எப்படி? என்ற மற்றொரு வினாவும் எழுப்பப்பட்டிருப்பதை பார்த்திருப்பார்கள். இந்த வினாவைப் பார்த்ததும் இந்த வினாவை எழுப்பியவரைச் சற்று விபரீதமாகக் கூடச் சிலர் எண்ணியிருப்பார்கள். ஏனென்றால் ஹாங்காங்கிலிருந்து டில்லிக்கு எவ்வளவு தூரமோ அவ்வளவு தூரம்தான் டில்லியிலிருந்து ஹாங்காங்கிற்கு இருக்க முடியும். …

Read More »

பொறுத்திருந்து பார்ப்போம்!

தமிழோவியம் வலைத்தளத்தில் வெளிவந்த “அமானுட கேள்விகளும், அரைகுறை ஞானிகளும்” என்ற கட்டுரைத் தொடர் சம்பந்தமாக மிகச் சாதாரண முன்னுரையைக் கண்ட, வஹி : இஸ்லாத்தின் அமானுட அடிப்படை- ஓர் பார்வை (மூலம் : டாக்டர் கொய்ன்ராட் எல்ஸ்ட்) என்ற கட்டுரையாளர் கடுகடுக்கிறார், எரிச்சலடைகிறார், வெகுண்டெழுகிறார். நாகரீகமற்ற நாலாந்தர எழுத்து நடை விமர்சனங்களையும் – தனது வாதத்துக்கு வலு சேர்த்து – பின்னூட்டமிடும் அளவுக்கு தரம் தாழவும் அவர் தயங்கவில்லை. ”மிக …

Read More »

அழுகியது முட்டையா அல்லது மூளையா?

அழுகியது மூளையாக இருந்தால்தான் சிந்தனைகள் தாறுமாறாக இருக்கும். அதுதான் இப்போது நேசகுமாருக்கு நேர்ந்துள்ளதோ என்று ஐயப்படும் அளவிற்கு அவருடைய வார்த்தைகளும், எழுத்துக்களும் அமைந்துள்ளன. அவர் எழுதியதிலிருந்தே அவரிடம் கேட்டக் கேள்விகளுக்கு இன்றுவரை பதில் சொல்லாமல் காலம் தாழ்த்தியவர் இப்போது ஒரு புதுக் காரணத்துடன் வந்திருக்கிறார். ஒரு சிலர் அவரைத் தனிப்பட்ட முறையில் தாக்குதல் செய்வதால்தான் பதில் சொல்லாமல் இருப்பதாக வருந்தியிருக்கிறார். இவர் பிறரை தனிப்பட்ட முறையில் தாக்கலாம், ஆனால் இவரை …

Read More »

வஹி: இறைச்செய்தியும்- அறிவியலும்-11

சுழலும் பூமி(4) -11 ஏ.கே.அப்துர் ரஹ்மான் சூரியன் சுழல்வதால்தான் இராப்பகல்கள் ஏற்படுகின்றனவே அன்றி, சூரியன் பூமியைச் சுற்றி வரவில்லை எனக் கூறும் திருமறையின் பற்பல வசனங்களை முந்திய கட்டுரைகளில் கண்டோம். சூரியக் குடும்பத்தின் இயக்கதைப் பற்றிய இந்த நவீன அறிவியல் கண்டுபிடிப்பை மேலும், மேலும் வலியுறுத்திக் கொண்டிருக்கும் சத்தியத் திருமறையின் மேலும் ஓர் அற்புதத்தைப் பாருங்கள். திருக்குர்ஆன் கூறுகிறது: ‘பின் வாங்கிச் செல்லும் இரவின் மீதும், புலரும் வைகறையின் மீதும் …

Read More »