Featured Posts
Home » இஸ்லாம் » அமல்கள் » நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-02

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-02

நல்லமல்களை அழிக்கக்கூடியவை | தொடர்-02

11- நாய் வைத்திருந்தால் நன்மைகள் அழிந்து போகும்

صحيح البخاري 2322
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَمْسَكَ كَلْبًا، فَإِنَّهُ يَنْقُصُ كُلَّ يَوْمٍ مِنْ عَمَلِهِ قِيرَاطٌ، إِلَّا كَلْبَ حَرْثٍ أَوْ مَاشِيَةٍ

நாய் வைத்திருப்பவரின் நற்செயல்களிலிருந்து ஒவ்வொரு நாளும் ஒரு கீராத் அளவிற்கு (அவற்றின் ஊதியம்) குறைந்து போய்விடும்; விவசாயப் பண்ணையையோ கால்நடைகளையோ (திருடு போய் விடாமல்) பாதுகாப்பதற்காக வைத்திருக்கும் நாய்களைத் தவிர. (ஸஹீஹுல் புஹாரி – 2322)

12- ‘அல்லாஹ் மீது சத்தியமாக இந்த நபரை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்’ என்று கூறினால் நன்மைகள் அழிந்து விடும்

صحيح مسلم – 2621
عَنْ جُنْدَبٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، حَدَّثَ ‘ أَنَّ رَجُلًا قَالَ: وَاللهِ لَا يَغْفِرُ اللهُ لِفُلَانٍ، وَإِنَّ اللهَ تَعَالَى قَالَ: مَنْ ذَا الَّذِي يَتَأَلَّى عَلَيَّ أَنْ لَا أَغْفِرَ لِفُلَانٍ، فَإِنِّي قَدْ غَفَرْتُ لِفُلَانٍ، وَأَحْبَطْتُ عَمَلَكَ ‘ أَوْ كَمَا قَالَ

(முற்காலத்தில் வாழ்ந்த) ஒரு மனிதர் ‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ன மனிதனை அல்லாஹ் மன்னிக்கமாட்டான்’ என்று கூறினார். அல்லாஹ் ‘இன்ன மனிதனை நான் மன்னிக்கமாட்டேன் என என்மீது சத்தியமிட்டுச் சொன்னவன் யார்? நான் அந்த மனிதனை மன்னித்துவிட்டேன். உன் நல்லறங்களை அழித்துவிட்டேன்’ என்றோ அதைப் போன்றோ கூறினான். (ஸஹீஹ் முஸ்லிம் – 5115)

13- நபியவர்களின் குரலுக்கு மேல் குரலை உயர்த்தினால் நன்மைகள் அழிந்து விடும்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تَرْفَعُوا أَصْوَاتَكُمْ فَوْقَ صَوْتِ النَّبِيِّ وَلَا تَجْهَرُوا لَهُ بِالْقَوْلِ كَجَهْرِ بَعْضِكُمْ لِبَعْضٍ أَنْ تَحْبَطَ أَعْمَالُكُمْ وَأَنْتُمْ لَا تَشْعُرُونَ (الحجرات: 2)

நம்பிக்கை கொண்டோரே உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள் உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள் நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் இதனால் அழிந்து விடும். (அல் ஹுஜுராத் – 02)

14- நோன்பு நோற்றுக் கொண்டு பொய்யையும், தீய செயற்பாடுகளையும் விடாதிருந்தால் நன்மை கிடைக்காது

صحيح البخاري – 1903
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ لَمْ يَدَعْ قَوْلَ الزُّورِ وَالعَمَلَ بِهِ، فَلَيْسَ لِلَّهِ حَاجَةٌ فِي أَنْ يَدَعَ طَعَامَهُ وَشَرَابَهُ

‘பொய்யான பேச்சையும் பொய்யான நடவடிக்கைகளையும் விட்டு விடாதவர் தம் உணவையும் பானத்தையும் விட்டு விடுவதில் அல்லாஹ்வுக்கு எந்தத் தேவையுமில்லை!’ (ஸஹீஹுல் புஹாரி – 1903)

15- மது அருந்தியவனின் நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

سنن الترمذي – 1862
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ شَرِبَ الخَمْرَ لَمْ تُقْبَلْ لَهُ صَلَاةٌ أَرْبَعِينَ صَبَاحًا

யார் மது அருந்துகின்றானோ அவனுடைய நாற்பது காலைகளின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (ஸுனன் திர்மிதி – 1862)

16- இரவில் கணவரின் கோபத்துக்குள்ளான பெண்ணுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

سنن الترمذي – 360
أَبو أُمَامَةَ، يَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: ‘ ثَلَاثَةٌ لَا تُجَاوِزُ صَلَاتُهُمْ آذَانَهُمْ: العَبْدُ الآبِقُ حَتَّى يَرْجِعَ، وَامْرَأَةٌ بَاتَتْ وَزَوْجُهَا عَلَيْهَا سَاخِطٌ، وَإِمَامُ قَوْمٍ وَهُمْ لَهُ كَارِهُونَ

மூவரின் தொழுகை அவர்களின் காதுகளைத் தாண்டாது. தனது எஜமானை விட்டோடிய அடிமை தனது எஜமானிடம் மீளும் வரைக்கும், (அந்த அடிமையின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது) தனது கணவர் தன் மீது கோபமடைந்திருந்த நிலையில் இரவைக் கழித்த பெண்மணி, மக்களின் வெறுப்புக்குள்ளான (நிலையில் அவர்களுக்குத் தொழுகை நடாத்திய) இமாம். (திர்மிதி – 360)

‘மூவரின் தொழுகை அவர்களின் காதுகளைத் தாண்டாது’ என்ற வாசகத்தின் விளக்கம் மூவரின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது என்பதாகும்.

‘தனது கணவர் தன் மீது கோபமடைந்திருந்த நிலையில் இரவைக் கழித்த பெண்மணி’ என்று குறிப்பிடப்படுவது, தனது கெட்ட குணங்கள், நடத்தைகளால், கணவனுக்குக் கட்டுப்படாது கணவனின் வெறுப்புக்குள்ளான பெண்ணைத்தான். என்பதுடன் ‘இரவில் கணவன் அழைத்து அதற்கு மறுத்த பெண்ணை அவ்விரவு தோறும் மலக்குகள் சபிக்கின்றார்கள்’ என்ற ஹதீஸையும் இங்கு கவனிக்க வேண்டும். மேற் குறிப்பிடப்பட்டிருக்கும் காரணங்களல்லாத மார்க்க ரீதியில் குற்றமற்ற விடயங்களுக்காக ஒரு கணவர் தனது மனைவியைக் கோபிக்கின்றார் என்றால் அப்பெண்மணி மீது மார்க்க அடிப்படையில் குற்றமில்லை.

‘மக்களின் வெறுப்புக்குள்ளான (நிலையில் அவர்களுக்குத் தொழுகை நடாத்திய) இமாம்’ என்று சுட்டிக்காட்டப்படுவது, மார்க்க ரீதியான காரணங்களுக்காக மக்களால் வெறுக்கப்பட்ட இமாமைத்தான். இதுவல்லாத காரணங்களுக்காக வெளிப்படும் வெறுப்புக்கள் தொடர்பில் இமாம் அவதானம் செலுத்த தேவையில்லை.

17- தனக்கு வாசனையிட்டுக் கொண்டு மஸ்ஜிதுக்கு சென்ற பெண்ணின் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

سنن أبي داود- 4174
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: إِنِّي سَمِعْتُ حِبِّي أَبَا الْقَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُقْبَلُ صَلَاةٌ لِامْرَأَةٍ تَطَيَّبَتْ لِهَذَا الْمَسْجِدِ، حَتَّى تَرْجِعَ فَتَغْتَسِلَ غُسْلَهَا مِنَ الجَنَابَةِ

வாசைனயிட்டுக் கொண்டு இந்த மஸ்ஜிதுக்குச் வந்த பெண், மஸ்ஜிதிலிருந்து (தன் வீட்டுக்கு) திரும்பி வந்து, கடமையான குளிப்பைப் போன்று குளிக்கும் வரைக்கும் அவளுடைய தொழுகை ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. (ஸுனன் அபீதாவுத் – 4174)

18- கடனாளியாக மரணித்தவரின் நன்மைகள் எடுக்கப்பட்டு அவரின் கடன் தீர்க்கப்படும்

سنن ابن ماجه – 2414
عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ مَاتَ وَعَلَيْهِ دِينَارٌ أَوْ دِرْهَمٌ قُضِيَ مِنْ حَسَنَاتِهِ، لَيْسَ ثَمَّ دِينَارٌ وَلَا دِرْهَمٌ

ஒரு தீனார் ஒரு திர்ஹம் அளவு கடன் பட்ட நிலையில் யார் மரணித்தாரோ அவரின் நன்மைகளிலிருந்து அவரின் கடன் தீர்க்கப்படும் அதன் பின்னர் தீனாரோ திர்ஹமோ (அவருக்கு) இல்லை. (ஸுனன் இப்னி மாஜஹ் – 2414)

19- திஹாமா மலைகள் போன்ற தமது நன்மைகள் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்கப்படும் கூட்டத்தார்

سنن ابن ماجه – 4245
عَنْ ثَوْبَانَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنَّهُ قَالَ: «لَأَعْلَمَنَّ أَقْوَامًا مِنْ أُمَّتِي يَأْتُونَ يَوْمَ الْقِيَامَةِ بِحَسَنَاتٍ أَمْثَالِ جِبَالِ تِهَامَةَ بِيضًا، فَيَجْعَلُهَا اللَّهُ عَزَّ وَجَلَّ هَبَاءً مَنْثُورًا» ، قَالَ ثَوْبَانُ: يَا رَسُولَ اللَّهِ صِفْهُمْ لَنَا، جَلِّهِمْ لَنَا أَنْ لَا نَكُونَ مِنْهُمْ، وَنَحْنُ لَا نَعْلَمُ، قَالَ: «أَمَا إِنَّهُمْ إِخْوَانُكُمْ، وَمِنْ جِلْدَتِكُمْ، وَيَأْخُذُونَ مِنَ اللَّيْلِ كَمَا تَأْخُذُونَ، وَلَكِنَّهُمْ أَقْوَامٌ إِذَا خَلَوْا بِمَحَارِمِ اللَّهِ انْتَهَكُوهَا

எனது உம்மத்தில் ஒரு கூட்டத்தாரை நான் அறிவேன். மறுமை நாளில் திஹாமா மலைகள் போன்ற நன்மைகளுடன் அவர்கள் வருவார்கள். அவர்களின் நன்மைகளை அல்லாஹ் பரப்பப்பட்ட புழுதியாக ஆக்குவான் என்று நபியவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே அவர்களைப் போன்று நாங்கள் ஆகிவிடாமல் இருப்பதற்காக அவர்களைப் பற்றி எங்களுக்குக் கூறுங்கள் அவர்களை எங்களுக்குத் தெரியாது என்றோம். அதற்கு நபியவர்கள் ‘அவர்கள் உங்களின் சகோதரர்கள், உங்களைச் சார்ந்தவர்கள் நீங்கள் இரவு வணக்கத்தில் ஈடுபடுவதைப் போன்றே அவர்களும் இரவில் வணக்கம் புரிவார்கள் ஆயினும் அல்லாஹ்வின் தடைகளை மீறுவதற்கான சந்தர்பங்கள் அவர்களுக்கு வாய்த்தால் அல்லாஹ் தடை செய்தவற்றைச் செய்து விடுவார்கள் அவர்களே அக்கூட்டத்தினர்’ என்று கூறினார்கள். (ஸுனன் இப்னி மாஜஹ் – 4245)

20- மார்க்கத்தின் பெயரால் புதிதாக ஒன்றை ஒருவர் மதீனாவில் ஏற்படுத்தினால் அவரின் நன்மைகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது

صحيح البخاري- 7300
المَدِينَةُ حَرَمٌ مِنْ عَيْرٍ إِلَى كَذَا، فَمَنْ أَحْدَثَ فِيهَا حَدَثًا فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ وَالمَلاَئِكَةِ وَالنَّاسِ أَجْمَعِينَ، لاَ يَقْبَلُ اللَّهُ مِنْهُ صَرْفًا وَلاَ عَدْلًا

மதீனா நகரம் ‘அய்ர்’ எனும் மலையிலிருந்து இன்ன (ஸவ்ர்) இடம் வரை புனிதமானதாகும். அதில் யார் (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக ஒன்றை ஏற்படுத்துகிறானோ அவன் மீது அல்லாஹ்வின் சாபமும் வானவர்கள் மற்றும் அனைத்து மக்களின் சாபமும் உண்டாகும். மேலும் அவன் புரிந்த கடமையான வழிபாட்டையும் கூடுதலாக வழிபாட்டையும் அவனிடமிருந்து அல்லாஹ் ஏற்கமாட்டான். (புஹாரி – 7300)

இன்ஷா அல்லாஹ் தொடரும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *