Featured Posts
Home » பொதுவானவை » புதைத்தல் Vs. எரித்தல்: ஒரு அறிவியல் பார்வை

புதைத்தல் Vs. எரித்தல்: ஒரு அறிவியல் பார்வை

இறந்தவர்களைப் புதைப்பதால் இடநெருக்கடி ஏற்பட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட வாய்ப்புள்ளதால் எரிப்பதே சிறந்தது என்று “என்னை புதைப்பதா? எரிப்பதா?” என்ற ஒரு பதிவில் அருமையான விவாதத்தை எழுப்பி இருந்தார்.இதை ஒரு மதப்பிரச்சினையாகப் பார்க்காமல் சமூகக் கண்ணோட்டத்தில் தீர்வு காண வேண்டும் என்றும் வேண்டியிருந்தார். அதில் பெரும்பாலோர் புதைப்பதை விட எரிப்பதே சிறந்தது என்று கருத்துத் தெரிவித்திருந்தார்கள். உண்மையில் எந்த முறை சிறந்தது என்று அலசிப் பார்ப்போம். அதற்கு முன் அ.மார்க்ஸ் எழுதிய ‘இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக் கதைகள்’ என்ற நூலிலிருந்து:

கேள்வி: நாம் செய்வது எல்லாவற்றிற்கும் எதிராகச் செய்கிறார்களே இஸ்லாமியர்! நாம் இறந்தவர்களை எரித்தால் அவர்கள் புதைக்கிறார்களே?

பதில்: ஒவ்வொருவரிடமும் ஒவ்வொரு விதமான பழக்கங்கள் உள்ளன. இஸ்லாமியர் மட்டுமல்ல. அய்ரோப்பியர், அமெரிக்கர், ரசியர் எனப் பலரும் புதைப்பதையே பழக்கமாக வைத்துள்ளனர். பண்டைய தமிழ்ச் சமூகத்திலும் கூடப் புதைக்கும் பழக்கம் இருந்துள்ளது. மதத் தலைவர்கள் இறக்கும்போது எரிக்காமல் புதைத்து ‘அதிஷ்டாணம்’ கட்டி வழிபடுவது இந்து மதப் பழக்கம்தான். அறிவியல் ரீதியாய் பார்த்தாலும் கூட எரிப்பதைக் காட்டிலும் புதைப்பதுதான் சரியானது எனச் சுற்றுச் சூழலியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

மனித வரலாற்றில் பிறப்பும் இறப்பும் தொடர்ந்து நடந்து கொண்டு இருந்தாலும் சில காலகட்டங்களில் பிறப்பை விட இறப்பு மிகுந்து விடுகின்றது. உதாரணமாகப் போர்கள், விபத்துகள், இயற்கைப் பேரழிவுகள் போன்றவற்றைச் சொல்லலாம். இயற்கையாக நிகழும் இறப்பாக இருந்தாலும் எதிர்பாராத பேரழிவுகளாக இருந்தாலும் உலகம் தோன்றியது முதல் இதுநாள் வரை இறந்த சடலங்களைப் புதைக்க இடமில்லை என்ற இடநெருக்கடி எந்த நாட்டிலும் இருந்ததாகத் தெரியவில்லை. மேலும் உலகில் மனிதன் வாழத் தகுந்த நிலப்பரப்பில் பயன்படுத்தப்படும் நிலப்பகுதி வெகு சொற்பமே எனும்போது மயான இடநெருக்கடி என்பது உலகளாவிய பிரச்சினையன்று .

மேலும் உலகில் மனிதன் மட்டும் இறப்பதில்லை. உயிருள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும் மரணம் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே தான் இருக்கிறது. இத்தகைய தவிர்க்க முடியாத இயற்கை நிகழ்வில் மரித்தவை மண்ணோடு மக்கிப் போவதும் இயற்கையாக நடந்து கொண்டே இருக்கிறது. ஜீவராசிகளில் மனிதன் மட்டுமே இறந்த உடலை முறையாக எரித்தோ அல்லது புதைத்தோ அடக்கம் செய்கிறான். வனங்களிலும் நீர்நிலைகளிலும் வாழும் உயிரினங்கள் இறந்தபின் மண்ணோடு மண்ணாகக் கலந்து மறைந்து போகின்றன.

மனிதன் பிறந்தது முதல் இறக்கும்வரையிலான வழிகாட்டல்களை இஸ்லாம் வழங்கி உள்ளது. இறந்த சடலங்களைக் குளிப்பாட்டி சுத்தம் செய்து அதற்குரிய இடத்தில் நல்லடக்கம் செய்வது முஸ்லிம்களின் கடமை. இதே போல் யூத, கிறிஸ்தவ மதங்களிலும் எரிப்பதை விடப் புதைப்பதே பின்பற்றப்படுகின்றது. இந்து மதத்தில் எரிப்பதும் புதைப்பதும் நடைமுறையில் உள்ளது. எல்லா மதங்களிலும் பொதுவாக சிறு குழந்தைகளின் சடலங்களைப் புதைப்பது நடைமுறையில் உள்ளது.

இஸ்லாம், இறந்தவர்களின் அடக்கஸ்தலத்தை வெறும் மண்ணறையாகவே கருதுகிறது . இறந்தவர்களின் அடக்கஸ்தலங்களில் சமாதி கட்டுவதையோ அல்லது அலங்கரிப்பதையோ விரும்பவில்லை. ஒரு சிற்றூரில் வாழும் நூற்றுக்கணக்கான, அல்லது ஒரு பேரூரில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இரண்டிலிருந்து நான்கு வீடுகள் கட்டிக் கொள்ளக் கூடிய நிலப்பரப்பே சவக்குழிகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது. ஓரிடத்திலிருந்து தொடங்கி, ஒரு சுற்ற
ு சுற்றி, அதே இடத்திற்கு வந்து சேர ஏறத்தாழ இரண்டு ஆண்டுகள் ஆகிவிடும்; புதைக்கப் பட்ட உடல்களும் மண்ணோடு மண்ணாகி இருக்கும்.

இவ்வாறு, பல்வேறு காலகட்டங்களில் மரணித்தவர்களை ஒன்றன்மேல் ஒன்றாகப் புதைப்பதால் முஸ்லிம்களின் மண்ணறையகத்தில் இடநெருக்கடிக்கு வாய்ப்பேயில்லை. மேலும் இறந்தவர்களுக்கு சமாதி கட்டுவதை இஸ்லாம் தடுப்பதால், இஸ்லாமிய முறைப்படையான சவ அடக்கத்தில் இடநெருக்கடி அறவே இல்லை.

சுற்றுச் சூழல், சிக்கனம், நடைமுறைச் சாத்தியம் ஆகியக் காரணிகளைக் கொண்டு ஒப்பீடு செய்யும் போதும் எரிப்பதைவிடப் புதைப்பதே சிறந்ததாகும். எப்படியெனில், மனித உடலை எரிக்க நவீன எரிகலன்களும் மின் மயானங்களும் தற்காலத்தில் வந்து விட்டன. இதற்கு முன் இறந்த உடலை எரிக்கும் போது நரம்புகள் முறுக்கிக் கொண்டு எரிந்து கொண்டிருக்கும் சவம் எழுந்து நிற்கும்போது, தடியால் அடித்து மீண்டும் சிதையில் தள்ளுவர். இருக்கும்வரை மதிப்புடன் இருந்த ஒருவரின் சடலம் இறந்தபின் சிதைக்கப்படுவதைக் கண்ணால் காணும் நெருங்கியவர்களின் மனவேதனை இறந்த துக்கத்தை விட அதிகமானதாகும்.

இது ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் பிணம் எரிப்பதை ஒரு குறிப்பிட்ட சமூகத்தவர் மட்டுமே செய்து வருவதால், அந்தச் சமூகத்தவருடன் (ஒரே மதத்தவராக இருந்தாலும்) பிறர் திருமண உறவு வைத்துக் கொள்வதில்லை. அதேபோல் ஏனைய பொதுநிகழ்வுகளிலும் ஒதுக்கி வைத்தே பார்க்கப்படும் அவல நிலைக்கு ஆளாகின்றனர். அவர்களின் பிள்ளைகள் என்னதான் படித்து கெளரவமான உத்தியோகத்திற்கு வந்தாலும் வெட்டியான் பரம்பரை என்றே இழிவாகப் பார்க்கப்படுகின்றனர்.

இஸ்லாத்தில் பெண் ஜனாஸாக்களை நெருங்கிய உறவினர்கள் சுத்தம் செய்து நல்லடக்கம் செய்ய வேண்டும். மற்றவர்களை சவ அடக்கம் செய்வது ஊர் மக்களின் பொதுவான கடமையாகக் கருதப்படுவதால், குறிப்பிட்ட நபர்களை மட்டும் நம்பியிருக்க வேண்டியது இல்லை. இதன் மூலம் வெட்டியான் என்ற இழிபெயர் நீங்கவும் சமூக நல்லிணக்கத்திற்கும் இஸ்லாமிய முறையிலான சவ அடக்கம் வழிவகுக்கிறது. இறந்தவரை புதைக்கும் வரை நெருங்கியவர்களும் உறவினர்களும் இருந்து நல்லடக்கம் செய்ய முடியும். ஆனால் மனோதிடமும் பயிற்சியும் பெற்றவர்கள் மட்டுமே பிணம் எரிக்க முடியும்.

இறந்தவர் குடும்பத்தினரின் நிதிநிலையைக் கணக்கிட்டால் சடலத்தை எரிப்பதற்கான செலவு, புதைப்பதற்கு ஆகும் செலவை விட அதிகமே. பிணம் நன்றாக எரிவதற்கு சுமார் 1600 முதல் 2000 டிகிரி பாரண்ஹீட் வெப்பம் தேவைப்படும் . இதற்கான கருவிகளின் விலையும் அதிகம் மின்மயானங்கள் கிராமப் பகுதிகளில் இல்லாமல் நகர்ப்புறங்களில்தான் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எரியூட்டத் தேவையான மின்சாரம் நகர்ப்புறங்களில் மட்டுமே தடையின்றிக் கிடைக்கும் என்பதும் ஒரு காரணம்.

சுற்றுச்சூழலைக் கருத்தில் கொண்டால் மனித உடல் எரியூட்டப்படுவதால் எழும் புகை மற்றும் மாசுக்களால் சுற்றுப்புறச் சூழல் கெடுகின்றது. புதைப்பதால் நாற்றமெடுத்த சவம் கூட மண்ணுக்குள் அடங்கிவிடும். ஆனால் எரியூட்டப்படுவதால் எழும் நாற்றம் பல மைல் தூரங்கள் வரை காற்றில் பரவி ஆரோக்கியமான காற்றை மாசுபடுத்த வாய்ப்புகள் அதிகம்.

ஐக்கிய நாடுகள் சபையின் சுற்றுச்சூழல் கண்கானிப்பு அமைப்பின் Persistent Organic Pollutants (POP) அறிக்கையின்படி பிணம் எரியூட்டப் படுவதால் கொடிய விஷத்தன்மையுள்ள நைட்ரஜன் ஆக்சைடு, கார்பன் மோனாக்சைடு, அமில மழைக்குக் காரணமான கந்தக டையாக்சைடு ஆகியவை வெளியேறுகின்றன. பிண எரிப்பால் வெளியாகும் டையாக்ஸினின் அளவு 0.2%. உலகின் பெரும்பாலான பகுதிகளில் பிணங்களை புதைப்பதே வழக்கத்தில் உள்ளதால் இந்த அளவு ஓரளவு கட்

4 comments

  1. //ஒரு பேரூரில் வாழும் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களுக்கு இரண்டிலிருந்து நான்கு வீடுகள் கட்டிக் கொள்ளக் கூடிய நிலப்பரப்பே சவக்குழிகளுக்காகப் பயன்படுத்தப் படுகிறது.//

    True. ஆம். கோடீஸ்வரனைப் புதைத்த இடத்தில் பின்னர் கோவணாண்டியையும், (வைஸ் வெர்சாவாகவும் கூட) புதைக்கிறார்கள்.

    அரேபிய மன்னர் புதைந்த இடத்தில் கடந்தகாலத்திலும் எதிர்காலத்திலும் ஒரு ஏழையோ பணக்காரனோ மறுபடி புதைக்கப்படலாம்.

    நியாயமான கட்டுரை.
    சகோ. தெ.கா-வின் கவனத்திற்கு கொண்டு வந்தீர்களா?

  2. என்னுடைய கேள்வி எது சுகாதாரம் என்பதனை பற்றி (முழுமையான அளவில்) அல்லவே? இட நெருக்கடிப் பற்றித்தான். இங்கு நான் வட அமெரிக்காவில் கவனித்தவைகளை கருத்தில் கொண்டு எழுப்பப்பட்ட ஒரு ஐயப்பாடுதான்.

    உதாரணத்திற்கு இரண்டாம் உலகப் போரில் மாண்டவர்களை இங்கு ஒரு சவுக்கத்தில் குறைந்தபட்சம் 10 ஆயிரம் ஆட்களையாவது (கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும்) ஒரே இடத்தில் அடக்கம் செய்து, அவர்களை அடையாளம் காணும் பொருட்டு கல்வெர்ட் ஒன்றும் வைக்கப்பட்டுள்ளது. இது ஒரு மாநிலத்தில் மட்டும் ஒரு நகரத்தில் நான் கண்டது.

    இதே போன்று எல்லா மாநிலங்களிலும் இருக்கும். இந்த கல்வெர்ட்களை அகற்ற முடியுமா? இருப்பினும் அதில் நான் ஒரு நன்மையை காண்கிறேன், அவைகள் நல்ல முறையில் ஒரு பூங்கவிற்கு இணையாக பராமறிக்கப் படுகிறது, பச்சைப் பசேலென்று. அது ஒரு புறமிருக்க,

    நீங்கள், மாசுபாட்டைப் பற்றி பேசியிருக்குறீர்கள் எரிப்பதனால், இன்றும் நடக்கும் இந்த உலகளாவிய கார்பன் மோனக்சைடு நாம் ஓட்டும் கார்களில் மிருந்தும் அல்லது விடும் தொழிற்சாலைகளை காட்டீலுமா இந்த எரிக்கும் செயல் நச்சை வெளிக் கொணரப்போகிறது.

    இன்றும் நடக்கும் அட்டுழியங்கல், இந்த குண்டு போடுதல் தினமும் கார் குண்டுகள், ஆயிலை கடலில் கலப்பது மற்றும் இன்னபிர, அவைகளுடன் இதனை ஒப்பிடும் பொழுது இந்த மனுசகளுங்க இறந்து எரிக்கப் படுறதிலய அவ்வளவுக்கு இந்த காத்து மாசுப்படப் போகுது?

  3. நல்லடியார்

    *இயற்கை நேசி*,

    இஸ்லாமிய முறைப்படியான நல்லடக்கத்தில் இறந்தவர்களைப் புதைப்பததால் இடநெருக்கடி ஏற்படுவதில்லை. ஏனெனில் இறந்தவர்களின் அடக்கத் தலங்களை அலங்கரிப்பதையும் அவற்றின் மீது அல்லது சுற்றி கட்டிடம் கட்டுவதையும் இஸ்லாம் அங்கீகரிக்கவில்லை. பிற்காலத்தில் வழிபாட்டுத் தளங்களாகி விடக்கூடாது என்பதால் என்றே நினைக்கிறேன்.

    மேலும் ஏற்கனவே சுற்றுப்புறச் சூழல், வாகனங்கள்/தொழிற்சாலைகள் வெளியிடும் புகையால் மாசடைந்துள்ளது. இந்நிலையில் சடலங்களை எரித்தால் இதன் அளவு கூடும். இவற்றைக் கருத்தில் கொண்டால் புதைப்பதே இயற்கைக்கு உகந்தது என்பதே என் கருத்து.

  4. அந்தக் காலத்தில் பில்லி சூனியம் என்று எல்லாம் இருந்தது [இன்றும் இருக்கிறது தானே]. இவற்றிற்கு மனித மண்டையோடு தேவைப்பட்டது. அதை எடுப்பதற்காக பலர் புதைக்கப்பட்ட குழிகளைத் தோண்டி எடுத்திருக்கிறார்கள். இதைத் தடுப்பதற்காகவே சைவ சமயத்தில் இறந்தவர்களை எரிக்க முடிவு எடுத்தார்கள் என்று நினைக்கிறேன்.

    ______
    CAPital
    http://1paarvai.wordpress.com/
    http://1kavithai.wordpress.com/
    http://1seythi.wordpress.com/
    htpp://1letter.wordpress.com/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *