Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

சமைத்த இறைச்சி உணவை உண்டால்.. …

200- நபி (ஸல்) அவர்கள் (சமைக்கப்பட்ட) ஒரு ஆட்டின் தொடைப்பகுதி இறைச்சியைச் சாப்பிட்ட பின் உளூ செய்யாமலே தொழுதார்கள்.

புகாரி-207: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி)

201- நபி (ஸல்) அவர்கள் ஆட்டின் தொடை இறைச்சியை வெட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது தொழுகைக்காக அழைக்கப்பட்டது. உடனே கத்தியைப் போட்டு விட்டுத் தொழுதார்கள். உளூ செய்யவில்லை.

புகாரி-208: அம்ர் பின் உமய்யா (ரலி)

202- நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் ஆட்டுத் தொடை இறைச்சியைச் சாப்பிட்டார்கள். பின்னர் (அதற்காக) உளூ செய்யாமலே தொழுதார்கள்.

புகாரி-210: மைமூனா (ரலி)

203- நபி (ஸல்) அவர்கள் பால் குடித்ததால் வாய்கொப்பளித்து விட்டு, அதிலே கொழுப்பு இருக்கிறது என்று கூறினார்கள்.

புகாரி-211: இப்னு அப்பாஸ் (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *