Featured Posts
Home » இஸ்லாம் » ஹிஜ்ரா நாட்காட்டி » ஹிஜ்ரா காலண்டர் 1430

ஹிஜ்ரா காலண்டர் 1430

Hijra Calendar

www.islamkalvi.com/hijracalendar/1430/index.html

ஹிஜ்ரி 1430-ஆம் வருடத்தின் நாட்காட்டியை பதிவிறக்கம் செய்ய

PowerPoint  | Image format

19 comments

  1. This Hijra Calendar (1430) is Faulty.
    Date of comencement of R.Aahir 1, Rajab 1,Shawwal 1 & Dul Hajj 1 are wrongly computed.

  2. Dear M.Mustafa (kovai)

    Can you explain, how particularly these four months calculation is wrong? How other months are correct?

    Siraj
    Eruvadi

  3. கஞ்சக்சன்க்கு மறு நாள் இஸ்லாமிய மாதத்தின் முதல் நாள் என்று எந்த ஆதாரத்தின் அடிப்படையில் தீர்மானித்து உங்கள் ஹிஜ்ரா கலண்டரை தயாரித்துள்ளீர்கள்.

  4. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

    முஸ்தபா காக்கா அவர்களுக்கு,

    நீங்கள் கூறிய விஷயம் ஹஜ்ரா காலண்டர் தவறாக உள்ளது. அதுவும் நான்கு மாதங்களின் தேதி தவறாக அதில் அறிவிக்கப்பட்டுள்ளது எனவும் குறிப்பிட்டிருந்தீர்கள்.

    தாங்கள் முதலில் நான்கு மாதங்கள் தவறாக உள்ளது என்று கூறியிருந்தீர்கள். அதற்கு நான் உங்களிடம் கேட்ட கேள்வி என்னவென்றால்,
    நீங்கள் குறிப்பிட்ட நான்கு மாதங்கள் எந்த அடிப்படையில் தவறு?
    மற்ற மாதங்கள் எந்த அடிப்படையில் சரி?

    என்பதை விளக்கும் படி கேட்டிருந்தேன்.

    அதற்கு தாங்கள் தெளிவாக பதில் அளித்து விட்டு அதன் பிறகு அடுத்த கேள்வியை கேட்டால் இதை படிக்கும் மக்களுக்கும் எனக்கும் உங்களுடைய கருத்துகள் புரியும்.

    எனவே தாங்கள் முதலில் எந்த அடிப்படையில் ஹிஜ்ரா காலண்டரில் நான்கு மாதங்கள் தவறாக உள்ளது.

    ஏனைய மாதங்கள் சரியாக உள்ளது என்பதை விளக்கிவிட்டு அதன் பிறகு அடுத்தடுத்த கேள்விகளுக்கு போகவும்.

    தாங்கள் ஒரு விஷயத்தை தவறு என கூறிவிட்டு அதை விளக்கும்படி கேட்டால் அதை விட்டு விட்டு என்னிடமே கேள்வி கேட்டு மக்களுக்கு விளக்க நினைப்பது தவறாகும். எனவே தாங்கள் கூறிய தவறுகளை நீரூபித்து விட்டு அடுத்த கேள்வியை கேட்கவும்.

    Yours
    Siraj Eruvadi

  5. Dear Bro. Siraj , Assalam Alaikum V R V B ,

    “ஹிஜ்ரா காலண்டர் தவறானது , ஏனெனில் அதன் அடிப்படை ஆதாரமற்றது. ”

    எனவே அதற்குரிய முறையான அடிப்படை ஆதாரத்தை முதலில் தாருங்கள் .

    பின்னர் 2வதாக நான் Eg. தந்துள்ள 4 ல் ஒரு மாதத்தை (ஷவ்வால் 1) ஆஸ்த்ரேலியாவிலிருந்து அமெரிக்காவரை ஒரே நாளில் அமைகின்றது என்பதை சுருக்கமாகஉம் , தெளிவாகஉம் விளக்குங்கள் .

    நம்முடைய வாக்கு வாதங்களை இதன் பின்னர் வைத்துக்கொள்ளலாமே .
    இதுவே அனைவரும் புரிந்து கொள்வதற்கு இலகுவாக இருக்கும் .

  6. Mohamed Sirajudeen

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹீ.

    நீங்கள் உங்கள் இரண்டாது பதிலில் Conjuction னை அடிப்படையாக வைத்து நாட்காட்டி தயாரித்துள்ளதை கூறி விட்டு தற்போது ஹிஜ்ரா காலண்டரின் அடிப்படையை தனியாக விளக்கவும் என்று கூறுவது வியப்பாக உள்ளது.

    எங்கள் நாட்காட்டியிலேயே அதற்காக ஒரு பக்கம் ஒதுக்கி விளக்கம் கொடுத்துள்ளதை பார்க்கவில்லையா?

    தாங்கள் தான் எந்த அடிப்படையும் இல்லாமல் ஹிஜ்ரா நாட்காட்டியை குறை சொல்லி பல வருடங்களாக நாட்களை கடத்தி வருகிறீர்கள்.

    எனவே நீங்கள் சுட்டிக்காட்டிய ஒரு மாதத்தை தாங்கள் தெளிவாக விளக்கி ஹிஜ்ரா நாட்காட்டி தவறானது என்பதை நீங்கள் தான் நீரூபிக்கவேண்டும்.

    எனவே தாங்கள் எந்த அடிப்படையில் ஹிஜ்ரா நாட்காட்டி தவறு என்பதை சுட்டிகாட்டி மக்களை சிந்திக்க வைக்கவும்.

    மக்களை குழப்பாமல், நேரத்தை வீணடிக்காமல் நேரடியாக விஷயத்திற்கு வரவும்.

    இப்படிக்கு
    ஏர்வாடி சிராஜ்

  7. “கஞ்சக்சன்க்கு மறு நாள் இஸ்லாமிய மாதத்தின் முதல் நாள் “  என்ற அடிப்படையில் உங்கள் (ஹிஜ்ரா) கலண்டரை தயாரித்துள்ளீர்கள்.அதற்குரிய ஆதாரத்தை இன்றுவரை நீங்கள் தரவில்லை.  அது உங்களால் முடியாது. எனவே தான் தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

  8. Mohamed Sirajudeen

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு
    உங்களுடைய பார்வையில் எங்களிடம் ஆதாரம் இல்லை. அல்லாஹ் கூறிய 10:5 வசனத்தில் அடிப்படையில் படித்தரங்கள்   மூலம் பல வருடங்களின் கணக்கை முன் கூட்டியே அறிந்து கொள்ள முடியும் என நாங்கள் கூறுகிறோம்.  அதன்  படித்தரங்களின் கணக்குதான் கன்ஜெக்ஷன் என்பதை தாங்களுக்கு ஏற்கனவே புரிய வைத்த விஷயம் தான் அல்லாஹ் சாட்சியாக இருக்கிறான். 
    தற்போது ஆதாரம் இல்லாத எங்களுக்கு உங்கள் ஆதாரத்தை விளக்கி கூறி மக்களை புரிய வைத்திருந்தால் இதற்குள் யாருக்காவது நேர்வழி கிடைத்திருக்கும்.
    தற்போதாவது உங்கள் விளக்கத்தை மக்களிடம் கூறுவீர்களா என எதிர்பார்ப்போம்.
    இப்படிக்கு
    சிராஜ் ஏர்வாடி

  9. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

    பிறர் சொல்லும் கருத்துகளில் குற்றம் கண்டுபிடித்தே பழக்கப்பட்ட உங்களுக்கு இதுவரை உங்கள் கருத்தை பிறருக்கு விளக்க முடியாமல் உள்ளதை புரிந்து கொண்டீர்கள் என நினைக்கிறேன். அதுதான் இரண்டு வாரமாகியும் பதில் வராததற்கு காரணமோ????

    தயவு செய்து 12 மாத நாட்காட்டியில் எப்படி 8 மாதங்கள் சரியாக உள்ளது? நீங்கள் கூறிய அந்த நான்கு மாதம் மட்டும் எப்படி தவறு என்பதை விளக்குவீர்களா?

    இப்படிக்கு
    சிராஜ்
    ஏர்வாடி.

  10. Dear M.Mustafa (kovai)

    Can you explain, how particularly four months calculation is wrong? How other months are correct?

    Can you prove your compliants about Hijra Calendar 1430 ??

    We are all waiting for your reply.

    Yours
    Siraj

  11. Check http://www.ahillah.com

    உங்கள் ஹிஜ்ரா கலண்டரின் தவறுகளை விளக்கியுள்ளேன் .

  12. அஸ்ஸலாமு அலைக்கம் வரஹ்

    உங்கள் வெப்சைட்டில் ஹிஜ்ரா காலண்டரின் தவறுகளை விளக்கியுள்ளேன் என கூறியுள்ளீர்கள். இன்று வெப்சைட்டிற்கு சென்றேன் அது திறக்க வில்லை. நேற்று இரவு உங்கள் வெப்சைட் திறந்தது. ஆனால் அதில் ஹிஜ்ரா காலண்டரின் தவறுகள் என்ற தலைப்பில் எதுவுமே இல்லை. எனவே உங்கள் வெப்சைட்டில் கூறியதை இங்கு பதிந்தால் நீங்கள் சுட்டிக்காட்டிய தவறுகளுக்கு இந்த தளத்திலேயே விளக்கம் அளிகக் வசதியாக இருக்கும். உடனடியாக பதியவும்.

    இப்படிக்கு

    சிராஜ் ஏர்வாடி

  13. அஸ்ஸலாமு அலைக்கும்,

    நீங்கள் சென்னையில் நடத்தவிருக்கும் பிறை கருத்தரங்கில் ” அகில உலக இஸ்லாமிய நாட்காட்டி ஓர் ஆய்வு ” என்ற தலைப்பில் என்னுடைய கருத்துக்களை தெரிவிக்கவும். நம் இருவருக்கும் இடையே உள்ள கருத்து வேறுபாடுகளை விவாதிக்கவும் போதுமான அளவு சரியான நேர ஒதுக்கீடு செய்து தருவீர்களேயானால் , அது நம் சமுதாயத்திற்கு நாம் செய்யும் பெருபகாரமகவே இருக்கும். ஆய்வுகளை விவாதங்களுக்கு உட்படுத்திய பின்னர் நடைமுறை படுத்துவதே மிசச்சிறந்த பண்பு. அதுதான் நம்முடைய முயற்சிக்கு வெற்றியை தேடித்தரும்.

    இப்படிக்கு,
    M.Mustafa

  14. அஸ்ஸலாமு அலைக்கும்,
    முஸ்தபா அண்ணன் அவர்க்ளுக்கு,

    gmt and ut not a same, in ur website u told both are same. more details pls click
    http://www.annajaath.com/?p=428

  15. அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹ்

    அன்பான சகோதரர் முஸ்தபா அவர்களுக்கு,

    ஹிஜ்ரா கமிட்டி ஆப் இந்தியா வினால் ஏற்பாடு செய்யப்படுகின்ற கருத்தரங்கத்தில் அவர்கள் ஆய்வு செய்த கருத்தை மக்கள் மன்றத்தில் வைக்கிறார்கள். அது வாதப்பிரதிவாதங்கள் செய்வதற்கான விவாத மேடையாக அமைக்கவில்லை.

    ஹிஜ்ரா கமிட்டி ஆதாரப்பூர்வமாக வெளியிடும் கருத்துகளுக்கு மறுப்பு தெரிவிக்க வேண்டும் என நினைப்பவர்கள் ஹிஜ்ரா கமிட்டி நிகழ்ச்சிகளை நடத்துவதை போல் கருத்தரங்கள், புத்தகங்கள் மற்றும் இணைய தளங்கள் மூலமாக சொந்த செலவில் கருத்துகளை மக்கள் மன்றத்திற்கு கொண்டு செல்லவும்.

    நாம் அதற்கு மக்கள் மன்றத்திலேயே பதில் கொடுக்க கடமைப்பட்டுள்ளோம்.

    1430 வருட காலமாக வாதப்பிரதிவாதங்கள் செய்து கொண்டே இருக்கும் மக்களால் சமுதாயத்திற்கு எந்த பிரயோஜனமும் இதுவரை ஏற்பட்ட மாதிரி தெரியவில்லை.

    எனவே தாங்கள் உங்கள் கருத்ததை உங்களின் பொருளாதாரத்தை செலவழித்து மக்கள் மன்றத்தில் கூறினால் அதற்கும் பதிலை மக்கள் மன்றத்தில் நாங்கள் கொடுத்துக் கொண்டே இருப்போம்.

    நம்முடைய வாத பிரதிவாதங்களை ஆய்வு செய்து யார் சத்தியத்தை புரிந்து கொள்கிறார்களோ அதை அவர்கள் பின்பற்றட்டும்.

    மேலும் தாங்கள் 1430 ரமளான் 29 வது நாள் வெள்ளிக்கிழமை ஏர்வாடியில் கடைசி நோன்பில் உங்கள் செலவில் எப்படி ஜீம்மாவிற்கு பின் பொது மக்களுக்கு துண்டு பிரசுரம் கொடுத்து ஹிஜ்ரா கமிட்டியின் கணக்கு தவறானது என சொன்னீர்களோ அதை போல் நீங்கள் பெரிய அளவில் எங்களை போல் சென்னையில் ஒரு கருத்தரங்கம் நடத்தி உங்கள் கருத்தை சொன்னால் அது தான் சரியான தீர்வாக அமையும்.

    எனவே தாங்கள் தாமதிக்காமல் உங்கள் வெப்சைட்டில் உள்ள கருத்துகளை இங்கு பதிந்தால் நான் பதில் கொடுக்க வசிதியாக இருக்கும்

    இப்படிக்கு

    சிராஜ் ஏர்வாடி

  16. Dear Brother Sirajudeen,
    Assalamu Alaikum,

    2 + 2 = 4. இது நான்காகத்தான் இருக்கமுடியும் ஐந்தாக முடியாது. யார் கணக்கிட்டாலும் எந்த கால்குலேட்டரை தட்டினாலும் முடிவு ஒன்றாகத்தான் இருக்கவேண்டும். இதுபோல் இறைவன் மனித குலத்திற்கு ஒரு நாட்காட்டியை தந்துள்ளான் என்றால் அதை யார் தொகுத்தாலும் அதன் கணக்கீடும் ஒரே முடிவைத்தான் தர வேண்டும். அது மாறு படுமேயானால் அதை கணக்கிடும் நம்மில் தான் தவறு உள்ளது. ஒன்று என்னுடைய ஆய்வு தவறாக இருக்கலாம் அல்லது உங்களுடைய ஆய்வு.

    மக்கள் மன்றத்திற்கு செல்லும்முன் தகுந்த நடுவர்களை அம்ர்த்தி நாம் இருவரும் நம்முடைய ஆய்வை சரி கண்டிருக்க வேண்டும். ஆனால் இதுவரை அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

    இன்ஷா அல்லாஹ் அந்த ஏற்பாட்டை நான் செய்கிறேன். NOVEMBER 09ல் 1,8,15,22 ல் எந்த நாள் உங்களுக்கு வசதியாக இருக்கும் என்றால் அந்த நாளில் நெல்லையில் தகுந்த நடுவர்களை அம்ர்த்தி மக்கள் மன்றத்தில் நம்முடைய கருத்துக்களை எடுத்துவைப்போம்.

    நீங்கள் இதற்க்கு சரி என்றால் உடனே நாள் குறிப்பிட்டு தாருங்கள் அதற்குரிய ஏற்பாட்டை உடனே துவங்கிவிடலாம்.

    wassalam,
    M.Mustafa

  17. Sister Nilofur,
    Assalamu Alaikum,

    UT , GMT இரண்டும் ஒன்றுதான். அதில் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் உள்ளது என்பது தவறான வாதம்.

    Universal Time or UT is the precise measure of time used as the basis for all civil time-keeping. Although their exact definitions differ, most readers can assume that Universal Time is equivalent to Greenwich Mean Time or GMT. Universal Time is actually based on the mean sidereal time as measured in Greenwich, England. It’s also approximately equal to mean solar time from Greenwich.

    Like most other astronomical calculations, eclipse predictions are usually presented in terms of Universal Time. In order to convert eclipse predictions from UT to local time, you need to know what time zone you are in.

    By NASA

    The local mean solar time at the Royal Observatory, Greenwich, England, was chosen at the 1884 International Meridian Conference to define the Universal day, counted from zero hours at mean midnight, in recognition of the widespread use of Greenwich Mean Time (GMT). In 1884, the Greenwich Meridian was used for two-thirds of all charts and maps as their Prime Meridian. In 1928, the term Universal Time (UT) was introduced by the International Astronomical Union to refer to GMT with the day starting at midnight.

    In 1928, the term Universal Time was adopted internationally as a more precise term than Greenwich Mean Time, because the GMT could refer to either an astronomical day starting at noon or a civil day starting at midnight. However, the term Greenwich Mean Time persists in common usage to this day in reference to civil timekeeping.

    From Encyclopedia

    wassalam
    M.Mustafa

  18. P.Mohamed Sirajudeen

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரகாத்துஹு

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்

    இதுவரை நடுவரை வைத்து பேசிய எதற்கும் தீர்வு ஏற்பட்டதே இல்லை என்பதை தாங்கள் அறிந்து தான். நாம் இது போன்ற இணையத்தளங்களில் மக்கள் மன்றத்தில் எழுத்து மூலம் கருத்துகளை பகிர்ந்து கொண்டாலே போதுமானது. நாம் ஆய்வு செய்து சரியாக செய்தால் இரண்டு நன்மை. தப்பாக செய்தால் ஒரு நன்மை உண்டு என்பதில் எனக்கு மாற்றுக் கருத்து இல்லை. சவூதி போன்ற நாடுகளுடன் நாம் ஒத்து போக வேண்டும் என ஜாக் கூறுவதை நீங்கள் உங்கள் காலெண்டர் மூலமாக திணிக்க திட்டமிடுகிறீர்கள் என்பதை உங்கள் மீது குற்றச்சாட்டாகவே நான் பதிகிறேன்.

    மேலும் தாங்கள் இந்த இணையத்தளத்திலேயே உங்கள் கருத்துகளை பதிந்தால் அதற்கு பதில் அளிக்க நான் தயாராக உள்ளேன்.

    என்னை பொறுத்தவரை யாருடனும் வாத பிரதிவாதங்கள் செய்ய விரும்புவதில்லை. என்னுடைய கருத்தை நான் மக்கள் மன்றத்தில் எடுத்து வைப்பேன். அதில் சத்தியம் இருந்தால் அல்லாஹ் அதை வளர்ப்பான் என்ற நம்பிக்கையில் உறுதியாக உள்ளேன்.

    இன்ஷாஅல்லாஹ் உங்களிடம் தவறிருக்கலாம் என நீங்கள் நினைத்ததால் அதை என்னுடைய கருத்தின் மூலம் சரி செய்து கொள்ள தாங்கள் விருமபினால் அதற்காக நான் ஹிஜ்ரி 1431ம் முஹர்ரம் மாதத்தில் தான் என்னால் நேரம் தர முடியும். அந்த மாதத்தில் ஒரு தேதியை தாருங்கள். அதில் நாம் அமர்ந்து பேசலாம். நமக்கு நடுவராக யாரும் இருக்க வேண்டிய அவசியமில்லை. அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு நான் சத்தியத்தை தெளிவுபடுத்துகிறேன். நீங்களும் அதே போல் தெளிவுபடுத்துங்கள். அதில் எது சத்தியமானதோ அதை அல்லாஹ் வளர்க்கட்டும் என இருவரும் அல்லாஹ்விடம் பிரார்த்தித்து முடிப்போம்.

    மற்றவற்றை அவன் முடிவு செய்து மறுமையில் நமக்குரிய தீர்வை தருவான் என்பதை நம்பி செயல்படுவோம்.

    என்னுடைய ஆய்வுகளை இஸ்லாம் காட்டிதந்த அடிப்படையில் மக்கள் மன்றத்தில் தான் வைத்து பரிசோதித்து வருகிறேன். 1989 இல் இருந்து பிறை ஆய்வை நான் செய்து வருகிறேன். ஒவ்வொரு காலகட்டத்திலும் யார் இந்த மார்க்கத்தை பின்பற்றி வாழ விரும்புகிறார்களோ அவர்கள் மத்தியில் எடுத்து சொல்லி கருத்துகளை பகிரங்கமாக பரிமாறிக் கொள்கிறோம்.

    மார்க்கத்தை மக்கள் மன்றத்திற்கு கொண்டுவருதற்கு முன் நாம் பேசிக்கொள்ளவில்லை என கூறுகிறீர்கள். அப்படி இருவரோ ஒரு கூட்டமோ இருந்து பேசினால் தான் சத்தியத்தை வெளியே சொல்ல வேண்டும் என்றால் அதற்கு என்ன ஆதாரம்.

    தனி ஒருவர் சத்தியத்தை ஆய்வு செய்து வெளியிட்டால் தவறா? என்பதை யோசிக்கவும். நாம் ஒரு விஷயத்தை ஆய்வு செய்து அதை மக்கள் மன்றத்திற்கு கொண்டு சென்றாலே அதில் உள்ள தவறுகள் நமக்கு சுட்டி காட்டபடும். தவறை தவறு என உணர்ந்து நமது தவறை ஒப்புக் கொண்டால் அதற்குத் தான் சிறப்பான கூலி உள்ளது.

    மேலும்

    16:00 UTC எந்த இடத்தில் வரும் என்பதை GMT நேரத்தை வைத்து விளக்கவும். மேலும் GMT யில் DST உள்ளது. அப்போது எப்படி கணக்கு சரியாக வரும்.

    மலைக்கும் மடுவுக்கும் உள்ள பிரச்சினை உள்ளதால் தான் UT நேரம் போடப்பட்டது.

    இப்படிக்கு
    சிராஜ் ஏர்வாடி

  19. Bro.P.Sirajudeen, Assalamu Alaikum,

    “நான் கழுவுகிற மீனில் நழுவுகிற மீன் ” என்பதை நீங்கள் அப்பட்டமாக நிரூபித்து விட்டீர்கள். ” உங்களுடைய ( ஹிஜ்ரா ) நாட்காட்டி ஆதரமற்றது தவறான அடிப்படையில் தொகுக்கப்பட்டுள்ளது எனவே அதில் பழுதுள்ளது.” என்பதை உங்களுடைய 17.10.09 சென்னை கருத்தரங்கில் நிரூபிக்க தயார் , உங்களிடம் சத்தியம் உள்ளது என்றால் நீங்களும் அதற்கு மறுப்புகளை அந்த மக்கள் மன்றத்தில் தாருங்கள் என்றேன்.

    அதற்கு நீங்கள் உங்களுடைய செலவில் ஒரு ஏற்பாடு செய்யுங்கள் என பதில் தந்தீர்கள். அதற்கும் தயார். நவம்பர் மாதத்தில் ஒரு Sunday அன்று வைத்துக்கொள்ளலாம் உறுதி செய்யுங்கள் என கேட்டிருந்த்தோம். இப்போது நழுவுகிறீர்கள்.

    தனியாக நாம் இருவரும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். இதற்கு நடுவர்களும் மக்கள் மன்றமும் எதற்கு , என்னுடைய வார்த்தை திறமையயை அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டு வளர்த்துக் கொள்வேனே என்று பதில் தந்துள்ளீர்கள்.

    சத்தியத்தை மக்கள் மன்றத்தில் பகிரங்கமாக பகிர்ந்து கொள்வதற்கு பயம் எதற்கு. குர்ஆன் ஹதீஸ் ஆதாரத்தில் மட்டுமே நம்முடைய வாழ்கையை அமைத்துக் கொள்வோம் என சபதம் ஏற்று நம்முடைய செயல்பாடுகளை மாற்றிக் கொண்டோம். ஆனால் இப்போது நீங்கள் அந்த அடிப்படை கொள்கைக்கே உலை வைக்கும் காரியத்தில் ஈடுபட்டுள்ளீர்கள். இது தான் உண்மை.

    wassalam,
    M.Mustafa

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *