Featured Posts
Home » பொதுவானவை » யாகாவா ராயினும் நாகாக்க – 1

யாகாவா ராயினும் நாகாக்க – 1

தருமி’ என்ற புனைப்பெயரில் எழுதிவரும் திரு .சாம் ஜார்ஜ் கடைசியாக மதுரை அமெரிக்கன் கல்லூரியில் ஆங்கிலப் பேராசிரியராக இருந்து ரிடையர்ட் ஆனவர். பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தவர் , கிறிஸ்தவத்தின் கோட்பாடுகள் பிடிக்காமல் மதங்களே மாயை என்ற முடிவுக்கு வந்து, ” எனக்கு மதம் பிடிக்கவில்லை” என்ற தலைப்பில் பல பதிவுகளை எழுதினார்.

கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறிய பேராசிரியர் சாம் ஜார்ஜ், கிறிஸ்தவத்தின் குறைபாடுகளாகத் தான் உணர்ந்ததை பதிவாக இட்டிருந்தால் சம்பந்தப்பட்டவர்கள் விளக்க முயன்றிருப்பர். மாறாக கிறிஸ்தவத்தின் அரிச்சுவடி கூட அறியாமல் பிறமதங்களையும் கேள்விக்குட்படுத்துகிறேன் என்ற ஆவலில் கேலிக்குள்ளாகியுள்ளார் என்பதை அவரின் கேள்விகளில் இருக்கும் அபத்தங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன.

பிறமதங்களைப்பற்றி அவரின் கேள்விகளுக்கு பதில் சொல்ல சம்பந்தப்பட்ட மதத்தவர்கள் யாரும் முன்வரவில்லை என்பதிலிருந்து தருமி சொன்னவை உண்மையாக இருக்குமோ என்ற அய்யம் தோன்றுவதைத் தவிர்க்க இயலாத நிலையில், இஸ்லாம் பற்றி அவர் வைத்த அபத்தவாதங்களை நம்மால் புறக்கணிக்க முடியாது. ஏனெனில் இஸ்லாமிய அடிப்படைகளான குர்ஆனும் ஹதீஸ்களும் அவற்றின் மொழிபெயர்ப்புகளும் இணையத்தில் தாரளமாகக் கிடைப்பதால், இஸ்லாமிய அடிப்படைகளை எவரும் எளிதில் சரி காண இயலும். ஒரு சில அரைவேக்காடுகள் போகிற போக்கில் சேறு வாரி இறைத்தாலும் அவற்றை ஆதாரத்துடன் எவரும் மறுக்கவும் பொய்களை இனம் காட்டவும் இயலும்.

ஹதீஸ்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்டவையும் கூட தெளிவாகத் தரம் பிரிக்கப்பட்டு பொதுவில் விவாதிக்கப்படுவதிலிருந்து இஸ்லாம் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு புடம் போட்டத் தங்கமாக ஜொலிப்பது வெள்ளிடை மலை!

சரி விசயத்திற்கு வருவோம்! கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியவருக்கு இஸ்லாத்தில் ஈடுபாடு ஏற்படாமல் மதம்/மனம் வெறுக்கக் காரணமாக சுமார் இருபத்தோரு கேள்விகளை வைத்து ஆய்வு செய்தாராம் .

கிறிஸ்தவத்திற்கும் இஸ்லாத்திற்கும் பொதுவான சில விசயங்களில் அதாவது முதல் மனிதன் ஆதம் (அலைஹி) அவர்களின் மனைவியான முதல் பெண் ஹவ்வா (அலைஹி) என்று இஸ்லாத்திலும் ஏவாள் என்று கிறிஸ்தவம், யூதத்திலும் அழைக்கப்படும் பெண்ணைப் பற்றிக் குறிப்பிடும் போது “முதல் மனிதன் ஆதத்தின் மனைவிக்கு இஸ்லாத்தில் பெயரே இல்லை” என்று அவசரப்பட்டு முடிவுக்கு வந்தவராக தனது கேள்விகளை முன்வைத்திருந்தார்!

அவரின் அபத்தக் கேள்விகளில் பல ஏற்கனவே பல்வேறு பதிவுகளில் தெளிவாக விளக்கப்பட்டிருந்தாலும் அவற்றை படித்தோ படிக்காமலோ சில கேள்விகளையும் வைத்திருந்தார் . அவற்றிற்குப் பதில் சொல்லும் முகமாக இப்பதிவில் சில விளக்கங்களைக் காணலாம்.

1) குர்ஆன் குகையில் கொடுக்கப்பட்டதா?
Torah- வும், பைபிளும் மனிதர்களால் திரிக்கப்பட்டு விட்டதால் இறுதியாக கடவுளால் ( அல்லாஹ்) முகமது நபிக்கு ஜிப்ரீல் (Gabriel) என்ற கடவுளின் தூதன் (arch-angel) மூலம் ஹீரா என்ற மலையிலுள்ள ஒரு குகையில் கொடுக்கப்பட்டதே ‘ இறுதி வேதமான’ குரான் என்பது இஸ்லாமியரின் நம்பிக்கை. – தருமி

குர்ஆன், நபிகள் நாயகத்திற்கு பகுதி பகுதியாக, காலம், நேரம், இடம் பொருள் கொண்டு 23 ஆண்டுகள் இறைவனால் ஜிப்ரீல் என்ற வானவர் மூலம் கொடுக்கப்பட்டது. அது குகையில் வைத்தோ அல்லது புத்தகமாகவோ கொடுக்கப்படவில்லை . ஜிப்ரீல் வசனங்களாக சொன்னதை மனனம் செய்து பின் தோழர்களும் மனைவியரும் மனனம் செய்தும், பிறகு எழுதியும் வைத்தனர்.

2) முஹம்மது நபி எழுதப்படிக்கத் தெரிந்த வர்த்தகரா ?
இதிலேயே, முக

20 comments

  1. ஐயா நல்லடியார்,
    தருமி அவர்கள் விளக்கம் கேட்டது ,நீங்கள் அதற்கு விளக்கம் சொல்லுவது எல்லாம் சரி. அதற்கு ஏன் “யாகாவா ராயினும் நாகாக்க” என்று தலைப்பு கொடுக்க வேண்டுமையா? ஏதோ தருமி நாகூசும் கேள்விகள் கேட்டது மாதிரி ஒரு தோற்றத்தை கொண்டுவருவது ஏன்? அவர் பேராசிரியர் என்பதை குறிப்பிட்டு கேலி செய்வது ஏன் ? அவர் எப்போதும் மத அறிவில் பெரிய விற்பன்னர் என்று பீற்றிக்கொண்டாரா என்ன ?

    இஸ்லாத்தில் இருக்கும் சிலருக்கே இஸ்லாம் பற்றி சரியாக தெரிவதில்லை என்று ஒப்புக்கொள்ளும் நீங்கள் ,அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில் முழுமை இல்லாதிருந்தால் ஏதோ பெரிய பாவம் என்று நிறுவ முனையாதீர்கள் .முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள் .

    “யாகாவா ராயினும் நாகாக்க” என்பது உங்களுக்கு நீங்களே சொல்லிக்கொண்டதாக இருந்தால் பொருத்தமாக இருக்கும்.

  2. ///பிறப்பால் கிறிஸ்தவராக இருந்தவர் ,///
    அய்யோ, இவர் பிறப்பால் மனிதன் அப்படின்னு நினைச்சேன்…எப்ப தான் மதத்தால் அடையாளம் காட்டப்படுவது நிறுத்தப்படப் போகிறதோ தெரியலை…

  3. good explanation.
    go ahead.

  4. நல்லடியார்

    //நீங்கள் ,அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில் முழுமை இல்லாதிருந்தால் ஏதோ பெரிய பாவம் என்று நிறுவ முனையாதீர்கள் .முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள் .//

    ஜோ,

    தருமிக்கும் எனக்கும் ஏதோ முன்பகை இருந்து அதற்குப் பழிவாங்கும் முகமாக பதிவிட்டது போல் நீங்கள் பின்னூட்டமிடுவது வருத்தமளிக்கிறது. முன்பின் பார்த்திராத எங்களுக்குள் அப்படி ஒன்றும் இல்லை.

    பேராசிரியர்.ஷாம் ஜார்ஜ் அவர்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியதற்கும் இஸ்லாத்தை கேள்விக்குட்படுத்துகிறேன் என்ற ஆவலில் அல்லது நன்னோக்கில் பதிவிட்டதற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்று விளக்க முடியுமா?

    இங்கு எழுதிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய வலைப்பதிவர்களெல்லாம் எதையாவது எழுதி உங்களையெல்லாம் மதமாற்றம் செய்ய முயலவில்லை. இஸ்லாத்தின் பெயரைச் சொல்லி அல்லது வேறு எதாவது காரணத்திற்காக பதிவிட்டாலும் பதிவிலோ அல்லது பின்னூட்டத்திலோ இஸ்லாத்தை அநாகரிகமாக விமர்சிப்பதற்கு மட்டுமே பதில் இட்டுக் கொண்டிருக்கிறோம்.

    தருமியை முன்னிருத்தி பதில் இட்டதன் நோக்கம் கீழ்கண்ட அவரின் பின்னூட்டமேயன்றிவேறில்லை என்பதை அறியவும்.

    முதலில் என் தவறை ஒப்புக்கொள்கிறேன். நான் கேட்ட 21 கேள்விகளில் ஒரு கேள்வி தவறான கேள்வியாகப் போய்விட்டமைக்கு மன்னிக்கவும். சுட்டிக்காட்டியமைக்கு நன்றி.

    இதனால் எனது மற்ற 20 கேள்விகளும் சரியென்று நீங்கள் சொல்லி விட்டதாகவோ, இல்லை அதற்குரிய பதில் அளிக்கத் தங்களுக்கு விருப்பம் இல்லையென/முடியவில்லையென நான் கருதலாமா?

    அவதூறுகளுக்கு அல்லது புரியாமைக்கு விளக்கம் கொடுத்தால் ஏன் கேலி என்றும் கிண்டல் என்றும் எடுத்துக் கொள்கிறீர்கள்?

    தருமியைப் பொருத்தவரை இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை என்பது அவரின் பதிவுகளிலிருந்து அறியலாம் என்பது வேறு விஷயம்.

    அன்புடன்

  5. நல்லடியார்

    //அய்யோ, இவர் பிறப்பால் மனிதன் அப்படின்னு நினைச்சேன்…எப்ப தான் மதத்தால் அடையாளம் காட்டப்படுவது நிறுத்தப்படப் போகிறதோ தெரியலை… //

    அணானி,

    சங்கர் — இந்து, சலீம்- முஸ்லிம், சைமன் – கிறிஸ்தவர். இப்படி ஒவ்வொருவரும் தனது பெயரின்மூலம் இன்ன மதத்தைச் சார்ந்தவர் என்று அடையாளப் படுத்தப் படுகிறார். அந்த வகையில் ஷாம் ஜார்ஜ் அவர்களை கிறிஸ்தவர் என்றேன். இதில் என்ன தவறு கண்டீர்?

    ஏதேனும் மதங்களில் இருப்பவர்களெல்லாம் மனிதர்கள் இல்லையா?

  6. பகுத்தறிவாளன்

    //இஸ்லாத்தில் இருக்கும் சிலருக்கே இஸ்லாம் பற்றி சரியாக தெரிவதில்லை என்று ஒப்புக்கொள்ளும்//

    நண்பரே இதத்தான் நா பல எடங்கள்ல மாங்கு மாங்குன்னு கத்திகிட்டு இருக்கேன். இத்த நம்ம தருமி சாரு ஒத்துக்கிட்டாரான்னு மொதல்ல பாருங்க.

    பைபிள்ள இருப்பதப் பத்தி ஒரு கேள்வி கேட்டத மரியாதய்க்கு கூட இது வர பிரசுரிக்காத்தவரு, தன்ன மொதல்ல அடயாளப்படுத்துன பைபிள்ள இருப்பதயே முழுமையா தெரியாத்தவரு, தான் மதம் மாறுனதுக்கு தன்னோட மதத்தப்பத்தி தவறான ஒரு காரணத்த கொடுக்கும் போது மத்த மதத்தப் பத்தி எந்த அளவுக்கு இவருக்கு தெரிஞ்சிருக்கும்.

    “யாகாவாராயினும் நாகாக்க” என்பதன் அர்த்தம் பேராசிரியரான அவருக்கேத் தெரியாதா என்ன? அத்த நாபகப் படுத்தத் தான் நல்லடியாரு இந்த தலப்ப வச்சாராயிருக்கும். சரியா தான் வச்சிருக்காரு.

    இஸ்லாமும் கிறித்துவமும் ஒரு தந்த மதங்கள் என்பத அறிஞ்ச தருமி அய்யா, அதில ஒண்ணுல பெறந்து வளந்தவருக்கு மத்த மதத்துடைய அடிப்படய(ஆதத்தின் மனைவி பெயர் இஸ்லாத்தில் கூறப்படவில்லை என்ற அவரின் கண்டுபிடித்தல்) கூட தெரியவில்லயின்னா அவரு எந்த அளவுக்கு மதத்த ஆராய்ச்சி பண்ணியிருப்பாருன்னு வெளங்குதுல்லியா.

    சரி அவரு பேராசிரியரு ஆனதுனால அவருக்கு மரியாத கொடுக்கணுமின்னு நீங்க அவருக்கு வக்காலத்து வாங்கியிருக்கீங்கன்னா நானும் ஒங்க கச்சி தான்.

    ஆனா அவருடைய “மதம் மாறுன கதய” விமர்ப்பதின் அடிப்படைல கூறுனா நா நல்லடியாருடைய கச்சி தான்.

    ஒண்ண பத்தி ஒரு கருத்து கூறுவதுக்கு முன்னாடி அத்த பத்தி தீர ஆய்ந்து முடியவில்லயின்னா யாரிடமாவது கேட்டு தெரிஞ்சிகிட்டு கருத்து சொல்லுவதல்லவா சிறந்தது. இது கூடவா பேராசிரியரான தருமி சாருக்கு தெரியல.

    //அடுத்தவர் அறிந்து கொள்ளும் முகமாக கேட்கும் கேள்விகளில்//

    இது ரொம்ப ஓவரா ஒங்களுக்கு தெரியலியா?

    நம்ம தருமி சாரு என்ன அறிந்து கொள்ளவா அந்த கேள்விகள கேட்டாரு. மொதல்லயே தீர்மானமா ஒரு முடிவுக்கு வந்த பின்னாடி தான் அந்த முடிவுக்கு வரக் காரணம் என்ன அப்பிடீன்னு தானே அவரு காரணங்கள அடுக்கினாரு. அதுல இருக்க தப்ப சுட்டிக்காட்டினா தன்னோட முந்தய முடிவ மறுபரிசீலனைக்கு உட்படுத்தறேன்னு சொல்றது தானே “அறிந்து கொள்ள” கேட்பவருக்கு அழகு. ஆனா அவரு இது வர அப்பிடி ஒரு வார்த்த சொல்லியிருக்காரா?

    //முடிந்தால் விளக்கம் கூறி புரிய வைக்க முயலுங்கள்//

    இது நல்ல வாசகம் தான். ஆனா நீ எப்படி சொன்னாலும் நா என் முடிவில இருந்து மாறமாட்டேன்னு சொல்லறவகளுக்கு இது சரியாகுமான்னு கொஞ்சம் யோசிச்சு பாருங்க.

  7. //அவதூறுகளுக்கு அல்லது புரியாமைக்கு விளக்கம் கொடுத்தால் ஏன் கேலி என்றும் கிண்டல் என்றும் எடுத்துக் கொள்கிறீர்கள்?//

    நல்லடியார்,
    புரியாமை சரி .அவதூறு இதில் எங்கே இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.

    நான் பார்த்தவரை இஸ்லாமிய சகோதரர்கள் பொறுமையாக பதில் சொல்ல காத்திருப்பதாக சொல்கிறீர்களே தவிர எளிதில் பொறுமையை இழந்து உள்நோக்கம் கற்பிக்க ஆரம்பித்து விடுகிறீர்கள் .இஸ்லாமியரல்லாதவர் இஸ்லாம் பற்றி தவறான கண்ணோட்டம் கொண்டிருப்பது இயல்பு .நாளடைவில் பல விளக்கங்கள் மூலம் கண்ணோட்டங்கள் மாறலாம் .இஸ்லாம் பற்றிய கண்ணோட்டங்களும் அறியாமையும் மாறிக்கொண்டேயிருக்கின்றன .தருமி கிறிஸ்தவராக பிறந்து அந்த நம்பிக்கையிலிருந்து வெளியே வந்திருக்கிறார் .நான் வரவில்லை .கிறிஸ்துவம் பற்றிய அவர் புரிதல் எனக்கு கோபத்தையும் ஆத்திரத்தையும் வரவழைத்தால் அது என் தவறு .தர்க்க ரீதியாக விளக்க எனக்கு அறிவு இருந்தால் முயலலாம் .அல்லது நம்பிக்கையின் பால் வாதம் செய்வது மடமை என்ற என் கொள்கையின் படி வாழாவிருந்து விடலாம் .நான் புரிந்து கொண்டமாதிரி அவர் புரிந்து கொள்ளவில்லையென்பதால் அது அவதூறாக போய் விடுமா?

    //தருமியைப் பொருத்தவரை இஸ்லாத்தை அறிந்து கொள்ளும் ஆர்வம் இல்லை//

    ஆர்வம் இல்லை என்று முடிவுக்கு வந்தபின் ஏன் இந்த பதிவும் விளக்கங்களும் ?

  8. //பேராசிரியர்.ஷாம் ஜார்ஜ் அவர்கள் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியதற்கும் இஸ்லாத்தை கேள்விக்குட்படுத்துகிறேன் என்ற ஆவலில் அல்லது நன்னோக்கில் பதிவிட்டதற்கும் என்ன சம்பந்தம் இருக்கும் என்று விளக்க முடியுமா?//

    அவர் கிறிஸ்தவத்திலிருந்து மட்டும் வெளிவரவில்லை . மதம் என்பதைத் தாண்டி கடவுள் நம்பிக்கை என்பதிலிருந்தும் வெளியேறியிருக்கிறார் .ஒரு நாத்திகராக கடவுள் நம்பிக்கையையும் அதனடிப்படையில் அமைந்த எல்லா மதங்களையும் கேள்விகுட்படுத்துகிறார் (இந்து மதத்தை குறித்து குறைவாக வினா எழுப்பியது குறித்து விரிவாக விளக்கம் வந்து விட்டது எனக்கருதுகிறேன்) .இதில் உள்நோக்கம் கற்பிப்பதற்கு எதுவுமில்லை.

    //இங்கு எழுதிக் கொண்டிருக்கும் இஸ்லாமிய வலைப்பதிவர்களெல்லாம் எதையாவது எழுதி உங்களையெல்லாம் மதமாற்றம் செய்ய முயலவில்லை//
    இதிலிருந்து என்ன சொல்ல வருகிறீர்கள் ,அதுவும் எனக்கு சொல்லுகிறீர்கள் என புரியவில்லை .இதற்கு எதுவும் புதுமையான அர்த்தம் கற்பிக்கவும் நான் விரும்பவில்லை.

  9. இந்த வேதங்களை தற்கால இந்துக்களில் யாரும் பின்பற்றுவதில்லை. இந்து மதம் இஸ்லாம் போல் அல்லாமல் கால மாற்றத்திற்குட்பட்டது என்று சொல்லலாம். உண்மைதான்! இவ்வாறான அநாகரிகக் கோட்பாடுகளை வேதம் என்று ஏற்க எவருக்கும் வெட்கமாகத்தான் இருக்கும். இன்று இந்து மதத்தின் காவலர்களாகத் தங்களைச் சொல்லிக் கொள்பவர்கள் அவ்வாறு சொல்வதில்லை. இந்திய அரசியலமைப்பில் இந்த இந்து வேதங்களைச் செயல்படுத்த வாய்ப்பில்லை. ஆனால் இராம ராஜ்ஜியக் கனவுலகில் சஞ்சரித்து மிதந்து கொண்டிருப்பவர்கள் அவ்வாறு இந்து வேதங்களையும் கடவுளர்களையும் கைவிட்டு பிழைப்பு நடத்த முடியாது என்பதால் அவர்கள் இருக்கும்வரை வேதங்களும் இருந்து கொண்டுதான் இருக்கும்.

    தன்மானமுள்ள எந்த இந்துவும் ஆரிய வேதங்களைப் பின்பற்ற முடியாது; பின்பற்றாவிட்டாலோ உண்மையான இந்துவாக இருக்க முடியாது. இதுதான் இன்றைய நம் இந்துச் சகோதரர்களின் துர்பாக்கிய நிலை!

    This is from your previous post.
    Before ridiculing Dharumi you
    should be ashamed of your ignorance
    about Hinduism and Hindus.We Hindus
    are willing to throw out what is
    irrelevant and harmful whether it
    is in practice or in scriptures.
    Hindu women now get equal share
    in property.You bring a similar change in Muslim Personal law and enable women to get equal property rights.It is your AIMPLB which wanted that
    muslims should be exempted from
    prohibition of child marriages act
    on account of religion.Are you not
    ashamed about it.No Hindu organisation has made such a demand.In terms of education
    they are far ahead of muslim women.
    A major reason for lack of education among muslim women is
    religion. As it is claimed that
    islam prohibits mingling of men and women most muslim women are
    not sent to co-educational schools
    and colleges.After attaining pubetry they are denied education.

  10. நல்லடியார்

    //புரியாமை சரி .அவதூறு இதில் எங்கே இருக்கிறது என்று எனக்கு புரியவில்லை.//

    தருமியின் பதிவுகளில் அவதூறுகள் இல்லை; புரியாமையே உள்ளது. அவதூறு என்று சொன்னது இஸ்லாம் பற்றி வலைப்பூவில் இன்ஃபர்மேசன் கொடுத்துக் கொண்டு என்னமோபோ என்று இருப்பவர்களைச் சொன்னேன்.

    //ஆர்வம் இல்லை என்று முடிவுக்கு வந்தபின் ஏன் இந்த பதிவும் விளக்கங்களும் ? //

    தருமி கேட்டக் கேள்விகளுக்கு இஸ்லாத்தில் பதில் இல்லையோ? என்ற தோற்றத்தை தவிர்க்கவே.

    தனக்குச் சம்பந்தமில்லாதவற்றைப் பற்றி எவர் வேண்டுமானாலும் எதுவும் எழுதலாம், அதேசமயம் சம்பந்தப்பட்டவர்கள் பதில் கொடுத்தால் கேலி/கிண்டல் செய்கிறார்கள் என்று குறைசொல்வது. என்ன நியாயமோ போங்கள் ஜோ!

  11. முத்து(தமிழினி)

    நல்லடியார்,

    1.சாம் ஜார்ஜ் ஆங்கில பேராசிரியர் அல்ல

    2.யாகாவாராயினும் நாகாக்க என்ற தலைப்பு இந்த பதிவுக்கு சரியானதல்ல.

    3.இஸ்லாம் பற்றிய அந்த பதிவை நன்றாக தர்க்கபூர்வமாகவே எழுதி உள்ளார் பேராசிரியர். உங்கள் பார்வை அதிலிருந்து மாறுபடுவது சரிதான்.இஸ்லாம் பற்றிய பதிவுக்கு பதில் தருவது உங்கள் உரிமை என்பதை நான் ஒத்துக்கொள்கிறேன்.தலைப்பு உங்கள நோக்கத்தை தவறாக எண்ண செய்கிறது.

  12. ஆங்கிலப் பேராசிரியராக இருந்து – இல்லை; தவறு.

  13. நல்லடியார்

    //தலைப்பு உங்கள நோக்கத்தை தவறாக எண்ண செய்கிறது. //

    முத்து,

    உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசாமல் தலைப்பைப் பற்றியே தர்க்கிக்க வேண்டாமே!நான் தமிழில் (அவ்வளவு)புலமை பெற்றவன் அல்லன்! :-)

    //ஆங்கிலப் பேராசிரியராக இருந்து – இல்லை; தவறு. //

    அப்படியா! அடிக்கடி ஆங்கிலப் பழமொழிகளை மேற்கோலிட்டு எழுதியதால் தங்களை ஆங்கிலப் பேராசான் என்று நினைத்துக் கொண்டேன்.

    உங்களின் சில கேள்விகளுக்கு நான் கொடுத்திருக்கும் விளக்கங்கள் பற்றி உங்கள் கருத்தென்ன?

    அன்புடன்,

  14. அட்றா சக்கை

    முத்து,

    //இஸ்லாம் பற்றிய அந்த பதிவை நன்றாக தர்க்கபூர்வமாகவே எழுதி உள்ளார் பேராசிரியர். //

    அவர் எழுதியவற்றை உண்மையில் படித்து விட்டுத் தான் எழுதுகிறீர்களா? அவரது பார்வை மற்ற விஷயங்கள் எப்படியோ, இஸ்லாம் குறித்த விஷயங்கள் அபத்தமாகத் தான் இருந்தன.

    அதுவும் அவர் கிறிஸ்தவத்திலிருந்து வெளியேறியதற்கான காரணமாக இதைச் சொல்வது!

  15. முத்து(தமிழினி)

    அட்றா சக்கை மற்றும் நல்லடியார்,

    நாத்திக பார்வைக்கும் ஆத்திக பார்வைக்கும் வேறுபாடு உண்டு.

    நேசகுமார் ஆத்திகர்.இந்து.அவரும் நீங்களும் விவாதிக்கும் தளம் வேறு.
    என்னை போன்ற தருமி போன்ற நாஸ்திகர்கள் பேசும் தளம்வேறு.இவ்வளவுதான் எனக்கு புரிந்தது.தலைப்பு எனக்கு வருத்தம் தந்தது என்பதுதான் நான் சொன்னது.புரிந்துகொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

  16. நல்லடியார்

    முத்து,

    புரிந்து கொண்டேன்! இனி அடுத்தடுத்த கேள்விகளுக்கான பதிலை வேறு தலைப்பில் கொடுக்கிறேன். சரியா?

    இயேசுவைக் காப்பாற்றாமல் இறைவன் கைவிட்டதாக பைபிளில் சொல்லப்பட்டுள்ளதால், இறைவன் ‘வல்லமை பொருந்தியவன்’ என்ற தத்துவம் கேள்விக்குறியானது என்கிறார்.குர்ஆனில் இயேசுவை இறைவன் காப்பாற்றியதாகச் சொல்லப் பட்டுள்ளது.

    ஆக, தருமி எதிர்பார்த்தபடி இறைவன் இயேசுவைக் காப்பாற்றி விட்டான்.

    தருமியின் கேள்விகள் தர்க்க ரீதியானவை என்றால் இயேசுவைக் காப்பாற்றிய இறைவனை ஏற்றுக் கொள்வதில் என்ன கஷ்டம் வந்ததாம்?

  17. எல்லப்பன்

    //உள்ளடக்கத்தைப் பற்றிப் பேசாமல் தலைப்பைப் பற்றியே தர்க்கிக்க வேண்டாமே!நான் தமிழில் (அவ்வளவு)புலமை பெற்றவன் அல்லன்! :-)
    //

    திரு நல்லடியார் :)

    ஜோ / முத்து அத்தனை முறை சொல்லியும் தலைப்பை மாற்றாமல் இருப்பதன் காரணம் ?? புலமை இல்லையென்றால் மற்றவர்கள் சொல்லும்போது அதை ஏற்றுக் கொள்ளவேண்டும் அல்லவா?

    உங்களுக்கு ஒரு நியாயம் தருமிக்கு ஒரு நியாயமா ஐயா ??

    அவர் தெரிந்துக் கொள்ள கேட்கும் கேள்விகளுக்கு உள்ளர்த்தம் கற்பித்து எழுதும் தாங்கள் தவறு என்று தெரிந்து அதை மாற்ற மறுப்ப்பதேன் ?

    எத்தனை முறை மற்ற மதங்கள் பற்றிய விளக்கங்களை சொன்னவுடன் தாங்கள் ஏற்றுக் கொண்டு இருக்கிறீர்கள் ..

    ஹ்ம்ம்ம் ம்மாமியார் உடைத்தால் பழமொழி நினைவுக்கு வருவது தவிற்க முடியவில்லை.

    முதலில் எதையும் ” என் சாதி ” ” என் மதம் ” என்று இட்டுக் கட்டுவதை நிறுத்துங்கள். ஒரு காலத்தில் தாயாய் பிள்ளையாய் பழைக் கொண்டிருந்த இஸ்லாமிய இந்திய சகோதரர்கள் ஒருவருக் கொருவர் முகம் திருப்பிக் கொண்டு போவதற்கு காரணம்.. உம்மைப் போன்றவர்களும் ஒரு காரணம். மதநல்லிணக்கத்தை விட .. மத துவேஷத்தை ஏற்படுத்தத் தான் பெரும்பாலோர் விழைகிறீர்கள். இது இந்து / கிருத்துவ மதங்களை சார்ந்து பிற மதங்களை தாக்கி எழுதும் அனைவருக்குமே பொருந்தும்.
    ****

    ///
    தருமியின் கேள்விகள் தர்க்க ரீதியானவை என்றால் இயேசுவைக் காப்பாற்றிய இறைவனை ஏற்றுக் கொள்வதில் என்ன கஷ்டம் வந்ததாம்?
    ///

    இது மதமாற்றத்திற்கு தாங்கள் விடும் அழைப்பு போலல்லவா இருக்கிறது..

    கண்ணதாசனின் பாடல் ஒன்று..

    கண்போன போக்கிலே கால் போகலாமா….

    ….

    திருந்தாத பல உள்ளம் இருந்தென்ன லாபம்..
    வருந்தாத பல உள்ளம் வாழ்ந்தென்ன லாபம்
    இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்லவேண்டும்
    இவர் போல யாரென்று ஊர் சொல்ல வேண்டும்

    ….
    ….

    இது போன்று நாம் எழுப்பும் துவேஷங்களால் சத்தியமாக நம்முடைய பேர் நிலைத்து நிற்காது.. அப்படியே நின்றாலும் வருங்கால சந்ததியர்களுக்கு கொடுமை இழைத்தவர்களின் பட்டியலில் தான் சேரப் போகிறோம்

    ஊதுகிற சங்கு ஊதுகிறேன்.

    எல்லப்பன்

  18. மிதக்கும் வெளி

    தோழர் இன்றைக்கு இந்துத்துவ பாசிஸ்ட்கள் எல்லா நவீன ஊடகங்களின் வழியாகவும் இந்து பார்ப்பனியக் கருத்துக்களைத் திணித்துக்கொண்டிருக்கிறார்கள்.நீங்களோ மார்க்க விஷயம் என்று மண்டையை உடைத்துக் கொண்டிருக்கிறீர்களே?

  19. ///இது மதமாற்றத்திற்கு தாங்கள் விடும் அழைப்பு போலல்லவா இருக்கிறது..///

    அந்த தவறு இல்லை என்று நிறுபிக்கும் போது அழைப்பு விடுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.
    பேசுவதாக இருந்தால் எப்படியும் எந்த கருத்தையும் எடுத்துக்கொண்டு பேசலாம் அதற்கு உன்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை வாத திறமை இருந்தால் போதும் என்பது என் கருத்து.

    ஷாஜஹான்

  20. எல்லப்பன்

    ////
    அந்த தவறு இல்லை என்று நிறுபிக்கும் போது அழைப்பு விடுவதில் தவறு இருப்பதாக எனக்கு தெரிய வில்லை.
    பேசுவதாக இருந்தால் எப்படியும் எந்த கருத்தையும் எடுத்துக்கொண்டு பேசலாம் அதற்கு உன்மை இருக்க வேண்டும் என்பது அவசியம் இல்லை வாத திறமை இருந்தால் போதும் என்பது என் கருத்து.

    ///

    :) அதைத்தானே இங்கு எல்லோரும் திறம்பட செய்துக் கொண்டு இருக்கிறீர்கள். ( I include everyone.. ). வன்மத்தையும், விஷத்தையும் விதைத்து வருங்கால சந்ததிகளை விஷ வித்துக்களாக மாற்றிக் கொண்டு இருக்கிறீர்கள் ( உங்களுக்கு மட்டும் அல்ல… மதத்தின் பேரால் பழித்துக் கொண்டு இருக்கும் அனைவருக்குமே இது பொருந்தும்)

    அதையும் தவிற தவறு சரி என்பதற்கு அளவுகோலாய் எதைக் கொண்டு நியாயப் படுத்துவீர்கள். உங்களுக்கு சரி என்று படுவது மற்றவர்களுக்கு தவறாயும் தங்களுக்கு தவறென்று படுவது பிறருக்கு சரியாகவும் இருக்கலாம்.

    எல்லா விவாதங்களுக்கும் இரண்டு பக்கம்… உனது பக்கம் மற்றும் எனது பக்கம்… முடிவென்பது என்றுமே கிடையாது. இப்படி செய்யாதீர்கள் என்று உரைக்கத் தான் வந்தேன். என்னையும் உங்கள் மத அரசியல் சாக்கடையில் இழுத்து விஷம் புகட்ட வேண்டாம்.

    உங்களின் விஷ(ய)ம் உங்களோடு

    வாழ்க வளமுடன்.

    மரத்தை மறைத்தது மாமத யானை
    மரத்தில் மறைந்தது மாமத யானை
    பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
    பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

    இத்துடன் கூடவே கீழ் கண்டவற்றையும் சேர்த்துக் கொள்ளுங்கள்

    மதத்தை மறைத்தது அன்பும் அனைத்தும்
    மதத்தில் மறையுது அன்பும் அனைத்தும்

    எல்லப்பன்

    PS : GOOD BYE to this kind of thread and PPL.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *