Featured Posts
Home » பொதுவானவை » பீஜே/ததஜ » தீடீர் ஹதிஸ் பாதுகாவலராய் மாறிய ஹதிஸ் மறுப்பாளர் பீ.ஜே!

தீடீர் ஹதிஸ் பாதுகாவலராய் மாறிய ஹதிஸ் மறுப்பாளர் பீ.ஜே!

பீ.ஜெ என்பவர் சில நாட்களுக்கு முன்பு ஒரு லைவ் நிகழ்ச்சியில் ஸஹீஹ் முஸ்லிமில் வந்துள்ள ஹதீஸை குறித்து பேசினார்.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
(வெளியூரிலிருந்து திரும்புகின்ற) ஒருவர் இரவு நேரத்தில் திடீரெனத் தம் வீட்டாரிடம் செல்வதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள். வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). (முஸ்லிம் – 3987)

இந்த ஹதீஸில் வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). என்கின்ற வார்த்தை நபி ஸல் அவர்கள் கூறிய வார்த்தையல்ல. அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹாரிப் என்பவர் கூறுகின்ற வார்த்தையாகும். இதனை ஹதீஸ்கலையில் முத்ரஜ் என்பார்கள். இதுவே சரியான நிலைபாடாகும்.

பீ.ஜெ என்பவர் இந்த ஹதிஸில் வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). என்கின்ற வார்த்தை நபி ஸல் அவர்களின் வார்த்தை தான். அது முத்ரஜ் அல்ல என்கிறார். இதனை சரிகாண்பதற்கு சில வாதங்களை வைக்கிறார். அவை,

1 – இந்த வார்த்தை நபி ஸல் அவர்களின் வார்த்தை தான் என்று அறிஞர்கள் கூறியுள்ளார்கள். சுஃப்யான் என்ற அறிவிப்பளாரிமிருந்து வகி இப்னு ஜர்ராஹ், அபு நுஹைம் அறிவிக்கின்றார்கள். அபு நுஹைம் வலுவானவர் என இமாம் அஹமத் பின் ஹம்பல் கூறியுள்ளார்கள்.

2 – இமாம் புகாரி ஸஹிஹுல் புகாரியில் இந்த கருத்தில் தான் பாடத்தலைப்பு வைத்துள்ளார்கள் என பீ.ஜெ இமாம் புகாரியின் பாடத்தலைப்பை எல்லாம் ஆதாரமாக காட்டுகின்றார்.

3 – ஹதிஸ் நூல்களின் விரிவுரையாளர்கள் இரவு நேரங்களில் திடீரென்று வீட்டிற்கு வரக்கூடாது என்பதற்கு இந்த ஹதிஸை ஆதாரமாக வைத்து தான் கூறுகின்றனர் என அறிஞர்களின் கருத்தையெல்லாம் ஆதாரமாக காட்டுகிறார்.

இப்படியாக பீ.ஜெ வீட்டார் மோசடி செய்கிறார்களா என்று நோட்டமிடவும் அவர்களின் குற்றங்குறைகளைக் கண்டுபிடிக்கவும் (அவ்வாறு செல்வது முறையாகாது). என்பது நபி ஸல் அவர்களின் வார்த்தை தான் என்பதை ஹதிஸ்கலையின் விதியின் அடிப்படையில் கூறுவதை பார்க்கும் போது நமக்கு புல்லரிக்கிறது.

பல ஸஹீஹான ஹதிஸ்களை பீ.ஜெ கடந்த காலங்களில் மறுத்திருகிறார். அந்த ஹதீஸ்களை எல்லாம் ஹதீஸ்கலையின் விதிகளுக்குட்பட்டு தான் பீ.ஜெ மறுத்தாரா? அல்லது மனோஇச்சையின் அடிப்படையில் மறுத்தாரா?

1 – நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸ், சாலிம் ரலி அவர்களின் பால்குடி தொடர்பான ஹதீஸ் போன்ற ஹதீஸ்களை ஹதீஸ்கலையின் எந்த விதிக்கு உட்பட்டு பீ.ஜெ மறுத்தார்?

எந்தந்த இமாம்கள் இந்த ஹதீஸ்களை மறுத்துள்ளார்கள் என்ற பட்டியல் பீ.ஜெவால் தரமுடியுமா?

மனோஇச்சையின் அடிப்படையில் ஹதீஸ்களை மறுத்துக் கொண்டிருக்கும் பீ.ஜெ, ஹதீஸ்கலையின் விதியின் அடிப்படையில் ஹதீஸ்களை அணுக வேண்டும் என்று கூறுவது கேலிக்கூத்தாகும்.

2 – இமாம் புகாரியின் பாடத்தலைப்பை எல்லாம் ஆதாராமாக காட்டும் பீ.ஜெ, சூனியம் தொடர்பான விஷயத்தில் இமாம் புகாரி பாடத்தலைப்பாக வைத்துள்ளதை ஆதாரமாக ஏற்றுக் கொள்வாரா?

باب السِّحْرِ
சூனியம் தொடர்பான பாடம்

باب الدَّوَاءِ بِالْعَجْوَةِ لِلسِّحْرِ
சூனியத்திற்கு அஜ்வாவின் மூலம் நிவாரணம்
உள்ளது என்பது பற்றிய பாடம்

புகாரியின் இந்த பாடத்தலைப்புகளை பீ.ஜெ ஏற்றுக் கொள்வாரா? இதற்கு என்ன பதில சொல்ல போகிறார்? (என் மனதிற்கு பிடித்தால் ஏற்றுக் கொள்வேன். பிடிக்கவில்லையென்றால் ஏற்கமாட்டேன். இது தான் பதிலா? )

3 – பீ.ஜெ தான், சரிகாண்கிற ஒரு ஹதிஸ் ஸஹீஹானது என்பதற்கு ஹதீஸ் நூல்களின் விரிவுரையாளர்களின் கூற்றை எல்லாம் ஆதாரமாக காட்டுகிறார்.

இந்த வழிமுறையை தான் பீ.ஜெ தான் இதுவரை மறுத்துள்ள ஸஹீஹான ஹதீஸ்களின் விஷயத்தில் பின்பற்றினாரா?

நபி ஸல் அவர்களுக்கு சூனியம் செய்யப்பட்ட ஹதீஸை ஹதீஸின் அறிவிப்பாளர்கள், ஹதீஸ்கலையின் இமாம்கள், ஹதீஸ்களின் விரிவுரையாளர்கள் ஸஹீஹானது என்று தீர்ப்பளித்திருக்கிறார்கள்.

ஆனால் பீ.ஜெ இதனை எல்லாம் புறந்தள்ளி விட்டு மனோஇச்சையின் அடிப்படையில் அந்த ஹதீஸை இட்டுக்கட்டப்பட்டது என்று கூறுகிறார்.

ஆக ஹதீஸ்களை மனோஇச்சையின் அடிப்படையில் ஒருபுறம் மறுத்துக் கொண்டு, தனது தேவைக்காக ஹதிஸில் இல்லாததை ஹதிஸ் என நிருபிப்பதற்காக ஹதிஸ்கலையின் விதிகளை பற்றியெல்லாம் பேசும் பீ.ஜெவை பார்க்கும்போது வினோதமாக உள்ளது!

அல்லாஹ்தான் பீ.ஜெவிற்கு நேர்வழி காட்ட வேண்டும்!

-ஹசன் அலி உமரி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *