Featured Posts
Home » பொதுவானவை » கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

கோவை குண்டு வெடிப்புகளில் குற்றம் சாட்டப்பட்டு அநியாயமாக சிறையில் அடைக்கப் பட்டவர்களைப் பற்றியும், நீதிமன்றத் தீர்ப்புக்கு முன்னரே அவர்களைக் குற்றவாளியாக்கிய ஊடகங்கள், காவல்துறையினர் பற்றியும் திண்ணையில் எழுதியது.

நன்றியுடன் மீள்பிரசுரம் செய்கிறேன்.
=======================
கோவை குண்டுவெடிப்பு வழக்குத் தீர்ப்புகள் – நீதிக்குக் கிடைத்த வெற்றியா?

“நூறு குற்றவாளிகள் தப்பித்தாலும், ஒரு நிரபராதி தண்டிக்கப்பட்டு விடக் கூடாது” என்பது நமது நீதிமுறையின் தாரக மந்திரம்! கோவை குண்டு வெடிப்பு வழக்குகளின் தீர்ப்புகள் கடந்த ஆகஸ்ட் -1ஆம் தேதி முதல், தவணை முறையில் வெளிவரத் தொடங்கியுள்ளன.

கோவை போக்குவரத்துக் காவலர் செல்வராஜை முஸ்லிம் பெயர்தாங்கிகள் சிலர் அடவாடியாகக் கொலை செய்தனர். இதில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் கண்டிப்பாக தண்டிக்கப்பட வேண்டியவர்களே ! சககாவலர் கொல்லப் பட்டதற்காகக் கோவை நகர காவல் (காக்கிப்) படையும் காவிப்படையும் கைகோர்த்து கோவை முஸ்லிம்கள்மீது கொலைவெறியாட்டம் போட்டனர் .

மீரட், பாகல்பூர் என வடமாநிலங்களில் மட்டுமே அறிந்திருந்த முஸ்லிம் இனச்சுத்திகரிப்பை அமைதிப் பூங்காவான தமிழகம் கண்டு அதிர்ச்சியில் உறைந்த நிகழ்வு அது ! குஜராத் இனச்சுத்திகரிப்புகளுக்கு முன்னோட்டமாக, காவலர் செல்வராஜ் கொலையில் எவ்விதத்திலும் சம்பந்தப்படாத அப்பாவி முஸ்லிம்களுக்கு எதிராகக் காக்கி மற்றும் காவிப்படைகளால் நடத்தப்பட்ட வன்முறைகளுக்குப் பழிவாங்கும் விதமாகவே கோவை குண்டு வெடிப்புகள் நடந்ததாகச் சொல்லப்படுகிறது .

போர்க்களத்தில்கூட, “போரில் ஈடுபடாத முதியவர்கள் , பெண்கள், குழந்தைகள் மற்றும் மதகுருமார்கள் ஆகியோர் எக்காரணம் கொண்டும் தாக்கப்படக்கூடாது” என்று உலகிற்கே முன் மாதிரியான போர் தர்மங்களை வகுத்து , எதிரிகளைச் சார்ந்தவர்களாக இருந்தபோதிலும் அப்பாவிகள் எக்காரணம் கொண்டும் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதைச் சொன்ன மார்க்கம்தான் இஸ்லாம்! ஆக, முஸ்லிம்களுக்கு எதிரானத் தாக்குதல்களுக்கு எதிர்வினையாகச் சொல்லப்படும் கோவை குண்டு வெடிப்புகள் இஸ்லாத்தின் பார்வையில் வரம்பு மீறியச் செயலே; “வரம்பு மீறுபவர்களுடன் அதே அளவேயன்றிக் கூடுதலாக வரம்பு மீறாதீர்கள்” என்கிறது திருக்குர்ஆன்.

இவ்வழக்கில் செய்யாத குற்றத்திற்காகக் கடந்த ஒன்பது வருடங்களாகச் சிறையில் அடைக்கப்பட்டு, சாதாரணக் குடிமகனுக்குரிய அடிப்படை உரிமைகளும் மனிதாபிமான உதவிகளும் கூட மறுக்கப்பட்டு , ஏறத்தாழ மரணத்தின் விளிம்பிலிருந்து மீண்டுள்ளார் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியைச் சார்ந்த அப்துல் நாசர் மஹ்தனி. அவருடன் விடுதலையான பலருக்கும் கிட்டத்தட்ட அதே நிலைதான் .

மஹ்தனிக்கு மனிதாபிமான மருத்துவ உதவிகள் செய்ய தமிழக அரசுக்கு ஆட்சேபனையில்லை என்று தனது அதிகாரத்திற்குட்பட்டுச் செயல்பட்ட முன்னாள் உள்துறைச் செயலாளர் முனீர் ஹோதா, அன்றைய அதிமுக அரசினால் பதவி நீக்கம் செய்யப்பட்டார் .

மஹ்தனி – ஓர் அரசியல் கட்சியின் தலைவர் என்ற முறையில், கேரளா மற்றும் தமிழகத்தில் அவருக்காகச் சில இயக்கங்கள் முன்னின்று வாதாடின. முனீர்ஹோதா , அரசு அலுவலர் தீர்ப்பாயம் மூலமாகத் தனது தரப்பைச் சொல்லி, முந்தைய அதிமுக அரசின் அடாவடித்தனத்தால் இழந்த பதவியை, சட்டரீதியில் திரும்பப் பெற்று , தற்போது ஆளும் தி.மு.க அரசில் முக்கியப் பொறுப்பில் உள்ளார். அரசியல் செல்வாக்கு இருந்தால் மட்டுமே தங்கள் மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து சட்டரீதியில் விடுவித்துக் கொள்ளலாம் என்ற நிலையில்தான் நம்ம

4 comments

  1. அபுசிதாரா

    அன்பின் நல்லடியார்.

    தங்களுடைய கட்டுரை மீள் பிரசுரம் செய்திருப்பது நன்றாக இருக்கிறது. இது இந்த வார திண்னையிலும் வந்திருப்பது இரட்டை மகிழ்ச்சி. உண்மையை சொல்லப்போனால் அடிக்கடி நகைச்சுவை பகுதியில் இருக்க வேண்டியது கட்டுரை பகுதியில் நம் நகைச்சுவை வேந்தல் மம(அது தான் மலர்மன்னன்)கட்டுரை தான். அது பல சமயங்களில் தின்னையில் அமருபவர்களால் கொஞ்சம் நகைத்து வைக்கப்படுவதும் உண்டு.

    சரி விசயத்திற்கு வருவோம். இந்த நீதி மன்றங்கள் எல்லாம் பல வேளைகளில் போலி மன்றங்களாக இருப்பதும் பாதி (ரசிகர்)மன்றங்களாக மாறி நீதிபதிகள் விலகுவதும் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அரசுக்கு அங்கமாக இருக்கும் மக்கள் என்றாவது இதைப்பற்றி சிந்திக்கிறார்களா? கவலைப்படுகிறார்களா? வாழ்க்கை மற்றும் வாலிபம் தொலைத்த தம்முடைய சொந்தங்களைப் பற்றி சிந்தித்து இருந்தால் இதை மாற்றி இருக்க முடியும். அவர்களுடைய கவலை எல்லாம் அரசியைப்பற்றியும், அபியைப்பற்றியும் தான். முன்னால் ஜனாதிபதியை கைது செய்ய வாரண்ட் பிறப்பித்த பெருமை எல்லாம் நம் நாட்டு நீதி மன்றத்திற்கு மட்டுமே உரியதுதான். இதைப்பற்றிய விழிப்புணர்வு கொடுக்க வேண்டிய மிகப் பாரியதொரு கடமை உணர்வு பத்திரிக்கைகளுக்கு உண்டு. இவர்கள் ஐஸ்வர்யா அபிஷேக்பச்சனுக்கு கொடுத்த செய்தியில் கால் பங்கு முக்கித்துவம் மக்களுக்கு கொடுத்தால் போதும். ஆனால் இவர்களுக்கு நடிகனைப்பற்றியும், நடிகையைப்பற்றியும் தான் கவலை. நாய் விற்ற பணம் குறைக்கவா போகிறது என்ற உணர்வு. என்னுடைய கருத்து என்ன என்றால் முதலில் தண்டிக்க படவேண்டியவர்கள் இந்த பத்திரிக்கைகள் தான். இவர்கள் தான் மக்கள் வழிகளில் அமர்ந்து கொண்டு மக்களுக்கு உண்மைகளை செல்ல விடாமல் தடுப்பது. டோண்டு பானியில் சொன்னால் ஜாட்டான்கள்.அடிக்க வேண்டிய மணியை அடித்து வைத்து விட்டீர்கள். விழிக்க வேண்டியவர்கள் விழிக்க வேண்டும்.

  2. நல்லடியார்..!

    உங்கள் கட்டுரை திண்ணையில் கடிதங்கள் மற்றும் அறிவிப்புகள் பகுதியில் அல்லவா வந்திருக்கிறது? மீண்டும் ஒருமுறை கவனித்து, திண்ணையை குறை கூறுவதுபோல் உள்ள வரிகளை நீக்கவும்.

  3. நல்லடியார்

    அபூசிதாரா,

    கருத்துக்கு நன்றி.

    அணானி,

    சுட்டிக்காட்டியமைக்கு நன்றி. சம்பந்தப்பட்ட திண்ணையைப் பற்றிய தவறான எனது வரிகளை நீக்கி விட்டேன்.

  4. சுல்தான்

    //ஜனநாயக இந்தியாவில்தான் குற்றவாளியே தீர்ப்பு எழுத முடியும்! குஜராத் இனச்சுத்திகரிப்புகளை நியாயப்படுத்தி, குற்றவாளிகளுக்கு உதவிய நரேந்திர மோடியை இருமுறை மாநில முதல்வராக்கிய தேசத்தவர்கள் அல்லவா நாம்! வெட்கமில்லாமல் சொல்லிக் கொள்வோம் – ‘வாய்மையே வெல்லும்’//

    ஜனநாயக இந்தியாவில் இனியாவது வாய்மை வெல்லட்டும். நம்பிக்கைதானே வாழ்க்கை!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *