Featured Posts
Home » பொதுவானவை » நீங்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா?

நீங்கள் சிறுபான்மையினரா அல்லது பெரும்பான்மையினரா?

மாயமில்லை! மந்திரமில்லை!! நீங்கள் 2% சிறுபான்மையினரில் ஒருவரா அல்லது 98% பெரும்பான்மையினரில் ஒருவரா என்று சோதிக்கும் எளிய கணக்கு! மின்மடலில் வந்தது. சற்று ஆச்சரியமானதும் கூட!! நீங்களும் முயன்று பாருங்களேன். அதற்குமுன், கேட்கப்படும் கேள்விகளுக்கு மட்டும் ஒவ்வொன்றாக பதில் சொல்லுங்கள். முதல் கேள்விக்கான பதில் சொல்லும்வரை அடுத்த கேள்விக்குச் செல்லக் கூடாது. விரைவாக பதில் சொன்னால் உங்கள் புருவங்கள் விரைவில் ஆச்சரியத்தால் உயரும் என்பதற்கு 100% உத்திரவாதம்!

அ) ஒன்று முதல் பத்துக்குள் ஒரு எண்ணை நினைத்துக் கொள்ளவும் (Think of a number from 1 to 10)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஆ) அந்த எண்ணை ஒன்பதால் பெருக்கிக் கொள்ளவும் (Multiply that number by 9)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

இ) விடை இரட்டைப்படை எண்ணாக இருந்தால், இரண்டு எண்களையும் கூட்டவும். (If the number is a 2-digit number, add the digits gather)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஈ) கூட்டுத் தொகையிலிருந்து ஐந்தைக் கழிக்கவும் (Now subtract 5)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

உ) வரும் எண்ணிற்கு இணையான ஆங்கில அகரவரிசை எழுத்தைக் கண்டுபிடிக்கவும். உதாரணமாக 1=a,2=b,c=3,d=4,e=5…) (Determine which letter in the alphabet corresponds to the number you ended up with (example: 1=a, 2=b, 3=c,etc.)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஊ) அந்த ஆங்கில எழுத்தில் தொடங்கும் நாட்டின் பெயரை நினைக்கவும். (Think of a country that starts with that letter.)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

எ) அந்நாட்டுப் பெயரின் கடைசி ஆங்கில எழுத்தை நினைவில் கொள்க! (Remember the last letter of the name of that country.)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஏ) அக்கடைசி எழுத்தில் தொடங்கும் விலங்கின் ஆங்கிலப் பெயரைக் கண்டுபிடிக்கவும் (Think of the name of an animal that starts with that letter.)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஐ) அவ்விலங்குப் பெயரின் கடைசி ஆங்கில எழுத்தை நினைவில் கொள்க! (Remember the last letter in the name of that animal.)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஒ) அக்கடைசி எழுத்தில் தொடங்கும் ஏதேனும் ஒரு பழத்தின் ஆங்கிலப் பெயரை நினைவில் கொள்க!! (Think of the name ! of a fruit that starts with that letter.)

.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
..
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.

ஓ) டென்மார்க் நாட்டில் கங்காரு ஆரஞ்சுப் பழத்தைச் சாப்பிட்டதா? (Are you thinking of a Kangaroo in Denmark eating an Orange?)

விசித்திரமான கணக்குதானே! உங்கள்விடை டென்மார்க்+ கங்காரு+ ஆரஞ்ச் இல்லையெனில் நீங்கள் சிறுபான்மையினர். ஆம்! மற்றவர்களைவிட வித்தியாசமாகச் சிந்திக்கும் 2% மக்களில் நீங்களும் ஒருவர்! 98% மக்களிடம் இக்கணக்கிற்கு மேற்கண்ட விடையே பெறப்பட்டது! புருவத்தை கீழிறக்கி விட்டு, மீண்டும் முயற்சித்துப் பாருங்களேன்! :-)

3 comments

  1. க்ருபா

    ஆஹா, ப்ரமாதம்.

    நான் Dutch நினைக்கலாம் என்று நினைத்து பிறகு ஐயுற்று Denmarkஐயே தேர்ந்தெடுத்துவிட்டேன்.

    பணியகத்தில் என் நண்பன் ஒருவனும் இவ்வாறே கூறினான்.

    ஆமாம், நேரடியாக Dயில் ஆரம்பிக்கும் ஒரு நாட்டை நினைக்கச்சொல்லி இருந்தால் வித்யாசமாகத் தோன்றியிருக்குமோ என்னவோ. எப்படியும் 9ஐ எந்த எண்ணால் பெருக்கினாலும் digit கூட்டுத்தொகை 9 தானே வரும்…. அப்புறம் ஐந்து கழித்தால் எப்படியும் நான்குதான்.

    நன்றாக இருக்கிறது. இன்னும் ஏதேனும் இதுபோல் இருந்தால் (யோசிக்க வைக்கும் புதிர்களாக இல்லாமல் அதிசயிக்க வைக்கும் புதிர்களாக) போடுங்கள், எனக்கும் நன்கு பொழுது போகும். போகிற வழிக்கும் புண்ணியமாகப் போகும். :-)

  2. நல்லடியார்

    //நன்றாக இருக்கிறது. இன்னும் ஏதேனும் இதுபோல் இருந்தால் (யோசிக்க வைக்கும் புதிர்களாக இல்லாமல் அதிசயிக்க வைக்கும் புதிர்களாக) போடுங்கள், எனக்கும் நன்கு பொழுது போகும். போகிற வழிக்கும் புண்ணியமாகப் போகும். :-) //

    க்ருபா,

    மதம் சம்பந்தப்பட்ட என் எதிவினைகளில் வரிந்து கட்டிக் கொண்டு வரும் அன்பர்கள் இதுபோன்ற பொதுவானப் பதிவுகளில் ஏனோ ஆர்வம் காட்டுவதில்லை! நானும் இதுபோன்று பொழுதுபோக்காக எழுத வேண்டும் என்று நினைத்து அடக்கிவாசிக்கும் போதெல்லாம் புதிய புதிய பெயர்களில் வந்து இஸ்லாத்தைப் பற்றி ஏற்கனவே ‘ஆரோக்கியம்’ இன்றி ‘நேசகமுடன்’ வாந்தி எடுத்தவர்கள் பழைய கள்ளை புது மொந்தையில் கொடுக்க முயலும்போது நாமும் ஏன் அவர்கள் சார்ந்த மதநம்பிக்கைகளை அவர்கள் பாணியில் விமர்சிக்கக் கூடாது என்ற கேள்வி எழுகிறது! யார் செய்த புண்ணியமோ, “அல்லாஹ் அல்லாத பிற தெய்வங்களைத் திட்டாதீர்கள்; ஏனென்றால் அறியாமல் அவர்கள் உங்கள் அல்லாஹ்வை திட்டுவார்கள்” என்ற குர்ஆன் வசனம் அடிக்கடி நினைவில் வருகிறது.

    எடுத்ததெற்கெல்லாம் குர்ஆனைக் குறை சொல்லும் இணைய பரிவாரங்கள், இதுபோன்ற சமய நல்லிணக்க வரிகள் அவர்களின் வேதங்களில் உள்ளனவா என்று ஆய்வு செய்யட்டும்.

    வலைப்பூக்களில் சில பதிவர்களின் எழுத்துக்கள் வன்மையாக இருப்பதாலேயே அவர்கள் சார்ந்த கோட்பாடுகள் பற்றி அதே தொனியில் விமர்சிக்க வேண்டிய நிர்ப்பந்தம் எழுகிறது.

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

  3. I thought Deutcheland and Koala bear :)))

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *