Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » ‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்! [உங்கள் சிந்தனைக்கு…–062]

‘அல்லாஹ்வை அஞ்சுங்கள்’ என்று கூறப்பட்டால், அதை அலட்சியமாகப் பார்க்காதீர்கள்!

அல்லாமா முஹம்மத் பின் ஸாலிஹ் அல்உஸைமீன் (ரஹிமஹுல்லாஹ்) கூறுகின்றார்கள்:-
“எமக்கு முன் வாழ்ந்து சென்ற நல்லோர்களான ஸலfபுஸ் ஸாலிஹீன்களில் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லப்பட்டால் அவர் நடுங்கி விடுவார்; சிலவேளை, அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தினால் கீழே விழுந்தும் விடுவார். மனிதர்களில் இந்த நிலையுடையவரை (இக்காலத்திலும்) நாம் கண்டிருக்கின்றோம். அதாவது அம்மனிதரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று நீர் கூறினால் பதற்றமடைந்து நடுங்கி விடுவார்; அவரின் முகமும் சிவந்து விடும்; உள்ளச்சமடைந்தும் விடுவார். ஆனால், இப்போது நிலைமை நேர்மாறாகி விட்டது. நீர் ஒருவரிடம், ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்வீராக!’ என்று சொல்லிவிட்டால், அல்லாஹ்வின் வரம்புகளை மீறியவராக அவர் இருந்துகொண்டே ‘(அல்லாஹ்வை அஞ்சுவதற்கு) நான் என்னதான் செய்துவிட்டேன்?!’ என்றுதான் கேட்பார்.
எனவே, அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்பட்டவராக அவனை அஞ்சி நடக்க வேண்டியதுதான் (இறைவிசுவாசியாக இருக்கின்ற) மனிதருக்கு அவசியமாகும்!”
{ நூல்: ‘தfப்சீரு சூரதில் மாஇதா’ }

قال العلّامة محمد بن صالح العثيمين رحمه الله تعالى:-
[ وقد كان بعض السلف إذا قيل له: « إتّق الله » إرتعد، وربما سقط من مخافة الله عزّ وجلّ. وأدركنا من الناس من هذه حاله! أي: أنك إذا قلت له «إتّق الله» ؛ إضطرب واحمرّ وجهه وخشع. والآن بالعكس، إذا قلت له: « إتّق الله »، قال: “ماذا فعلت؟” مع أنه منتهك لحرمات الله عزّ وجلّ.
فالواجب على العبد تقوى الله عزّ وجلّ إمتثالا لأمره تعالى ]
{ تفسير سورة المائدة }

நபிகள் நாயகம் (ஸல்லழ்ழாஹு அலைஹி வசல்லம்) அவர்கள் கூறியதாக இப்னு உமர் (ரழியழ்ழாஹு அன்ஹு) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
“(முன்னொரு காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றுகொண்டிருந்தனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையொன்றில் நுழைந்துகொண்டனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள் தமக்குள், ‘நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்!’ என்றனர். அவர்களில் ஒருவர், “……..இறைவா! என்னுடைய தந்தையின் உடன்பிறந்த சகோதரரின் மகளை, எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதைவிட நான் அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் (தங்க நாணயங்கள்) தரும் வரை தன்னை அடைய முடியாது என்றாள். நான் உழைத்து நூறு தீனார்களைத் திரட்டினேன். அவளுடைய இரண்டு கால்களுக்கிடையே நான் அமர்ந்தபோது, ‘அல்லாஹ்வை அஞ்சிக்கொள்! உரிய முறையின்றி முத்திரையை நீ உடைக்காதே!’ என்று அவள் கூறினாள். உடனே, அவளை விட்டு நான் எழுந்து விட்டேன். இதை உன்னுடைய திருப்தியை நாடி நான் செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை விட்டும் நீக்கு! எனக் கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு மடங்கு (சிரமத்தை) நீக்கினான்……. ”
{ நூல்: புகாரி – 2215, ஹதீஸ் சுருக்கம் }

தமிழில்…
அஷ்ஷெய்க் N.P.ஜுனைத்(காஸிமி,மதனி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *