Featured Posts
Home » பொதுவானவை » துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?

துப்பட்டாவுக்கு வெளியேதான் பெண்ணியமா?

அண்மையில் சென்னை லயோலா கல்லூரியில் காட்சி ஊடகவியல் துறையினர்,”கனாக்களம்- 2007″ என்கிற கருத்தரங்கை நடத்தினர். கலந்துரையாடலில் “சினிமாவும் சமூகமும்” என்னும் தலைப்பில் பேச லீனா மணிமேகலையை அழைத்திருந்தனர்.

இந்நிகழ்ச்சியில் அவர் உடை காரணமாக அவமானப்படுத்தப்பட்டதால், “துப்பட்டாவில் தான் இருக்கிறதா தமிழ்க்கலாசாரம்” என்ற தொனியில் தினமணியில் அவர் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

அவர் எழுத்துப்படி, “காலை பத்து மணியளவில் கல்லூரி வாசலை அடைந்த என்னை நிறுத்திய கல்லூரியின் காவலர்கள், அடையாள அட்டையைக் காட்டச் சொன்னார்கள். நான் அழைப்பிதழைக் காட்டினேன். “உங்களை உள்ளே அனுமதிக்க முடியாது.ஏனென்றால் நீங்கள் ஜீன்ஸ்-குர்தா அணிந்து இருக்கிறீர்கள்; துப்பட்டா அணியவில்லை’ என்றார்கள். ஒரு நிமிடம் எனக்குத் தலைசுற்றியது;நான் தமிழ்நாட்டில்தான் இருக்கிறேனா அல்லது தாலிபான்களின் ஆப்கானிஸ்தானில் இருக்கிறேனா என்ற இடக்குழப்பம் ஏற்பட்டது.

கிணுகிணுத்த கைபேசியைத் தட்டினால் அமைப்பாளர்கள்,”சிறிது நேரம் பொறுங்கள், நாங்கள் வந்துபேசி அழைத்துச் செல்கிறோம்’ என்றார்கள். நிமிடங்களில் ஒரு மாணவி ஓடிவந்து கறுப்புத் துப்பட்டாவைத் தந்து “இதை அணிந்துகொண்டு உள்ளே வாருங்கள்’ எனக் கெஞ்சும் தொனியில் கேட்ட போது எனக்குச் சிரிப்பதா அழுவதா எனத் தெரியவில்லை.

“சுதந்திரமாக ஆடையணிந்துகூட வரமுடியாத இடத்தில், சுதந்திரமான சினிமாவை நேசித்துப் பணியாற்றிக் கொண்டிருக்கும் எனக்கு எந்தப் பணியும் இல்லை” என்று மட்டும் குறிப்பிட்டுவிட்டுத் திரும்பிவிட்டேன்.

கல்வி நிலையங்கள் தமிழ்க் கலாச்சாரத்தைத் துப்பட்டாவில் கட்டிக்காக்கும் அளவுக்குத் தரம் தாழ்ந்துவிட்டனவா என்று கடுங்கோபம் வந்தது……………”

இந்தக்கட்டுரையை வைத்து, தமிழிணையக் குழுமங்களில்”துப்பட்டாவில் படபடக்கும் தமிழ்க் கலாசாரம்” என்றெல்லாம் காரசார விவாதம். இதையே காரணமாக வைத்து ஆணாதிக்கம், பெண்ணுரிமை என்று முற்போக்கு வியாபாரிகளின் கடைவிரிப்பு. நல்ல வியாபாரம்.

இதென்ன கூத்து?

கல்லூரியாகட்டும், பிற நிறுவனங்களாகட்டும், அதற்கென்று விதிகள் உள்ளன. அவ்விதிகளை மதிப்பதாக இருந்தால், செல்ல வேண்டும். இல்லா விட்டால், செல்ல வேண்டியதில்லை, அவ்வளவு தான்;ஏன் இந்தப் பிடிவாதத்தை ஆணியம்-பெண்ணியம் என்று கயிறுதிரிக்க வேண்டும்?

சென்னையில் மார்கழி-டிசம்பர் சபாக்களில் நடக்கும் அரங்கேற்றங்களில் டூபீஸுடன்தான் பரத நாட்டியமாடுவேன்-இதுவும் பெண்ணுரிமை என்று எவரும் உரிமை கோருவதில்லை. ஏனென்றால் பரத நாட்டியம் மடிசார் மாமிகள் ஆடும் தெய்வீக நாட்டியம் என்பதை ஏற்று அதற்கேற்ற ஆடைக் கோட்பாட்டுடன் வரவேண்டும் என்பது புரிந்து ஆடுபவரின் கொள்ளல்.

பெண்களுக்கு என்றில்லாமல், ஆண்களுக்கும் இந்த ஆடைக் கட்டுப்பாடு உண்டுதானே. ஆணோ-பெண்ணோ நீதிமன்றங்களில் கருப்பு அங்கி அணியாமல் யாரும் வாதாட முடியாது! நீதிபதியே ஆனாலும் கருப்பு அங்கி அவசியம்! அங்கெல்லாம் யாரும் ஆடைக்குறைப்பு பற்றியோ பெண்ணுரிமை பற்றியோ வாய்திறப்பதில்லை!

ஒரு ஆண் மாணவன், தான் விரும்பிய வண்ணம் லுங்கி/வேட்டி அணிந்துக் கொண்டு இது என் சுதந்திரம் என்று சொன்னால் மட்டும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கிறதா என்ன? அல்லது அந்த மாணவன் தான் ஆணுரிமைக் கோரி போராடுகிறானா?

ஒரு அரங்கின
ுள்ளோ, விமானத்தினுள்ளோ சிலவகை ஆடை அணிந்து கொண்டு வரக்கூடாது என்று தடை விதிக்கப்படுகிறது என்றால், யாரும் அங்கே போய் அய்யோ என் ஆணியம் போச்சே, பெண்ணியம் போச்சே என்றோ, அநியாயம் ஆச்சே என்றோ கூக்குரலிடுவதில்லை.இடம் பொருள் பார்த்துநடந்து கொள்கின்றனர்.

லீனா மேட்டரில், பெண்ணியம் காக்கப் புறப்பட்டு வந்தவர்களின் வாதங்கள் தான் வேடிக்கை.காந்தி மேலாடை அணியாமல் இங்கிலாந்து பாராளுமன்றத்திற்கு வந்த போது, விதிகளைத் தளர்த்தி அனுமதித்தார்களாம், அதனால் லீனாவையும் அனுமதித்து இருக்க வேண்டுமாம். ஒப்பீட்டுக்கும் ஒரு அளவில்லையா?

காந்தி மேற்சட்டை அணியாத காரணமும், லீனா துப்பட்டா அணியாததும் ஒன்றா? காந்திஜியின் உயர்ந்த நோக்கமெங்கே? சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்ணியம் பேசி புகழ்க்குளிக்க விரும்புகிற லீனாக்கள் எங்கே?

லீனாக்கள் விளங்கிக்கொள்ள வேண்டியதெல்லாம்,பேனை பெருமாளாக்கினாலும், சின்ன விஷயங்களை விளங்கிக்கொள்ளாமல், பெண்ணுரிமை பேசி குழப்பக்கூடாது என்பதைத்தான்!

12 comments

  1. Yes. Many have aready raised similar Q here on this.

    I too wrote it as 3 sections of which one directly addressing her (http://mangaiival.blogspot.com/2007/12/blog-post_26.html) .
    She wont read all these bcoz it is a chance for her to get popular.

  2. //காந்தி மேற்சட்டை அணியாத காரணமும், லீனா துப்பட்டா அணியாததும் ஒன்றா? காந்திஜியின் உயர்ந்த நோக்கமெங்கே? சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்ணியம் பேசி புகழ்க்குளிக்க விரும்புகிற லீனாக்கள் எங்கே?//

    நல்ல சூடு கொடுத்தீர்கள்!

  3. //கல்லூரியாகட்டும், பிற நிறுவனங்களாகட்டும், அதற்கென்று விதிகள் உள்ளன. அவ்விதிகளை மதிப்பதாக இருந்தால், செல்ல வேண்டும். இல்லா விட்டால், செல்ல வேண்டியதில்லை, அவ்வளவு தான்;//

    அவரின் ஒரே புள்ளி(Point) அங்கு நடிக்க வரும் நடிகைகளோ, வெளி நாட்டவர்களோ ஏன் அப்படிப்பட்ட உடைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதே…

    //சென்னையில் மார்கழி-டிசம்பர் சபாக்களில் நடக்கும் அரங்கேற்றங்களில் டூபீஸுடன்தான் பரத நாட்டியமாடுவேன்-இதுவும் பெண்ணுரிமை என்று எவரும் உரிமை கோருவதில்லை. ஏனென்றால் பரத நாட்டியம் மடிசார் மாமிகள் ஆடும் தெய்வீக நாட்டியம் என்பதை ஏற்று அதற்கேற்ற ஆடைக் கோட்பாட்டுடன் வரவேண்டும் என்பது புரிந்து ஆடுபவரின் கொள்ளல்.//

    அப்படிவரக்கூடாது ஒரு வெளி நாட்டவர் பரதம் கற்றுக்கொண்டு அங்கு வந்து 2 பீஸில் ஆட முடியுமா? ஆனால் அந்த கல்லூரிக்கு அவர்கள் சட்டத்தில் இல்லாத வண்ணம் வெளி நாட்டவர் வர முடிகின்றதே, ஏன் இவருக்கு மாத்திரம் கட்டுப்பாடு?

    //பெண்களுக்கு என்றில்லாமல், ஆண்களுக்கும் இந்த ஆடைக் கட்டுப்பாடு உண்டுதானே. ஆணோ-பெண்ணோ நீதிமன்றங்களில் கருப்பு அங்கி அணியாமல் யாரும் வாதாட முடியாது! நீதிபதியே ஆனாலும் கருப்பு அங்கி அவசியம்! அங்கெல்லாம் யாரும் ஆடைக்குறைப்பு பற்றியோ பெண்ணுரிமை பற்றியோ வாய்திறப்பதில்லை!//

    இதற்கும் அதே பதில் தான், வேரு எவரும் அங்கு வேரு ஆடைகளில் வருவதில்லை, வர அனுமதிப்பதில்லை, ஆனால் அந்த கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதற்கு முன்.

    நீங்கள் கேட்டுள்ள அனைத்து கேள்விக்குமே இது பொருந்தும், இதில் பாகுபாடு ஏன்? ஒருவரை அனுமதித்து, ஒருவரை அனுமதிக்காதது தான் இங்கு புள்ளி…

    //காந்தி மேற்சட்டை அணியாத காரணமும், லீனா துப்பட்டா அணியாததும் ஒன்றா? காந்திஜியின் உயர்ந்த நோக்கமெங்கே? சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்ணியம் பேசி புகழ்க்குளிக்க விரும்புகிற லீனாக்கள் எங்கே?//

    இதெல்லாம் ஏன், காந்தி இங்கு எங்கு வந்தார். காந்தி மேற்சட்டை அணியாததை எவரும் தடுக்கவில்லை ஏன் வெள்ளைக்காரர்கள் கூட புரிந்து கொண்டனர். மனிதம் தான் மதிக்கப்பட வேண்டும் அது காந்தியோ, லீனாவோ வேரு ஒரு எக்ஸ் ஸோ, காந்திக்கு மாத்திரம் சுதந்திரமா என்ன?

  4. //கல்லூரியாகட்டும், பிற நிறுவனங்களாகட்டும், அதற்கென்று விதிகள் உள்ளன. அவ்விதிகளை மதிப்பதாக இருந்தால், செல்ல வேண்டும். இல்லா விட்டால், செல்ல வேண்டியதில்லை, அவ்வளவு தான்;//

    அவரின் ஒரே புள்ளி(Point) அங்கு நடிக்க வரும் நடிகைகளோ, வெளி நாட்டவர்களோ ஏன் அப்படிப்பட்ட உடைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதே…

    //சென்னையில் மார்கழி-டிசம்பர் சபாக்களில் நடக்கும் அரங்கேற்றங்களில் டூபீஸுடன்தான் பரத நாட்டியமாடுவேன்-இதுவும் பெண்ணுரிமை என்று எவரும் உரிமை கோருவதில்லை. ஏனென்றால் பரத நாட்டியம் மடிசார் மாமிகள் ஆடும் தெய்வீக நாட்டியம் என்பதை ஏற்று அதற்கேற்ற ஆடைக் கோட்பாட்டுடன் வரவேண்டும் என்பது புரிந்து ஆடுபவரின் கொள்ளல்.//

    அப்படிவரக்கூடாது ஒரு வெளி நாட்டவர் பரதம் கற்றுக்கொண்டு அங்கு வந்து 2 பீஸில் ஆட முடியுமா? ஆனால் அந்த கல்லூரிக்கு அவர்கள் சட்டத்தில் இல்லாத வண்ணம் வெளி நாட்டவர் வர முடிகின்றதே, ஏன் இவருக்கு மாத்திரம் கட்டுப்பாடு?

    //பெண்களுக்கு என்றில்லாமல், ஆண்களுக்கும் இந்த ஆடைக் கட்டுப்பாடு உண்டுதானே. ஆணோ-பெண்ணோ நீதிமன்றங்களில் கருப்பு அங்கி அணியாமல் யாரும் வாதாட முடியாது! நீதிபதியே ஆனாலும் கருப்பு அங்கி அவசியம்! அங்கெல்லாம் யாரும் ஆடைக்குறைப்பு பற்றியோ பெண்ணுரிமை பற்றியோ வாய்திறப்பதில்லை!//

    இதற்கும் அதே பதில் தான், வேரு எவரும் அங்கு வேரு ஆடைகளில் வருவதில்லை, வர அனுமதிப்பதில்லை, ஆனால் அந்த கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் அதற்கு முன்.

    நீங்கள் கேட்டுள்ள அனைத்து கேள்விக்குமே இது பொருந்தும், இதில் பாகுபாடு ஏன்? ஒருவரை அனுமதித்து, ஒருவரை அனுமதிக்காதது தான் இங்கு புள்ளி…

    //காந்தி மேற்சட்டை அணியாத காரணமும், லீனா துப்பட்டா அணியாததும் ஒன்றா? காந்திஜியின் உயர்ந்த நோக்கமெங்கே? சிறு வாய்ப்பு கிடைத்தாலும் பெண்ணியம் பேசி புகழ்க்குளிக்க விரும்புகிற லீனாக்கள் எங்கே?//

    இதெல்லாம் ஏன், காந்தி இங்கு எங்கு வந்தார். காந்தி மேற்சட்டை அணியாததை எவரும் தடுக்கவில்லை ஏன் வெள்ளைக்காரர்கள் கூட புரிந்து கொண்டனர். மனிதம் தான் மதிக்கப்பட வேண்டும் அது காந்தியோ, லீனாவோ வேரு ஒரு எக்ஸ் ஸோ, காந்திக்கு மாத்திரம் தான் சுதந்திரமா என்ன?

  5. //அவரின் ஒரே புள்ளி(Point) அங்கு நடிக்க வரும் நடிகைகளோ, வெளி நாட்டவர்களோ ஏன் அப்படிப்பட்ட உடைகளில் அனுமதிக்கப்படுகின்றார்கள் என்பதே…//

    //ஒருவரை அனுமதித்து, ஒருவரை அனுமதிக்காதது தான் இங்கு புள்ளி… //

    அநானி,
    அது தான் புள்ளி என்றால் என்ன கோலமும் எந்த கோணமும் போட்டுக்கொள்ளட்டும் என்று சர்ச்சையாகியிருக்க வாய்ப்பில்லை.

    நல்லடியார் சொல்வது போல, ‘என்னவோ பெண்ணுரிமையே துப்பட்டா அணியாமலிருப்பதில் தான் இருக்கிறது’ என்று சொல்லும் போது தான் சர்ச்சையே.

    இத்தகையவர்கள் எதிர்பார்ப்பதெல்லாம் பெண்ணுரிமையை அல்ல என்பதைத்தான் நல்லடியார் இங்கு புரியவைக்கிறார்.

  6. //இது போல் தனி மனிதக் கோபங்கள், சிறு விஷயங்கள் எல்லாம் பெண்ணியவாதிகள் பெரிசு படுத்துவது தான் பெண்ணியவாதிகள் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. அடிப்படைக் காரணங்களுக்கு போராடுபவர்களின் பிரச்சனைகள் இந்த பரபரப்பு செய்திகள் பின்னுக்குத் தள்ளி விடுகின்றன.//

    மங்கையின் பதிவிலிருந்து.

  7. //இதெல்லாம் ஏன், காந்தி இங்கு எங்கு வந்தார்.//

    லீனா மேட்டரில், “பெண்ணியம்” காக்கப் புறப்பட்டு வந்தவர்களின் வாதங்களில்!!!

  8. சென்னையில் மார்கழி-டிசம்பர் சபாக்களில் நடக்கும் அரங்கேற்றங்களில் டூபீஸுடன்தான் பரத நாட்டியமாடுவேன்-இதுவும் பெண்ணுரிமை என்று எவரும் உரிமை கோருவதில்லை. ஏனென்றால் பரத நாட்டியம் மடிசார் மாமிகள் ஆடும் தெய்வீக நாட்டியம் என்பதை ஏற்று அதற்கேற்ற ஆடைக் கோட்பாட்டுடன் வரவேண்டும் என்பது புரிந்து ஆடுபவரின் கொள்ளல்.//

    பரத நாட்டியத்தை யாரும் கற்கலாம்,
    ஆடலாம்.ஆண்கள் பரத நாடடியம் ஆடுகின்றனர். மணிமேகலை அந்த நிகழ்ச்சிக்கு நீச்சலுடையில் செல்வேன்
    அனுமதிக்க வேண்டும் என்று
    கோரவில்லை. நல்லடியார் என்ற
    தலிபான் ஆதரவாளருக்கு இதெல்லாம்
    புரியாது.

  9. அநானி,
    பரதநாட்டியத்தை யார்யார் கற்கலாம்; பிறிதே ‘நாட்டியதை’ எங்கெங்கே விற்கலாம் என்பதெல்லாம் இங்கே பிரச்னையேயில்லை.
    இன்னொரு தபா பதிவைப் படிங்க,
    ‘துப்பட்டாக்கு வெளியே தான் பெண்ணியமா?’ இது தான்யா கேள்வி.

    //நல்லடியார் என்ற
    தலிபான் ஆதரவாளருக்கு இதெல்லாம்
    புரியாது.//

    விட்டா, அவருக்கு ஆட்டோவே அனுப்பிருவீங்க போல,
    நல்லா இருங்கடே.

  10. நல்லடியார்

    //நல்லடியார் என்ற தலிபான் ஆதரவாளருக்கு இதெல்லாம் புரியாது//

    அனானி அண்ணாச்சி,

    அமெரிக்காவின் ஒரே எதிரியாக இருந்த சோவியத் யூனியனின் கண்ணில் விரலைவிட அமெரிக்காவுக்குக் கைகொடுத்த வகையில் தாலிபான்களும் அமெரிக்காவும் பரஸ்பரம் ஆதரவாளர்களாக இருந்தது. போதைப்பொருள் கடத்தலை ஒழித்த வகையில் தாலிபானும் ஐநாவும் ஒருவருக்கொருவர் ஆதரவாளர்களாகவும் இருந்திருக்கிறார்கள். இதைப்பற்றியும் ஏற்கனவே ஒரு பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். கூகிலிட்டுப்பார்த்தால் யாரெல்லாம் தாலிபான் ஆதரவாளர்களாக இருந்திருக்கிறார்கள் என்று பட்டியலே கிடைக்கும்.

    இராக் எண்ணைக்கு ஆசைப்பட்ட அமெரிக்காவிற்கு ஆப்கன் பயிற்சிக் களமானது வரலாற்று துரதிஷ்டம். அமெரிக்க-ரஷ்ய வல்லரசுகளால் சிதைக்கப்பட்ட ஒரு தேசத்தை ஆண்ட தாலிபான்கள் மீது கொஞ்சம் பரிவுண்டு. (இலங்கைத் தமிழர்களுக்காக குரல் கொடுப்பவர்களையெல்லாம் விடுதலைபுலிகள் என்று சொல்லமாட்டீர்கள் என்று நம்புவோமாக!)

    தாலிபான் ஆதரவாளரான நல்லடியாருக்கு பின்னூட்ட ஆதரவளித்த பாபுவும் ஒரு வகையில் தாலிபான் ஆதரவாளர்தான் என்று இன்னொரு அனானி சொன்னால் அதற்கு நான் பொறுப்பல்ல பாபுஜி! ;-)

  11. மு.மயூரன்

    அந்தக்கல்லூரியில் ஆண்களுக்கென்று ஒரு ஆடைக் கோட்பாடு இருக்கிறதா?

    அந்த ஆடைக்கோட்பாடு நீளக்காட்சட்டை, மேற்சட்டை என்றிருக்குமானால், நான் வேட்டியணிந்து மேற்சட்டை இன்றி சால்வை உடுத்தி தமிழ்க் கலாசார உடையில் போனேன் என்றால், என்னை அனுமதிப்பார்களா?

    இந்தக்கேள்விகளுக்கான பதிலில் லீனாவின் எழுத்தில் நேர்மை இருக்கிறதா இல்லையா என்பதை உரசிப்பார்ப்பதற்கான உரைகல் இருக்கிறது.

  12. //நான் வேட்டியணிந்து மேற்சட்டை இன்றி சால்வை உடுத்தி தமிழ்க் கலாசார உடையில் போனேன் என்றால், என்னை அனுமதிப்பார்களா?//

    மு.மயூரன்,
    அதை அவர்களிடம் தான் கேட்டுச் சொல்ல வேண்டியிருக்கும். நல்லடியார் ஓய்வு நேரத்தில் செய்யக்கூடும்.:))

    உங்கள் கவனத்திற்கு பதிவிலிருந்து ஒரு வெட்டி ஒட்டு:

    ”ஒரு ஆண் மாணவன், தான் விரும்பிய வண்ணம் லுங்கி/வேட்டி அணிந்து கொண்டு இது என் சுதந்திரம் என்று சொன்னால் மட்டும் கல்லூரி நிர்வாகம் அனுமதிக்கிறதா என்ன? அல்லது அந்த மாணவன் தான் ஆணுரிமைக் கோரி போராடுகிறானா?”

    “ஆம்பளங்கள உடாட்டியும் கம்முனு போயிருவான், பெர்ச்சன ஆவாது; பொம்பளயச் சொல்லிட்டாப் போதும், போதும்போதும்னு ஆயிரும்” என்று நண்பர் பிச்சுவா பக்கிரி கூட சொன்னார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *