Featured Posts
Home » பொதுவானவை » பணவீக்கமும் அரசியல் கணக்கீடுகளும்

பணவீக்கமும் அரசியல் கணக்கீடுகளும்

கடந்த பதிமூன்றாண்டுகளில் இல்லாத அளவுக்கு நம்நாட்டின் பணவீக்கம் 10-12% அளவுக்கு உயர்ந்து அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி ஏறி, சகல தரப்பினரும் பாதிப்பிற்கு ஆளாகியுள்ளனர். மத்திய காங்கிரஸ் அரசு, பணவீக்கத்தைக் கட்டுக்குள் கொண்டுவர முடியாமல் திணறி கொண்டே, அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றத் துடிக்கிறது. இவற்றை முன்வைத்து நடத்தப்படும் அரசியல் கணக்கீடுகளைக் அலசி தேசபக்தர்களை அடையாளம் காண்போம்!

பணப்புழக்கம் அதிகமாகி,பணத்தின் கொள்வினை மதிப்புக் குறைந்து (Buying Capacity) விலைவாசி கூடுவதை பணவீக்கம் (Inflation) என்கிறோம். நூறு ரூபாய்க்கு அதன் மதிப்புக்கு இணையான பொருளை வாங்க முடிந்தால் பணத்தின் மதிப்பும் விலையும் சமமாக இருக்கிறது; 95 ரூபாய் மதிப்புள்ள பொருளுக்கு 100 ரூபாய் செலுத்த வேண்டியிருந்தால் பணவீக்கத்தின் அளவு 5% ஆகும்.

வறுமையில் வாடும் ஆப்பிரிக்க நாடுகள் மற்றும் உள்நாட்டு யுத்தங்களால் அரசியல் கட்டமைப்பு சிதைந்துள்ள நாடுகளிலுமே பெரும்பாலும் பணவீக்கம் நிலவும்.இவ்விரண்டுமே இல்லாத இந்தியாவில் பணவீக்கத்தின் அளவு 10-12% இருப்பதாக மத்திய அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது. உலகறிந்த பொருளாதார மேதைகளான மன்மோகன்சிங்கைப் பிரதம அமைச்சராகவும் ப.சிதம்பரம் அவர்களை நிதியமைச்சராகவும் கொண்டுள்ள இந்தியாவில் கடந்த 10-15 ஆண்டுகளில் இல்லாத பணவீக்கத்திற்கு (சுட்டி) யார் காரணம்?

எல்லை தாண்டும் பயங்கரவாதப் பூச்சாண்டிக்கு உதவும் பாகிஸ்தானோ அல்லது உலகின் கர்ண கொடூரர்களாகச் சித்தரிக்கப்படும் தாலிபான்களோ அல்லது அமெரிக்கா விரும்பும் தனிமனிதச் சுதந்திரமில்லாத சவூதியோ அல்லது அமெரிக்க உலக வர்த்தக மையத்தைத் தகர்த்ததாகச் சொல்லப்படும் பின்லாடனோ அல்லது உலகையே அச்சுருத்துவதாக முன்னிறுத்தப்படும் இஸ்லாமியத் தீவிரவாதமோ (?!) காரணமல்ல!

சந்தையில் ஒரு பேரல் கச்சா எண்ணெய் சுமார் 40 டாலரிலிருந்து இன்று 140 டாலருக்கு உயர்ந்து,இன்னும் சிலநாட்களில் 150 டாலர்களை தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே பெட்ரோல் மற்றும் டீசலின் விலையேற்றமே அத்தியாவசியப் பொருட்களை வினியோகிப்பதற்கான போக்குவரத்து செலவு, இன்ன பிற மூலப் பொருட்களின் விலையும் உயர்ந்துள்ளதால் விலையேற்றம் தவிர்க்க இயலாதது தான் என்று பொருளியல் காரணம் சொல்லப்படுகிறது.

பேரழிவு ஆயுதங்கள் வைத்திருந்ததாகச்சொல்லி உலகையே ஏமாற்றி அல்லது உலகத்தவரின் எதிர்ப்பைக் கண்டுகொள்ளாமல் ஈராக்கை போரிட்டு அழித்த அமெரிக்காவும் அதற்கு ஒத்து ஊதியவர்களுமே காரணம். ஈராக் தாக்கப் படுவதால் நமக்கென்ன நஷ்டம் வந்து விட்டது? அத்தோடு ஈரானையும் ஒரு கை பார்த்தால்கூட நமக்கொன்றும் ஆகாது; உலக வங்கி மூலம் போடும் வாய்க்கரிசியை மென்று காலம் தள்ளலாம் என்று சுயநலமாக நினைத்தன் பின் விளைவுகளை நாம் அனுபவிக்கிறோம்.

அமெரிக்க எதிர்ப்பில் அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் கம்யூனிஸ்டுகள் காங்கிரஸ் கூட்டணியிலிருந்து விலகிக் கொள்ள அணுசக்தி ஒப்பந்தத்தை நிறைவேற்றக்கூடாது என்றும், மீறி நிறைவேற்றினால் ஆட்சிக்கான ஆதரவு வாபஸ் பெறப்படும் என்று சொல்லி வரும் நிலையில் பணவீக்கத்தையும் காரணம் காட்டி ஆதரவை திரும்பப் பெற்றால் மீண்டும் மக்களிடம் சென்

5 comments

  1. சுல்தான்

    அதாவது ஈராக் போரினால் நாம் பெற்ற மறைமுக பயன்களில்(?) பணவீக்கமும் ஒன்று என்கிறீர்களா?

  2. உலக சந்தையில் பெட்ரோல் விலை உயர்வு இந்தியாவில் பண வீக்கத்திற்கு முக்கிய காரணம்.இதில்
    பலன் அடைவது சவுதி அரேபியா,
    ஈரான் போன்ற முஸ்லீம் நாடுகள்.
    இதை முஸ்லீம்கள் ஒப்புக்கொண்டு
    எழுதுவார்களா.எதெற்கெடுத்தாலும்
    அமெரிக்காவை எதற்கய்யா திட்ட
    வேண்டும்.நாம் அமெரிக்காவிடமிருந்தா பெட்ரோல்
    இறக்குமதி செய்கிறோம்.நம் இறக்குமதியின் பெரும்பங்கு
    மத்தியகிழக்கு நாடுகளிலிருந்து.

  3. நல்லடியார்

    //அதாவது ஈராக் போரினால் நாம் பெற்ற மறைமுக பயன்களில்(?) பணவீக்கமும் ஒன்று என்கிறீர்களா?//

    சுல்தான்,

    ஆமாம்! தேவை அதிகரிக்கும்போது அளிப்பு குறைந்தால் விலையேற்றம் தவிர்க்க முடியாதது என்பது பொருளியல் நியதி. ஆக்கிரமிப்புகள் மூலம் ஈராக் பெட்ரோலிய வளத்தைச் மொத்தமாகச் சுருட்டிக் செல்லலாம் என்ற அமெரிக்கப் பேராசையினால் ஈராக்கின் பெட்ரோல் ஏற்றுமதி கனிசமாகத் தடைபட்டதால் ஏற்பட்ட தட்டுப்பாட்டைப் பயன்படுத்தி பிற பெட்ரோலிய வளமுள்ள நாடுகள் ஏற்றுமதி விலையை அதிகரித்தனர்.

    விளைவு அமெரிக்க ஆக்கிமிரப்பின் விளைவை நாமும் சுமக்கிறோம்.

  4. சந்திப்பு

    பண வீக்கம் குறித்து நன்றாக எழுதியுள்ளீர்கள். பா.ஜ.க.வின் சந்தர்ப்பவாத அரசியலை தோலுரித்துள்ளீர்கள். மேலும் இடதுசாரிகள் ஓட்டுவாங்குவதற்காக பண வீக்கத்தை ஒரு அஜண்டாவாக பேசவில்லை. அவர்கள் அணு சக்தி ஒப்பந்தத்தில் கையெழுத்திடக் கூடாது என்ற ஒரு அஜண்டாவை வைத்துதான் அரசியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். இது நாட்டின் நலன் கருதியே இப்படியான போராட்டத்தை இடதுசாரிகள் நடத்துகின்றனர். மன்மோகனுக்கும் – சிதம்பரத்திற்கும் இதைப் பற்றியெல்லாம் என்ன கவலை? ஆட்சியில் இருந்தால் போதாதா?

    பண வீக்கம் குறித்து என்னுடைய பதிவையும் வாசியுங்களேன்.

    http://santhipu.blogspot.com

    நன்றி.

  5. உங்கள் பதிவுகள் நன்றாக உள்ளது. மேலும் அதிகமான இணைய நண்பர்களுக்கு உங்கள் பதிவினை கொண்டு செல்ல http://www.tamilish.com -ல் சமர்பிக்கவும். வாழ்த்துக்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *