Featured Posts
Home » நூல்கள் » உண்மை உதயம் மாத இதழ் (page 8)

உண்மை உதயம் மாத இதழ்

கடல் பிளந்த அதிசயம்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-32]

இஸ்ரவேல் சமூகம் எகிப்தில் அடிமைகளாக இருந்தனர். அவர்களது விடுதலைக்காக மூஸா நபி போராடினார். பிர்அவ்ன் இஸ்ரவேல் சமூகத்திற்கு விடுதலைக் கொடுக்கவும் இல்லை. அவர்களை நாட்டை விட்டும் வெளியே செல்ல அனுமதிக்கவும் இல்லை. இந்த நிலையில் தான் மூஸா நபி தமது தாயகப் பூமியான பலஸ்தீனத்திற்கு இஸ்ரவேல் சமூகத்தை அழைத்துக் கொண்டு இரவில் பயணித்தார். அவர்கள் பெண்கள் சிறுவர்கள் முதியவர்கள் என பயணித்தனர். ஒருநாள் அதிகாலை வேளை மூஸா நபியும் அவர்களது …

Read More »

சிலைகளை உடைத்த இப்ராஹீம் நபி [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-31]

இப்ராஹீம் நபி ஒரு பூசாரி குடும்பத்தில் பிறந்தவர் ஆவார். அவரது தந்தையின் பெயர் ஆசார் என குர்ஆன் கூறுகின்றது. அவர் சிலைகளுக்கு வழிபாடு செய்பவராகவும், சிலைகளைச் செய்து வியாபாரம் செய்பவராகவும் இருந்தார். இப்ராஹீம் நபிக்கு இளம் பருவம் தொட்டே சிலை வணக்கத்தில் நம்பிக்கையும் இருக்கவில்லை, நாட்டமும் இருக்கவில்லை. நாமே சிலையைச் செய்துவிட்டு அதை நாமே தெய்வம் என்று எப்படி நம்ப முடியும்? இந்த சிலைகள் பேசாது! பேசுவதைக் கேட்காது! கேட்டதைத் …

Read More »

மூஸா நபியும் இரு பெண்களும் [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-30]

பிர்அவ்னிடமிருந்து தப்புவதற்காக மூஸாநபி ஊரை விட்டு ஓடினார். இறுதியில் அவர் ‘மதியன்’ பிரதேசத்தை அடைந்தார். அந்த இடத்தில் இடையர்கள் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். இரண்டு பெண்கள் தமது ஆடுகளை வைத்துக்கொண்டு ஓரமாக நின்று கொண்டிருந்தனர். பெண்கள் இருவர் இருக்க இந்த இளைஞர்கள் அவர்களுக்கு இடம் கொடுக்காமல் தமது ஆடுகளுக்கு நீர் புகட்டிக் கொண்டிருப்பது மூஸா நபிக்குப் பிடிக்கவில்லை. அப்போது அவர்கள் அந்த இரு பெண்களிடமும் “என்ன செய்தி?” …

Read More »

பிர்அவ்னின் குடும்பத்தில் முஃமின்! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-29]

இஸ்லாத்தைக் கடுமையாக எதிர்ப்பவர்களின் குடும்பத்திலேயே இஸ்லாத்தை ஏற்பவர்களை ஏற்படுத்தி விடுவது அல்லாஹ் ஆற்றலைக் காட்டும் நிகழ்வாகும். பிர்அவ்ன் மூஸா நபி காலத்தில் வாழ்ந்த இஸ்லாத்தின் மிகப்பெரிய எதிரியாவான். அவனது மனைவி இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதேபோன்று பிர்அவ்னின் அரசபையில் இருந்த பிர்அவ்னின் குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பிரமுகரும் முஸ்லிமாக இருந்தார். ஆனால் அவர் மூஸா நபியை ஏற்றிருந்ததை இரகசியமாக வைத்திருந்தார். மூஸா நபி பிர்அவ்னின் அரசவைக்கு வந்து அவனிடம் சத்தியத்தை …

Read More »

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-28]

உதவப் போய் உபத்திரவத்தில் மாட்டிக்கொண்ட மூஸா நபி! இனவாத ஆட்சி நடந்து வந்தது. மூஸா நபி இஸ்ரேவேல் இனத்தைச் சேர்ந்தவர். எகிப்தியர் ‘கிப்தி’ இனத்தவராவார். ஒருநாள் இரவு இளைஞர் மூஸா வெளியில் வந்தார். இருவர் சண்டையிட்டுக் கொண்டிருந்தனர். ஒருவர் இவரது இனத்தவர், அடுத்தவர் கிப்தி இனத்தவர். மூஸா நபியின் இனத்தவன் மூஸா நபியிடம் உதவி கேட்டான். மூஸா நபியும் அவனுக்கு ஒரு குத்து விட்டார். ஒரே ஒரு குத்துதான். அவன் …

Read More »

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-27]

ஆற்றில் விடப்பட்ட மூஸா நபி! பிர்அவ்ன் எகிப்தை ஆண்டுவந்த கொடுங்கோல் மன்னன் ஆவான். அவன் இஸ்ரவேல் சமூகத்தை அடிமைப்படுத்தி ஆட்சி செய்து வந்தான். இஸ்ரவேல் சமூகம் எழுச்சி பெற்றுவிடக் கூடாது என்பதற்காக குறிப்பிட்ட ஆண்டுகளில் பிறக்கும் ஆண் குழந்தைகளைக் கொன்று வந்தான். இஸ்ரவேல் சமூகத்தில் பிறக்கும் ஒரு ஆண் குழந்தையால் தனது ஆட்சிக்கு ஆபத்து வரும் என அவனுக்கு ஆரூடம் கூறப்பட்டதும் இதற்கு ஒரு காரணமாகும். இந்தக் காலகட்டத்தில் தான் …

Read More »

தனித்து விடப்பட்ட தாயும்… மகனும்… [திருக்குர்ஆன் கூறும் கதைகள்-26]

தனித்து விடப்பட்ட தாயும் மகனும் இப்ராஹீம் என்றொரு இறைத்தூதர் இருந்தார். அவருக்கு சாரா, ஹாஜர் என்று இரண்டு மனைவிகள் இருந்தனர். இரண்டாம் மனைவி ஹாஜர் அவர்களுக்கு இஸ்மாயீல் என்றொரு ஆண் குழந்தை பிறந்தது. இப்ராஹீம் நபியின் வயோதிக காலத்தில் பிறந்த குழந்தை அது. நீண்ட காலமாக குழந்தை இல்லாமல் இருந்த இப்ராஹீம் நபி, மகன் இஸ்மாயீல் மீது பாசத்தைப் பொழிந்தனர். அல்லாஹ்வின் சோதனை வந்தது. மகன் இஸ்மாயீலையும் அவரது தாயாரையும் …

Read More »

இஸ்லாமும் பலதார மணமும், திருமண வயதெல்லை | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-26 [சூறா அந்நிஸா–03]

இஸ்லாமும் பலதார மணமும் ‘அநாதை(களை மணம் முடித்தால் அவர்)கள் விடயத்தில் நீதியாக நடக்க முடியாது என நீங்கள் அஞ்சினால், பெண்களில் உங்களுக்குவிருப்பமானவர்களில் இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நன்நான்காக மணம் முடியுங்கள். நீங்கள் (இவர்களுக் கிடையில்) நீதமாக நடக்க முடியாது என அஞ்சினால், ஒருத்தியை அல்லது உங்கள் அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்.) நீங்கள் அநீதியிழைக்காமலிருக்க இதுவே மிக நெருக்கமானதாகும்.’ (4:3) இந்த வசனம் ஒரு முஸ்லிம் ஆண் ஒரே நேரத்தில் நான்கு …

Read More »

அநாதைகளின் சொத்து, அநாதைப் பெண்ணின் திருமணம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-25 [சூறா அந்நிஸா–02]

அநாதைகளின் சொத்து ‘அநாதைகளிடம் அவர்களின் சொத்துக்களை நீங்கள் கொடுத்து விடுங்கள். நல்லதுக்குப் பதிலாக கெட்டதை மாற்றிவிடாதீர்கள். உங்களுடைய சொத்துக்களுடன் (சேர்த்து) அவர்களின் சொத்துக்களை உண்ணாதீர்கள். நிச்சயமாக இது பெரும் பாவமாக இருக்கிறது.’ (4:2) சமுதாயத்தில் பலவீனமான ஒரு பிரிவினர்தான் அநாதைகளாவர்;. தந்தையை இழந்த சிறுவர் சிறுமியர் ‘யதீம்’ – அநாதை என்று கூறப்படுவர். இவர்கள் வறியவர்கள் என்றால் புறக்கணிக்கப் படுகின்றனர். செல்வந்தர்கள் என்றால் அநீதிக்குள்ளாக்கப் படுகின்றனர். இந்த வசனம் அநாதைகளின் …

Read More »

மனித இனத்தின் தோற்றம் | அல்குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள்-24 [சூறா அந்நிஸா–01]

அல் குர்ஆன் விளக்கக் குறிப்புக்கள் : சூறா அந்நிஸா அந்நிஸா என்றால் பெண்கள் என்று அர்த்தமாகும். இந்த அத்தியாயத்தில் பெண்கள் பற்றியும் பெண்களுக்குத் தேவையான பல சட்டங்கள் பற்றியும் பேசப்படுகின்றது. குறிப்பாக சமூகத்தில் பலவீனமான நிலையில் இருப்பவர்களின் உரிமைகள் பற்றி இந்த அத்தியாயம் அதிகம் பேசுகின்றது. அல்குர்ஆனில் நான்காம் அத்தியாயமாக இடம் பெற்றுள்ள இந்த சூறா 176 வசனங்களைக் கொண்டது. மனித இனத்தின் தோற்றம் ‘மனிதர்களே! உங்களை ஒரே ஆத்மாவி …

Read More »