Featured Posts
Home » நூல்கள் » அல்லுஃலுவு வல்மர்ஜான் » துன்பத்தில் ஓப்பாரி வைப்பதால்….

துன்பத்தில் ஓப்பாரி வைப்பதால்….

534.”ஓப்பாரி வைக்கப்படுவதால் கப்ரிலிருக்கும் மய்யித் வேதனை செய்யப்படுகிறது.”என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

புஹாரி: 1292 உமர் (ரலி)


535.உமர் (ரலி) மரணக் காயமுற்றிருந்தபோது ‘சகோதரரே!’ எனக் கூறியவராக ஸுஹைப் (ரலி) சப்தமிட்டு அழத் தொடங்கினார். அப்போது உமர் (ரலி) ‘உயிருடனிருப்பவர்கள் அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நீர் அறியவில்லையா?’ எனக் கேட்டார்.

புஹாரி:1290 அபூமூஸா (ரலி)
536.மக்காவில் உஸ்மான் (ரலி) அவர்களின் மகள் இறந்தபோது நாங்கள் (ஜனாஸாவில்) கலந்து கொள்வதற்காக அங்கு சென்றோம். அங்கு இப்னு உமர் (ரலி) இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் வந்திருந்தனர். நான் அவர்களிருவருக்கும் நடுவில் அல்லது ஒருவருக்கருகில் அமர்ந்தபோது மற்றொருவர் வந்து என்னருகில் அமர்ந்தார். அப்போது அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) உஸ்மான் (ரலி) உடைய மகன் அம்ர் (ரலி) அவர்களிடம் ‘நீ (சப்தமிட்டு) அழுவர்களைத் தடை செய்ய வேண்டாமா? ஏனெனில் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ‘குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது’ எனக் கூறினார்கள்” என்றார். உடனே இப்னு அப்பாஸ் (ரலி) உமர் (ரலி) இதே போன்ற சில ஹதீஸ்களைக் கூறிக் கொண்டிருந்தார். நான் உமர் (ரலி) அவர்களுடன் மக்காவிலிருந்து புறப்பட்டேன். நாங்கள் பைதா எனும் இடத்தை அடைந்தோம். அங்கு சமுரா என்னும் ஒரு(வகையான காட்டு) மரத்தின் நிழலில் ஒரு வாகனக் கூட்டம் நிற்பதைக் கண்டோம். ‘நீ சென்று அவ்வாகனக் கூட்டம் யாரெனப் பார்த்துவா!” என உமர் (ரலி) என்னை அனுப்பினார். நான் அங்கு சென்று பார்த்தபோது அங்கே ஸுஹைப் (ரலி) இருந்தார். அதை உமர் (ரலி) கூறினார். நான் ஸுஹைப் இடம் சென்று, ‘அமீருல் மூமீனின் அவர்களைச் சந்திக்கப் புறப்படு’ எனக் கூறினேன். பின்னர் சிறிது காலம் கழித்து உமர் (ரலி) அவர்களிடம் மரணக் காயமுற்றிருந்தபோது ‘சகோதரனே! நண்பனே!’ எனக் கூறி அழுதவராக ஸுஹைப் (ரலி) (வீட்டினுள்) நுழைந்தார். அப்போது உமர் (ரலி) ‘ஸுஹைபே! எனக்காகவா நீர் அழுகிறீர்? குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்களல்லவா?’ என்றார். உமர் (ரலி) இறந்தபோது (அவர்) இறப்பதற்கு முன் கூறிய செய்தியை ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி), ‘அல்லாஹ் உமருக்குக் கிருபை செய்வானாக! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் குடும்பத்தினர் அழுவதன் காரணமாக மூமினை அல்லாஹ் வேதனை செய்வான்’ எனக் கூறவில்லை: மாறாக ‘குடும்பத்தினர் சப்தமாக அழுவதன் காரணத்தினால் காஃபிருக்கு வேதனை அதிகமாக்கப்படும்” என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்” என்று கூறி, ‘ஓர் ஆத்மாவின் பாவச் சுமையை மற்றோர் ஆத்மா சுமக்காது” (திருக்குர்ஆன் 6:164) என்ற குர்ஆனின் வசனமே உங்களுக்கு (சான்றுரைக்கப்) போதுமே” என்றும் கூறினார்கள். இதைக்கூறி முடித்த பொழுது ‘சிரிக்கச் செய்பவனும் அழவைப்பவனும் அவனே” (திருக்குர்ஆன் 53:43) என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்.”அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இப்னு அப்பாஸ் (ரலி) உடைய இச்சொல்லைச் செவியுற்ற அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி) இதைப் பற்றி எந்த ஆட்சேபணையும் செய்யவில்லை” என்று இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி :1288 அப்துல்லாஹ்பின் உபைதுல்லாஹ் பின் அபீமுலைக்கா (ரலி)

537.”குடும்பத்தினர் (ஒப்பாரி வைத்து) அழுவதால் மண்ணறையில் (இருக்கும் அவர்களின் உறவினரான) இறந்தவர் வேதனை செய்யப்படுகிறார்” என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னதாக இப்னு உமர் (ரலி) கூறினார் என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது ஆயிஷா (ரலி), ‘(நபி (ஸல்) அவர்கள் அப்படிச் சொல்லவில்லை), ‘இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த) சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால் வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள்” என்று கூறினார்கள். இது எப்படியிருக்கிறதென்றால், ‘(குறைஷித் தலைவர்களான) இணைவைப்பவர்கள் பத்ரில் கொல்லப்பட்டு எறியப்பட்டிருந்த கிணற்றுக்கு அருகில் நின்று கொண்டு, அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் ஏதோ பேசினார்கள். (அப்போது நபி (ஸல்) அவர்களிடம், ‘உயிரற்ற சடலங்களிடமா பேசுகிறீர்கள்?’ என்று உமர் (ரலி) கேட்ட போது) ‘நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்ததாக இப்னு உமர் கூறியதைப் போன்றது தான் இதுவும். ஆனால், ‘நான் அவர்களுக்குச் சொல்லி வந்ததெல்லாம் உண்மையென்று இப்போது அறிந்தார்கள்” என்றே இறைத்தூதர் (ஸல்) அவர்கள். (இப்போது நான் கூறுவதை அவர்கள் செவியேற்கிறார்கள்” என்று நபியவர்கள் சொல்லவில்லை.) பிறகு, (இறந்தவர்களை நாம் பேசுவதைச் செவியேற்பதில்லை என்ற தம் கருத்திற்குச் சான்றாக) ஆயிஷா (ரலி) (பின்வரும் வசனங்களை) ஓதினார்கள்: (நபியே!) இறந்தவர்களை உங்களால் கேட்கச் செய்ய முடியாது. (திருக்குர்ஆன் 27:80) (நபியே!) மண்ணறைகளில் இருப்பவர்களை உங்களால் செவியேற்கச் செய்யமுடியாது. (திருக்குர்ஆன் 35:22) ”நரகத்தில் அவர்கள் தங்களின் இருப்பிடங்களில் ஒதுங்கும்போது (இந்நிலை ஏற்படும்)” என ஆயிஷா (ரலி) (விளக்கம்) கூறினார்கள்.
புஹாரி:3978 3979 ஆயிஷா (ரலி)

538.”இப்பெண் இறந்ததற்காக இவர்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்; அவளோ கப்ரில் வேதனை செய்யப்படுகிறாள்” என்று யூதப் பெண்ணொருத்தி இறந்ததற்காக அவளுடைய குடும்பத்தார் அழுது கொண்டிருப்பதைப் பார்த்தபோது தான் நபி (ஸல்) கூறினார்கள். (இறை நம்பிக்கையாளர்களின் விஷயத்தில் கூறவில்லை.)
புஹாரி :1289 ஆயிஷா (ரலி)

539.”; ஒப்பாரி வைக்கப்படுவதன் காரணமாக மய்யித் வேதனை செய்யப்படுகிறது.’என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
புஹாரி:1291 முகீரா (ரலி)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *