Featured Posts
Home » பொதுவானவை » உங்கள் சிந்தனைக்கு » கஃபாவை அண்மித்த பகுதிகளை விட்டும் மக்கள் தடுக்கப்பட்டமை மறுமை நாளின் அடையாளமா..?

கஃபாவை அண்மித்த பகுதிகளை விட்டும் மக்கள் தடுக்கப்பட்டமை மறுமை நாளின் அடையாளமா..?


அண்மையில் சில தினங்களுக்கு முன் உம்ராவுக்காக மக்கள் வெளிநாடுகளில் இருந்து மக்காவுக்கு வருவதையும் கஃபாவை அண்மித்த பகுதிகளில் வணக்கங்களில் ஈடுபடுவதையும் பாதுகாப்பு மற்றும் சுகாதார வேலைகளுக்காக சவுதி அரசு தடை செய்ததை முன்னிட்டு சமூக வலைத்தளங்கள் அனைத்திலும் இது மறுமையின் அடையாளங்களில் ஒன்று என்ற ஒரு பதிவு வேகமாக பரவி வருவதை நீங்கள் அவதானித்திருப்பீர்கள்.

நபிகள் நாயகம் (ஸல் ) அவர்கள் நெருங்கி வரும் மறுமையின் சிரிய பெரிய அடயாளங்களை முன்னரிவிப்பாக எமக்கு அறிவித்து விட்டார்கள் அவற்றில் வெளிநாட்டவர்கள் உம்ராவுக்கு வருவது தடைபெறும் என்றோ கஃபாவை அண்மித்த பகுதியை விட்டும் மக்கள் தடுக்கப்படுவார்கள் என்றோ எந்த முன்னரிவிப்புமில்லை இதற்கு மாற்றமாக ஒரு செய்தி இடம் பெறுகின்றது.

1528 حَدَّثَنَا أَحْمَدُ ، حَدَّثَنَا أَبِي ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ ، عَنِ الحَجَّاجِ بْنِ حَجَّاجٍ ، عَنْ قَتَادَةَ ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي عُتْبَةَ ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ : لَيُحَجَّنَّ البَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ ، تَابَعَهُ أَبَانُ ، وَعِمْرَانُ عَنْ قَتَادَةَ ، وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ ، عَنْ شُعْبَةَ قَالَ : لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى لاَ يُحَجَّ البَيْتُ ، وَالأَوَّلُ أَكْثَرُ ، سَمِعَ قَتَادَةُ ، عَبْدَ اللَّهِ ، وَعَبْدُ اللَّهِ ، أَبَا سَعِيدٍ

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும்.’ என அபூ ஸயீத் அல்குத்ரீ(ரலி) அறிவித்தார்.

கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்’ என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் என ஷுஅபாவின் அறிவிப்பு கூறுகிறது. மேலேயுள்ள முதல் அறிவிப்பே பெரும்பாலோரால் அறிவிக்கப்பட்டுள்ளது.

?ஸஹீஹ் புகாரி : 1528.

முதலாவது விடயம்

மேலே ஹதீஸில் கூறப்பட்டுள்ள இரண்டு செய்திகளையும் முரண்பாடின்றி ஒன்றினைத்து விளங்க வேண்டும் அதாவது கியாமநாளின் அடையாளமான யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர் வந்த பின்னரும் மக்கள் ஹஜ் செய்வார்கள் கியாமநாள் நெருங்கும் போது ஹஜ் நடை பெறாது ஈஸா அலை அர்களும் அவர்களுடன் இருக்கும் முஃமீன்களும் இறந்து விடுவார்கள் கஃபா வெறிச்சோடிக் கிடக்கும்.

இரண்டாவது விடயம்:

இந்த செய்தி புனிதஸ்தளங்களை விட்டு இன்று மக்கள் தடுக்கப்பட்டுள்ளதை குறிக்காது இது துல் ஹஜ் மாதத்தில் ஹஜ்ஜுடைய நாட்களில் வரும் தடை பற்றி பேசுகின்றது அதற்கான எந்த காரணத்தையும் நபிகளார் வொளிப்படையாக கூற வில்லை அதே நேரம் கடந்த காலத்தில் இடம் பெற்ற நிகழ்வுகள் பற்றி பார்தோமென்றால் கராமிதாக்களின் காட்டுமிராண்டி தன தாக்குதலின் காரணத்தால் சில காலம் ஹஜ் தடை பெற்றிருந்துள்ளது . இது போன்ற சிக்கள்களின் போது ஏற்படும் தற்காலிகமான தடைகளை நபிகளார் மறுமையின் அடையாளமாக முன்னறிவிப்புச் செய்ய வில்லை

மூன்றாவது விடயம்:

கஃபாவில் ஹஜ் செய்யப்படாத காலத்தில் பின்வரும் நிகழ்வும் இனைந்தே நடைபெறலாம் அதையே நபிகளார் கியாம நாளின் அடையாளமாக சொல்லி இருக்கலாம்.

1595 حدثنا عمرو بن علي حدثنا يحيى بن سعيد حدثنا عبيد الله بن الأخنس حدثني ابن أبي مليكة عن ابن عباس رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال كأني به أسود أفحج يقلعها حجرا حجرا

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘(வெளிப் பக்கமாக) வளைந்த கால்களையுடைய, கருப்பு நிறத்தவர்கள் ஒவ்வொரு கல்லாகப் பிடுங்கி கஅபாவை உடைப்பதை நான் பார்ப்பது போன்றிருக்கிறது.’என இப்னு அப்பாஸ்(ரலி) அறிவித்தார்.

?ஸஹீஹ் புகாரி : 1595.

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

‘அபிஸினியாவைச் சேர்ந்த, மெலிந்த கால்களுள்ள மனிதர்கள் கஅபாவை அடித்துப் பாழ்படுத்துவார்கள்.’
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார்.

?ஸஹீஹ் புகாரி : 1596.
அத்தியாயம் : 25. ஹஜ்

அல்லாஹ் மிக அறிந்தவன்

✍நட்புடன்:
இன்திகாப் உமரீ
2020/03/10

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *