Featured Posts
Home » பொதுவானவை » தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

தஞ்சை முஸ்லிம்களைக் குறிவைக்கும் சங்பரிவாரங்கள் (பகுதி 2)

“கலைகள் தந்த தஞ்சை, கவலைகள் தருகிறது” என்ற மலர்மன்னனின் அபத்தக் கட்டுரையில் முஸ்லிம்களின் வழிபாடுகளைக் குறித்த துவேசங்களுக்கான பதில் வினையை முதல் பகுதியில் விரிவாகப் பார்த்தோம். அதில் தஞ்சை முஸ்லிம்களுக்கு எதிராக எவ்வாறு வேண்டுமென்றே துவேஷக் கருத்துகள் இந்துத்துவ வாதிகளால் விதைக்கப்படுகின்றன எனக் கண்டோம். அடுத்து, தஞ்சை மாவட்ட முஸ்லிம்களின் வழிபாட்டுத் தலங்கள் மீதான காழ்ப்புக் கருத்துக்களைக் காண்போம். முதலில் அவர் வடிக்கும் முதலைக்கண்ணீர்.

“காவியச் சுவை மிக்க கம்ப ராமாயணத்தை இயற்றிய கவிஞர் கம்பரின் சொந்த ஊர்தான் தஞ்சை மாவட்டத்தில் உள்ள தேரெழுந்தூர். அங்கு கம்பர் வாழ்ந்திருந்ததாக நம்பப்படும் கம்பர் மேடு இன்று வெறும் குப்பை மேடாகக் கிடக்கிறது. அங்கு கம்பர் நினைவாகக் கட்டப்பட்ட மண்டபம் படுத்துத் தூங்குவோர் பயன்படுத்தும் இடமாக மாறிப் போனது. திருமங்கை ஆழ்வார் தனது சுவைமிக்கதமிழ்ப் பாசுரங்களால் மங்களா சாசனம் செய்த வைணவத் திருக்கோயில்களையும் பெற்றிருக்கும் பெருமை உள்ளதுதான் தேரெழுந்தூர். இவையாவும் இன்று சோபையிழந்து மங்கிக் கிடக்கின்றன.

அதே சமயம், அந்தச் சிற்றூரில் பிரமாண்டமாகப் பல மசூதிகள் வானளாவ எழும்பிநிற்கக் காண்கிறோம். கம்பர் நினைவு மண்டபத்தின் அருகிலேயே புதுக் கருக்கு அழியாத பள்ளிவாசலைக் காணலாம்! அரபு மொழி கற்பிக்கும் மதரசா ஒன்றும் தேரெழுந்தூரில் ஆலயங்களுக்கு அருகிலேயே நிறுவப்பட்டுள்ளது என்கிறார்கள். தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரியமான பண்பாட்டை இழந்து வருகிறது என்பதற்கு இதுபோல் பல ஆதாரங்களைக் காட்ட முடியும்”

கம்பரின் நினைவிடம் சிலருக்குத் தூங்கும் இடமாக ஆனதற்கு மட்டும் கவலைப்பட்டிருந்தால் ஓரளவு நியாயமிருக்கும். ஆனால், பள்ளிவாசல் கட்டப் பட்டதற்கும் சேர்த்து பிதற்றி இருப்பது, அவருக்கு கம்பரின் நினைவிடத்தின் மீதான அக்கரையை விட முஸ்லிம்களின் வழிபாட்டுத்தலங்கள் மீதான காழ்ப்புணர்வே மிகுந்துள்ளதை வெளிப்படுத்துகிறது.

பாப்ரி மஸ்ஜிதை வன்முறையாக இடித்துத் தரைமட்டமாக்கி ராமருக்கு கோவில் கட்டிக் கொண்டது போன்று, முஸ்லிம்கள் ஒன்றும் கம்பர் நினைவிடத்தை இடித்து பள்ளிவாசல் கட்டிக் கொள்ள வில்லையே! கம்பர் ‘பிறந்ததாக நம்பப்படும்’ ஊரிலுள்ள கட்டிடத்தை ஏற்றுக் கொண்ட மலர்மன்னனால், அவ்வூரிலேயே பிறந்து வளர்ந்து இன்றும் வாழ்ந்து வரும் முஸ்லிம்கள், அவர்களுக்குச் சொந்தமான நிலத்தில் ஒரு வழிபாட்டுக் கட்டிடத்தைக் கட்டிக் கொண்டால் ஏன் உறுத்துகிறது? தேரெழுந்தூரில் பிறந்த கம்பருக்குத் தேரெழுந்தூரிலேயே கட்டிடம் இருக்கும் போது, தேரெழுந்தூர் முஸ்லிம்கள் பாகிஸ்தானுக்குச் சென்றா பள்ளிவாசல் கட்டிக் கொள்வார்கள்?

தஞ்சை மாவட்டம் தனது பாரம்பரிய பண்பாட்டை இழந்து வருவதாக ஊளையிடும் மலர் மன்னன், தஞ்சையில் சோபையிழந்து புதற்காடுகளாகியுள்ள சைவக் கோவில்கள் பற்றிக் கவலைப்படாதது ஏன்?

தஞ்சை பெரிய கோவிலில் காலடியெடுத்து வைக்கும் ஆட்சியாளர்களின் பதவிக்கும் உயிருக்கும் ஆபத்து வரும் என்ற ஐதீகம் ஆயிரம் ஆண்டுகளாக நிலவுகிறதே, அது பற்றியும் கவலைப் பட்டிருக்கலாமே? கலியுகக் கோவில் காவலர்களாக அவதாரமெடுத்துள்ள அத்வானியையோ, வாஜ்பாயையோ ஒரேயொரு முறையேனும் தஞ்சைப் பெரிய கோவிலுக்கு அழைத்து முதல் மரியாதை செய்து அனுப்பி இருக்கலாமே?

சோழ மன்னர்களின் வாரிசுகளுக்குப் பூரணகும்ப முதல்மரியாதை செய்யப்பட்ட சிதம்பரம் நடராசர் கோவில், இன்று தீட்சிதர்களின் ஆதிக்கத்தால் தமிழில் ஆராதனை மறுக்க

2 comments

  1. மரைக்காயர்

    // கிட்டத்தட்ட ஒருமாதம் தாமதமாக தமிழ்சிஃபி.காம் நிர்வாகி திரு.அண்ணா கண்ணன் அவர்கள் மறுப்புரையை தொடராக வெளியிட சம்மதித்து மெயிலிட்டுள்ளார்//

    இவ்வளவு தயக்கமும் தாமதமும் இவர்கள் மறுப்புகளை எதிர் கொள்ள அஞ்சுகிறார்கள் என்பதைத் தான் காட்டுகிறது. திண்ணையில் கற்பக விநாயகம் என்ற அன்பர் தொடுத்த பதிலடிகளை தாங்க முடியாமல் ‘துண்டைக் காணோம் துணியைக் காணோம்’ என்று ஓடியவர்தான் இந்த மலர்மன்னன். இப்போதும்கூட மூப்பனார் பற்றி இவர் மனம்போன போக்கில் எழுதிய ஒரு கட்டுரைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.

    இணையத்தில் இவர் எழுதுவதெல்லாம் மறுக்கப் படுகின்றன. அவற்றை எதிர் கொள்ளும் நேர்மையும் இவரிடம் இல்லை. இப்போதே இப்படி என்றால், மறுப்புகளை வெளிப்படுத்த அதிகம் வாய்ப்பில்லாத காலத்தில் இவர் எழுதிய கட்டுரைகள் எந்த தரத்தில் இருந்திருக்கும்?

    நீங்கள் சத்தியமார்க்கம்.காம் தளத்திலேயே தொடர்வது சிறந்தது என்று நான் நினைக்கிறேன்.

  2. ஆழமான அலசல்.

    சங் பரிவாரங்களின் ஊதுகுழல் ம.ம.வின் புரட்டு வாதம் இனி எடுபடாது.

    வாழ்த்துகள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *