Featured Posts
Home » வரலாறு » இலங்கை முஸ்லிம்கள் » இலங்கை முசலிப் பிரதேச மக்களின் பன்மைத்துவ சமூக அமைப்பும் சக வாழ்வும்

இலங்கை முசலிப் பிரதேச மக்களின் பன்மைத்துவ சமூக அமைப்பும் சக வாழ்வும்

அஷ்ஷைக் எம்.ஏ.ஹபீழ் (M.A.)

தொன்மையான இலங்கை வரலாற்றின், தவிர்க்க முடியாத பிரதான வணிகச் செயற்பாட்டு மையங்களில் முசலிப் பிரதேசமும் ஒன்றாகும். தொன்மைக் குடியேற்றம் பற்றிய பழமையான குறிப்புகளிலும், பதிவுகளிலும் முசலியின் பெயரும் அதன் அமைவிடமும் இப்பிரதேச மக்களின் சிறப்புப் பண்புக் கூறுகளும் ஆய்வாளர்களின் கவனத்தைக் கவர்ந்திருக்கிறது. அது ஒரு நிருவாகப் பிரதேசம் என்ற வகையில் அதன் வரலாற்றுத் தொன்மை ஆயிரம் வருடங்களுக்கு முற்பட்டுச் செல்கிறது. வரலாற்று ஆவணப் பதிவுகளையும் தனித்துவமான வளத்தையும் பல்லின சமூகக் கட்டமைப்பையும் பன்மைத்துவ சகவாழ்வியல் தன்மையையும் கொண்ட ஒரு பிரதேசமாக அது காணப்படுகிறது.

இலங்கை வடமாகாணத்தின் மன்னார் மாவட்டத்தில் 480 சதுர கிலோமீட்டர் பரப்பைக் கொண்ட முசலிப் பிரதேசம் இலங்கையின் வடமேற்கில் அமைந்துள்ளது. இப்பிரதேசம் புவியியல் ரீதியாக பல சிறப்புத் தன்மைகளையும் வனப்பையும் கொண்டமைந்துள்ளது என்பதை இக்கட்டுரை சுருக்கமாக ஆராய்கிறது.

Click here to read/download Article in PDF format

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *