Featured Posts
Home » பொதுவானவை » ஜனாதிபதி அப்துல்கலாம் சவூதி மன்னராக முடியுமா?

ஜனாதிபதி அப்துல்கலாம் சவூதி மன்னராக முடியுமா?

இப்படி ஒரு கேள்வியை யாராவது உங்களிடம் கேட்டால், அவரைப் பற்றி என்ன நினைப்பீர்கள்? உலக நடப்போ அல்லது சவூதியில் மன்னராட்சி நடந்து கொண்டிருக்கிறது என்பதையோ அறியாதவர் என்றுதானே நினைக்கத் தோன்றும்! பாமரர் ஒருவர் கேட்டிருந்தால் பரவாயில்லை என அவரின் அறியாமையை மன்னிக்கலாம்; ஆனால் இஸ்லாத்தின் அடிப்படையை அசைத்துப் பார்க்கிறேன் பேர்வழி என்று மேலைநாட்டவரின் இஸ்லாமிய எதிர்ப்புப் பிரச்சாரங்களை தமிழில் மொழிபெயர்த்து, அரைகுறை ஞானியாக எழுதி வரும் நேசகுமார் கேட்டிருக்கிறார். இதே கேள்வியை “ஏமாறாதவன்” என்ற பதிவிலும் கேட்கப் பட்டிருக்கிறது.

இந்து மதத்துக்கு இலவச அழைப்பு விடுத்த எழில் என்பவரின் பதிவின் பின்னூட்டத்தில் “அரபிக்கள் எத்துனை பேர் இந்திய இஸ்லாமிய வேலையாட்களுக்கு தத்தமது பெண் மக்களை, சகோதரிகளை திருமணம் செய்து கொடுத்திருக்கிறார்கள்? என்றொரு கேள்வியைக் கேட்டேன் – எந்த இஸ்லாமியரும் இன்றுவரை பதிலளிக்கவில்லை. எனக்குத் தெரிந்து எத்தனையோ பிராம்மணரல்லாதோர் பிராம்மணப் பெண்களை மணந்திருக்கின்றனர். ஆனால், எத்தனை அரபியல்லாதோர் குவைத் அரபிப்பெண்களை மணந்திருக்கின்றனர்? இது ஒரு பிரச்சினை என்றால், இந்தப் பிரச்சினை இந்து மதத்தையும் விட தீவிரமாக இஸ்லாத்தில் இருக்கிறது .”

சவூதியில் நடைபெறுவது இஸ்லாமிய ஷரீஅத் அடிப்படையிலான ஆட்சி என்று சொல்லப் பட்டாலும் இஸ்லாத்தின் அரசியல் அடிப்படைக்கு முற்றிலும் எதிரான மன்னராட்சி என்பது அறிந்ததே. சவூதி அரேபியாவிலுள்ள குடிமக்களில் பெரும்பாலோர் சவூதி அல்லாத பிறநாடுகளிலிருந்து முன்பு குடியேறியவர்களே. சவூதி குடிமக்களில் பலர் இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேசங்களிலிருந்து கடந்த 20-30 வருடங்களுக்கு முன் குடியேறி, சவூதிப் பெண்களை மணந்து இன்றும் வாழ்ந்து வருகிறார்கள்.

சவூதிப் பெண்களை சவூதிக் குடியுரிமை பெறாதவர்கள் திருமணம் செய்வதை தடைசெய்யும் சட்டம் கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரசின் சிறப்பு ஆணையால் கட்டுப்படுத்தப் பட்டது. அரச குடும்பத்தில் சவூதி அல்லாதோர் ஊடுறுவி அவர்களின் குடும்ப ஆட்சிக்கு ஆபத்து வந்து விடக்கூடாது என்ற சுயநல அரசியல் காரணத்தால் இச்சட்டம் இயற்றப்பட்டது. சவூதி அரசின் இத்தகையக் கட்டுப்பாடு இஸ்லாத்தின் நெறிமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.

ஒரு அரபியல்லாதவரைவிட அரபி பேசுபவரோ அல்லது அரபியை விட அரபி மொழி அல்லாதவரோ உயர்ந்தவரல்லர்! மனிதர்கள் அனைவரும் ஆதம்-ஹவ்வா என்ற ஒரே தாய், தந்தையிலிருந்து வந்தவர்களே என்பதோடு திருமணம் எப்படி செய்யவேண்டும்? யாரைச் செய்ய வேண்டும்? கணவன்-மனைவியின் கடமைகளையும் உரிமைகளையும் நுணுக்கமாக விளக்கி இருக்கும் குர்ஆனில் சவூதிப் பெண்களை,சவூதி அல்லாதவர் திருமணம் செய்யக் கூடாது என்று எங்குமே கூறப்படவில்லை என்பதிலிருந்து சவூதிப் பெண்ணை சவூதி அல்லாதவர் திருமணம் செய்ய இடமுண்டு.

மலேசியா, குவைத் போன்ற இஸ்லாமிய நாடுகளில் அந்நாட்டுப்பெண்களை வெளிநாட்டவர் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டு திருமணம் செய்ய முடியும். குவைத் பெண்களில் பலர் அமெரிக்க கணவரைப் பெற்றிருப்பதாக பெருமையாகச் சொல்லிக் கொள்வர்! இதேபோல் சீனாவில் சீனர் அல்லாதவர் சீனப்பெண்களை திருமணம் செய்ய முடியாது என்ற சட்டம் நடைமுறையில் இருந்தது என்று நினைக்கிறேன். உலக நாடுகள் தங்களுக்கென அரசியல்/சிவில்/கிரிமினல் சட்ட திட்டங்களை வகுத்துக் கொண்டுள்ளன. ஒப்புக் கொள்ளப்பட்ட பொதுவான சர்வதேச சட்டங்கள் தவிர, அந்தந்த நாடுகளின் உள்நாட்டுச் சட்டங்களில் பிறநாடுகள் தலையிடுவதில்லை. அனைத்து நாடுகளும் ஒப்புக்கொண்ட விசயம் இது!

நம்நாட்டுக் கா

3 comments

  1. //சவூதிப் பெண்களை சவூதிக் குடியுரிமை பெறாதவர்கள் திருமணம் செய்வதை தடைசெய்யும் சட்டம் கடந்த 10-15 ஆண்டுகளுக்கு முன் சவூதி அரசின் சிறப்பு ஆணையால் கட்டுப்படுத்தப் பட்டது.//

    அருமை நல்லடியாரே, இதைப் பற்றி சகோதரர் அபூமுஹை தர்க்க ரீதியாக விளக்கியுள்ளார். நீங்கள் சட்டத்தை சொல்லி விளக்கியுள்ளீர்கள். தற்சமயம் சவூதி விதவைகளை வெளிநாட்டவர்கள் மணக்கலாம் என்று சட்டம் கொண்டு வர இருப்பதாக கேள்விப் பட்டேன். ஆதாரபூர்வமானதா என்று தெரியவில்லை. தெரிந்திருந்தால் அதையும் இங்கு குறிப்பிடலாம். இப்படிப்பட்ட விளக்கங்களால் நேசக்குமார் வகையறாக்கள் திருந்துகிறார்களோ இல்லையோ, ஆனால் சத்திய மார்க்கத்தை ஏற்று இருப்பவர்களுக்கு இது இன்னும் நம்பிக்கையை கூட்டும். வாழ்த்துக்கள் நல்லடியாரே உங்கள் பணி தொடர.

    ‘அறிவுடையோரைத் தவிர மற்றவர்கள் இதைக்கொண்டு நல்லுபதேசம் பெறமாட்டார்கள்.(3. ஸ_ரத்துல்ஆல இம்ரான்;(இம்ரானின் சந்ததிகள்):7)’

  2. Saudi Teacher Asks Expat to Marry Her
    Arab News

    TIAF, 19 February 2007 ? A Saudi female teacher asked her expatriate driver to marry her offering him a dowry of SR100,000. When the driver said he was unable to provide her with a high standard of living the teacher said she would purchase a restaurant for him in order to earn a secure income. The driver, who has been driving a number of teachers to school for the last five years, received the proposal one day while dropping the teacher off at home. The driver gladly accepted and the couple are soon to marry.

  3. மரைக்காயர்

    //நேசகுமார், ஏமாறாதவன் என்ற பெயர்களில் வசைபாடிவரும் நபர்களைப் பொறுத்தவரை, அவர்களின் மதத்தின் சிறப்புகளாகச் சொல்ல ஒன்றுமே இல்லை என்பது தெளிவாகிறது.//

    சரியா சொல்லியிருக்கீங்க நல்லடியார். நேசகுமார் மாதிரி ஆட்களோட யுக்தி இதுதான். தன்னோட மதத்தைப் பத்தி உயர்வா சொல்லிக்க ஒன்னுமேயில்லாததால மத்த மதங்களை தரக்குறைவா தாக்கி எல்லோருடைய கவனத்தையும் தன் மதத்தின் அவலங்களை விட்டும் திசை திருப்பும் முயற்சி இது. தன்னுடைய மதத்தைப் பத்தி முழுசா நம்பிக்கை இழந்துவிட்ட இவங்களைப் பார்த்தா பரிதாபமாத்தான் இருக்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *