Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே » சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் [02-இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே…]

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும் [02-இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே…]

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை காரணம் காட்டி வஹியை மறுப்பது வழி கேடாகும்

இஸ்லாமிய நம்பிக்கைக்கும் மூட நம்பிக்கைக்கும் மத்தியில் சூனியம் மற்றும் கண்ணேறு ஓர் அலசல்

இஸ்லாம் அதன் நம்பிக்கைகளில் ஒன்றாக கூறியுள்ள ஒரு சில விடயங்களை சமூகத்தில் நடக்கும் மூட பழக்க வழக்கங்களுடன் ஒப்பிட்டு ஒட்டு மொத்தமாக அடியோடு அவற்றை மறுப்பதை நாம் இன்று காண்கிறோம். அவற்றில் சிலதை தெளிவு படுத்த விரும்புகின்றேன்

உதாரணமாக:

1: சூனியம்

சூனியம் என்ற ஒன்று இருக்கின்றது அல்லாஹ்வின் நாட்டம் இருந்தால் அதன் மூலம் பாதிப்பு வரும் என நாம் நம்ப வேண்டும். ஆனால் அந்தக்கலையை படிப்பது படித்து கொடுப்பது பிறருக்கு சூனியம் செய்வது சூனியக்காரனிடம் செல்வது என அதனுடன் தொடர்பு பட்ட அனைத்தையும் இஸ்லாம் இறைநிராகரிப்பு என்று தடை செய்துள்ளது.

புரியத்தவறிய பகுதி

சூனியக்காரர்களை கடவுளின் இஸ்தானத்தில் வைத்து அவன் நினைத்ததை எல்லாம் நினைத்த பிரகாரம் செய்யும் ஆற்றல் அவனுக்கு உண்டு (கையை முடக்கலாம், காலை முடக்கலாம், ஒருவரை படுத்த படுக்கையில் போடலாம், பொம்மையில் குத்தி மற்றவரை நோவினை செய்யலாம் ) என நம்பி சூனியத்தின் பெயரால் நடக்கும் பித்தலாட்டங்களை ஏற்றுள்ள பலர் இன்று சமூகத்தில் இருக்கின்றார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

இவை இறைநிராகரிப்புடன் தொடர்பு பட்ட சூனியம் தொடர்பான தவறான நம்பிக்கை

இந்த இடத்தில் அல்குர்ஆன் அல் ஹதீஸ் சூனியம் பற்றி எதை சொல்லுகின்றதோ அதை மக்களுக்கு விளக்காமல் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளையே ஹதீஸ்களுக்கு எதிரான ஆதாரமாக கொண்டு சூனியம் பற்றி வரும் அல் குர்ஆன் வசனங்களுக்கு வழிந்துரை செய்து சூனியம் தொடர்பான நபி மொழிகளில் அனைத்தையும் மறுத்து விட்டு தனக்கு சாதகமாக வருவதால் மூலப்பிரதியில் இல்லை என ஹதீஸ்துரை அறிஞர்களால் இனங்காணப்பட்ட ஓரே ஒரு செய்தியை நபி மொழி என ஏற்று முஸ்லிம் சமூகத்தையே தன் கொள்கையை ஏற்காத காரணத்தால் முஷ்ரிக் பட்டம் கொடுத்து அழைப்பது மிகப்பெரும் சாபத்துக்குரிய செயலாகும்.

2:கண்ணேறு

கண்ணேறு என்பது உண்மை அதன் மூலம் பாதிப்பு ஏற்படும் கண்ணேறில் இருந்து பாதுகாப்பு பெற இன்ன பிரார்த்னையை ஓத வேண்டும் என்று இஸ்லாம் கண்ணேறு தொடர்பில் அழகிய பாடத்தை நமக்கு சொல்லித் தந்துள்ளது.

புரியத் தவறிய பகுதி

உலகில் எமக்கு நிகழும் தீங்குகள் அனைத்தும் கண்ணேரினால் ஏற்படுகின்றவை என்ற நம்பிக்கையில் எமது வாழ்வில் நிகழும் சந்தோஷங்களை பிறரிடம் சொல்லாமல் மறைப்பது, எம் திறமைகளை மறைப்பது, எம் குழந்தைகளுக்கு கண்பட்டு விடும் என்று பயந்து பிற தாய்மார்களின் முன்னாடி சாப்பிட கொடுக்காமல் தவிர்ப்பது , இன்னும் குங்குமப் பூ சாயம் கொண்டு நெற்றியில் பொட்டு வைப்பது, எம் வீடுகளுக்கு கண்பட்டு விட கூடாது என்பதற்காக மாஷா அல்லாஹ் என்ற பெனரை வீட்டில் தொங்க விடுவது, இன்ன மனிதரின் கண்பட்டதால் தான் எனக்கு இப்படிப் நிகழ்ந்தது என்று நம்புவது , இப்படி பல மூட நம்பிக்கைகளை கண்ணேறு சார்ந்த நம்பிக்கையாக அதிகமானவர்கள் நம்பி வருகின்றார்கள் என்பது கஷப்பான உண்மை.

கண்ணேறு தொடர்பான இந்த நம்பிக்கைகள் அனைத்தும் தவறான நம்பிக்கை மற்றும் இன்றி மறைவான இறை அறிவில் கைவைக்கும் செயலுமாகும்.

இந்த இடத்தில் அல் குர்ஆன் மற்றும் அல் ஹதீஸ் கண்ணேறு தொடர்பில் என்ன அறிவுரைகளை சொல்லுதோ அவைகளை மக்களுக்கு தெளிவு படுத்தாது கண்ணேறு தொடர்பில் சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகளை நபிமொழிகளுக்கு எதிரான சான்றாக, வதாமாக முன்வைத்து கண்ணேறுடன் தொடர்பான அனைத்து நபிமொழிகளையும் மறுப்பது என்பது அப்பட்டமான வழிகேடாகும்.

சமூகத்தில் உள்ள மூட நம்பிக்கைகள் ஒழிய வேண்டுமே ஒழிய இஸ்லாமிய நம்பிக்கைகள் அல்ல

புரிந்து கொள்ள ஓர் உதாரணம்:

இன்று சமூகத்தில் கபுர் ஸியாரத் எனும் பெயரில் இஸ்லாம் அனுமதிக்காத அனைத்து ஷிர்க்கான காரியங்களும் மைய்யவாடிகளில் நடைபெறுகின்றது அதற்காக எப்படி நாம் கபுர் சியாரத் என்ற ஒன்று உள்ளது என்பதை மறுக்காமல் அங்கே நடைபெறும் தவறுகளை மக்களுக்கு எடுத்துரைத்து அல் குர்ஆன் ஹதீஸ் ஒளியில் அந்த பாடத்தை காற்றுக் கொடுத்தோமோ அதே செயலை தான் சூனியம் , மற்றும் கண்ணேறு தொடர்பான செய்திகளிலும் அவற்றை மறுப்போர் கடைபிடித்திருக்க வேண்டும். அதற்கு மாற்றாக அவற்றை மறுப்பது என்பது இறை நிராகரிப்பாகும்.

-அல் ஹாபிழ். இன்திகாப் உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *