Featured Posts
Home » நூல்கள் » இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே » இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே ஒழிய எமது சிந்தனையல்ல | தொடர்-1

இஸ்லாத்தின் அளவுகோல் வஹியே ஒழிய எமது சிந்தனையல்ல | தொடர்-1

அல்லாஹ் இப்படி பேசுவானா..? நபி ஸல் அவர்கள் இப்படி பேசியிருப்பார்களா..? அல்லாஹ் இப்படித்தானே சொல்லி இருக்க வேண்டும்..? நபி ஸல் அவர்கள் இப்படித் தானே நடந்திருக்க வேண்டும். என்று வெறும் ஊகங்களையே மூலாதாரமாக கொண்டு மூலாதாரங்களையே மறுக்கும் வழிகெட்ட சிந்தனை இன்று தமிழ் உலகில் ஏகத்துவ பிரச்சாரமாக முன்வைக்கப்படுவதை நீங்கள் உங்கள் பகுதிகளில் கண்டிருப்பீர்கள்.

இது பற்றிய சிறு விளக்கத்தை !உங்களுடன் காலத்தின் தேவை கருதி பகிர்ந்து கொள்வது பொறுத்தம் என நினைக்குறேன்.

1) இஸ்லாம் மாற்று மத கலாச்சாரங்கள் மற்றும் மூடப்பழக்க வழக்கங்கள் அனைத்தையும் அடியோடு தகத்தெரியும் மார்க்கம் என்பது அடிப்படை..

அதே நேரம் பிறமத கலாச்சாரமாக அல்லது மூடநம்பிக்கையாக நாம் அந்நியர்களிடம் காணும் ஒரு சில வணக்க வழிபாடுகளை ஒத்த செயல்களை இஸ்லாம் வணக்கமாக சொல்லுது என்றால் அந்த வணக்க வழிபாடுகளை நாம் இவை மாற்று மத கலாச்சாரங்கள் அல்லாஹ்வும் அவனின் தூதர் ஸல் அவர்களும் இதை மார்க்கமாக சொல்லி இருக்க மாட்டார்கள் என்று வெறும் யூகங்களை கொண்டு வஹியை மறுப்பது வழிகேடாகும்.

உதாரணம்:
?கஃபாவை தவாப் செய்தல்
?ஸபா மர்வாக்கு இடையே ஓடுதல்
?ஹஜருல் அஸ்வதை முத்தமிடல்
?ஷைத்தானுக்கு கல்லெரிதல்

போன்ற வணக்கங்களை கோடிட்டுக் காட்டலாம் இவற்றை அல்லாஹ் சொன்னான் என்பதால் நாம் செய்கிறோம்.

2) இஸ்லாம் சிந்திக்க தடை செய்யும் மார்க்கம் கிடையாது சிந்திக்கத் தூண்டும் மார்க்கமே இஸ்லாம் என்பது அடிப்படை..

அதே நேரம் உங்கள் சிந்தனைக்கோ அகிலத்தாரின் சிந்தனைக்கோ மாற்றமான ஒரு கருத்தை இஸ்லாம் சொல்லுகின்றது என்றால் உங்கள் பகுத்தறிவு அதை ஏற்கவில்லை என்பதற்காக வஹியை மறுப்பது பகுத்தறிவு கிடையாது. நீங்கள் அறியாதவற்றை எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் அவன் கூறும் கூற்றை ஏற்பதே பகுத்தறிவாகும்.

உதாரணம்:
?இப்ராஹீம் நபிக்கு நெருப்பு குளிரானதாக மாறிய செய்தி
?பல்லி நெருப்பை ஊதிய செய்தி
?சூரியன் அரிசின் கீழ் சென்று ஸஜதா செய்யும் செய்தி
?மாடு கதைத்த செய்தி
?கர்கத்தை தவிர உள்ள மரங்கள் பேச உள்ள செய்தி

3) அல்லாஹ்வின் கட்டளைகள் தான் உடனே நடக்கும் என்பது அடிப்படை..

அதே நேரம் இன்னொருவரின் கட்டளைகள், விருப்பங்கள் நடக்கும் என்று வஹி கூறுவதாயின் அதை அல்லாஹ்வை போல் இன்னவர் எப்படி செயல்படுவார்.? இவ்வாறு நம்புவது ஷிர்க் இல்லையா..? என வாதங்களை அடுக்கி அந்த செய்தியை மிகைப்படுத்தி மறுப்பது இறை நிராகரிப்பாகும்.. எம்மை படைத்தவன் தான் அந்த அதிகாரத்தை அவனுக்கு வழங்கி உள்ளான் அல்லாஹ் அவனுக்கு வழங்கிய உள்ள அதிகாரத்தை கூடுதல் குறைவின்றி நாம் அப்படியே ஏற்பது தான் இறை நம்பிக்கையாகும்..

உதாரணம்:
?தஜ்ஜால் இடும் கட்டளையைகள்.
?சூனியம் செய்கின்றவனின் விருப்பம் அல்லாஹ் நாடினால் நிறைவேறும்..

4) மறைவான வற்றை அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே.. இது அடிப்படை.

இந்த அடிப்படையை கொண்டு வஹி ஒரு சிலருக்கு இருப்பதாக அல்லது இருந்ததாக கூறும் மறைவான அறிவை அல்லாஹ்வின் அறிவோடு மிகைப்படுத்தி ஒப்பீடு செய்து மறுப்பது என்பது இறை நிராகரிப்பாகும்.

உதாரணம்:
?இப்னு செய்யாத் பற்றிய தகவல்கள்
?ஜோசியம் செய்கின்றவன் ஷைத்தானின் உதவியை கொண்டு கூறுகின்றவை.

அதே நேரம் ஜோசியம் பார்ப்பது மற்றும் அவனை உண்மை படுத்துவது என்பது தெளிவான குப்ராகும்.

நட்புடன்
மவ்லவி. இன்திகாப் உமரி – இலங்கை

இன்ஷா அல்லாஹ் தொடரும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *