Featured Posts
Home » பொதுவானவை » UN = அயோக்கிய நாடக சபை

UN = அயோக்கிய நாடக சபை

இரண்டாம் உலகப்போருக்குப் பின் உலக நாடுகள் ஒருங்கிணைந்து செயல்படவும் பிணக்கம் கொண்ட நாடுகளுக்கிடையேயானப் பிரச்சினைகளைச் சுமூகமாகத் தீர்த்து வைக்கவும் உருவாக்கப் பட்டதுதான் UNITED NATIONS எனும் ஐக்கிய நாடுகள் சபை. இதில் அந்தத்த நாட்டு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்கள் மட்டுமின்றி சர்வாதிகாரிகள், மன்னர்கள், இராணுவ அதிகாரிகளின் பிடியிலிருக்கும் நாடுகளும் இடம் பெற்றுள்ளன.

உலகமகா கொடியவனாக ஜெர்மானிய ஹிட்லரைப் போன்ற ஆதிக்க வெறியர்களிடமிருந்து மக்களைக் காக்க அனைத்து நாடுகளும் பங்கேற்கும் அங்கமாக ஐக்கிய நாடுகள் சபை உருவாக்கப் பட்டது. உலகில் எங்கெல்லாம் மக்கள் ஏழ்மை, வறுமை, உள்நாட்டுக் குழப்பம், அன்னியப் படையெடுப்பு, இயற்கைப் பேரழிவு என அல்லலுக்கு ஆளாகிறார்களோ அங்கெல்லாம் இராணுவ, பொருளாதாரச் சேவையாற்றியதில் ஐநாவின் பங்கு குறிப்பிடத் தக்கதாகவே இருந்து வந்தது.

இதில் அமெரிக்கா, ரஷ்யா,சீனா,பிரான்ஸ்,இங்கிலாந்து ஆகிய ஐந்து நாடுகளுக்கு வீட்டோ எனும் மட்டுறுத்தல் மூலம் ஐநா தீர்மானங்களை ஆதரிக்கவோ அல்லது எதிர்க்கவோ முடியும். மேற்கண்ட நாடுகளுக்கு மட்டுமே இந்தத் துருப்புச் சீட்டு அதிகாரம் வழங்கப் பட்டுள்ளது. இவையன்றி இன்னும் சிலநாடுகள் சுழற்சி முறையில் பாதுகாப்புச் சபையில் பங்கு வகிக்கின்றன.

சோவியத் யூனியன் சிதைவுறும் வரையில் நடுநிலை வகித்து திறம்பட செயல்பட்டு வந்த ஐ.நா சபை, அமெரிக்காவின் ஏகபோக ஆதிக்கத்தில் வந்து குரங்கு கையில் அகப்பட்டப் பூமாலை ஆனது. 1991ஆம் ஆண்டு குவைத்தை ஆக்கிரமித்த இராக் படையினரிடமிருந்து குவைத்தை மீட்பதற்கு அமெரிக்காவிற்கு முழு அதிகாரம் வழங்கியதன் மூலம் ஐநா சபை அமெரிக்காவின் எடுபிடியாகி விட்டது.

இதன் பொதுச்செயலாளாராக ஒப்புக்கு ஒருவர் நியமிக்கப்பட்டிருந்தாலும் அமெரிக்கா காலால் இட்ட பணியை தலையால் செய்து முடிப்பவராகவே இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத விதி. முன்னாள் பொதுச் செயலாளரான புத்ரூஸ் புத்ரூஸ் காலியைப் போலவே கடந்த பத்தாண்டுகளில் அமெரிக்காவின் கண்ணசைவிற்காகக் காத்திருக்கும் ஏவல்காரனாகத்தான் இதன் பொதுச்செயலாளர் கோஃபி அண்ணான் இருந்து வருகிறார் . அமெரிக்காவின் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்காதவரை நோபல் பரிசு கூட கிடைக்கும்.

சதாம் ஹுசேன் குவைத் மீது போர் தொடுத்ததை எதிர்த்த உலக நாடுகள், சுதந்திர பாலஸ்தீனையும் லெபனானையும் துவம்சம் செய்து வருவதைக் கண்டும் காணாமல் வாய் பொத்தி இருப்பதன் மர்மம் விளங்கவில்லை. நம் இந்தியா இஸ்ரேலின் அரக்கத்தனத்திற்கு பாராளுமன்றத்தில் ஒரு கண்டனம் தெரிவித்ததோடு அமைதி காத்து விட்டது. அதுவும் செய்ய முடியாமல் அரபு- முஸ்லிம் நாடுகள் சில பேசா மடந்தைகளாகவே ஆகிவிட்டன. சில முஸ்லிம் நாடுகளின் தலைவர்கள் மட்டும் கண்டன அறிக்கை விட்டு தங்களின் இருப்பைக் காட்டிக் கொள்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் இஸ்ரேலுக்கு எதிர்ப்பு தெரிவித்து தனது தூதரக அதிகாரிகளை வாபஸ் பெற்ற வெனிசூலா நாட்டு பிரதமர் ஆண்மையுள்ள தலைவராகத் தெரிகிறார்.

கடந்த வாரம் லெபனானில் முகாமிட்டிருந்த ஐ.நா பார்வையாளர்கள் நால்வரை படுகொலை செய்த பின்னரும் கூட ஆண்மையற்ற ஐக்கிய நாடுகள் சபை இஸ்ரேலின் அடாவடித்தங்களை தடுத்து நிறுத்த சிறு துரும்பையும் எடுத்துப் போடவில்லை.இஸ்ரேல் உருவாக்கப்பட்டது முதல் ஐ.நாவின் பெரும்பாலான செயல்பாடுகள் இஸ்ரேலின் அரக்கத்தனத்தைக் கண்டிப்பதாகவே இருந்துள்ளன. இதுவரை ஐம்பதுக்கும் மேற்பட்ட கண்டனத் தீர்மானங்கள் இஸ்ரேலுக்கு எதிராக நிறைவேற்றப்பட்டுள்ளன. இவற்றால் ஒரு பயனும் இல்லை. வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்த
ி இத்தகைய அரக்கத்தனங்களுக்கு அமெரிக்காவின் அங்கீகாரம் இருக்கும் வரை இஸ்ரேலுக்கு எதிராக இன்னும் ஆயிரம் தீர்மாங்கள் கொண்டு வந்தாலும் ஒன்றும் ஆகப்போவதில்லை.

233,234,237,242,248,250,251,252,259,267,271,298,338,339,381,425,446,452,465,468,469,471,
476,478,484,508,509,512,513,515,516,517,518,520,521,573,592,605,607,608,611,636,641,
672,673,681,694,726,799,904,1073,1322……1967 முதல் 2000 ஆம் ஆண்டு வரை இரத்தவெறி பிடித்த இஸ்ரேலுக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள்தான் . (கடந்த ஆறு வருடங்களுக்கு முந்தையவை மட்டுமே பட்டியலிடப்பட்டுள்ளன.)

http://www.middleeastnews.com/unresolutionslist.html
http://www.jerusalemites.org/facts_documents/un/22.htm
http://www.mediamonitors.net/michaelsladah&suleimaniajlouni1.html

இஸ்ரேலுக்கு ஒரு நியாயம்; இராக்குக்கு ஒரு நியாயம் என ஒரு கண்ணில் வெண்ணையும் இன்னொரு கண்ணில் சுண்ணாம்பும் வைத்திருக்கும் போக்கால் ஐக்கிய நாடுகள் சபை உண்மையில் அயோக்கிய நாடக சபையாகச் செயல்படுகிறது என உலக மக்கள் காறித்துப்பும் முன் தனது மாட்சிமையைக் காட்டி இஸ்ரேலை அடக்க வேண்டும்.

இந்நிலையில், அமெரிக்க எடுபிடி சேவகம் செய்யும் ஐநாவிற்கு பொதுச் செயலாளராகும் வாய்ப்பு நம் இந்தியர் ஒருவருக்குப் பிரகாசமாக உள்ளது. வல்லரசுப் போட்டியில் முன்னேறி வரும் இந்தியாவிற்கு ஐநாவைத் தலைமை தாங்கும் திறமையும் தகுதியும் நிரம்ப உள்ளது. ஆனால், இஸ்ரேலின் அராஜகத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்காமல், அமெரிக்காவின் கைப்பாவையாக இருந்து மதிப்பிழந்து வருவதே தொடருமெனில், இவ்வமைப்பில் இந்தியர் பொதுச்செயலாளராக வந்தாலும் அவர் நடுநிலையில் உறுதியோடு செயலாற்றினால் மட்டுமே நமக்குப் பெருமையாக இருக்கும் இல்லையெனில், ஐநா பொதுச் செயலாளருக்கு ரப்பர் ஸ்டாம்ப் நிலைதான் நீடிக்கும் – நாட்டின் பெயர் மட்டும் மேட் இன் இண்டியா என்று மாறி இருக்கும்.

11 comments

  1. You muslims and Iran think that Israel should be eliminated from the world map.Iran helps islamic
    terror groups.Isreal talks back to you in the only language you understand.As you sow so you reap.

  2. நல்லடியார்

    Srinidhi,

    What about Hitler’s holocuast? that too reaped what jews sowed?

  3. சுல்தான்

    அநியாயத்தின் கைகள் எப்போதும் ஓங்கியே இருப்பதில்லை. அநியாயம் அழிக்கப்பட்டு நியாயத்தின் கைகள் ஓங்கும்போது அநியாயத்துக்கு துணைபோகும் அம்பிகளெல்லாம் மறக்காமல் குறிவைக்கப் படவேண்டும்.

  4. The list of UN resolutions that you claim Israel has not complied with has too many ‘useless’ resolutions.

    Resolutions that ‘condemn’, ‘deplore’, ‘reiterate’ and ‘censure’ are not a call to action for israel.

    The only calls to action are those that still with the phrase ‘call on Israel to’, ‘demand’ or ‘urge’. There are approximately sixteen such resolutions, of which 8-9 demand that Israel leave Lebanon. But, Israel has left Lebanon!

    So, many of these resolutions are overtaken by events. Those that are not overtaken by events, and are calls for action, are not more than 1-2, I think.

    You must read your links more carefully.

  5. நல்லடியார்

    Mr.Prasad,

    Resolution means a joint decision to do something or to behave in a certain manner.

    If you THINK those UN resolutions passed AGAINST Israel are USELESS; what do you THINK about resolutions that okayed to install Israel in Palestine? Hope this is the only UN resolution ‘USEFUL’ to you and/or Israel. Isn’t?

  6. இறை நேசன்

    அயோக்கிய நாடக சபை.

    பொருத்தமான விரிவாக்கம்.

    ஹிரோஷிமா நாகசாகி மீது அணு குண்டை உபயோகித்து அணுஆயுத போரை தொடங்கி வைத்த அமெரிக்கா அணுஆயுத பரவலைக் குறித்து அச்சப்படுகிறது. அதற்கு ஐநாவின் துணை வேறு.

    ஏன் இந்த அச்சம் என்பதற்கு வடகொரியா விஷயத்தில் ஐநா மற்றும் அமெரிக்க நிலைபாடுகள் பதிலளிக்கும்.

    ஐநா தன்னுடைய தனித்தன்மையை திரும்பப்பெறாமல் தொடர்ந்து அமெரிக்காவின் அராஜகத்திற்கு துணை போகும் எனில் அது உலக சமாதானத்திற்கு பெரும் சவாலாகவே இருக்கும்.

    Isreal talks back to you in the only language you understand.//

    பரவாயில்லை. எங்களுக்கு(இது என்ன அர்த்தத்தில் என்றும் தெரிவித்து விட்டால் நலமாக இருக்கும்) தெரிந்த மொழியிலேயே இஸ்ரேல் பேசட்டும். அப்படித்தான் பேச வேண்டும்.

    ஆனால் ஒரு விஷயத்தை அராஜக இஸ்ரேலும் அதன் அக்கிரமங்களுக்கு நியாயம் கற்பிக்கும் நவீன நியாயஸ்தர்களும் நினைவில் வைத்துக் கொள்ளட்டும் – பாம்பை அடித்து விட்டால் அதனை கொல்லாமல் விடக் கூடாது என்பதை.

    As you sow so you reap.//

    நல்ல வாசகம். அவ்வப்பொழுது இது போன்ற நல்ல வாகங்களை சகோதரர் ஸ்ரீநிதி உதிர்க்கிறார்.

    அடிக்கடி இது போன்று அவர் அவசரப்பட்டு காறித் துப்பும் பொழுது அவரையுமறியாமல் அது அவர் மீது விழுவதை ஏனோ அவர் துடைத்துக் கொள்வதே இல்லை.

    இறை நேசன்

  7. இது கலிகாலம். சறீநிதி சொல்வது போல வெறும் முஸ்லிம் எதிர்ப்பு பார்வையுடன் இதைப்பார்க்க கூடாது. சுதந்திரப் போராட்டங்களும் தீவிர வாதமும் கலக்கப்பட்டு விட்ட காலம் இது.

  8. //Resolution means a joint decision to do something or to behave in a certain manner. //

    விடுங்கள் நல்லாடியார்.இந்த ஐ.நா.Resolutionகளை பற்றி உங்களுக்கு சொல்லி புரியவைப்பது கஷ்டம்.

    //சோவியத் யூனியன் சிதைவுறும் வரையில் நடுநிலை வகித்து திறம்பட செயல்பட்டு வந்த ஐ.நா சபை//

    இந்த தமாசுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை.

    செசன்யாவில் இஸ்லாமியர் கொல்லபட்டபோதும், யூகோஸ்லேவியாவில் ரஷ்ய ஆதரவு செர்பியர்கள் இஸ்லாமியரை கொன்ற போதும் சோவிய யூனியன் இருந்ததே?

    //சுதந்திர பாலஸ்தீனையும் லெபனானையும் துவம்சம் செய்து வருவதைக் கண்டும் காணாமல் வாய் பொத்தி இருப்பதன் மர்மம் விளங்கவில்லை. //

    லெபனானில் இருந்து ஹில்புல்லா கத்யூஷா ராக்கெட்டுகளை ஏவுவதை லெபனான் அரசினால் தடுக்க முடியாவிட்டால் இஸ்ரேலுக்கு தன்னை பாதுகாத்துகொள்ள முழு உரிமை உள்ளது.

    ஆஸ்பத்திரி, பள்ளிகூடம் என்று மக்கள் அதிகமாக உள்ள இடத்தில் நின்று போர் புரியும் ஹிஸ்புல்லா அந்த இடம் இஸ்ரேலினால் தற்காப்புக்காக தாக்கபடும் போது அப்பாவி மக்கள் பலியாவார்கள்.அந்த emotional backfireஇல் குளிர்காய முடியும் என்பதை ஹிஸ்புல்லா நன்றாகவே உனர்த்துள்ளது,நல்லாடியார்.

    இந்த propagandaவுக்கு உங்களை போன்ற இஸ்லாமியர்களும் பலியாகிவிடுகிறீர்கள்…

    (“இஸ்லாம் தாக்கபடுகிறது” என்பதைவிட உங்களை வேறு எதுவும் mobilise செய்ய முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்)

    You are being exploited in the name of a religion.புரிந்துகொண்டு எமாறாமல் இருங்கள்.

    கோவையில் இப்படி ஏமாந்துவிட்டு வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர்!

  9. பூமராங்

    //You are being exploited in the name of a religion.புரிந்துகொண்டு எமாறாமல் இருங்கள்.

    கோவையில் இப்படி ஏமாந்துவிட்டு வாழ்க்கையை இழந்தவர்கள் எத்தனை பேர்!//

    ஏனுங்க சமுத்ரா!

    நீங்க இம்மாதிரி அட்வஸுங்களெ நம்மாளுகளுக்கும் குடுக்கிறதுதானே?

    முஸ்லிம் மட்டும்தான் மதத் தீவிரவாதத்தால் வாழ்க்கையை இழந்தானா?

    இந்து முன்னணியின் வெறிப்பேச்சால் தூண்டப் பட்டு வாழ்க்கையை இழந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்.

    சிவாவும் கணேஷும் வீர சிவாவாகவும் வீர கணேஷாகவும் செத்தது யாரால்?

    வெறுப்பு வெறுப்பையும் பகைமைப் பகைமையையும் கொலை கொலையையுமே வளர்ப்பன.

    அது அல் உம்மா- இந்து முன்னணியானாலும் இஸ்ரேல்-பாலஸ்தீனமானாலும் பொது நீதி.

    சமுத்ரா புரியுதுங்களா?

  10. மரைக்காயர்

    //முஸ்லிம் மட்டும்தான் மதத் தீவிரவாதத்தால் வாழ்க்கையை இழந்தானா?

    இந்து முன்னணியின் வெறிப்பேச்சால் தூண்டப் பட்டு வாழ்க்கையை இழந்தவர்களையும் எண்ணிப் பாருங்கள்//

    சத்தியமான வார்த்தைகள். கோட்சே கூட தன்னைத் தூண்டிவிட்ட தலைவர்கள் வழக்கு நடக்கும்போது தன்னை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டார்கள் என்று வருத்தப்பட்டதாக எங்கோ படித்த ஞாபகம்..

  11. //நீங்க இம்மாதிரி அட்வஸுங்களெ நம்மாளுகளுக்கும் குடுக்கிறதுதானே?/

    நான் கொடுப்பதில்லை என்று நினைத்து கொண்டு இருந்தால் அது உங்களின் தவறு, பூமராங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *