Featured Posts
Home » பொதுவானவை » பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!

பழமைவாத,ஆணாதிக்கத் திருவள்ளுவர் !?!

தமிழ்மணம் விவாதக்களத்தில் “பெண்கள் மூடிக் கொள்ள வேண்டுமா?” என்ற தலைப்பில் திரு .மா.சிவக்குமார் பர்தா பற்றிய விவாதத்தைத் தொடங்கிவைத்தார். ஆக்கபூர்வமான விவாதங்கள்,தனிமனிதத் தாக்குதல்கள் இல்லாத விவாதங்கள்தான் இந்தக் களத்தின் நோக்கம் என்றதால் , எனக்குத் தெரிந்த இஸ்லாம் பற்றிய தலைப்பூ என்பதாலும் சகபதிவர்களின் சந்தேகத்தை தெளிவுபடுத்த கிடைத்த வாய்ப்பாகவும் எண்ணி நானும் கருத்துப் பரிமாற்றமாக சில பின்னூட்டங்கள் இட்டேன்.

< ---கணினி யுகமாயிருந்தாலும் பர்தா ஒரு தடையல்ல!

பர்தாவை கட்டாயமாக்கியுள்ள இஸ்லாத்தையும் அதனுடன் தொடர்புடைய சவூதியை நாதாரி தேசம் என்றும், கருப்பு பர்தாவை அணியச் சொல்பவர்களை கருப்புத் துணியால் மூடி பாலைவனச் சுடுமணலில் நிற்க வைத்து தண்டிக்க வேண்டும் என்று டோண்டு ராகவன் தன் அவாவை வெளிப்படுத்தி இருந்தார்.

குர்ஆன், முஸ்லிம் பெண்கள் அந்நிய ஆண்களுடன் புழங்கும் போது மட்டும் உடல் அங்கங்கள் தெரியாதாவாறு உடலை மூடிக் கொள்ளச் சொல்லியுள்ளது.மார்க்கக் கட்டளை என்பது ஒருபுறம் இருக்க இதில் பாதுகாப்பும் கண்ணியமும் உள்ளது என்று நம்பும் பெண்கள் பர்தாவை தங்கள் விருப்பம்போல் அணிகிறார்கள். பர்தாவின் நிறம், துணியின் தன்மை பற்றி எந்த வரையரையும் இல்லை. பர்தாவின் நோக்கம் கைகள்,முகம்,குதிகால் தவிர்த்த உடல் அங்கங்களை மறைக்க வேண்டும் என்பதேயாகும்.

< ---முகத்தை மூடியபடி சாமிக்கு பால்குடம் தூக்கும் இவர்கள் முஸ்லிம் பெண்களல்ல!

பர்தா இஸ்லாத்தினால் முஸ்லிம்ளுக்கு மட்டும் வலியுறுத்தப்படுகிறது என்ற ஒரேகாரணத்திற்காக அதிலுள்ள நன்மைகள் புறந்தள்ளப்பட்டு ஆணாதிக்கத்தின் வெளிப்பாடு என்று விமர்சிக்கப் படுகிறது. பர்தாவை எதிர்ப்பவர்களில் 95% சதவீதம் முஸ்லிமல்லாத ஆண்களே எனும் போது, அவர்களின் விமர்சன நேர்மை பல்லிளிக்கிறது.கன்னிப் பெண்கள், பாதுகாப்பாக பாலியல் சுகம் காணலாம் என்று ‘லஜ்ஜையின்றி’ பதிவெழுதிய புரட்சிப் பதிவர்களும் பர்தாவை விமர்சனம் செய்துள்ளார்கள்.

டோண்டு ராகவன் அவர்களுக்கு பர்தா மீதான கோபத்திற்குக் காரணம் பெண்கள் கருப்புக் கலரில் பர்தா அணிவதுதானாம்! மஞ்சல் கலர் கயிற்றை தாலிக்கயிறு என்று இந்துப் பெண்களின் கழுத்தில் தொங்கவிட்டு “கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” எனச் கூறி, காலமெல்லாம் பெண்ணை அடிமையாக இருக்கச் சொல்கிறீர்களே. அவ்வாறு பெண்ணடிமைத் தனத்திற்கு மந்திரம் ஓதுபவரின் கழுத்தில் கனத்த தாம்புக்கயிற்றை கட்டித் தெருவழியே தரதரவென்று இழுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுக்கு நானும் கேட்டிருக்கலாம்.

இஸ்லாம் ஆணாதிக்க மார்க்கம் என்று குற்றம் சாட்டுவதற்கும் பெண்ணடிமைத் தனங்களில் இருந்து விடுபட வேண்டுமென்பதற்கும் இருக்கவே இருக்கிறது இவர்களது புரட்சிக் கண்டுபிடிப்பான‌ ‘பர்தா எதிர்ப்பு’.

< ---வெள்ளை நிற பர்தாவுடன் கிறிஸ்தவப் புனிதர், அன்னை தெரசா!

கிறிஸ்தவத்திலும் பர்தா கடைபிடிக்கப் பட்டுள்ளது என்பது விவிலியம் கூறும் வரலாறு. பெரும்பாலான முதலாளியத்துவ நாடுகளில் பெண்கள் சந்தைப் பொருளாக்கப்பட்டு விட்டதால் அத்தகைய நாகரிகங்களும் கட்டுப்பாடுகளும் மலையேறி மனோஇச்சைப்படி வாழ்ந்து கிருஸ்தவப் பெண்கள் பெயரளவில் கிறிஸ்தவர்களாக இருந்து வருகிறார்கள். முஸ்லிம்பெண்களும் அவ்வாறு மாறவேண்டுமாம்! இல்லாவிட்டால் அவ

15 comments

  1. அழகப்பன்

    //ஹூம்…”பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்” என்ற‌ தலைப்பில் கன்னட பிரசாத்தும் பிரேமானந்தாவும் கூட வலைப்பூவில் எழுத முடியும் காலம் இது !

    வேறென்ன சொல்ல? //

    நச்! வேறென்ன சொல்ல?

  2. மரைக்காயர்

    படித்ததில் பிடித்த பஞ்ச் டயலாக்குகள்!

    //கன்னிப் பெண்கள், பாதுகாப்பாக பாலியல் சுகம் காணலாம் என்று ‘லஜ்ஜையின்றி’ பதிவெழுதிய புரட்சிப் பதிவர்களும் பர்தாவை விமர்சனம் செய்துள்ளார்கள்.//

    //”கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” எனச் கூறி, காலமெல்லாம் பெண்ணை அடிமையாக இருக்கச் சொல்கிறீர்களே. அவ்வாறு பெண்ணடிமைத் தனத்திற்கு மந்திரம் ஓதுபவரின் கழுத்தில் கனத்த தாம்புக்கயிற்றை கட்டித் தெருவழியே தரதரவென்று இழுத்துச் செல்ல வேண்டும்//

    //மொகலாய மன்னன் அக்பருக்கு எண்ணற்ற ரஜபுத்திர வைப்பாட்டிகளை ஏற்பாடு செய்து அரசவையையும் படைத் தலைமையையும் ஆக்கிரமித்தவர்கள் இதுவும் சொல்வார்கள் இதற்கு மேலும் சொல்வார்கள்.//

    //”பெண்களே! கண்ணியமாக உடையணியுங்கள்” என்று குர்ஆன் சொன்னால் அது ஆணாதிக்கச் சிந்தனையாம்! இதையே திருவள்ளுவரும், மணிமேகலையும் சொன்னால் காவியமாம்!//

    //…”பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்” என்ற‌ தலைப்பில் கன்னட பிரசாத்தும் பிரேமானந்தாவும் கூட வலைப்பூவில் எழுத முடியும் காலம் இது !//

  3. dondu(#11168674346665545885)

    அன்பு நண்பர் நல்லடியார் அவர்களே,

    கருப்பு உடை என்பது சூரிய வெப்பத்தை முழுக்க உள்ளுறுஞ்சி கொள்ளும் என்று இயற்பியல் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவனே கூறி விடுவானே. அவ்வாறு பர்தா அணிய கட்டாயப்படுத்தும் ஆண்கள் ஒரு மணிநேரமாவது வெய்யிலில் நிற்க நேர்ந்தால்தான் நான் சொல்வது புரியும்.

    நான் எழுதியதை மதிப்புக்குரிய உங்கள் பெண் உறவினர்களிடமே காட்டி சரியா என்று கேளுங்கள். வெய்யிலில் கருப்பு உடை அணியும் கொடுமையைக் கூறுவார்கள் கதை கதையாக.

    அப்படிப்பட்ட உடையை, அதுவும் அந்த கருப்பு நிறத்தில் அணியுமாறு வற்புறுத்தும் அரசை நான் நாதாரி அரசு என்று குறிப்பிடுவதற்காக வருந்தவில்லை.

    அதே போல பர்தா அணியவில்லை என்றால் தண்டனை தரும் அளவுக்கு போகத்தான் வேண்டுமா?

    ஒரு நிமிடத்துக்கு இதை கேட்பது டோண்டு ராகவன் என்பதை மறந்து அதன் உள்ளடக்கத்தை மட்டும் பரிசீலனை செய்யுங்கள் என கேட்டு கொள்கிறேன்.

    //மஞ்சள் கலர் கயிற்றை தாலிக்கயிறு என்று இந்துப் பெண்களின் கழுத்தில் தொங்கவிட்டு “கல்லானாலும் கணவன்; புல்லானாலும் புருஷன்” எனச் கூறி, காலமெல்லாம் பெண்ணை அடிமையாக இருக்கச் சொல்கிறீர்களே. அவ்வாறு பெண்ணடிமைத் தனத்திற்கு மந்திரம் ஓதுபவரின் கழுத்தில் கனத்த தாம்புக்கயிற்றை கட்டித் தெருவழியே தரதரவென்று இழுத்துச் செல்ல வேண்டும் என்று பதிலுக்கு நானும் கேட்டிருக்கலாம்.//
    தாராளமாகக் கேட்கலாம், ஆனால் என்ன இக்காலப் பெண்களில் பலர் தாலி உறுத்துகிறது என்று கழற்றி ஆணியிலேயே அவ்வப்போது மாட்டியும் விடுகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் முகத்தில் ஆஃப்கானிஸ்தானில் செய்வது போல ஆசிட் எல்லாம் ஊற்ற மாட்டார்கள்.

    எனது பாயிண்ட்: தாலி இஷ்டமிருந்தால் அணியலாம், இல்லையென்றால் இல்லை. ஆனால் சவுதியிலோ ஆஃப்கானத்திலோ நிலைமை அவ்வாறா என்பதை மனதில் கை வைத்து கூறுங்கள்.

    ஆணாதிக்கம் எல்லா மதங்களிலும் உண்டு. ஆனால் என்ன, மற்ற மதங்களில் அவற்றுக்கு எதிர்ப்பு சம்பந்தப்பட்ட மதத்தை சேர்ந்தவர்களாலேயே வரும். அவ்வளவுதான் வேறுபாடு.

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  4. //ஹூம்…”பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்கள்” என்ற‌ தலைப்பில் கன்னட பிரசாத்தும் பிரேமானந்தாவும் கூட வலைப்பூவில் எழுத முடியும் காலம் இது!//

    எழுதிக் கொண்டு தான் இருக்கிறார்களே!

  5. நல்லடியார்

    அன்பு நண்பர் டோண்டு ராகவன் அவர்களே,

    //கருப்பு உடை என்பது சூரிய வெப்பத்தை முழுக்க உள்ளுறுஞ்சி கொள்ளும் என்று இயற்பியல் படிக்கும் பத்தாம் வகுப்பு மாணவனே கூறி விடுவானே.அவ்வாறு பர்தா அணிய கட்டாயப்படுத்தும் ஆண்கள் ஒரு மணிநேரமாவது வெய்யிலில் நிற்க நேர்ந்தால்தான் நான் சொல்வது புரியும்.//

    கருப்பு நிறத்தில்தான் பர்தா அணியவேண்டும் என்று யார் கட்டாயப்படுத்தினார்கள்? கீழக்கரை, காயல்பட்டினம் போன்ற ஊர்களில் அணிந்திருக்கும் சேலையையே பர்தாவாக அணிந்து வெளியில் நடமாடும் முஸ்லிம் பெண்கள் பற்றி அறிவீர்களா?

    நாகூர்,கூத்தாநல்லூர்,அதிராமபட்டினம் போன்ற ஊர்களில் வெள்ளை நிறத்தில் துப்பட்டி அணிகிறார்கள் என்பது தெரியுமா?

    குஜராத்திய போரி முஸ்லிம் பெண்கள் வண்ண வண்ண பர்தாக்களில் வலம் வருகிறார்கள் என்பது சென்னைவாசியான உங்களுக்கு நன்றாகத் தெரிந்திருக்கும்!

    ஈரான்,குவைத்,பஹ்ரைன்,யூஏஈ,ஓமான் போன்ற அரபுநாடுகளில் கோட்-சூட் அணிந்து வண்ணநிற ஸ்கார்ப் அணிந்துதான் பெரும்பாலான பெண்கள் உள்ளார்கள்.

    இப்படி பர்தா என்பது உடலை மறைக்க உதவும் ஆடையே தவிர நீங்கள் கற்பனை செய்து வைத்துள்ளது போன்று கருப்புத் நிற சாக்குத் துணியல்ல!

    முகத்தையும் மூடச்சொல்லும் மூடப்பழக்கத்தை எதிர்த்து குர்ஆன் சொன்ன பர்தா பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் முஸ்லிம்கள் பற்றியும் அறிவீர்களா?

    //நான் எழுதியதை மதிப்புக்குரிய உங்கள் பெண் உறவினர்களிடமே காட்டி சரியா என்று கேளுங்கள். வெய்யிலில் கருப்பு உடை அணியும் கொடுமையைக் கூறுவார்கள் கதை கதையாக.//

    பர்தா அணியச் சொல்லும் எங்களுக்கெல்லாம் தாய், மனைவி, சகோதரி என்று உறவினர்கள் இல்லை என்றா நினைக்கிறீர்கள்? வேண்டுமென்றால் உங்கள் வீட்டுப்பெண்களிடம் கேட்டுப்பாருங்கள் பர்தா கொடுமையாக இருக்கிறது என்று எந்த முஸ்லிம் பெண்ணாவது அவர்களிடம் சொல்லி இருக்கிறார்களா என்று. முடிந்தால் திருவல்லிக்கேணி பகுதியிலுள்ள பர்தா கடைகளில் கருப்பு பர்தா துணியை பற்றி அறிந்து கொண்டீர்கள் என்றால் பட்டுப்புடவை மடிசார் துணியைவிட மெனமையான துணி என்பது விளங்கும்.

    //அப்படிப்பட்ட உடையை, அதுவும் அந்த கருப்பு நிறத்தில் அணியுமாறு வற்புறுத்தும் அரசை நான் நாதாரி அரசு என்று குறிப்பிடுவதற்காக வருந்தவில்லை.//

    சவூதி அரசாட்சியை முன்மாதிர் அரசாங்கம் என்று யாரும் சொல்லவில்லையே! உண்மையைச் சொல்வதென்றால் சவூதியில் பணியாற்றியபோதுதான் நம் நாட்டின் மீதான பற்று அதிகரித்தது. சவூதி முத்தவாக்களில் கெடுபிடிகள், பணத்திற்காக சோரம் போகும் முத்தவாக்களும் இருக்கிறார்கள்.என்ன செய்வது சொந்தநாட்டில் வருமானம் ஈட்ட வழியில்லாமல் குறைந்த செலவில்,படிப்பறிவு இல்லாவிட்டாலும் கூட நியாயமான சம்பளம் தரும் நாடாக இருப்பதால் அவற்றைப் பொறுத்துக் கொண்டு காலம் தள்ளுகிறோம்.

    //அதே போல பர்தா அணியவில்லை என்றால் தண்டனை தரும் அளவுக்கு போகத்தான் வேண்டுமா?//

    இஸ்லாத்தைப் அரைகுறையாகப் புரிந்து சட்டங்களை துர்ப்பிரயோகம் செய்யும் மூடர்கள் அவர்கள்.முடிந்தால் அவ்வாறு ஆசிட் வீசுபவர்களின் முகத்தில் நாமும் ஆசிட் வீச வேண்டும் :-)

    //தாராளமாகக் கேட்கலாம், ஆனால் என்ன இக்காலப் பெண்களில் பலர் தாலி உறுத்துகிறது என்று கழற்றி ஆணியிலேயே அவ்வப்போது மாட்டியும் விடுகிறார்கள். ஆனால் அதற்காக அவர்கள் முகத்தில் ஆஃப்கானிஸ்தானில் செய்வது போல ஆசிட் எல்லாம் ஊற்ற மாட்டார்கள்.//

    தாலி உறுத்துகிறது அதனால் கழற்றி ஆணியில் மாட்டி விடுகிறார்கள். பர்தா உறுத்தவில்லையாதலாம் அணிந்து கொள்கிறார்கள்.பர்தா அணிந்த முஸ்லிம் பெண்களைப் பார்த்தால் சி

  6. நல்லடியார்

    //படித்ததில் பிடித்த பஞ்ச் டயலாக்குகள்!//

    மரைக்காயரே,

    எல்லாம் உங்கள் பதிவுகளை தொடர்ந்து படிப்பதால் ஏற்பட்ட மாற்றம்தான்.

    அழகப்பன் & ஜாஃபர் அலி வருகைக்கு நன்றி.

  7. நல்லடியார்

    //அழகப்பன் & ஜாஃபர் அலி வருகைக்கு நன்றி. //

    மறந்துவிட்டேன்.நண்பர் டோண்டுவுக்கு ஸ்பெஷல் நன்றி!

  8. உண்மைத் தமிழன்

    பர்தாவோ, தாலியோ – ஆக மொத்தம் பெண்களின் அடிமைத்தனத்திற்கு மூல காரணம் இந்த மத வேதங்கள்தான்.. அது எந்த மதமாக இருந்தாலும் சரி.. பெண்கள் விஷயத்தில் மட்டும் அனைவரும் ஒரே கருத்தைக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் அடங்கி வாழப் பிறந்தவர்கள் என்று.. பர்தா என்பதே ஒரு மதத்தின் குறியீடு என்பதாகப் போய்விட்டது. தாலி அப்படியில்லை.. கிறிஸ்துவ மதத்தில்கூட ஒரு பிரிவினர் தாலி கட்டிக் கொள்கின்றனர். சிலர் மோதிரம் மாற்றி செயின் போடுகிறார்கள். இந்துக்களிலும் சில ஜாதிகளில் தாலி இல்லாமல் செயின் போட்டுக் கொள்வார்கள்.. ஆனாலும் அனைத்து மதத்திலும் உள்ள ஒரே கோட்பாடு திருமணம் என்ற குறியீட்டை பெண்கள் மேல்தான் திணிக்கிறார்கள். ஆண்கள் திருமணமானவர்கள் என்பதைக் கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை.

    ஏன் பர்தா போடாமல் இருக்கலாம் என்று சொன்னால்தான் என்ன தவறு? ஒரு தனி மனுஷி மீது மதம் என்ற பெயரால் ஏன் ஒரு கட்டுப்பாட்டைத் திணிக்கிறீர்கள். இது ஒரு பெண்ணின் உரிமையில் கை வைப்பது போலாகாதா? முதலில் மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொடுக்கும் மதத்தைத் தேட வேண்டும்.. அதற்கு எங்கே செல்வது?

  9. நல்லடியார்

    //தாலி அப்படியில்லை.. கிறிஸ்துவ மதத்தில்கூட ஒரு பிரிவினர் தாலி கட்டிக் கொள்கின்றனர். சிலர் மோதிரம் மாற்றி செயின் போடுகிறார்கள். இந்துக்களிலும் சில ஜாதிகளில் தாலி இல்லாமல் செயின் போட்டுக் கொள்வார்கள்..//

    உண்மைத் தமிழன்,

    1) மஞ்சல் கயிரோ,தங்கச் சங்கிலியோ, மோதிரமோ எதுவாக இருந்தாலும்’மாங்கல்யம் தந்துனானே’ என்ற மந்திரம் ஓதிவிட்டால் போதும் மதரீதியில் பெண்களை சுமக்கச் சொல்கிறார்கள்; அதனை ஒருவன் கழுத்தில் கட்டிய பாவத்திற்காக அவன் எத்தகையவனாக இருந்தாலும் கணவனே கண்கண்ட தெய்வம்!? என்று காலமெல்லாம் சுமக்க வேண்டுமாம்! அவனையும் அவன் கட்டிய கயிற்றையும்!

    2) இஸ்லாத்தில் மனைவி என்பதற்காக மெட்டி,தாலி போன்ற அடிமைச் சின்னங்களை சுமக்க வேண்டியதில்லை! செவ்வாய் தோஷத்திற்காக முதிர் கன்னியாகவும், கணவன் இறந்தபின் சாகும்வரை விதவையாகவும் இருக்க வேண்டியதில்லை! சிதையில் எரியும் சடலத்தின் மீதமர்ந்துதான் சுவர்க்கம் செல்ல வேண்டுமென்ற சதிக்கும் இஸ்லாத்தில் இடமில்லை!

    3) இஸ்லாம் திருமணத்தை வாழ்க்கை ஒப்பந்தமாகச் சொல்லி ஆண்-பெண் உரிமைகளைக் காக்கிறது! வேண்டாத மனைவியை தலாக் சொல்ல, கணவன் மூன்று தவணைகள் காத்திருக்க வேண்டும்! ஆனால் வேண்டாத கணவனை விட்டு விலக் மனைவிக்கு ஒரே தலாக் (குழா) போதும்! இதுதான் இஸ்லாம் வழங்கும் பெண்ணுரிமை!

    //அனைத்து மதத்திலும் உள்ள ஒரே கோட்பாடு திருமணம் என்ற குறியீட்டை பெண்கள் மேல்தான் திணிக்கிறார்கள். ஆண்கள் திருமணமானவர்கள் என்பதைக் கண்டுபிடிக்க எந்த வழியும் இல்லை. ஏன் பர்தா போடாமல் இருக்கலாம் என்று சொன்னால்தான் என்ன தவறு? ஒரு தனி மனுஷி மீது மதம் என்ற பெயரால் ஏன் ஒரு கட்டுப்பாட்டைத் திணிக்கிறீர்கள். இது ஒரு பெண்ணின் உரிமையில் கை வைப்பது போலாகாதா? முதலில் மனிதர்களை மனிதர்களாக மதிக்கக் கற்றுக் கொடுக்கும் மதத்தைத் தேட வேண்டும்.. அதற்கு எங்கே செல்வது?//

    இலக்கியங்களில் பெண்களின் பருவங்களாக ஏழு நிலைகளைச் சொல்கிறார்கள். பேதை (5 முதல் 7 வயது வரை), பெதும்பை (8 முதல் 11 வயது வரை), மங்கை (12 முதல் 13 வயது வரை), மடந்தை (14 முதல் 19 வயது வரை), அரிவை (20 முதல் 25 வயது வரை), தெரிவை ( 26 முதல் 31 வயது வரை), பேரிளம் பெண் (32 முதல் 40 வயது வரை).

    பேதை, பெதும்பை நிலை கடந்து மங்கையானவுடன் அவளின் உடலியல் மாற்றங்களுக்கு ஏற்ப உடையும் மாறுகிறது. பேதை,பெதும்பை பருவங்களில் பாவடை, சட்டையுடன் ஓடியாடி வந்தவள் மங்கைப் பருவம் எய்தியபோது மாராப்பு அணிகிறாள். மாராப்பு அணிவதை உடலியல் மாற்றங்களுக்கு ஏற்ற உடை என்று பகுத்தறிவு ஒப்புக் கொள்வதால், யாரும் அடிமைத்தனம் என்று சொல்வதில்லை;பாழாய்ப்போன பகுத்தறிவுக்கு பர்தா மட்டுமே பெண்ணடிமைச் சின்னமாகத் தெரிகிறது.

    பர்தா அணியாத பெண்களெல்லாம் எல்லா உரிமைகளும் பெற்றுவிட்டார்கள் என்பதை இஸ்லாம் நம்பத் தயாரில்லை!

  10. நல்லடியார்

    சொம்பு ந..கி,

    தங்களின் பின்னூட்டம் இப்பதிவுக்கு பொருந்தவில்லை!

    //ஏன் தமிழையும் திராவிடர்களையும் முஸ்லிமையும் கிறித்துவர்களையும் திட்டிக் கொண்டு இருக்கிறீர்கள்? ஏன் இந்த முஸ்லிமோ போபியா//

    எனினும் உங்கள் பின்னூட்டத்திலிருந்த இந்தக்கேள்வி நியாயமானது! இதற்கு பதிலளிக்க வேண்டிய கடமை தங்களை அவ்வாறு காட்டிக் கொள்பவர்களுக்கு உண்டு!

    முழ்ப்பின்னூட்டத்தையும் அனுமதிக்க முடியாதமைக்கு மன்னிக்க.

  11. //”பெண்களே! கண்ணியமாக உடையணியுங்கள்” என்று குர்ஆன் சொன்னால் அது ஆணாதிக்கச் சிந்தனையாம்! இதையே திருவள்ளுவரும், மணிமேகலையும் சொன்னால் காவியமாம்!//
    super!

    எப்படியும் எதிர்த்தே தீரனும், எதிர்த்தே எழுதனும் என்று இருப்பவர்களுக்கு, நல்லடியாரின் நல்ல எழுத்துக்கள் என்ன எழுதினாலும், சொன்னாலும் புரியவா போகிறது. சரி, அடிக்க, அடிக்க அம்மியும் நகரும் என்ற பழமொழிப்போல் என்றாவது ஒரு நாள் உங்கள் கருத்துக்கும், இஸ்லாத்தின் கருத்துக்கும் மாற்றம் இல்லாமால் பெரியவர் டோண்டு ஐயா வரும் காலம் வெகு தூரத்தில் இல்லை என நினைக்கிறேன். இறைவனின் நாட்டமும் இருந்தால் மட்டுமே என்றும் கூறிக்கொள்கிறேன்.

    வாழ்த்துகள் சகோதரர் நல்லடியார் அவர்களுக்கு.

    அசலம் ஒன்

  12. சுல்தான்

    //தமிழ் சினிமாவில் தாலிசெண்டிமெண்ட் என்ற தனி கான்செப்டே இருக்கிறது//
    சினிமாவில் மட்டுமல்ல. தமிழகத்திலேயே பெருவாரியாக இப்படித்தான் இருக்கிறது.

    //தாலி உறுத்துகிறது என்று கழற்றி ஆணியிலேயே அவ்வப்போது மாட்டியும் விடுகிறார்கள்//
    உறுத்துகிறது என்பதற்காக அதை அணியாமலேயே இருந்து விட்டால் உங்கள் சமூகம் ஒப்புக் கொள்ளுமா?

    வயதுக்கேற்ப மற்றும் உடல் வளர்ச்சிக்கேற்ப பெண்களின் உடையில் அனைவருமே மாற்றத்தை ஏற்றுக் கொள்கின்றனர். அதுதான் சரியானது என்று அறிந்துமிருக்கின்றனர். இது ஆணும் பெண்ணும் சமானம் என்பதற்கு எதிரானதோ, பெண்ணடிமை பேணுவதோ இல்லை என்பதையும் அறிந்திருக்கின்றனர். இல்லையென்றால் ஒருவருடைய பதினைந்து வயது பையன் பெர்முடா மட்டும் போட்டு வீட்டிலிருந்தால் அனுமதிக்கும் பெற்றோர் அதே வயதுடைய பெண்ணை வீட்டினுள் கூடவெறும் பெர்முடா மட்டும் அணிந்து அனுமதிப்பதில்லை.

    இஸ்லாம் ஏன் வெளியில் செல்லும் பெண்கள் மற்ற ஆண்களின் கண்ணை உறுத்தாத கண்ணியமான உடை அணிய போதிக்கிறது என்பதை அறியும் நோக்கமில்லை. முஸ்லீம் என்றாலே எதிர்க்க வேண்டும் என்ற குரூர சிந்தனையின் வெளிப்பாடு இது. இல்லையென்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ள எல்லா பர்தா அணியும் மக்களையும் அவர்கள் கண்டித்திருக்க வேண்டும்.

    நன்றி நல்லடியார். நல்ல தேடல் சிறந்த முயற்சி.

  13. நல்லடியார்

    சகோ.அசலம் ஒன் & சுல்தான்,

    அடிக்கடி வாருங்கள். உங்களின் வாசிப்பும், தொடர் ஊக்குவிப்பும் உற்சாகம் தருகிறது. கருத்துக்களுக்கு நன்றி!

  14. //ஆணாதிக்கம் என்று நீங்கள் கருதுவது முஸ்லிம்களைப் பொருத்தவரையில் ஆணாதிக்கமல்ல.செவ்வாய்தோஷம் என்று புராணக்காரணம் சொல்லி பெண்ணின் திருமணத்தை தள்ளிப் போடுதல்,விதவை மறுமனத்திற்கு எதிர்ப்பு,வரதட்சினை இவைதான் ஆணாதிக்கம்! இதை எதிர்ப்பதில் முஸ்லிம்கள் யாருக்கும் சளைத்தவர்கள் அல்ல!
    //

    அருமையான பதில். அனைவரையும் சிந்திக்க வைக்கும்.

    அன்புடன் தமிழ்

  15. Raveendran Chinnasamy

    Nice article .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *