Featured Posts
Home » சட்டங்கள் » தல்கீன்

தல்கீன்

“தல்கீன்” தொடர்பாக அபூ உமாமா (ரழி) அவர்களைத் தொட்டும் ஜாபிர் (ரழி) அவர்கள் மூலம் அறிவிக்கப்படும் செய்தி மஜ்மஃ அஸ்ஸவாயித், முஃஜம் தபரானி, தல்ஹீஸுல் ஹாபிழ், இப்னு ஹஜர் போன்ற இன்னும் சில இமாம்களின் கிரந்தங்களில் இடம் பெற்றுள்ளது.

قال الهيثمي (2/324) : “وفيه من لم أعرفه جماعة “

மஜ்மஃ அஸ்ஸவாயித் நூலின் ஆசிரியரான இமாம் ஹைஸமி (ரஹ்) அவர்கள் இந்த அறிவிப்பாளர்களில் யார் என்றே எனக்குத் தெரியாத பலர் உள்ளனர் எனக் குறிப்பிடுவது ஹதீஸின் கோழாரைக் காட்டுகின்றது.

இமாம் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் இது தபரானியில் அறிவிக்கப்படும் செய்தி எனக் கூறி , அதனைப் பலமாகக் கொள்ள முடியும் எனக் குறிப்பிடுவது ஹதீஸ்கலை அறிஞர்களின் விதியின் படி அங்கீகரிக்க முடியாததாகும்.

ஏனெனில் அந்த அறிவிப்பாளர் தொடரில் ஸயீத் அல்அஸ்தி என்பவர் இடம் பெறுகிறார். அவர் ஹதீஸ் அறிவிப்பில் குறைகாணப்பட்டவர்.
எனவே அவ்வாறான குறைகளைக் கொண்டு அறிவிப்பாளர் வரிசையைச் சரி செய்ய முடியாது என்பதாக அறிஞர்கள் சுட்டிக் காட்டும் விதியின் அடிப்படையில் அதனை அங்கீகரிக்க முடியாது .

ஷைக் அல்பானி (ரஹ்) அவர்கள்,

قال الشيخ الألباني: منكر. أخرجه القاضي الخلعي في الفوائد 2/55.
قلت – أي الألباني -: [وهذا إسناد ضعيف جداً لم أعرف أحداً منهم غير عتبة بن السكن. قال الدارقطني: متروك الحديث. وقال البيهقي: واهٍ منسوب إلى الوضع.

இந்த ஹதீஸ் முன்கர் -நிராகரிக்கப்பட வேண்டியதாகும் எனக் குறிப்பிட்டு, இதில் பல அறிவிப்பாளர்கள் பற்றி எவ்வித தகவலும் அறியப்படவில்லை.

அதில் இடம் பெறும் இப்னுஸ் ஸகன் என்பவரைத் தவிர. அவரும் ஆதாரத்தில் கொள்ளப்படாதவர் என இமாம் தாரகுத்னி அவர்கள் குறிப்பிட்டுள்ளதாகக் குறிப்பிட்ட பின்னர், இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டதில் சேர்க்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்ட பின்னர், இமாம் நவவி, தபரானி போன்ற அறிஞர்கள் மேற்படி செய்தியை பலவீனப்படுத்தியதாக குறிப்பிட்டுள்ளார்கள்.

அதனால் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களை அடக்கம் செய்து விட்டு எவ்வாறு நடந்து கொண்டார்களோ அதே போன்று நடப்பதுதான் சுன்னத் நபி (ஸல்) அவர்களின் வழி முறையாகும்.

அதற்கு மாறு செய்வது பித்அத் என்ற நிலையில் பார்க்கப்பட்டு அது அல்லாஹ்வால் நியாகிரிக்கப்படும் என்பது நபி (ஸல் ) அவர்கள் சொல்லித் தரும் எச்சரிக்கையாகும்.

மேலதிக வாசிப்பிற்காக,

سلسلة الأحاديث الضعيفة
ملتقى أهل الحديث
https://www.ahlalhdeeth.com/vb

 

தல்கீன் முறை பித்அத் என்பது மார்க்க அறிஞர்களின் தீர்ப்பாகும்…

முக்கிய சில அறிஞர்களின் தீர்ப்புக்கள் மாத்திரம் இங்கு தரப்படுகின்றது.

இமாம் இஸ்ஸு பின் அப்திஸ்ஸலாம்(ரஹ்)

قال الإمام العز بن عبد السلام رحمه الله : [لم يصح في]

شيء وهو ب رحمه اللهدعة وقوله صلى الله عليه وسلم: (لقنوا موتاكم لا إله إلا الله) محمول على من دنا موته ويئس من حياته] فتاوى العز بن عبد السلام ص427.

தல்கீன் பற்றி வந்த எந்த ஹதீஸும் ஆதாரபூர்வமானது அல்ல. தல்கீன் என்ற ஒன்று மரணதருவாயில் சொல்லிக் கொடுக்க வந்தததாகவே புரிய வேண்டும்.

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்)

وقال الإمام ابن القيم رحمه الله : [ولم يكن يجلس – أي رسول الله صلى الله عليه وسلم – يقرأ عند القبر ولا يلقن الميت كما يفعله الناس اليوم] ( زاد المعاد)

நபி ஸல் அவர்கள் கப்ரின் பக்கமாக அமர்ந்து எதையும் ஓதுபராகவோ, தல்கீன் ஓதுபவராகவோ இருக்கவில்லை எனக் குறிப்பிடுகின்றார்கள் .

இமாம் இப்னுல் கையிம் (ரஹ்) அவர்கள் “தல்கீன்” பற்றிய ஹதீஸின் தரம் பற்றி விமர்சனம் செய்கின்ற போது

وقال الشيخ ابن القيم بعد أن ساق الحديث: [فهذا حديث لا يصح رفعه] زاد المعاد 1/523.

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் வரை தொடர் சென்றடையவில்லை எனக் குறிப்பிடுகின்றார்கள். (ஸாதுல் மஆத்)

இமாம் ஸன்ஆனி (ரஹ்) அவர்கள்

وقال الصنعاني: [ويتحصل من كلام أئمة التحقيق أنه حديث ضعيف والعمل به بدعة ولا يغتر بكثرة من يفعله] سبل السلام

உறுதிக்கு இமாம்களின் விமர்சனப் பேச்சின் மூலம் இந்த ஹதீஸ் பலவீனமானது என்பது முடிவாகத் தெரிகின்றது. அதைக் கொண்டு அமுல் நடப்பது பித்அத்தாகும். அதனைக் கொண்டு அமுல் நடக்கும் மக்கள் திறையப் பேர் என்பதைக் கொண்டு யாரும் ஏமாற்றம் அடைய வேண்டாம் என குறிப்பிடுகின்றார்கள்.

பின்வரும் நபி மொழி தல்கீனுக்கு ஆதாரமாகுமா?

மரணதருவாயில் இருக்கின்ற முஸ்லிம், முஸ்லிம் அல்லாதோருக்காக தூய கலிமாவைச் சொல்லிக் கொடுத்து நினைவூட்டல் செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் பணித்துள்ளார்கள்.

عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَقِّنُوا مَوْتَاكُمْ لَا إِلَهَ إِلَّا اللهُ» اخرجه مسلم برقم/ ٩١٧ )

உங்களில் மரணதருவாயில் இருப்பவர்களுக்கு ‘ لا إله إلا الله ‘ வைச் என்ற தூயகலிபாவைச் சொல்லிக் கொடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (முஸ்லிம்)

இந்த ஹதீஸ் மரணதருவாயில் இருப்போருக்கு கலிமாவைச் சொல்லிக் கொடுப்பதையே விளக்குகின்றது. ஏனெனில் ஒருவரது இறுதி வார்த்தை கலிமாவோடு அமைவதால் அவருக்கு சொர்க்கம் கிடைக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்திக்கும் இந்த விளக்கம் துணை நிற்கின்றது. மரண தருவாயில் கூறப்படும் இந்த தல்கீனை இமாம்கள் ஏகமனதாக அங்கீகரித்துள்ளனர் என இமாம் நவிவி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
(பார்க்க : ஷரஹ் ஸஹீஹ் முஸ்லிம்)

பதிவு…
✍ ரிஸ்வான் மதனி | 05/08/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *