Featured Posts
Home » பொதுவானவை » பிற கட்டுரைகள் » [2/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?

[2/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?

[1/3] பறிக்கப்படும் மானத்துக்கு வைக்கப்படும் வாதங்கள் நியாயமானதா?

வாதம் 03: இன்ன பெண்ணுடன் அவர் தனிமையில் இருந்தார் என்பதற்கு சான்றுகள் இருக்க அவர் விபச்சாரத்தில் ஈடுபாட்டார் என்று நம்பாமல் எப்படி நம்புவது…? அதை எப்படி அவதூரு என்று மறுக்கலாம்..?

 

அல்லாஹ் கூறுகிறான்:

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள்.

(அல்குர்ஆன் : 24:4)

ஆயிஷா ரலி அவர்கள் ஒரு ஆணுடன் தனிமைப்பட வேண்டி ஏற்பட்ட அந்த சம்பவத்தின் பின்னணியில் சொல்லப்பட்ட விபச்சார குற்றசாட்டு தொடர்பில் தீர்வாக இறங்கிய வசனமே இந்த வசனம் இன்று ஆதாரங்களை மறுத்து வாதங்களை கொள்கையாக கொண்டு அடுத்தவர்களின் மானத்தில் கைவைப்போருக்கு இந்த தொடர் வசனங்களின் சபபுன் நுஸூல் போதுமானது..

 

வாதம் 04: நான்கு பேரை கூட்டிக் கொண்டு தான் ஒருவன் விபச்சாரம் செய்வானா..? Cctv , Video, Recording போன்ற வசதிகள் உள்ள காலத்தில் எதற்கு நான்கு சாட்சிகள்..?

வஹியின் நிழலில் எமது பதில்,

1) இந்த வாதத்தை அல் குர்ஆன் முஃமீன்களுக்குரிய பண்புகளாக கூறும் பண்புகளை கொண்ட ஒரு முஃமின் முன்வைக்க மாட்டான்.

2) ஒருவர் விபச்சாரம் செய்தார் என்பதற்கு 100% வீதம் உறுதியான வீடியோ சான்றாகள் இருந்தால் கூட சம்பந்தபட்டவர் மறுக்கும் போது அதை நேரில் கண்ட நான்கு சாட்சிகள் தேவை என்பது  தான் இஸ்லாத்தின் நிலைப்பாடாகும்.

காரணம் இஸ்லாம் அந்த அளவு ஒருவரின் மானத்தை பாதுகாக்கின்றது:

வஹியை அறிவிக்க ஒரு நபித்தோழர் போதும் அடுத்தவரின் மீது விபச்சார குற்றச்சாட்டு சொல்வதாக இருந்தால் அதற்கு நான்கு சாட்சிகள் தேவை அந்த குற்றச்சாட்டை முன்வைத்தவர் வஹியை அறிவிக்கும் பத்ர் யுத்தத்தில் கலந்துகொண்ட ஒரு நபித்தோழராக இருந்தாலும் சரியே நான்கு சாட்சிகளை கொண்டுவராமல் இருந்தால் அவருக்கும் கஷையடி விழும் என்பது தான் இஸ்லாத்தின் நிலைப்பாடு எனும் போது வீடியோ, ஆடியோ போதுமான சான்று என்று கூறுவோர் அதற்கு வைக்கும் வாதங்கள் எதுவும் ஏற்புடையதல்ல என்பதை உறுதிப்படுத்த பின்வரும் செய்தி ஒரு பெரும் சான்றாக உள்ளது

  1. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

ஹிலால் இப்னு உமய்யா(ரலி) தம் மனைவியை ஷரீக் இப்னு சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டுவா! இல்லையென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும்’ என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், ‘இறைத்தூதர் அவர்களே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா?’ என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், ‘ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும்’ என்று மீண்டும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அறிவித்துவிட்டு இப்னு அப்பாஸ்(ரலி) ‘லிஆன்’ தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 52. சாட்சியங்கள்..

தன் மனைவி விபச்சாரம் புரிவதை கண்களால் பார்த்து விட்டு நபி ஸல் அவர்களிடம் முறையிட்ட பத்ரில் கலந்துகொண்ட நபித்தோழர் அவர்களுக்கு நபி ஸல் அவர்கள் கூறிய முதல் பதில் என்ன..? ஆதாரம் கொண்டுவா.. இல்லை எனில் முதுகில் கசையடி விழும் என்பது தான் எனும் போது  இந்த செய்திகளை கண்டுகொள்களாமல் எங்களுக்கு வீடியோ , ஆடியோ சான்று போதும் என்பவர்களின் நிலை என்ன..? விபச்சாரம் செய்வதை விட ஒருவர் மீது அவதூறு சொல்வது மிகப்பெரிய பாவமாகும்

ஒருவரின் மானம் உலகில் உள்ள முதல் இறையில்லமாகிய கஃபாவை விட புனிதமானது:

துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந்திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக்கொண்டிருந்தார். அப்போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், “இது எந்த நாள்?” என்று கேட்டார்கள்.

அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். “இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?” என்று கேட்டார்கள். நாங்கள் “ஆம்’ என்றோம். அடுத்து “இது எந்த மாதம்?” என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் “இது துல்ஹஜ் மாதமல்லவா?” என்றார்கள். நாங்கள் “ஆம்’ என்றோம். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் “உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம் மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்” என்று கூறிவிட்டு, “(இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்” என்றார்கள். (அறிவிப்பவர்: அபூபக்ரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி 67)

உதாரணமாக:

ஒருவர் விபச்சாரம் செய்வவதை நானும் இன்னும் இருவரும் நேரில் கண்டு விட்டோம் உரியவர் கையும் களவுமாக மாட்டி விட்டார் இப்படியான சந்தர்ப்பத்தில் அதை நாம் ஊர் ஜமாஅத்துக்கு கொண்டு சென்று அவருக்கு தண்டனை பெற்றுக்கொடுக்க முயற்சி செய்தால் கூட அந்த இடத்தில் தண்டிக்க பட வேண்டியவர்கள் நாங்கள் காரணம் எம்மிடம் நான்கு ஷாஹித்கள் இல்லை அவரின் மானத்தை வெளிப்படுத்தி விட்டோம் என்பதால், இங்கே எமக்கு தண்டனை வழங்கபடுவதற்கு  காரணம் நாம் பொய் கூறிமை அல்ல நாம் நேரில் கண்டது உண்மை அவரின் மானத்தை அம்பல படுத்தியமைக்ககே என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

நல்லொழுக்கமுள்ள பெண்ணொருத்தியின் மீது விபச்சாரக் குற்றச்சாட்டை முன்வைத்து அதை நிரூபிக்கும் வகையில் நான்கு சாட்சிகளைக் கொண்டு வரவில்லையெனில் குற்றச்சாட்டுச் சொன்னவர்களை எண்பது கசையடி அடிக்க வேண்டும் என்பதே இஸ்லாம் கூறும் குற்றவியல் சட்டமாகும். அவர்களின் சாட்சியம் ஏற்றுக்கொள்ளபட மாட்டாது.

وَالَّذِيْنَ يَرْمُوْنَ الْمُحْصَنٰتِ ثُمَّ لَمْ يَاْتُوْا بِاَرْبَعَةِ شُهَدَآءَ فَاجْلِدُوْهُمْ ثَمٰنِيْنَ جَلْدَةً وَّلَا تَقْبَلُوْا لَهُمْ شَهَادَةً اَبَدًا‌  وَاُولٰٓٮِٕكَ هُمُ الْفٰسِقُوْنَ ۙ‏

எவர்கள் கற்புடைய பெண்கள் மீது அவதூறு சொல்லி பின்னர், நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லையோ அவர்களுக்கு எண்பது சாட்டையடிகள் கொடுங்கள். இனி, அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக்கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள்.
(அல்குர்ஆன் : 24:4)

اِلَّا الَّذِيْنَ تَابُوْا مِنْ بَعْدِ ذٰلِكَ وَاَصْلَحُوْا‌ فَاِنَّ اللّٰهَ غَفُوْرٌ رَّحِيْمٌ‏

ஆனால், எவர்கள் இந்தக் குற்றத்திற்குப் பின்னர் பாவமன்னிப்புக் கோரித் தங்களைச் சீர்திருத்திக் கொண்டார்களோ அவர்களைத் தவிர! அல்லாஹ் அவசியம் (அவர்கள் விஷயத்தில்) அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான்.
(அல்குர்ஆன் : 24:5)

நான் விபச்சாரம் செய்தேன் என்று கூறியவறுடன் நபி ஸல் நடந்து கொண்டமுறை:

  1. இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

மாஇஸ் இப்னு மாலிக் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்(து தாம் விபசாரம் புரிந்துவிட்டதாக வாக்குமூலம் அளித்)தபோது, அவரிடம் நபி(ஸல்) அவர்கள், ‘(அவளை) நீர் முத்தமிட்டிருக்கலாம்! அல்லது (கண்ணாலோ கையாலோ) சைகை செய்திரக்கலாம்! அல்லது (ஆசையுடன்) பார்த்திருக்கலாம்!’ என்றார்கள். அவர், ‘(அவ்வாறெல்லாம்) இல்லை; இறைத்தூதர் அவர்களே!’ என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள், சாடைமாடையாகக் கேட்காமல் ‘அவளுடன் நீர் உடலுறவு கொண்டீரா?’ என்று (வெளிப்படையாகவே) கேட்டார்கள். அவர், ‘ஆம்’ என்று கூறினார். அப்போதுதான் அவருக்குக் கல்லெறி தண்டனை வழங்கும்படி நபி(ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 86. குற்றவியல் தண்டனைகள்

 

வாதம் 05: என்னிடம் அவர் கூறினார் அவர் கூறுவது பொய் இல்லை என்பதை நான் அறிந்தேன் அதை. அப்படியே தனிப்பட முறையில் ஒரு சிலருடன்  நல்ல எண்ணத்தில் பகிர்ந்து கொண்டேன்.

لَوْلَاۤ اِذْ سَمِعْتُمُوْهُ ظَنَّ الْمُؤْمِنُوْنَ وَالْمُؤْمِنٰتُ بِاَنْفُسِهِمْ خَيْرًاۙ وَّقَالُوْا هٰذَاۤ اِفْكٌ مُّبِيْنٌ‏

நீங்கள் இதனைச் செவியுற்ற போதே நம்பிக்கையாளர்களான ஆண்களும் பெண்களும் தங்களைப்பற்றி ஏன் நல்லெண்ணம் கொள்ளவில்லை? இது ஓர் ‘அப்பட்டமான அவதூறு’ என்று ஏன் அவர்கள் கூறிடவில்லை?
(அல்குர்ஆன் : 24:12)

لَوْلَا جَآءُوْ عَلَيْهِ بِاَرْبَعَةِ شُهَدَآءَ‌  فَاِذْ لَمْ يَاْتُوْا بِالشُّهَدَآءِ فَاُولٰٓٮِٕكَ عِنْدَ اللّٰهِ هُمُ الْـكٰذِبُوْنَ‏

அவர்கள் (தங்களுடைய குற்றச்சாட்டை நிரூபிக்க) ஏன் நான்கு சாட்சிகளைக் கொண்டுவரவில்லை? அவ்வாறு அவர்கள் சாட்சிகளைக் கொண்டுவராத நிலையில் அல்லாஹ்விடத்தில் அவர்களே பொய்யர்கள் ஆவர்.
(அல்குர்ஆன் : 24:13)

உண்மையாக A யும் B யும் விபச்சாரம் செய்யும் காட்சியை கண்டவர் அதற்கு நான்கு பேரை சான்றாக நிறுத்த வில்லை என்றால் அவர் தான் பொய்யர் என்று அல்லாஹ் கூறுகின்றான் காரணம் அடுத்தவர்களின் மானம் புனிதமானது.

தொடரும்… இன்ஷா அல்லாஹ்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *