Featured Posts
Home » கேள்வி-பதில் » பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

பெண்கள் ஸலாம் சொல்லும் போது சப்தத்தை உயர்த்தி சொல்லலாமா?

அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ

நேற்றைய தினம் (30-12-2018) அர் ரிஸாலா தொலைக்காட்சியில் “மார்க்க சட்டங்களை தெரிந்து கொள்ளுதல்” என்ற நிகழ்ச்சியில் பெண்கள் பொது இடங்களில் அதாவது சந்தை பகுதிகள், வைத்தியசாலை மற்றும் மக்கள் கூட்டமாக இருக்கும் இடங்களில் ஸலாம் சொல்லும் போது அல்லது அல்லாஹ்வை நினைவுகூரும் திக்ர்களை ஓதும் போது தனது சப்தத்தை உயர்த்தலாமா என்று ஒரு பெண்மணி கேட்ட கேள்விக்கு பதில் அளிக்கும் போது, சவுதி அரேபிய மூத்த அறிஞர் குழாமின் உறுப்பினராகிய அஷ்ஷெய்க் அப்துல்லாஹ் ஸுலைமான அல் மனீஃ அவர்கள் பெண்களில் குரல் மறைக்கப்பட வேண்டிய அவ்ரத் கிடையாது. அதே நேரம் ஸலாம் என்பது முகமனாகும். அதிலே குழப்பங்களோ அல்லது பிரச்சினைகளோ இடம் பெற வாய்ப்பு ஏற்படுவதில்லை என்றார்.

தொடர்ந்து விளக்கமளிக்கையில், எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களது மனைவியர்களாகிய நம்பிக்கையாளர்களின் தாய்மார்களிடத்திலே நடந்து கொள்வேண்டிய ஒழுக்கம் தொடர்பாக பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

நபியுடைய மனைவிகளிடம் ஏதாவது ஒரு பொருளை (அவசியப்பட்டுக்) கேட்டால், திரைக்கு அப்பாலிருந்தே அவர்களைக் கேளுங்கள்…(33:53)

பெண்களின் குரல் அவ்ரத்தாக (மறைக்கப்பட வேண்டியதாக) இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்குமானால் நபியவர்களுடைய மனைவிமாரோடு திரைக்கு அப்பால் இருந்து பேசுவதை அல்லாஹ் அனுமதித்திருக்கமாட்டான்.

மேலும் ஸலாத்திற்கு பதில் கூறுவது கட்டாயமாக இருப்பதனால் யாராவது பெண்களுக்கு ஸலாம் கூறப்பட்டால் தாராளமாக கேட்கக் கூடிய அளவுக்கு தங்களது சத்தத்தை உயர்த்தி ஸலாத்திற்கு பதில் கூறுவதில் தவறு கிடையாது. ஸலாத்திற்கு பதில் கூறவேண்டியதன் அவசியத்தைப் பற்றி எல்லாம் வல்ல அல்லாஹ் பின்வருமாறு குறிப்பிடுகின்றான்.

உங்களுக்கு ஸலாம் கூறப்படும் பொழுது, அதற்குப் பிரதியாக அதைவிட அழகான (வார்த்தைகளைக் கொண்டு) ஸலாம் கூறுங்கள்;. அல்லது அதையே திருப்பிக் கூறுங்கள் – நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பொருட்களின் மீதும் கணக்கெடுப்பவனாக இருக்கிறான். (4:86)

தமிழாக்கம்: எம். றிஸ்கான் முஸ்தீன்
அல் கப்ஜி, சவுதி அரேபியா.
31/12/2018

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *