Featured Posts
Home » பொதுவானவை » "ஹலோ மிஸ்டர் NRI"

"ஹலோ மிஸ்டர் NRI"

அமெரிக்கா, கனடா உள்ளிட்ட நாடுகளுக்கான தொலைபேசிக் கட்டணத்தை தனியார் தொலைபேசி நிறுவனங்கள் கணிசமாக குறைத்துள்ளன.இதையடுத்து பி.எஸ்.என்.எல். நிறுவனமும் இந்த நாடுகளுக்கான கட்டணத்தை வெகுவாகக் குறைத்துள்ளது.

தனியார் நிறுவனங்களை விட பிஎஸ்என்எல் நிறுவனத்தின் கட்டணம் குறைவாக மாறியுள்ளது. புதிய விகிதப்படி, அமெரிக்காவிற்கு பேச நிமிடத்திற்கு ரூ.1.75 எனவும், வளைகுடா நாடுகளுக்கு பேச ரூ.6.75 என்றும் நிர்ணயிக்கப் பட்டுள்ளது. இது தனியார் நிறுவனங்களை விட நிமிடத்திற்கு 25 பைசா குறைவு என்பது குறிப்பிடத்தக்கது.

வளைகுடாவில் பணியாற்றும் இந்தியர்கள், அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் சேவகம் செய்யும் இந்தியர்களைவிட குறைவான சம்பளத்தில் வாழ்கிறார்கள். வாயையும் வயிற்றையும் கட்டி கடின உழைப்பில் சம்பாதித்ததில் பெரும் செலவாக தாய் நாட்டிலிருப்பவர்களுடன் தொடர்புகொள்ள ஆகும் போன் செலவே உள்ளது.

நம் நாட்டிலிருந்து சர்வதேச போன் அழைப்புகளுக்கான கட்டணத்தைக் குறைக்கும் மத்திய அரசு வளைகுடா நாடுகளுக்கு ஒரு அளவீடும், அமெரிக்காவுக்கு இன்னொரு அளவீடும் வைத்திருப்பது வளைகுடா இந்தியர்களை மாற்றான் தாய் மனப்பான்மையுடன் அணுகுவதையே காட்டுகிறது. இரட்டைக்குடியுரிமைக் கொள்கையிலும் நமது மத்திய அரசு இரட்டை நிலைப்பாட்டில் உள்ளது. காங்கிரஸ் அரசாக இருந்தாலும் பா.ஜ.க அரசாக இருந்தாலும் இதே நிலைப்பாடே தொடர்கிறது.

இணையமும் தொழில்நுட்பமும் முன்னேறிய பிறகுதான் இந்தியர்களின் மண்டைச் சரக்கை அமெரிக்க ஐரோப்பிய தேசங்கள் உணர்ந்து கொண்டன. ஆனால் அதற்கு முன்பே நம்மவர்களை அரவணைத்து நம்நாட்டின் அந்நியச் செலவாணி இருப்பை அதிகரிக்க வளைகுடா நாடுகள் உதவியதை வெளிப்படியாகச் சொன்னால் சிலருக்கு பொத்துக் கொண்டு வரும். கோபம்!

இது ஒருபக்கமிருக்க, வெளிநாட்டு இந்தியர்களுக்கு நமது அரசுகள் வைத்திருக்கும் அளவீடு என்ன? ஏனிந்த பாரபட்சம்? விளக்குவார்களா? அமெரிக்க அடிவருடிகளும் ஆட்சியாளர்களும்!!!

10 comments

  1. வளைகுடா-அமெரிக்கா கட்டண ஏற்றத் தாழ்வு சாட்டிலைட் சம்பந்தப் பட்டது என்று பேசிக் கொள்கிறார்கள்.

  2. nalladiyar sir, in office comp, i dont hv unicode enabled. still i cud read ur blog. and some other blogs too. but not many. Can u pls tell me whatz the change needed for that?

    now coming to the post. there is a reason behind this tarrif.

    when a telecom company wants connections with other country…or telecom company with other country, the tarrif is fixed with them. if bsnl wants to connect to saudi telcom, saudi charges bsnl with a tarrif. based on this tarrif, bsnl decides the charges to customers. if the foreign company charges more, bsnl or any other telecom company will also charge more. by considering the amount of traffic, america, UK, singapore, malaysia kind of countries reduced the tarrif to india. but thatz not the case with gulf country telecom companies, I heard. Not only this…calling India from Saudi is cheaper than calling Nepal.

    some private companies in india use illegal ways for connectivity and charges less….some years back reliance was fine heavily for that. this illegal connection happens from other countries also.

  3. Assalamu Alaikum Wa rahmathullahi wa barakaathu hu.

    Dear Brother,
    The reason behind, they (both end telecom authorities) says both countries should agree with common points ex: tariffs and they should agree in sharing the call charges in both ends (allowing calls thru network and dialing calls from network) this can be on both sides.

    I got this from the authorities in almost all sides, can anyone knows better pls. give or proves that this is wrong, let me apologise and withdraw my statment.

  4. நல்லடியார்

    //வளைகுடா-அமெரிக்கா கட்டண ஏற்றத் தாழ்வு சாட்டிலைட் சம்பந்தப் பட்டது என்று பேசிக் கொள்கிறார்கள்.//

    அழகு,

    நம் நாட்டிலிருந்து அழைக்கப்படும் அழைப்புகளை வெளிநாட்டு தொலைபேசி சேவையாளர் வழங்குவதற்கு கட்டணமாக நமது தொலைபேசித் துறையிடமிருந்து பெறுகிறது. அதேபோல் அங்கிருந்து நம்நாட்டிற்கு வரும் அழைப்புகளுக்கு குறிப்பிட்ட தொகையை கட்டணமாக வழங்குகிறது என்று நண்பரொருவர் சொல்லக் கேட்டிருக்கிறேன். எந்தளவு சரியானத் தகவல் என்று தெரியவில்லை.

    நண்பர் G.ராகவன் மற்றும் Mohamed சொல்லியுள்ள கருத்துக்கள் அனேகமாக சரியென்று நினைக்கிறேன்.

  5. நல்லடியார்

    G.ராகவன்,

    தொலைபேசித் துறையில் பணியாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன். தகவலுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி.

    //nalladiyar sir, in office comp, i dont hv unicode enabled. still i cud read ur blog. and some other blogs too. but not many. Can u pls tell me whatz the change needed for that?//

    ஒரு சில பதிவுகளைப் படிக்க முடிகிறது என்று சொல்லியுள்ளீர்கள். ஆரம்பத்தில் எனது பதிவின் வார்ப்புருவில் (Template) இத்தகைய குறைபாடு இருந்தது. என் நண்பனின் மகன் சில மாற்றங்களைச் செய்து தந்து உதவினார். முடிந்தால் அவனிடம் கேட்டுச் சொல்கிறேன்.

  6. நல்லடியார்

    //Assalamu Alaikum Wa rahmathullahi wa barakaathu hu.//

    வ அலைக்கும் ஸலாம் வபரக்காத்துஹு.

    Mohamed,

    தங்களின் கருத்தும் நண்பர் G.ராகவன் கருத்தும் ஏறத்தாழ ஒரே மாதிரியுள்ளன.நீங்களும் அதே துறையோ?

  7. என் நண்பனின் மகன் சில மாற்றங்களைச் செய்து தந்து உதவினார்.

    ம்ம்ம், உங்கள் வயதை ஒரு மாதிரி குத்துமதிப்பாக அறிய ஒரு அரிய வாய்ப்பு. சரி சரி. உங்கள் வயதெல்லாம் எனக்கெதற்கு. உங்கள் நன்பரின் மகன் வயதையும், உங்கள் நண்பருக்கும் உங்களுக்கு எவ்வளவு வயது வித்யாசம் என்றும் மட்டும் சொல்லுங்கள், போதும்.

    (என்னங்க பண்றது, நேரம் சரியில்லாட்டி இப்படித்தான் கை தானா எதையாவது டைப் அடிக்கும்).

  8. // நல்லடியார் said…
    G.ராகவன்,

    தொலைபேசித் துறையில் பணியாற்றுகிறீர்கள் என்று நினைக்கிறேன். தகவலுக்கும் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கும் மிக்க நன்றி. //

    நல்லடியார் சார், நான் கணிணித்துறையில் இருக்கிறேன். ஆனால் கணிணியில் முதலில் தொலைத்தொடர்பு தொடர்பான மென்பொருளில் பணியாற்றினேன். ஆனால் அதனால்தான் எனக்கு இது தெரிந்ததா என்று உறுதியாகச் சொல்லத் தெரியவில்லை.

    ////nalladiyar sir, in office comp, i dont hv unicode enabled. still i cud read ur blog. and some other blogs too. but not many. Can u pls tell me whatz the change needed for that?//

    ஒரு சில பதிவுகளைப் படிக்க முடிகிறது என்று சொல்லியுள்ளீர்கள். ஆரம்பத்தில் எனது பதிவின் வார்ப்புருவில் (Template) இத்தகைய குறைபாடு இருந்தது. என் நண்பனின் மகன் சில மாற்றங்களைச் செய்து தந்து உதவினார். முடிந்தால் அவனிடம் கேட்டுச் சொல்கிறேன். //

    கண்டிப்பாக. கேட்டுச் சொல்லுங்கள் சார். காத்திருக்கிறேன். மிக்க நன்றி.

  9. நல்லடியார்

    க்ருபாஷங்கர்,

    //(என்னங்க பண்றது, நேரம் சரியில்லாட்டி இப்படித்தான் கை தானா எதையாவது டைப் அடிக்கும்).//

    6/12/2007 10:58 PM

    எனக்கு ஜோதிடம் தெரியாது. எதற்கும் http://www.panchangam.com/panchangam.asp போய் பாருங்கள்.

    (என்னங்க பண்றது,நேரம் சரியில்லாட்டி இப்படித்தான் கை தானா எதையாவது டைப் அடிக்கும்).

  10. நல்லடியார்

    //கண்டிப்பாக. கேட்டுச் சொல்லுங்கள் சார். காத்திருக்கிறேன். மிக்க நன்றி//

    ஜிரா,

    கண்டிப்பாக! :-)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *