Featured Posts
Home » நூல்கள் (page 124)

நூல்கள்

கணவர் தவிர யாருக்கும் 3 நாட்களுக்கு மேல் துக்கம் கூடாது.

950. நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், அவரின் தந்தை அபூ சுஃப்யான் இப்னு ஹர்ப் (ரலி) (ஷாம் நாட்டில்) இறந்துவிட்ட சமயம் சென்றேன். அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா (ரலி) மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரண்டு கன்னங்களிலும் தடவினார்கள். பின்னர், ‘அல்லாஹ்வின் மீதாணையாக! …

Read More »

குழந்தை பிறப்பால் விதவையின் இத்தா முடிவுறுகிறது.

948. சுபைஆ பின்த் அல்ஹாரிஸ் அவர்கள் ‘பனூ ஆமிர் இப்னு லுஅய்’ குலத்தைச் சேர்ந்த ஸஅத் இப்னு கவ்லா (ரலி) அவர்களுக்கு வாழ்க்கைப்பட்டிருந்தார். ஸஅத் (ரலி) பத்ருப்போரில் பங்கெடுத்தவராவார். ‘விடைபெறும்’ ஹஜ்ஜின்போது ஸஅத் (ரலி) இறந்துவிட்டார்கள். அப்போது ‘சுபைஆ’ கர்ப்பமுற்றிருந்தார். ஸஅத் அவர்கள் இறந்த நீண்ட நாள்கள் ஆகியிருக்கவில்லை (அதற்குள்) சுபைஆ பிரசவித்துவிட்டார். (பிரசவத்திற்குப் பின் ஏற்படும்) உதிரப் போக்கிலிருந்து சுபைஆ அவர்கள் சுத்தமானபோது, பெண் பேச வருபவர்களுக்காகத் தன்னை …

Read More »

மும்முறை தலாக்கு கூறப்பட்ட பெண்ணின் ஜீவனாம்சம் பற்றி..

946. ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? ‘(மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு ‘இத்தா’வின் போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை” என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா? என ஆயிஷா (ரலி) கேட்டார்கள். புஹாரி : 5324 அல் காஸிம் (ரலி). 947. நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், ‘அப்துர் ரஹ்மான் இப்னு அல்ஹகமுடைய புதல்வியான இன்னவளைப் பார்த்தீர்களா? அவரை அவரின் …

Read More »

அல்-ஈலா எனும் மனைவியிடமிருந்து தற்காலிகப் பிரிவு.

944. நான் ஒரு வருட காலமாக ஒரு வசனத்தைப் பற்றி உமர் இப்னு கத்தாப் (ரலி) அவர்களிடம் (விளக்கம்) கேட்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், அன்னார் மேலிருந்த (மரியாதை கலந்த) அச்சம் காணரமாகக் கேட்பதற்குத் தைரியம் வரவில்லை.(ஒரு முறை) உமர் (ரலி) ஹஜ்ஜுக்காகப் புறப்பட்டுச் சென்றபோது நானும் அவர்களுடன் புறப்பட்டேன். நான் (ஹஜ்ஜை முடித்துக் கொண்டு) திரும்பி வரும் வழியில் நாங்கள் (மர்ருழ் ழஹ்ரான் எனும்) ஒரு சாலையில் …

Read More »

மனைவியை விவாக ரத்துச் செய்ய எச்சரிப்பது தலாக்கு ஆகாது.

941. இறைத்தூதர் (ஸல்) அவர்களின் துணைவியருக்கு (அவர்கள் விரும்பினால் தம்முடன் சேர்ந்து வாழலாம்; அல்லது பிரிந்துவிடலாம் என) உரிமை அளித்திடுமாறு தன் தூதருக்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது, நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். என்னிடம் தான் முதன் முதலாக விஷயத்தைக் கூறினார்கள்: ‘(ஆயிஷாவே)! நான் உனக்கு ஒரு விஷயத்தைச் சொல்கிறேன். (என்று அதைச் சொல்லிவிட்டு,) நீ உன் பெற்றோரிடம் அனுமதி கேட்டுக்கொள்ளும் வரை அவசரப்பட வேண்டாம்” என்று கூறினார்கள். என்னுடைய …

Read More »

பரிகாரம் அவசியம்.

938. இப்னு அப்பாஸ் (ரலி) ‘(ஒருவர் அனுமதிக்கப்பட்ட ஒன்றை சத்தியமிட்டு) விலக்கிக்கொள்ளும் பட்சத்தில், (சத்தியத்தின் கட்டுப்பாட்டிலிருந்து வெளியேறுவதற்கான) பரிகாரத்தை அவர் செய்யவேண்டும்” என்று கூறிவிட்டு, ‘உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருக்கிறது” எனும் (திருக்குர்ஆன் 33:21 வது) இறைவசனத்தை ஓதினார்கள். புஹாரி :4911 இப்னு அப்பாஸ் (ரலி). 939. நபி (ஸல்) அவர்கள் (தம் துணைவியார்) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களிடம் (அவர்களின் அறையில் அதிக …

Read More »

மாதவிடாய் நேரத்தில் விவாகரத்து செய்ய தடை

936. நான் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் என் மனைவியை மணவிலக்குச் செய்துவிட்டேன். அப்போது அவள் மாதவிடாய்ப் பருவத்தில் இருந்தாள். எனவே, (என் தந்தை) உமர் இப்னு கத்தாப் (ரலி) இதைப்பற்றி இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வினவியபோது, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தந்தையாரிடம், ‘உங்கள் புதல்வருக்குக் கட்டளையிடுங்கள்: அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ளட்டும்! பிறகு, அவள் மாதவிடாயிலிருந்து தூய்மையடைந்து, அடுத்து மீண்டும் அவளுக்கு மாதவிடாய் ஏற்பட்டுப் பின்னர் …

Read More »

பெண்களின் நிலை!

933. பெண், (வளைந்த) விலா எலும்பைப் போன்றவளாவாள். அவளை நீ நிமிர்த்த நினைத்தால் அவளை ஒடித்தே விடுவாய். (அதற்காக அப்படியே) அவளை நீ அனுபவித்துக்கொண்டே இருந்தால், அவளில் கோணல் இருக்க அனுபவிக்க வேண்டியதுதான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி :5184 அபூஹுரைரா (ரலி). 934. பெண்களிடம் நல்ல முறையில் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்கு நான் உபதேசிப்பதை ஏற்றுக்கொள்ளுங்கள். ஏனெனில், பெண்கள் (வளைந்த) விலா எலும்பிலிருந்து படைக்கப்பட்டுள்ளனர். …

Read More »

கன்னியை மணமுடித்தலின் சிறப்பு.

929. நான் திருமணம் செய்துகொண்டேன். (சில நாள்களுக்குப் பின்) என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள், ‘யாரை மணமுடித்தாய்?’ என்று கேட்டார்கள். நான் ‘கன்னி கழிந்த ஒரு பெண்ணை மணமுடித்தேன்” என்று பதிலளித்தேன். அதற்கவர்கள், ‘உனக்கென்ன நேர்ந்தது? கன்னிப் பெண்களும் அவர்களின் உமிழ்நீரும் உனக்கு வேண்டாமா?’ என்று கேட்டார்கள். என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘கன்னிப் பெண்ணை மணந்துகொண்டு அவளோடு நீயும் உன்னோடு அவளுமாகக் கூடிக்குலவி மகிழ்ந்திருக்கலாமே!” என்று கேட்டார்கள். புஹாரி …

Read More »

மார்க்கப் பற்றுள்ள பெண்ணை மணமுடி.

928. நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள்: 1. அவளுடைய செல்வத்திற்காக 2. அவளுடைய குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளுடைய அழகிற்காக 4. அவளுடைய மார்க்க (நல்லொழுக்க)த்திற்காக. எனவே, மார்க்க (நல்லொழுக்க)ம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். புஹாரி: 5090 அபூஹுரைரா (ரலி).

Read More »