Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? [உங்கள் சிந்தனைக்கு… – 055]

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்? [உங்கள் சிந்தனைக்கு… – 055]

மழை தடைபட்டு, வறட்சி நிலவ என்ன காரணம்?

“அவர்கள் (இஸ்லாம் எனும்) இவ்வழியில் உறுதியாக இருந்திருந்தால், தாராளமாகத் தண்ணீரை நாம் அவர்களுக்குப் புகட்டியிருப்போம்!” (72:16) என்ற இந்த அல்குர்ஆன் வசனத்திற்கு அல்லாமா அப்துல் அஸீஸ் பின் பாஸ் (ரஹிமஹுல்லாஹ்) அவர்கள் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளார்கள்:-

“இது, அல்லாஹ்விடமிருந்து வந்திருக்கும் வாக்குறுதியொன்றாகும். அதாவது: மார்க்கத்தைப் பின்பற்றி, ஏவல்களுக்கு வழிப்பட்டு, விலக்கல்களைத் தவிர்ந்து நடத்தல் என்று அல்லாஹ் வரைந்துள்ள (இஸ்லாம் எனும்) இவ்வழியில் மனிதர்கள் உறுதியாக இருந்தால் அவர்களது வீடுகளிலும், அவர்களின் கிணறுகளிலும், அவர்களது ஏனைய விவகாரங்களிலும் அவர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அதிக நீரை (மழையாக) அல்லாஹ் அவர்களுக்குப் புகட்டுவான்!” என்பதே இந்த வசனத்தின் வெளிப்படையான கருத்தாகும்.

எனினும் மிதமிஞ்சிய அலட்சியம், வீணடிப்பு, பொடுபோக்கு ஆகிய காரணத்தினால் வறட்சி, பஞ்சம், மழை தடைபடல் போன்ற பல வகையான தண்டனைகளைக்கொண்டு மனிதர்கள் சிலவேளை பிடிக்கப்படுவார்கள். அல்லாஹ் கூறுகிறான்: “உங்களுக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால், அது உங்கள் கைகள் சம்பாதித்துக் கொண்டதினாலேயாகும். மேலும், அதிகமானவற்றை அவன் மன்னித்தும் விடுகின்றான்” (அல்குர்ஆன், 42:30).

இன்னும் அல்லாஹ் கூறுகின்றான்: “fபிர்அவ்னின் கூட்டத்தார் நல்லுபதேசம் பெறும் பொருட்டு பஞ்சத்தைக் கொண்டும், விளைச்சல்களில் குறைவை ஏற்படுத்தியும் நிச்சயமாக நாம் சோதித்தோம்” (அல்குர்ஆன், 07:130)

சுருக்கம் என்னவென்றால், ஒரு சமூகம் தமது பாவங்கள் மூலமாக வறட்சியினாலும் பஞ்சத்தினாலும் சிலவேளை தண்டிக்கப்படுவார்கள்! சிலபோது அவர்களது வழிபாடுகளின் காரணத்தினாலும், அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று நடப்பதில் இருக்கின்ற உறுதியின் காரணத்தினாலும் அல்லாஹ் அவர்களுக்கு தண்ணீரை இறக்கி, பலவகையான நன்மைகளையும் தனது அருளிலிருந்து அவர்களுக்கு அவன் வழங்குவான். இன்னும் சிலபோது அல்லாஹ் தனது அடியார்கள் சிலரை (தவறுகளிலிருந்து திருந்தி) அவர்கள் மீண்டுவர வேண்டும் என்பதற்காகவும், விழிப்படைய வேண்டும் என்பதற்காகவும் பாவங்களில் அவர்கள் ஈடுபட்டிருக்கும் நிலையிலேயே மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொடுத்து சோதிப்பான்.

அல்லாஹ் கூறுகிறான்: “…அவர்களை நாம் அவர்கள் அறியாதவாறு படிப்படியாகப் பிடிப்போம்? மேலும், அவர்களுக்கு நான் அவகாசமளிப்பேன். நிச்சயமாக எனது சூழ்ச்சி மிக வலிமையானது!” (அல்குர்ஆன், 07: 182,183)

எனவே, எச்சரிக்கையாக இருந்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மேலும், தான் பாவங்களில் ஈடுபட்டிருக்கின்றபோதே பிரமாண்டமான அருட்கொடைகளும் நிறைய நன்மைகளும் கிடைக்கப் பெற்றிருப்பதுடன் அல்லாஹ்வின் அவகாசமும், அவனின் தாமதிப்பும் தனக்குக் கிடைத்திருக்கிறதே என மனிதன் பெருமிதமடைய வேண்டாம். காரணம், சிலவேளை இது விட்டுப்பிடித்தலாக இருக்கலாம்!”

{ www.binbaz.org.sa/node/9118 என்ற விலாசமுடைய அல்லாமா பின் பாஸ் அவர்களின் உத்தியோகபூர்வ இணையதளம் }

قال العلّامة بن باز رحمه الله تعالى في تفسير قوله تعالى: { وأن لّو استقاموا على الطريقة لأسقيناهم ماءا غدقا }
“الآية على ظاهرها، هذا وعد من الله عزّ وجلّ أن الناس لو استقاموا على الطريقة التي رسم الله لهم من اتباع الشرع وطاعة الأوامر وترك النواهي لأسقاهم الله الغيث الكثير الذي ينفعهم في بيوتهم وفي آبارهم وفي سائر شؤونهم.
ولكن بسبب التفريط والإضاعة والتساهل قد يؤخذ الناس بأنواع العقوبات التي منها الجدب والقحط ومنع الغيث، كما قال جلّ وعلا: « وما أصابكم من مصيبة فبما كسبت أيديكم ويعفو عن كثير » . وقال جلّ وعلا: « ولقد أخذنا آل فرعون بالسّنين ونقص من الثمرات…»
فالحاصل أن القوم قد يعاقبون بالجدب والقحط لمعاصيهم. وقد ينزل الله عليهم الغيث، ويمنحهم من فضله أنواع الخيرات بسبب طاعاتهم وإستقامتهم على أمر الله. وقد يبتلى بعض عباده بالسّرّاء على معاصيهم لعلهم يرجعون لعلهم ينتبهون، كما قال تعالى: « … سنستدرجهم من حيث لا يعلمون?وأملي لهم إنّ كيدي متين »
فالواجب الحذر! وألاّ يغتر الإنسان بإملاء الله وإمهاله له على ما هو عليه من المعاصي مع وجود النّعم العظيمة والخير الكثير، وقد يكون إستدراج”.
{ الموقع الرسمي للشيخ إبن باز رحمه الله }

தமிழில்…
அஷ்ஷெய்க். N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *