Featured Posts
Home » பொதுவானவை » விழிப்புணர்வு » நம்மையறியாமல் நம்மில் புகுந்துவரும் இறைநிராகரிப்பு-குஃப்ர்

நம்மையறியாமல் நம்மில் புகுந்துவரும் இறைநிராகரிப்பு-குஃப்ர்

உங்கள் வாழ்க்கையின் ஆழகிய சுருக்கம் என்ன? என்ற தலைப்பில் ஒரு application உருவாக்கப்பட்டு தற்பொழுது அது facebook ரீதியாக பரவலாக பரவிக்கொண்டு வருகின்றது. அதிலே நீங்கள்;
⁦⏺⁩எப்படி இருந்தீர்கள்?
⁦⏺⁩என்ன இருக்கின்றீர்கள்?
⁦⏺⁩எப்படி இருப்பீர்கள்?
போன்றவிடயங்கள் கூறப்படுகின்றன.

இவைகள் அனைத்தும் ஒருவரிடம் குறி(ஜோசியம்) கேட்பதைப் போன்றதாகும்.

குறிகேட்பதும், அதனை உண்மை என்று நம்புவதும் இறைநிராகரிப்பாகும். மேலும், இப்படி குறிகேட்பவனின் 40 நாட்களுக்குரிய தொழுகை அங்கீகரிக்கப்படமாட்டாது.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
“ஒருவர் சோதிடனிடம் சென்று, எதைப் பற்றியாவது கேட்டால், அ(வ்வாறு கேட்ட)வருடைய நாற்பது நாட்களின் தொழுகை அங்கீகரிக்கப்படுவதில்லை.”
(ஆதாரம் : முஸ்லிம்-4488)

மேலும் கூறினார்கள்:
“யாரேனுமொருவர் குறிசொல்பவனிடம் வந்து அவன் கூறுவதை உண்மை என்று நம்பினால் ; முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீது அல்லாஹுத்தஆலா இறக்கியதைக்கொண்டு நிராகரித்துவிட்டான்.”
(ஆதாரம் : அபூதாவுத் -3904- , திர்மிதி -135-, இப்னுமாஜா -936-)

எம்முடைய இக்குறுகிய வாழ்க்கையில் நாம் செய்யக்கூடியதோ ஒருசில நல்லமல்கள் மாத்திரமே! அதிலும் அந்த அமல்கள் அனைத்தும் பரிபூரணமான முறையில் செய்யப்பட்டதா? அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்டு நன்மை வழங்கப்பட்டதா?? என்றால் , அதுவும் கேள்விக்குறிய விடாயமாகும்.

எனவே, இப்படியான சில செயற்பாடுகள் எங்களை அறியாமலேயே எங்களுடைய வாழ்க்கையில் நுழைந்துவிடுமென்றால் எங்களுடைய அனைத்து நன்மைகளும் அழிந்து விடும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ;

يٰۤـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا اتَّقُوا اللّٰهَ حَقَّ تُقٰتِهٖ وَلَا تَمُوْتُنَّ اِلَّا وَاَنْـتُمْ مُّسْلِمُوْنَ‏

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்ச வேண்டிய முறைப்படி அஞ்சுங்கள்; மேலும், (அல்லாஹ்வுக்கு முற்றிலும் வழிப்பட்ட) முஸ்லிம்களாக அன்றி நீங்கள் மரணிக்கவேண்டாம்.
(அத்தியாயம் : ஆலஇம்ரான் , வசனம் :102)

எனவே, இப்படியாக இறைநிராகரிப்பின்பால் இட்டுச்செல்லக்கூடிய விடயங்களை விட்டு எங்களையும், எங்களது செயற்பாடுகளையும் அல்லாஹுத்தஆலா பாதுகாத்து, முஸ்லிம்களாக மரணிக்கக்கூடிய பாக்கியத்தைத் தத்தருள்வானாக!!!

-ஆமீன்-

– Razeen Akbar

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *