Featured Posts
Home » நூல்கள் (page 92)

நூல்கள்

மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல்

பிறருக்குத் தீங்கிழைத்தல் என்பதும் இல்லை, பிறரால் தீங்கிற்கு உள்ளாவதென்பதும் இல்லை என்பது இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அம்சமாகும். அந்த அடிப்படையில் ஒருவன் தனது வாரிசுகளுக்கு (மரணசாசனத்தின் மூலம்) தீங்கிழைப்பது தடை செய்யப்பட்டதாகும். இவ்வாறு செய்கின்றவனுக்கு நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. ‘யாரேனும் (பிறருக்கு) தீங்கிழைத்தால் அல்லாஹ் அவனுக்குத் தீங்கிழைப்பான். யாரேனும் (பிறருக்கு) சிரமம் கொடுத்தால் அல்லாஹ் அவருக்கு சிரமம் கொடுப்பான்’ என்பது நபிமொழி. (அஹ்மத்) மரணசாசனத்தின் மூலம் தீங்கிழைத்தல் என்பதற்கு பல …

Read More »

அண்டை வீட்டாருக்குத் தீங்கிழைத்தல்

திருக்குர்ஆனில் அல்லாஹ் அண்டை வீட்டார் குறித்து நமக்கு அறிவுரை கூறியுள்ளான்: “மேலும் நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணையாக்காதீர்கள். தாய், தந்தையரிடம் நல்ல முறையில் நடந்துக் கொள்ளுங்கள். மேலும் உறவினர்கள், அநாதைகள், வறியவர்கள், உறவினரான அண்டை வீட்டார், அந்நியரான அண்டை வீட்டார், பக்கத்திலிருக்கும் நண்பர், வழிப்போக்கர், மற்றும் உங்கள் கைவசத்திலுள்ள அடிமைகள் ஆகியோருடன் நல்லவிதமாக நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக அல்லாஹ் வீண் பெருமையும் கர்வமும் கொண்டவர்களை நேசிப்பது இல்லை” …

Read More »

ஒட்டுக் கேட்டல்

அல்லாஹ் கூறுகிறான்: “துருவித் துருவி ஆராயாதீர்கள்” (49:12). இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ‘யாரேனும் மக்களின் செய்தியை அவர்கள் விரும்பாத நிலையில் ஒட்டுக் கேட்டால் மறுமையில் அவனுடைய காதுகளில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றப்படும்’ நபிமொழி (தப்ரானி) அவர்களுக்கு தெரியாமல் அவர்களுடைய செய்தியை ஒட்டுக் கேட்டு அவர்களுக்கு இடைஞ்சலை ஏற்படுத்துவதற்காக பிறரிடம் எடுத்துச் சொன்னால் அவன் துருவித் துருவி ஆராய்தல் (அல்லது ஒட்டுக் கேட்டல்) எனும் பாவத்துடன் (கோள் சொல்லுதல் …

Read More »

சிறுநீரிலிருந்து தற்காத்துக் கொள்ளாதிருத்தல்

இறைமார்க்கத்தின் சிறப்பம்சம் என்னவெனில் மனிதனுடைய விவகாரங்களைச் சீர் செய்யக்கூடிய அனைத்தையும் அது கூறியுள்ளது. அவற்றில் ஒன்று அசுத்தத்தை நீக்குவது. அதனால் தான் தண்ணீரைக் கொண்டு சுத்தம் செய்வதும், கற்களைக் கொண்டு சுத்தம் செய்வதும் சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டுள்ளது. அது மட்டுமா? தூய்மையும் சுத்தமும் எப்படி ஏற்படுமென்ற விபரத்தையும் இம்மார்க்கம் விவரித்துள்ளது. மக்களில் சிலர், அசுத்தத்தை நீக்குவதில் கவனக் குறைவாக இருக்கின்றனர். அதுதான் ஆடையிலோ, உடம்பிலோ பட்டுவிடுவதற்குக் காரணமாக இருக்கின்றது. மட்டுமல்ல தொழுகை …

Read More »

கப்ரின் மீது அமர்தல், மிதித்தல், அடக்கஸ்தலங்களில் மல ஜலம் கழித்தல்.

‘உங்களில் ஒருவர் நெருப்பின் மீது அமர்ந்து அது அவருடைய ஆடையை எரித்து தோலையும் பதம் பார்ப்பது கப்ரின் மீது அமர்வதை விட சிறந்தது’ என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம். கப்ருகளை மிதித்தல்: சிலர் இவ்வாறு செய்கின்றனர். இறந்தவர்களை அடக்கம் செய்யும் போது நீங்கள் அவர்களைக் காணலாம். அருகிலுள்ள கப்ருகளை மிதிப்பதை சற்றும் பொருட்படுத்த மாட்டார்கள். சிலபோது செருப்புக் கால்களுடன் மிதிப்பார்கள் …

Read More »

கனவில் பொய்யுரைத்தல்

சிலர் காணாதக் கனவுகளைக் கண்டதாக இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். மக்களுக்கு மத்தியில் நற்பெயரையோ, சிறப்பையோ பெறுவதற்காக, அல்லது பொருளாதார இலாபம் பெறுவதற்காக அல்லது தம் எதிரிகளை அச்சுறுத்துவதற்காக இன்னும் இதுபோன்ற நோக்கங்களுக்காக இவ்வாறு செய்கின்றனர். பெரும்பாலான பாமரர்களுக்கு கனவுகளில் அதிக நம்பிக்கையும் ஈடுபாடும் உள்ளது. அதனால் இப்பொய்க் கனவுகள் மூலம் அவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள். காணாத கனவுகளைக் கண்டதாகக் கூறுகின்றவர்களுக்கு ஹதீஸ்களில் கடுமையான எச்சரிக்கை வந்துள்ளது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ‘ஒருவன் …

Read More »

உயிருள்ளவற்றின் உருவங்களை வரைதல்

ஆடைகள், சுவர்கள், காகிதங்கள் போன்றவற்றில் உயிருள்ளவற்றின் உருவங்களைத் தீட்டுவது ஹராமாகும். ‘மறுமையில் அல்லாஹ்விடத்தில் கடுமையான வேதனைக்குரியவர்கள் உருவங்களைத் தீட்டுபவர்களே’ என்பது நபிமொழி. அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி. ‘நான் படைப்பதைப் போன்று படைக்க முற்படுபவனை விட அநியாயக்காரன் யார் இருக்க முடியும்? ஒரு வித்தையேனும் அல்லது ஒரு சிறு எறும்பையேனும் அவர்கள் படைக்கட்டுமே! (முடியுமா?)’ என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: …

Read More »

சிகைக்கு கருப்பு சாயம் பூசுதல்

சரியாகச் சொல்வதென்றால் இது ஹராமாகும். ஏனெனில் இது குறித்து நபிமொழியில் எச்சரிக்கை வந்துள்ளது. ‘புறாக்களின் (கருத்த) மார்புப் பகுதியைப் போல் சிகைக்கு கருப்பு சாயம் பூசுகின்ற ஒரு கூட்டம் இறுதிக் காலத்தில் தோன்றுவர். அவர்கள் சுவர்க்கத்தின் வாடையை நுகர மாட்டார்கள்’ என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: அபூதாவூத், நஸயீ. முடி நரைத்தோர்களில் பெரும்பாலோரிடம் இச்செயல் பரவலாகக் காணப்படுகின்றது. தங்கள் நரையை …

Read More »

நடை, உடை, பாவனையில் ஆண், பெண்ணுக்கும் பெண், ஆணுக்கும் ஒப்பாகுதல்.

அல்லாஹ் மனிதர்களுக்கு ஏற்படுத்தியிருக்கின்ற இயற்கை சுபாவம் என்னவெனில் ஒரு ஆண், எந்த ஆண்மையின் மீது அல்லாஹ் அவனைப் படைத்தானோ அந்த ஆண்மையையும் ஒரு பெண், எந்தப் பெண்மையின் மீது அல்லாஹ் அவளைப் படைத்தானோ அந்தப் பெண்மையையும் பேணி பாதுகாப்பதாகும். இது, மனிதர்களின் வாழ்க்கை எந்தக் காரண காரியங்களைக் கொண்டல்லாமல் சீர் பெற முடியாதோ அந்தக் காரணக் காரியங்களில் ஒன்றாகும். எனவே ஆண்கள் பெண்களுக்கும் பெண்கள் ஆண்களுக்கும் ஒப்பாக பாவித்து நடப்பது …

Read More »

ஒட்டு முடி வைத்தல்

அபூபக்ருடைய மகள் அஸ்மா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது: ‘ஒரு பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்னுடைய மகள் புதிதாக மணமுடிக்கப் பட்டிருக்கிறாள். அவளது தலையில் புண் ஏற்பட்டு முடி கொட்டுகிறது. நான் அவளுக்கு ஒட்டு முடி வைக்கலாமா? எனக் கேட்டாள். அதற்கவர்கள், ஒட்டு முடி வைப்பவளையும், வைத்து விடுபவளையும் அல்லாஹ் சபிப்பானாக! எனக் கூறினார்கள்’ (முஸ்லிம்) நபி (ஸல்) அவர்கள் ஒரு பெண் தனது தலை …

Read More »