Featured Posts
Home » மீடியா » வீடியோ ஆடியோ » மரணமும் ஜனாஸாவின் சட்டங்களும்

மரணமும் ஜனாஸாவின் சட்டங்களும்

ஆசிரியர் பற்றிய குறிப்பு

மௌலவி AG முஹம்மத் ஜலீல் மதனி அவர்கள் இலங்கை காத்தான்குடியைப் பிறப்பிடமாக கொண்டவர், இவர்கள் காத்தான்குடி-யில் உள்ள ஜாமிஅதுல் பலாஹ் அறபுக் கல்லூயில் 1988ல் இணைந்து அல்குர்ஆனை மனனம் செய்து ஹாபிழ் பட்டம் பெற்றுள்ளார். அதன் பின் 1998ல் மௌலவி, பலாஹியாகப் பட்டம்பெற்றார். இவர் மௌலவியாகப் பட்டம் பெற்ற அதே 1998ம் வருடமே மதீனாவிலுள்ள இஸ்லாமியப் பல்கலைக் கழகத்திற்கும் தெரிவாகி அங்குசென்று இஸ்லாமிய சட்டக்கலை –சரீஆ பீடத்தில் கற்று மதனீ பட்டம் பெற்றதுடன் நீதித்துறை சட்டவாக்க உயர் டிப்ளோமா (இஸ்லாமிய பத்வா வழங்கும் ”முப்தி”) கற்கைக்கும் தெரிவாகி கற்றுத் தேர்ந்துள்ளார்.

பின்னர் சவூதியரேபியாவின் கிழக்குப்பிராந்தியத்திலுள்ள அல்-ஜூபைல் இஸ்லாமிய வழிகாட்டல் நிலையத்திலும் இஸ்லாமிய அழைப்பாளராகப் பணியாற்றி பல்வேறு நூல்களையும் எழுதியுள்ளார். ஆசிரியரின் பிரபல்யமான நூற்கள் சூபித்துவம் அன்றும் இன்றும், நபில் தொழுகைகள், மனிதா! திருந்திவிடு.., பித்அத்தின் பின்னணிகளும் பக்க விளைவுகளும் போன்றவையாகும். இந்நூல்களையும் மற்றும் பல இவரின் ஆக்கங்களும் பல்வேறு இஸ்லாமிய வலைத்தளங்களில் உலா வருகின்றன, நமது இஸ்லாம் கல்வி இணையதளத்திலும் உள்ளன. குறிப்பாக ”சூபித்துவம் அன்றும் இன்றும்” என்ற இந்த நூல் தப்லீக் ஜமாத்தின் பல்வேறு சகோதரர்களை நேர்வழியின் பக்கம் மீட்டெடுத்தது (எல்லா புகழும் அல்லாஹ்-விற்கே). சௌதி அல்-ஜுபைல் தஃவா நிலையத்தில் வழிகேடர்களின் கொள்கைகளை பற்றிய அழைப்புபணி உதவியாளர்களுக்கான (முஆதாவீன்கள்) பிரத்யேக வகுப்புகளை நடாத்தினார்கள் குறிப்பாக சூனியம் பற்றிய தொடர் வகுப்புகள் பிரபல்யமானது.

சவூதியரேபியாவிலிருந்து இலங்கை நாடு திரும்பியதையடுத்து கல்முனை ஹாமியா அறபுக்கல்லூரியின் போதனாசிரியராக பணியாற்றிவந்தனர். பின்னர் சவூதி இஸ்லாமிய விவகார அமைச்சின் இலங்கை அழைப்பளாராக நியமிக்கபட்டார்கள். ஹாமியாவிலிருந்து வெளியாகும் அல்ஹாமியா சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் இவர் அப்போது செயற்பட்டார்.

தற்போது அவர் பட்டம்பெற்ற கல்லூரியாக காத்தான்குடி ஜாமிஅதுல் பலாஹ் அரபுக் கல்லூரியில் சிரேஸ்ட விரிவுரையாளராகப் பணிபுரியும் இவர் சிறந்த எழுத்தாளரும் பேச்சாளருமாவார். ஆசிரியரின் பல்வேறு வகுப்புகள், பயான்கள் மற்றும் ஜும்ஆ பேரூரைகள் நமது இஸ்லாம்கல்வி இணையதளத்தில் உள்ளது. இவரது இஸ்லாமிய தஃவாப் பணிகள் மென்மேலும் தொடர வேண்டும் என மனதார வாழ்த்தி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றோம். ஆமீன்.

இஸ்லாம்கல்வி இணையதள வாசகர்கள் பயன் பெரும் வகையில் ஜலீல் மதனி அவா்களின் ”மரணமும் ஜனாஸா சட்டங்களும்” என்ற இந்த புத்தகத்தை மின்னனு வடிவில் இங்கு பதிவிடப்படுகின்றது. (பதிப்புரிமை ஆசிரியருக்கு)

—இஸ்லாம்கல்வி—

ஆசிரியருரை

இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் அவன் விரும்பியோ விரும்பாமலோ மரணத்தை அது நிச்சயிக்கப்பட்ட நேரத்தில் சந்தித்தே ஆகவேண்டும். படைத்த இறைவன் படைப்புக்களின் மீது விதித்த இம்மரணத்திலிருந்து யாரும் தப்பிக்க முடியாது. இவ்வுலக வாழ்வு ஒவ்வொரு மனிதனுக்கும் பரீட்சை மண்டபமாகும். இவ்வுலகில் அவன் செய்யும் நல்லமல்களே அப்பரீட்சையில் அவன் எழுதும் பதில்களாகும். அதை நபியின் வழி காட்டலுக்கமைய செய்திருந்தால் அவை சரியானவையாகக் கணிக்கப்பட்டு இறைதிருப்தியையும் சுவர்கத்தையும் பெற்றுத் தரும். தன் விருப்பப்படி தான்தோன்றித்தனதாக செய்திருந்தால் அல்லாஹ்வால் நிராகரிக்கப்பட்டு அம்மனிதன் கைசேதப்பட வேண்டி ஏற்படும். தீய வழியிலும் பாவச்செயல்களிலும் தனது காலத்தைக் கழித்திருப்பின் இறைவனின் கோபத்துக்கு இலக்காகி கொடிய நரக வேதனையை அனுபவிக்க வேண்டி ஏற்படும்.

மனிதன் வாழப்போவது அதிகபட்சம் அறுபதோ எழுவதோ ஆண்டுகள்தான். அதில் பாதி தூக்கத்திலும் அதிலும் பாதி சிறுபிராயத்திலும் கழிந்துவிட வெறும் பதினைந்து வருடங்களே பரீட்சைக்காலம். அதில் நபிவழிப்படி நடந்தவன் ஜெயம் பெறுகின்றான். இப்லீஸ் வழியில் கழித்தவன் நாசமாய்ப் போகின்றான். இதுதான் வாழ்வின் சாரம்.
இந்த தத்துவத்தை அல்லாஹ் அல்குர்ஆனில் தெட்டத் தெளிவாகவே எடுத்துரைக்கின்றான்.

‘அனைத்தின் ஆட்சி அதிகாரத்தையும் தன் கைவசம் வைத்திருப்பவன் எவனோ அந்த அல்லாஹ் உயர்வாகிவிட்டான். அவனே உங்களில் நல்லமல்கள் செய்வதில் சிறந்தவர் யாரென சோதிப்பதற்காக மரணத்தையும் வாழ்வையும் படைத்தான்.’ (சூரா முல்க் 1-2 வசனம்)

அனைத்து ஆன்மாக்களும் மரணத்தைச் சுவைத்தே ஆக வேண்டும். (இது இறை நியதி). எனவே யார் நரகிலிருந்து தூரமாக்கப்பட்டு சுவர்க்கத்துக் சென்றுவிடுகின்றாரோ அவரே நிச்சயமாக வெற்றிகெற்றுவிட்டார். இவ்வுலக வாழ்க்கை (மனிதனை) ஏமாற்றிவிடும் சாதனமேயன்றி வேறில்லை, ஆலஇம்ரான்.

நபியவர்கள் அடிக்கடி இவ்வாறு கூறுவார்கள்.. எனக்கும் இவ்வுலகிற்கும் என்ன சம்பந்தம்.? நான் இவ்வுலகில் பயணக்களைப்பினால் ஒரு மரத்தடியில் ஓய்வெடுக்கும் வழிப் போக்கனைப் போலாவேன். தன் களைப்புத் தீர்ந்ததும் அவ்விடத்தை விட்டுவிட்டு வழிப்போக்கன் செல்வதுபோல் நானும் இவ்வுலகை விட்டுச் சென்றுவிடுவேன். (ஸஹீஸூல் ஜாமிஉ:)

எனவே அனேக நண்பர்கள் ஜனாஸாவின் சட்டதிட்டங்களை ஸூன்னாவின் ஒளியில் திரட்டித் தருமாறு என்னைக் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்நூலை வாசகர்களான உங்களுக்காகத் தொகுத்துள்ளேன். இதன் நிறைகள் அல்லாஹ்வைச் சேரும். குறைகளுக்கு நானே பொறுப்பு. வாசகர்கள் இதிலிருந்து பயன்பெற வேண்டும என்பதே எனது எதிர்பார்ப்பு. அல்லாஹ் எம் அனைவருக்கும் அனைத்து விவகாரங்களிலும் ஸூன்னாவை முன்னிலைப்படுத்துவதற்கு அருள்பாலிப்பானாக. ஆமீன்.

மௌலவி AG முஹம்மத் ஜலீல் மதனி
காத்தான்குடி – இலங்கை

இந்நூலில் அடங்கியுள்ள தலைப்புகள்

  1. இமாம் அல்பானி (றஹ்) பற்றி சில வரிகள்
  2. மரணம் நெருஙகிவிட்டால்
  3. துல்கீனுல் முஹ்ளார்
  4. உயிர் பிரிந்ததும் செய்யவேண்டியவை
  5. உயிர் பிரிந்த பின் செய்ய வேண்டிய கடமைகள்
  6. மையித்தின் உறவினர் செய்ய வேண்டியவை
  7. உறவினர் செய்யக் கூடாதவை
  8. நல்ல மரணத்தின் அறிகுறிகள்
  9. மையித்தைக் குளிப்பாட்டும் முறை
  10. கபன் செய்தல்
  11. மையித்தை சுமந்து செல்லும் ஒழுங்குகள்
  12. ஜனாஸாத் தொழுகை பற்றிய சட்டங்கள்
  13. ஜனாஸாத் தொழுகை முறை
  14. நல்லடக்கம் செய்தல்
  15. அடக்கம் செய்து முடிந்ததும்
  16. தஃஸியத் இரங்கல் தெரிவித்தல்
  17. மரணத்தின் பின்னரும் நன்மை சேர்க்கும் காரியங்கள்
  18. கப்ரிகளைத் தரிசிக்கும் ஒழுங்குகள்
  19. மக்பராவில் செய்யக் கூடாதவை
  20. பித்அத்தின் சட்ட விதிமுறைகள்
  21. ஜனாஸா விடயத்தில் காணப்படும் பித்அத்துகள்
  22. இத்தா பற்றிய சில சட்டங்கள்
    முடிவுரை

முழுமையான மின்னனு நூலுக்கு இங்கே சொடுக்கவும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *