Featured Posts
Home » பொதுவானவை » காஃபிர் (Kaafir/كَافِر ) என்பது கேவலமான சொல்லா?

காஃபிர் (Kaafir/كَافِر ) என்பது கேவலமான சொல்லா?

திருக்குர்ஆனில் சொல்லப்படும் ‘காஃபிர்’ (Kaafir/كَافِر ) என்ற அரபிச் சொல்லை மாற்று மத சகோதரர்கள் தம்மைக் குறிப்பிடும் கேவலமான சொல்லாகக் கருதுகிறார்கள். திருக்குர்ஆன் ‘காஃபிர்’ என்று தங்களை ஏசுவதாக எண்ணுகிறார்கள். அப்படியொரு தவறானப் பிரச்சாரம், திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது.

இந்து மதத்தைப் பின்பற்றுபவரை ‘இந்து’ என்கிறோம்; கிறிஸ்தவத்தைப் பின்பற்றுபவரை ‘கிறிஸ்தவர்’ என்கிறோம். அதேபோல்தான் இஸ்லாத்தைப் பின்பற்றுபரைக் குறிக்க ‘முஸ்லிம்’ என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது. இந்து,கிறிஸ்தவர் என்ற பதங்களுக்கு எதிர்ப்பதத்தைக் குறிக்க நேரடி வார்த்தைகள் இல்லை. ஆனால் ‘முஸ்லிம்’ என்ற அரபிச் சொல்லுக்கு எதிர்ப்பதம் உண்டு; அதுதான் ‘காஃபிர்’ என்ற சொல். அதாவது முஸ்லிம் அல்லாத எவரையும் குறிக்க அவர் சார்ந்த மதத்தோடு இணைத்துச் சொன்னாலும், காஃபிர் என்று சொன்னாலும் ஒன்றே.

உதாரணமாக, ‘சுதேசி’ என்ற சொல்லுக்கு “உள்நாட்டுக்காரர்” என்றும் ‘விதேசி’ என்ற சொல்லுக்கு ‘அன்னியர்’ அல்லது அயல்நாட்டுக்காரர் என்றும் பொருள்.இதையே ஆங்கிலத்தில் சுதேசியை Native/Citizen என்றும் விதேசியை Foreigner என்றும் சொல்லலாம். இந்தியாவிற்கு வெளியிலிருந்து வந்த இந்தியர் அல்லாதவரைக் குறிக்க ‘விதேசி’ அல்லது Foreigner என்று குறிப்பிட்டால் சம்பந்தப்பட்டவர் வருத்தப்படுவதில்லை.(அமெரிக்காவில் அமெரிக்கரல்லாதவரை ‘Alien’ என்கிறார்கள். முறையாகச் சொன்னால் இந்த வார்த்தைக்கு தான் முதலில் இவர்கள் வெகுண்டு எழ வேண்டும்.) ‘விதேசி’ என்பது ஒரு குறிச்சொல் என்பதை அவர் புரிந்திருப்பதால் அவருக்கு வருத்தமில்லை. இதே அளவீடுதான் ஒரு முஸ்லிம், முஸ்லிம் அல்லாதவரைக் குறிக்க காஃபிர் என்று சொல்லும் போதும் கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆன் அருளப்பட்டக் காலத்தில், யூதர்கள், கிறிஸ்தவர்கள், இன்னும் இஸ்லாத்தை ஏற்காத குறைஷியர்கள் என பல்வேறுபட்ட சமூகத்தினர் இருந்தார்கள். திருக்குர்ஆன் ”காஃபிர்” என்று அழைப்பது முஸ்லிம் அல்லாதவர்களையே – அதாவது தங்களையேக் குறிப்பிடுகிறது என்பதை அன்றைய மாற்று மத சமுகத்தினர் நன்கு புரிந்து கொண்டிருந்தனர். அவர்கள் அரபி மொழியைத் தாய்மொழியாகக் கொண்டிருந்ததால் இதை ஆட்சேபிக்கவில்லை.”காஃபிர்” என்ற சொல் என்பது திட்டுவதோ, ஏசுவதோ அல்லாது, ஏக இறைவனை மறுத்தவர்களைக் குறிப்பிடும் சொல் என்பதை அவர்கள் விளங்கியிருந்தார்கள்.

அரபி மொழியைத் தாய் மொழியாகக் கொண்ட முஸ்லிம் அல்லாதவர்கள் உலக நாடுகளில் இன்றும் இருக்கிறார்கள். அவர்களெல்லாம் என்றுமே ”காபிர்” என்ற சொல்லை, தவறாக இன்றுவரை விளங்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

”காஃபிர்” என்ற வார்த்தையைப் பற்றிய பொருள் புரியாமல் அந்த வார்த்தையை வெறுப்பது, பிற மொழி பற்றிய புரிந்துணர்வு இல்லாமையால், பிற மொழியின் ஒரு வார்த்தையின் மீது ஏற்பட்ட அறியாமையின் வெறுப்பாகும். இந்த அறியாமை நீக்கப்பட வேண்டும். எனவே ”கஃபர” என்ற சொல்லிலிருந்து கிளைச் சொல்லாக திருக்குர்ஆனில் வார்த்தைகளிலிருந்து ஏராளமான வசனங்களிலிருந்து சிலவற்றை இங்கு பார்ப்போம்.

வ மா கஃபர சுலைமானு வ லாகின்னஷ் ஷையாத்தீன கஃபரு – சுலைமான் (மறுக்கவில்லை) நிராகரிக்கவில்லை. ஷைத்தான்கள் தாம் நிராகரித்தார்கள். 2:102

கால வமின் கஃபர – என்னை மறுத்தவருக்கு – நிராகரித்தவருக்கு 2:126

ஃப மின்ஹும் மன் ஆமன வ மின்ஹும் மன் கஃபர – அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர், அவர்களில் மறுப்பவர்களும் – நிராகரித்தவர்க

41 comments

  1. “திருக்குர்ஆன் பற்றி விளங்காதவர்களால் அல்லது விளங்கியிருந்தும் உள்நோக்கத்துடன் இஸ்லாத்திற்கு எதிராகப் பிரச்சாரம் செய்யப்படுபவர்களால் முடுக்கி விடப்படுகிறது.”

    சரியான விளக்கம் தந்துள்ளிர்கள் வாழ்த்துக்கள்.

  2. Thanks for your more explanations for “Khaafir”. This is very crystal clear meaning of khaafir.

    Thanks for your brief.

    regards
    asalam

  3. Muse (# 5279076)

    மதிப்பிற்குரிய நல்லடியார் அவர்களே,

    தங்களுடைய விளக்கங்கள் மிக அழகாக அமைந்துள்ளன. தங்களின் அரபி புலமை வியக்க வைக்கிறது.

    தங்களுடைய பதிவை படித்தபின்னால் எனக்கு சில கேள்விகள் எழுகின்றன. அதையும் தாங்கள் விளக்குமாறு வேண்டுகிறேன்:

    நீங்கள் கூறியிருக்கின்ற வாதங்களின் அடிப்படையில் எந்த வார்த்தையையுமே நாம் நியாயப்படுத்திவிடலாம். உதாரணமாக,

    1. இஸ்லாமிய சகோதரர்களை இகழும் வகையில் உபயோகிக்கப்படும் “துலுக்கன்” என்கிற வார்த்தை

    2. ப்ராமணர்களை இழிவுபடுத்தும் “பார்ப்பான்” என்கிற வார்த்தை

    3. தலித் பெருமக்களை இகழ்வாய் அழைக்க பயன்படுத்தப்படும் வார்த்தைகள்

    இவை அனைத்திற்குமே இலக்கண, இலக்கிய அடிப்படையில் தாழ்வான கன்னடேஷன் எதுவும் இல்லை. ஆனால் நடைமுறையில் அங்கனம் இல்லை என்பது தெளிவு. இந்த சூழ்நிலையில் காஃபிர் என்கிற வார்த்தைக்கும் இலக்கிய, இலக்கண அடிப்படையில் இழிவு எதுவும் இல்லை என்கிற தங்கள் வாதங்களை ஏற்றுக்கொண்டாலும், சமூக அளவில் இவை இப்படி இல்லை என்பதே உண்மை.

    இந்த கட்டுரையிலிருந்து காஃபிர்களை தாழ்த்தக்கூடாது என்கிற உங்கள் உயர்ந்த எண்ணம் புலப்படலாம். பரத கண்டத்தில் பிறந்த உங்களுக்கு இயல்பாகவே இந்த குணம் இருப்பதுவும் ஆச்சரியமான ஒன்றில்லை. ஆனால் எல்லாரும் இப்படித்தான் நடைமுறையில் உபயோகிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை.

  4. காஃபிர் என்ற சொல்லை வைத்து இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் மாற்று மதத்தவரிடம் வேறு ஒரு கோணத்தில் அறிமுகப்படுத்தும் இணைய வெறியர்களுக்கு இதை விட விளக்கம் தருவது சிரமமே!

  5. வாசகன்

    மியூஸண்ணா,
    நலமா?
    உங்கள் மென்மொழிக்கு நன்றிகள்.
    ‘ஒரு காலத்தில் துருக்கிய கலீஃபா தலைமை’யை ஏற்றுக்கொண்டிருந்ததாலேயே முஸ்லிம்கள் துலுக்கன் என்று அழைக்கப்படுகிறார்கள். துலுக்கன் என்று அழைப்பதை முஸ்லிம்கள் கேவலமாகக் கருதுவதில்லை என்றே நினைக்கிறேன். (நல்லடியார் சார், தெளிவுபடுத்துங்கள்). எங்கள் பக்கம் ‘சோனகர்’ தெரு என்று கூட தெருவெல்லாம் உள்ளது.

    அதேப் போல, பார்ப்பான் என்பதை பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் பிராமணர்களையும் நானறிவேன். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்து அரசியல் கட்சித் தலைவர் தன் பெயரில் ‘பறையனார்’ என்பதையும் சேர்த்தே சொல்லிக்கொள்கிறார். ஆனால் தாழ்த்தப்பட்டவன் பிறப்பின் காரணமாகவே அந்த பெயருக்குரியவனாகிறான் என்றால் அதை கடுமையாக எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளோம் இல்லையா?

  6. இறை நேசன்

    முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற பொதுவான பொருளைத் தரும் காஃபிர் என்ற அரபு சொல்லை குர்ஆனிலிருந்து எடுத்து வார்த்தை விளையாட்டு விளையாடி முஸ்லிம் அல்லாதவர்களின் மனதில் விஷத்தைத் தூவும் இணைய ஹிந்துத்துவா அறிவு கொழுந்துகளுக்கு மண்டையில் உறைக்கும் படியாக அழகான விளக்கத்தைத் தந்துள்ளீர்கள். இஸ்லாத்தை கரித்து கொட்டுவதையே தொழிலாக கொண்டு எப்பொழுதும் காறி தன் முகத்தில் தானே துப்பிக்கொண்டு உலாவரும் இணைய புல்லுருவிகளின் அவதூறுகளை துடைத்தெறியும் விதத்தில் இது போன்ற பல பயனுள்ள கட்டுரைகளை தொடர்ந்து கொடுங்கள்.

    ஆர் எஸ் எஸின் முழு நேர ஊழியர்களாக இஸ்லாத்தை பழிப்பதையே தங்கள் முக்கிய தொழிலாக கொண்டு நடப்பவர்களின் மனதில் இவை மாற்றத்தை உருவாக்கப்போகிறதோ இல்லையோ, நிச்சயம் இவர்களின் அவதூறுகளை கேட்டு/படித்து இஸ்லாத்தை தவறாக விளங்கியவர்களின் மனதில் மிகப் பெரிய மாற்றத்தை உருவாக்கும்.

    சிறந்த மற்றுமோர் ஆக்கத்தைத் தந்த சகோ.நல்லடியார் அவர்களுக்கு வாழ்த்துக்கள்.

  7. Al-Baqarah Surah 2

    [161] Those who reject Faith, and die rejecting it, on them is Allah’s curse, and the curse of angels, and of all mankind

    [171] The parable of those who reject Faith is as if one were to shout like a goat-herd, to things that listen to nothing but calls and cries: deaf, dumb, and blind, they are void of wisdom.

    [191] And slay them wherever ye catch them, and turn them out from where they have turned you out; for tumult and oppression are worse than slaughter; but fight them not at the Sacred Mosque, unless they (first) fight you there; but if they fight you, slay them. Such is the reward of those who suppress faith.

    [221] Do not marry unbelieving women until they believe: a slave woman who believes is better than an unbelieving woman. Even though she allure you. Nor marry (your girls) to Unbelievers until they believe: a slave man who believes is better than an Unbeliever even though he allure you. Unbelievers do (but) beckon you to the Fire. But Allah beckons by His Grace to the Garden (of Bliss) and forgiveness, and makes His Signs clear to mankind: that they may receive admonition.

    [254] O ye who believe! Spend out of (the bounties) we have provided for you, before the Day comes when no bargaining (will avail), nor friendship nor intercession. Those who reject Faith, they are the wrong-doers

    A-li`imraan Surah 3

    [10] Those who reject Faith, neither their possessions nor their (numerous) progeny will avail them aught against Allah; they are themselves but fuel for the Fire.

    [12] Say to those who reject Faith: “Soon will ye be vanquished and gathered together to Hell, an evil bed indeed (to lie on)!”

    [28] Let not the Believers take for friends or helpers Unbelievers rather than Believers: if any do that, in nothing will there be help from Allah: except by way of precaution, that ye may guard yourselves from them. But Allah cautions you (to remember) Himself; for the final goal is to Allah

    [56] “As to those who reject Faith, I will punish them with terrible agony in this world and in the Hereafter, nor will they have anyone to help.

    இவை அனைத்துமே குரானில் இருக்கும் வாக்கியங்கள்.அதாவது இஸ்லாம் மதத்தை ஏற்காதவர்களுக்கு(காஃபிர்) எழுதப்பட்ட வாக்கியங்கள்.காஃபிர்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா?

    //காஃபிர்களைக் கொல்லுங்கள்; வெட்டுங்கள் என்று சொல்லப்படும் குர்ஆன் வசனங்கள், நிராயுதபாணியாக இருந்த அன்றைய முஸ்லிம்களை அடக்குமுறைக்கு ஆளாக்கிய மக்கத்துக் காஃபிர்களைக் குறித்துச் சொல்லப்பட்டவையாகும்//

    ஆனால் இஸ்லாம் மதத்தில் பொதுவாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களைதான் காஃபிர்கள் என்று அழைக்கிறது தவிர மக்கத்துக் காஃபிர்,பக்கத்து காஃபிர் என்று பிரித்து கூறவில்லையே?குரானில் கூட வெறும் காஃபிர் என்றுதான் இருக்கிறது.

  8. தமிழ் செல்வன்

    சிறிது நாட்களாகவே காபிர் என்ற சொல்லை அதிகமாக இணையப்பூக்களில் கண்டு வருகிறேன்.

    நேரடியாக இதுவரை இச்சொல்லை யாரும் பிரயோகித்து நான் கேட்டதில்லை எனினும் வலைப்பூக்களில் அத்தலைப்பில் வந்த பல பதிவுகளை படித்து இஸ்லாத்தின் மேல் ஒரு வித வெறுப்புடன் இருந்து வந்தேன்.

    இவ்வொரு சொல்லைக் கொண்டு இஸ்லாமும் பிராமணீயத்தின் மறு உருவாக்கம் என்று தான் மனதில் வெறுப்புடன் நினைத்திருந்தேன். தக்க தருணத்தில் விரிவான விளக்கத்துடன் அச்சொல்லின் பொருளை உணர வைத்தீர்கள்.

    பல வாசகங்கள் புரிய சற்று கடினமாக இருப்பினும் நன்றாக முயற்சியெடுத்து இப்பதிவினை தந்து காபிர் என்ற சொல்லைக் குறித்து என்னில் தவறாக இருந்த எண்ணத்தைப் போக்கியிருக்கிறீர்கள்.

    எனினும் இது எத்தனை பேருக்கு சென்று சேரும் என்பது கேள்விக்குறியே? எனவே அரபியில் கையாளப்படும் இச்சொல்லை தவிர்த்து முஸ்லிமல்லாதவர்கள் என தமிழிலேயே மற்றவர்களை அழைப்பது தான் சிறந்தது எனக் கருதுகிறேன்.

    தமிழ் செல்வன்

  9. க்ருபா

    அன்புள்ள நல்லடியார்,

    மிகவும் நல்ல பதிவுகளில் ஒன்று. உங்களின் பல கட்டுரைகள் இஸ்லாத்திற்கும் இதர மதத்தவருக்கும் இருக்கும் தொலைவைக் குறைப்பதாக அமைந்துள்ளது. இதுபோன்ற பதிவுகளைப் படிக்கும் பொழுது மனதிற்கு மகிழ்ச்சியாகவும் உள்ளது.

    இது போன்று நிறைய தொடர்ந்து எழுதுங்கள். மெய்யாகவே அன்பில் நம்பிக்கை கொண்டவர்களுக்கும், ‘அவங்க நல்லவங்கதான், ஆனா அவங்க மதத்துல அப்படி சொல்லி இருக்கே. அதான் வருத்தமா இருக்கு’ என்று நினைப்பவர்களுக்கும் புரிந்துகொண்டு மகிழ உதவியாக வேண்டும். நான் நினைப்பதை எனக்கு விளக்கமாக சொல்லத் தெரியவில்லை.

    ஆனாலும் எனக்கு ஒரு சிறிய வருத்தம் மட்டும் உண்டு. இந்த கட்டுரையில் கடைசி பத்தியில் உள்ள ஒப்பீடு உங்கள் நல்ல நோக்கத்தையும், உண்மை சரியாகச் சென்றடையும் தன்மையையும் குலைக்கும் தன்மை உடையதாக இருக்கிறது. ஏனெனில், அது வாதத்தை மேலும் வளர்க்கும் விதமாகவே வழிவகை செய்து விடுகிறது. நீங்கள் சொல்ல வருவதின் பொருள், அதனின்றும் எழக்கூடிய சிந்தனைக்கரு அந்த கடைசி பத்தி(யில் உள்ள சில வரிகளை)யைப் படிக்காமலேயே புரிந்து விடுகிறது. ஒரு சாரத்தின் தொகுப்பாக கடைசி paraவை நீங்கள் வெளியிட்டிருந்தாலும், சில வாக்கியங்கள் விவாதத்தைக் கிளப்புவதாகவே அமைந்து விட்டிருக்கிறது. உதாரணமாக, நீங்கள் சொல்லி இருக்கும் வாக்கியம்: முஸ்லிம், கிறிஸ்துவர்களை (இந்து மதம் அல்லாத அனைவரையும்) சூத்திரன் என்று வருணபேதம் போதிப்பதாகக் கூறி உள்ளீர்கள். இது எப்படி சாத்தியம்? ‘இந்து’ அல்லாத பிற மதங்களுக்கு முற்பட்ட ஒன்று வருணாஸ்ரம தர்மம் என்று சொல்கிறார்கள். குறிப்பாக முஸ்லிம், கிறுஸ்துவர்களைப் பற்றி அதில் எப்படி குறிப்பிட்டிருக்க முடியும்? மனிதர்களில் (சரி, இந்துக்களின்) நிலைப்பாடுதான்(சரி, சூழ்ச்சி) இது என்பது தெரிகிறது இல்லையா? நீங்கள் பிற மதக்கொள்கைகளை விமர்சிப்பதைப் பற்றி நிச்சயம் நான் ஒன்றும் சொல்லவில்லை. இஸ்லாத்தை அப்படி ஒப்பிட்டுத்தான் உயர்த்தி சொல்ல வேண்டிய கட்டாயம் இருப்பதாகவும் நான் நினைக்கவில்லை.

    தயவுசெய்து மேலே இருக்கும் paraவில் உள்ள கருத்துக்களைக் கூறத்தான் இந்த பின்னூட்டத்தை நான் இட்டிருப்பதாக நினைத்துவிடாதீர்கள். எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்பதை ப்ரதானமாகச் சொல்லத்தான் இதை இடுகிறேன். இது நல்லதொரு வலைப்பூ. விவாதங்கள் தவிர்த்து விளக்கங்களும் அன்பின் செய்திகளும் மட்டுமே தொடர்ந்தால் இன்னும் மகிழ்வேன் (விவாதங்கள் பெரும்பாலும் சண்டைகளிளேயே முடிவுறுவதால்).

    க்ருபா

  10. //காபிர் என்ற சொல்லைக் குறித்து என்னில் தவறாக இருந்த எண்ணத்தைப் போக்கியிருக்கிறீர்கள்.//

    தமிழ் செல்வன் அவர்களின் இந்த வரிகள் நல்லடியாரின் பதிவின் பிரயோசனத்தை வெளிப்படுத்தும் முக்கிய அம்சம்.

  11. அருமையான பதிவு.
    என் மனதில் தோன்றிய ஒரு கேள்வி.(இந்த பதிவிற்க்கு
    சம்மந்தம் இல்லாதது)

    அல்லாஹ் எந்த தேவையுமற்றவன்

    மனிதனை என்னை வனங்குவதற்காக படைத்தேன்.

    இது இரண்டுமே குராஆனில் உள்ளது.

    மனிதன் தன்னை வணஙக வேண்டும் என்பது கடவுளின்
    தேவைதானே?

  12. முத்துவாப்பா

    சகோ.தமிழ்ச்செல்வன்.!

    தமிழ் முஸ்லிம்களைப் பொருத்தவரை ‘காஃபிர்களை’ முஸ்லிமல்லாதவர்கள் என்று அந்நியப்படுத்தாமல் ‘மாற்றுமத சகோதரர்கள்’ என்றே குறிப்பிடுகிறோம். இதை நீங்கள் இஸ்லாமிய மேடைப்பேச்சுகளிலும்,உரைகளிலும்,இதழ்களிலும் இன்னும் சில வலைப்பதிவுகளிலும் காணலாம்.

  13. முஸ்லீம்கள் அல்லாதோரை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துப்படுவது இஸ்லாத்தின் படி சரி
    என்று ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறியிருந்ததை நேசக்குமார் தன் பதிவில் இட்டிருந்தார்.அந்தக் கருத்து சரியா.இஸ்லாமிய நாடுகளில் பிற மதத்தவருக்கும் அனைத்து உரிமைகள் வழங்கப்பட்ட
    வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா.தலிபான்கள் பிற மதத்தவர் மீது விதித்த கட்டுப்பாடுகள்
    இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு இயைந்தவைதானா.இஸ்லாமிய அரசர்கள் பிற மதத்தவர் மீது விதித்த ஜெஸியா வரி மத அடிப்படையில்தானே விதிக்கப்பட்டது.இப்படி காபிர்களை வேறு விதமாக, முஸ்லீம்களுக்கு சமம் இல்லாதவர்கள்
    என்று நடதப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா.

  14. நல்லடியார்

    //இவை அனைத்துமே குரானில் இருக்கும் வாக்கியங்கள்.அதாவது இஸ்லாம் மதத்தை ஏற்காதவர்களுக்கு(காஃபிர்) எழுதப்பட்ட வாக்கியங்கள். காஃபிர்கள் என்ன அவ்வளவு கேவலமானவர்களா?//

    Agner,

    நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனங்களில் சுட்டப்பட்டுள்ள காஃபிர்கள் எத்தகையவர்களாக இருந்தார்கள் என்று அறிந்து கொண்டு இக்கேள்வியை கேட்டிருந்தால் குர்ஆனின் அவர்கள் மீதான சொற்பிரயோகம் கடுமையல்ல என்பதை உணரலாம். இதுபற்றி பிரபல அறிஞர் அபூ அஃலா மெளதூதி அவர்களின் திருக்குர்ஆன் விளக்க உரையில் இவற்றை தெளியாக விளக்கியுள்ளார். இணையத்திலும் அவை கிடைக்கின்றன.

    அல் பகரா அத்தியாயம் இஸ்லாத்தின் முழு கட்டமைப்பையும் கிட்டத்தட்ட விளக்குவதோடு, முஸ்லிம்களின் அணுகுமுறை, கடமைகள், முந்தைய வேதங்களையும் நபிமார்களையும் நம்புதல் என பல்வேறு அம்சங்கள் பொதிந்துள்ள அத்தியாயம் இவை. காஃபிர்கள் என்று குறிப்பிடுவதில், இஸ்லாத்தை பெயரளவுக்கு ஏற்று இரட்டை வேடம் போட்ட ஆரம்பகால அரைகுறை முஸ்லிம்களையும், நயவஞ்கர்களையும் (அதாவது முஸ்லிம்களிடத்தில் முஸ்லிமாகவும், இணை வைப்பவர்களிடம் காஃபிராகவும் இரட்டைவேடமிட்டு வாழ்ந்தவர்கள்) இன்னும் யூதர்களையும் பற்றியே சொல்லப்பட்டுள்ளன. அவை கேவலமான தொணியில் இருப்பின், அவர்களின் அக்கால செயல்பாடுகளுடன் ஒப்பிட்டு நோக்கினால், அவ்வசனங்கள் அவர்களுக்கு எச்சரிக்கையாகவும், இஸ்லாத்தை ஏற்று அல்லல்பட்ட முஸ்லிம்களுக்கு நம்பிக்கையாகவும் சொல்லப்பட்டவை என்பது விளங்கும்.

    //ஆனால் இஸ்லாம் மதத்தில் பொதுவாக இஸ்லாத்தை ஏற்றுக்கொள்ளாத மக்களைதான் காஃபிர்கள் என்று அழைக்கிறது தவிர மக்கத்துக் காஃபிர், பக்கத்து காஃபிர் என்று பிரித்து கூறவில்லையே?குரானில் கூட வெறும் காஃபிர் என்றுதான் இருக்கிறது. //

    குர்ஆன் வசனங்கள் மக்கி (மக்காவில் அருளப்பட்டவை) மதனீ (மதீனாவில் அருளப்பட்டவை) என்று வகைப்படுத்தி அறியப்படுகிறது. காஃபீர்களைக் கண்டதும் வெட்டச் சொல்கிறது என்ற சில வசனங்களைக் காட்டி, அவை அருளப்பட்ட போர்க்களச் சூழலை மறைத்து சில இஸ்லாமிய எதிர்ப்புவாதிகள் திரிபுவாதம் செய்கிறார்கள். இதற்கு சகோதரர் அபூமுஹை அவர்கள் விரிவான விளக்கம் கொடுத்து ஏற்கனவே ஒரு பதிவிட்டுள்ளார். முடிந்தால் திறந்த மனதுடன் அதையும் படித்துப் பாருங்கள்

    http://abumuhai.blogspot.com/2005/06/blog-post_09.html

  15. நல்லடியார்

    அன்பின் க்ருபா,

    குர்ஆனில் பல்வேறு மனிதர்களைப் பற்றி வெவ்வேறு இடங்களில், சூழலில் சொல்லப்பட்டுள்ளது. சிலரை நம்பிக்கையாளர்கள் (முஃமீன்கள், முஸ்லிம்கள்) என்றும் சிலரை யஹூதி (யூதர்கள்), நஸரா (கிறித்தவர்கள்), முனாபிக் (நயவஞ்சகர்கள்), காஃபிர் (இணை வைப்பவர்கள்) எனச் சொல்லப்பட்டுள்ளது. அன்றைய சிறுபான்மை முஸ்லிம்களுக்கு எதிரான அவர்களின் அக்கால அணுகுமுறைகளுடன் ஒப்பிட்டே, அவர்களைப் பற்றிய குர்ஆனின் எச்சரிக்கைகளை நோக்க வேண்டும்.

    குர்ஆன் மாற்று மதத்தவர்களை கொல்லச் சொல்கிறது; அதனால்தான் தீவிரவாதிகளாகச் சொல்லப்படும் சில முஸ்லிம்கள், குண்டு வெடிப்பு, தற்கொலைத் தாக்குதல் என முஸ்லிம் அல்லாதவர்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்கள் என்று தமிழ் வலைப்பூக்களிலும் இணைய தளங்களிலும் குறிப்பிட்ட சிலர் வேண்டுமென்றே திரிபுவாதம் செய்கிறார்கள். அவர்களுக்கு பதிலாகவே வர்ணாசிரமம் பற்றி சுட்ட வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

    வர்ணாசிரமம் பற்றி நான் கேள்விப்பட்டவற்றை வைத்தே அவ்வாறு குறிப்பிட்டேன். என் புரிந்துகொள்ளல் தவறாக இருப்பின், அதனை மாற்றிக் கொள்வதில் தயக்கமில்லை. எனினும் உங்கள் ஆதங்கத்தில் இருக்கும் நியாயத்தை மதித்து பதில் தர வேண்டிய கடமையை உணர்கிறேன். முடிந்தால் இப்பதிவிலோ அல்லது தனிமடலிலோ பதில் கொடுக்கிறேன்.

    நீண்ட இடைவெளிக்குப் பின் உங்களுடன் கருத்துப் பரிமாற வாய்ப்பாக உங்கள் மென்மையான பின்னூட்டம் அமைந்துள்ளது. தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

    -நல்லடியார்

  16. நல்லடியார்

    ரவி,

    நேசக் குமார் குறிப்பிட்ட அறிஞரையும் அதற்கான சுட்டியையும் குறிப்பிட்டால் இது பற்றி மேற்கொண்டு எனது கருத்தைச் சொல்ல ஏதுவாகும். இஸ்லாமிய நாடுகளில் மட்டுமல்ல எல்லா நாடுகளிலுமே பிற மதத்தவருக்கான உரிமைகள் அந்தத்த நாட்டு சட்டமுறைக்கேற்ப வழங்கப் படவேண்டும். மேலும் ‘அனைத்து உரிமைகள்’ என்று பொதுவாகச் சொல்லாமல் என்னென்ன உரிமைகள் என்று குறிப்பிட்டால், அவை பற்றியும் விவாதிக்கலாம்.

    தாலிபான்களைப் பற்றிய குற்றச்சாட்டுக்கள் அவர்கள் AGAINST AMERICAN INTEREST என்று ஆனபிறகே அதிகரித்துள்ளது.முந்தைய ஆப்கன் மன்னர்களிடமிருந்தும் ரஷ்யர்களிடமிருந்தும் ஆப்கன் மக்களை மீட்டபோது அவர்களை அமெரிக்காவும் உலக நாடுகளும் புரட்சியாளர்களா புகழ்ந்தனர். அமெரிக்காவால் ஆட்சியிலிருந்து விரட்டப்பட்ட பின்னரும் அவர்களுக்கு எதிராக போராடி வரும் தாலிபான்களிடம் பிணையாக பிடிபட்டு விடுவிக்கப் பட்டவர்களின் பேட்டிகள், மாற்று மதத்தவர்களுடன் அவர்களின் அணுகுமுறையைச் சொல்கின்றன. அவற்றையும் கருத்தில் கொண்டே தாலிபான்கள் மீதான குற்றச்சாட்டுகளை அணுக வேண்டும்.

    பிறநாட்டவருக்கு எதிரான அம்சங்கள் எல்லா நாடுகளிலுமே இருக்கின்றன. உதாரணமாக பொதுவில் முஸ்லிம்களை தொழுகைக்கு அழைக்கும் உரிமை அமெரிக்கா மற்றும் பல மேற்கத்திய நாடுகளில் இல்லை. அந்த நாட்டு சட்டப்படி முஸ்லிம்கள் அவற்றை மதித்து, சட்டப்படியான மாற்று ஏற்பாட்டைச் செய்து கொள்கிறார்கள். நம் நாட்டைப் போல் சீனாவிலோ அல்லது பல முஸ்லிமல்லாத நாடுகளில் சிலவகையான உரிமைகள் இல்லை. இஸ்லாமிய நாடுகளிலும் இதுபோன்ற கட்டுப்பாடுகள் இருக்கும் போது அதை, Muslim Vs. Non-muslim என்று பார்க்காமல் அந்தந்த நாட்டுச் சட்டங்களோடும் அரசியல் அமைப்போடும் ஒப்பிட்டே பார்க்க வேண்டும்.

    ஜஸியா வரி பற்றி சொல்கிறீர்கள். ஒரு இஸ்லாமியக் குடியரசிலுள்ள முஸ்லிம்கள் 2.5% கட்டாய வரி (ஜகாத்) செலுத்தவேண்டும் என்பது கட்டாயம். அவ்வாறு பெறப்பட்ட ஜகாத் நிதியில்தான் குடிமக்களில் பல்வேறு பிரிவினருக்கும் பொருளாதார நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். முஸ்லிம் அல்லாதவர்களிடம் ஜகாத் வசூலிக்க முடியாது. அவர்களுக்குத் தேவையான பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஜகாத் நிதியைப் பயன்படுத்த முடியாது. ஆக, முஸ்லிமல்லாதவர்களிடமிருந்து ஜிஸியாவாக வரி வசூலித்து அவர்களிலேயே தேவைப்பட்ட மக்களின் பொருளாதார நடவடிக்கைகளுக்கு மட்டுமே பயன்படுத்தப் படும். இதில் தவறென்ன கண்டீர்கள்?

  17. நல்லடியார்,
    அருமை, அருமை.
    சிறப்பான விளக்கங்களை பின்னூட்டத்திலும் தொடர்ந்தளித்து இணக்கமேற்படுத்துகிறீர்கள்.
    குற்றம் சொல்ல ஒன்றுமேயில்லை-பிடிக்காதவர்களுக்கு வரும் கோபத்தைத் தவிர.

  18. Muse (# 5279076)

    ஆனால் தாழ்த்தப்பட்டவன் பிறப்பின் காரணமாகவே அந்த பெயருக்குரியவனாகிறான் என்றால் அதை கடுமையாக எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளோம் இல்லையா?

    அன்பிற்குரிய கருத்து கந்தசாமித் தம்பி,

    தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல யாரையும் பிறப்பின் அடிப்படையில் உயர்த்துவதோ தாழ்த்துவதோ கூடாது என்பது ஹிந்து மதங்களின் கருத்து. எம் கருத்தும் அதுவே.

    பார்ப்பான் என்பதை பெருமையாகச் சொல்லிக்கொள்ளும் பிராமணர்களையும் நானறிவேன். ஒரு தாழ்த்தப்பட்ட சமூகத்து அரசியல் கட்சித் தலைவர் தன் பெயரில் ‘பறையனார்’ என்பதையும் சேர்த்தே சொல்லிக்கொள்கிறார்.

    இவையெல்லாம் அந்த இழிவுபடுத்தலிலிருந்து வெளிவரும், அவற்றை எதிர்க்கும் முயற்சிகளே. உண்மையில் தாழ்த்தப்பட்ட ஜாதிக்களின் பெயர்களே அவமானப்படுத்தும் வகையில்தான் உயர் ஜாதி ஆணவம் பிடித்த மனிதப்பதர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன.

    அதனால்தான் வன்கொடுமை எதிர்ப்பு சட்டத்தின்படி தாழ்த்தப்பட ஜாதியினரிடம் அவர்கள் ஜாதி பெயரை சொல்லி அழைப்பதுகூட தண்டனைக்குரியதாக உள்ளது என்று கேள்விப்பட்டேன்.

    கல்லூரியில் என்னுடைய அறையில் தங்கியிருந்த தலித் நண்பர் ஒருவர் தலித்துகளுக்கிடையே நடக்கும் அரஸியல் பற்றி உரையாடும்போது, தன் ஜாதி பெயரை சொல்லவே கூச்சப்பட்டார். அந்த ஜாதியினரின் பெருமையையும், அவர்களின் உழைப்பின் விளைவால்தான் இந்தியாவின் பல பெருமைகள் ஏற்பட்டன என்று விளக்கியபின்னரும், அவருடைய சங்கடம் ஓரளவே குறைந்தது.

    முன்னோர்களின் பாவங்களை நாமும் சுமக்கிறோம். புண்ணியங்கள் பல செய்து ப்ராயச்சித்தம் செய்ய வேண்டும்.

  19. Muse (# 5279076)

    நல்லடியார் அவர்களே,

    தாங்கள் என் கருத்து பற்றி எதுவும் கூறவில்லையே?

    தெளிவு பெற காத்திருக்கிறேன்.

  20. சவூதி தமிழன்

    //அமெரிக்காவில் அமெரிக்கரல்லாதவரை ‘Alien’ என்கிறார்கள். முறையாகச் சொன்னால் இந்த வார்த்தைக்கு தான் முதலில் இவர்கள் வெகுண்டு எழ வேண்டும்.//

    நல்லடியார்!

    சந்தடி சாக்கில அமெரிக்க அடிவருடிகளுக்கும் ஒரு உள்குத்துவச்சிட்டீங்களே. ஏலியன் அப்டீன்னா ரொம்ப நல்ல வார்த்தை போல இருக்கே. அதான் இப்ப வரைக்கும் யாரும் இது பத்தி ஒண்ணும் சொல்லலை.

    எனக்கு தெரிஞ்ச வரைக்கும் ஏலியன் அப்டின்ன பூமிக்கே சொந்தமில்லாதவன் அப்டின்னு தான அர்த்தம். பெரியண்ணன் சொன்னா கெட்ட வார்த்தயக் கூட சரி காண்போம்..சர்த்தான்.

    அமெரிக்கா இனிமே non-americans-ஐ காஃபிர் அப்டின்னு கூப்புட்டா நம்ம அண்ணாச்சிங்களுக்கு காதுல தேன் வந்து பாயும்ன்னு நெனக்கேன்..

  21. வாசகன்

    //உண்மையில் தாழ்த்தப்பட்ட ஜாதிக்களின் பெயர்களே அவமானப்படுத்தும் வகையில்தான் உயர் ஜாதி ஆணவம் பிடித்த மனிதப்பதர்களால் உபயோகப்படுத்தப்படுகின்றன.//

    நன்றி ம்யூஸண்ணா,
    இதைத்தான் நானும் (கடுமையாக எதிர்க்கக் கடமைப்பட்டுள்ளோம்)என்று சொல்லியிருந்தேன்.

  22. அபூ முஹை

    2:161. யார் (இவ்வேத உண்மைகளை) நிராகரிக்கிறார்களோ, இன்னும் (நிராகரிக்கும்) காஃபிர்களாகவே மரித்தும் விடுகிறார்களோ, நிச்சயமாக அவர்கள் மீது, அல்லாஹ்வுடையவும், மலக்குகளுடையவும், மனிதர்கள் அனைவருடையவும் சாபம் உண்டாகும்.

    2:171. அந்த காஃபிர்களுக்கு உதாரணம் என்னவென்றால்; ஒரு (ஆடு, மாடு மேய்ப்ப)வனின் கூப்பாட்டையும், கூச்சலையும் தவிர வேறெதையும் கேட்டு, அறிய இயலாதவை(கால் நடை) போன்றவர்கள்;. அவர்கள் செவிடர்களாகவும், ஊமையர்களாகவும், குருடர்களாகவும் இருக்கின்றனர்;. அவர்கள் எ(ந்த நற்போ)தனையும் உணர்ந்து கொள்ளமாட்டார்கள்.

    2:221.(அல்லாஹ்வுக்கு) இணைவைக்கும் பெண்களை-அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை- நீங்கள் திருமணம் செய்து கொள்ளாதீர்கள்;. இணை வைக்கும் ஒரு பெண், உங்களைக் கவரக்கூடியவளாக இருந்தபோதிலும், அவளைவிட முஃமினான ஓர் அடிமைப் பெண் நிச்சயமாக மேலானவள். ஆவாள்; அவ்வாறே இணைவைக்கும் ஆண்களுக்கு- அவர்கள் நம்பிக்கை கொள்ளும் வரை (முஃமினான பெண்களுடன்) நீங்கள் திருமணம் செய்து வைக்காதீர்கள்;. இணை வைக்கும் ஆண் உங்களுக்குக் கவர்ச்சியூட்டுபவனாக இருந்த போதிலும், ஒரு முஃமினான அடிமை அவனைவிட மேலானவன்; (நிராகரிப்போராகிய) இவர்கள், உங்களை நரக நெருப்பின் பக்கம் அழைக்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வோ தன் கிருபையால் சுவர்க்கத்தின் பக்கமும், மன்னிப்பின் பக்கமும் அழைக்கிறான். மனிதர்கள் படிப்பினை பெருவதற்காக தன் வசனங்களை அவன் தெளிவாக விளக்குகிறான்.

    2:254. நம்பிக்கை கொண்டோரே! பேரங்களும், நட்புறவுகளும், பரிந்துரைகளும் இல்லாத அந்த(இறுதித் தீர்ப்பு) நாள் வருவதற்கு முன்னர், நாம் உங்களுக்கு அளித்தவற்றிலிருந்து (நல்வழிகளில்) செலவு செய்யுங்கள்;. இன்னும், காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்கள் தாம் அநியாயக்காரர்கள்.

    3:10. நிராகரிப்போர்களுக்கு அவர்களுடைய செல்வங்களும், குழந்தைகளும் அல்லாஹ்வி(ன் தண்டனையி)லிருந்து எதையும் நிச்சயமாக தடுக்கமாட்டாது. இன்னும் அவர்கள்தாம் (நரக) நெருப்பின் எரிபொருள்களாக இருக்கின்றனர்.

    3:12. நிராகரிப்போரிடம் (நபியே!) நீர் கூறுவீராக: ”வெகு விரைவில் நீங்கள் தோல்வியடைவீர்கள்;, அன்றியும் (மறுமையில்) நரகத்தில் சேர்க்கப்படுவீர்கள்; இன்னும், (நரகமான அவ்விரிப்பு) கெட்ட படுக்கையாகும்.

    3:28. முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம்;. அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால், (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும், அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான்; மேலும், அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது.

    3:56. எனவே, நிராகரிப்போரை இவ்வுலகிலும், மறுமையிலும் கடினமான வேதனையைக்கொண்டு வேதனை செய்வேன்;. அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.

    அன்பின் agner அவர்களே! நீங்கள் எடுத்து வைத்துள்ள திருக்குருஆன் வசனங்கள் ”காஃபிர் என்றால் கேவலமான சொல்லா?” என்ற தலைப்புக்கு ஆதரவாகவே வைத்துள்ளீர்கள் – அதாவது காஃபிர் என்றால் (ஏக இறைவனை) மறுப்பவர் – நிராகரிப்பவர் என்ற கருத்தை மறுதலிக்கவில்லை,நன்றி!

    ”காஃபிர் என்றால் கேவலமான சொல்லா?” இந்த தலைப்பில் எதைச் சொல்ல முடியமோ, (ஒரு இடத்தில் மையக் கருத்தைவிட்டு விலகினாலும், அது கூட நல்லடியாருக்கு சரியெனப் பட்டிருக்கலாம்) அதுதான் சொல்லப்பட்டுள்ளது.
    நீங்கள் சுட்டிக்காட்டிய வசனங்களில் வேறு விசயங்களும் சொல்லப்பட்டுள்ளது என்பதை சம்பந்தப்பட்டக் கட்டுரை எங்கும் மறுக்கவில்லை. மேலும் நீங்கள் எழுதிய வசனங்களைப் படிக்கும் பே

  23. அபூ முஹை

    2:190.உங்களை எதிர்த்துப் போர் புரிபவர்களுடன் நீங்களும், அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்; ஆனால் வரம்பு மீறாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் வரம்பு மீறுபவர்களை நேசிப்பதில்லை.

    2:191. (உங்களை வெட்டிய) அவர்கள் எங்கே காணக்கிடைப்பினும், அவர்களைக் கொல்லுங்கள். இன்னும், அவர்கள் உங்களை எங்கிருந்து வெளியேற்றினார்களோ, அங்கிருந்து அவர்களை வெளியேற்றுங்கள். ஏனெனில் ஃபித்னா (குழப்பமும், கலகமும் உண்டாக்குதல்) கொலை செய்வதை விடக் கொடியதாகும். இருப்பினும், மஸ்ஜிதுல் ஹராமில் அவர்கள் (முதலில்) உங்களிடம் சண்டையிடாத வரையில், நீங்கள் அவர்களுடன் சண்டையிடாதீர்கள். ஆனால் (அங்கும்) அவர்கள் உங்களுடன் சண்டையிட்டால் நீங்கள் அவர்களைக் கொல்லுங்கள் – இதுதான் நிராகரிப்போருக்கு உரிய கூலியாகும்.

    2:192. எனினும், அவர்கள் (அவ்வாறு செய்வதில் நின்றும்) ஒதுங்கி விடுவார்களாயின் (நீங்கள் அவர்களைக் கொல்லாதீர்கள்) நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்போனாகவும், கருணையுடையோனாகவும் இருக்கின்றான்.

    2:193. ஃபித்னா(குழப்பமும், கலகமும்) நீங்கி அல்லாஹ்வுக்கே மார்க்கம் என்பது உறுதியாகும் வரை, நீங்கள் அவர்களுடன் போரிடுங்கள்;. ஆனால் அவர்கள் ஒதுங்கி விடுவார்களானால் – அக்கிரமக்காரர்கள் தவிர(வேறு எவருடனும்) பகை (கொண்டு போர் செய்தல்) கூடாது.

    2:194. (போர் செய்வது விலக்கப்பட்டுள்ள ரஜப், துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகிய) புனித மாதத்திற்குப் புனித மாதமே ஈடாகும்;. இதே போன்று, எல்லாப் புனிதப் பொருட்களுக்கும் ஈடு உண்டு – ஆகவே, எவனாவது (அம்மாதத்தில்) உங்களுக்கு எதிராக வரம்பு கடந்து நடந்தால், உங்கள் மேல் அவன் எவ்வளவு வரம்பு மீறியுள்ளானோ அதே அளவு நீங்கள் அவன் மேல் வரம்வு மீறுங்கள்;. அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்;. நிச்சயமாக அல்லாஹ் பயபக்தியுடையோருடன் இருக்கின்றான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்.

    போர் பற்றிப் பேசும் இந்த ஐந்து வசனங்களும் தவறாகவே விளங்கப்பட்டு பிரச்சாரம் செய்யப்படுகிறது. போர் என்பது முஸ்லிம்கள், முஸ்லிம் அல்லாதவர்கள் என்ற அடிப்படையில் அல்ல. மாறாக அக்கிரமத்துக்கு, அநீதிக்கும் எதிராகவேப் போர் செய்ய வேண்டும் என்றுதான் இஸ்லாம் சொல்கிறது.

    49:9. முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள். அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான்.

    அநீதி இழைக்கும் முஸ்லிம்களுடனும், முஸ்லிம்களை போர் செய்யச் சொல்கிறது. எனினும் போர் என்பது முறையாக அமைக்கப்பட்ட அரசுதான் செய்ய வேண்டும். இன்ஷா அல்லாஹ் இது பற்றியும் தனிப்பதிவில்.

    அன்புடன்,
    அபூ முஹை

  24. அபூ முஹை

    //மனிதன் தன்னை வணஙக வேண்டும் என்பது கடவுளின்
    தேவைதானே?//

    112:2. ”அல்லாஹ் தேவைகளற்றவன்”
    அல்லாஹ் தன்னை எந்தத் தேவையுமற்றவன் என்று பிரகடனப்படுத்திய பின் அவனுக்கு தேவையும் இருக்க வேண்டிய அவசியமில்லை.

    51:56. ஜின்னையும், மனிதனையும் என்னை வணங்குவதற்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை.
    மனிதனைப் படைத்தது தனக்குக் கட்டுப்பட்டு நடப்பதற்காகவே என்று இந்த வசனத்தில் இறைவன் கூறுகிறான். இறைவனின் கட்டளைகளுக்கு மனிதன் கட்டுப்பட்டு நடந்தாலும், கட்டளைகளுக்கு செவி சாய்க்காமல் – கட்டளைகளை மீறி நடந்தாலும் அதனால் இறைவனுக்கு எந்த லாபமும், இழப்பும் இல்லை. அவன் எந்தத் தேவுயுமற்றவன்.

    இதனால் மனிதகுலத்துக்கு நல்வழிக் காட்டுவதே இறைவனின் நோக்கம் என்று விளங்க வேண்டும். மனிதன் நல் வழியில் செல்வதும், தீய வழியைத் தேர்ந்தெடுப்பதும் மனிதனுக்கு நன்மையையும், தீமையும் ஏற்படுத்தும் அதனால் இறைவனின் பண்புகளில் எதையும் கூட்டவோ, குறைத்திடவோ முடியாது. ஜின், மனிதனிடமிருந்து இறைவன் தேவையுள்ளவனாக இருக்கிறான் என்றும் புரிந்து கொள்ளக்கூடாது. உலகிலுள்ள அனைத்து மாந்தரும் சேர்ந்து அவனை வணங்கினாலும், இறைவனின் பண்புகளில் எதுவும் கூடிவிடப் போவதில்லை. அனைத்து மாந்தர்களும் சேர்ந்து அவனை வணங்காமல் விட்டாலும் அவனுடைய பண்புகளில் எதுவும் குறைந்து விடப் போவதில்லை. இப்படித்தான் இஸ்லாம் சொல்கிறது.

    (”என்னை வணங்கவே” என்று வசனம் சொல்வது அவனின் கட்டளைக்கு கட்டுப்பட்டு நடக்கவே, அதாவது இறைவனுக்கு அடியார்களாக இருக்கவே என்று விளங்க வேண்டும்)

    அன்புடன்,
    அபூ முஹை

  25. வாசகன்

    நல்லடியார்
    நீங்கள் திருக்குரானில் உள்ள ‘காஃபீர்’பற்றி அருமையாக விளக்கமளித்துக்கொண்டுள்ளீர்கள். அங்கே இதைக் கண்டு தாங்காமல் அங்கே ஒரு CA படித்த ஆதிக்கவாதி தன்னுடைய பாகிஸ்தான் பங்காளி காஃபிர் பத்தி தவறா புரிஞ்சு வைத்துள்ளதை வைத்து ஜல்லியடித்துக்கொண்டிருக்கிறார். அவாளுக்கெல்லாம் எப்படியாச்சும் வெறுப்பை விசிறிவிட்டுட்டே இருக்கணும் போல.

  26. நல்லடியார்

    ம்யூஸ்,

    நடைமுறையில் முஸ்லிம்கள் மாற்று மதத்தவர்களை ‘காஃபிர்’ என்று அழைப்பதில்லை. இந்து/கிறிஸ்தவர்/சீக்கியர்/பெளத்தர் என்றோ அல்லது மாற்று மதத்தவர்கள் என்றோதான் குறிப்பிடுகின்றனர்.வளைகுடா நாடுகளில் இந்தியர்களை, அவர்கள் எம்மதத்தவர்களாக இருந்தாலும், ‘ஹிந்தி’ என்றே பொதுவாக அடையாளப் படுத்தப்படுகிறோம்.

    மற்றபடி, பார்ப்பணர் என்பது பற்றி, பழனியப்பா ப்ரதர்ஸின் ‘கோனார்’ (இதுவும் ஒரு சாதிதான்!!!) மின்னகராதியில் பிராமணன் என்பதற்கு பார்ப்பணன், அந்தணன் என்ற அர்த்தங்களும் சொல்லப் பட்டுள்ளன. தமிழ் வலைப்பூக்களில் கூட பிராமணன் என்பதை பெருமையாகக் கருதுவதாக சிலர் குறிப்பிட்டுள்ளார்கள் என்று நினைக்கிறேன்.

    பிராமணர்/அந்தணர் என்பதில் பெருமை கொள்ளும் பிராமணர்கள், பார்ப்பனர் என்றால் ஏன் வருத்தப் பட வேண்டும்?

    அதேபோல் முஸ்லிம்களை துலுக்கன் என்பது,பண்டைய முஸ்லிம்கள் துருக்கி தொப்பி அணித்து மக்களுடன் காணப்பட்டனர்.பாரதியார் கூட ஒரு பாடலில் ‘திக்கை வணங்கும் துருக்கரும்…’ என்று குறிப்பிட்டுள்ளார். துருக்கர் என்பதே துலுக்கன் என மருவி இருக்கலாம். இந்தியாவிலேயே பிறந்து, வாழ்ந்து கொண்டிருக்கும் முஸ்லிம்களை, துருக்கர்/துலுக்கன் என்பது சரியா? என்பதை அவ்வாறு சொல்பவர்கள்தான் விளக்க வேண்டும்

  27. Muse (# 5279076)

    பதிலுக்கு நன்றிகள் நல்லடியார் அவர்களே.

    நான் வேறு மாதிரி கேட்கிறேன்.

    நடைமுறையில் துலுக்கன், பார்ப்பான் போன்ற வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவரை அவமரியாதை செய்யும் வகையில் உபயோகிக்கப்படவில்லை என்று தாங்கள் கூறுகிறீர்களா?

  28. //சிறப்பான விளக்கங்களை பின்னூட்டத்திலும் தொடர்ந்தளித்து இணக்கமேற்படுத்துகிறீர்கள்.
    குற்றம் சொல்ல ஒன்றுமேயில்லை-பிடிக்காதவர்களுக்கு வரும் கோபத்தைத் தவிர.// என்று முன்பு சொல்லியிருந்தேனல்லவா, அதன்படியே தான் ஜயராமன் என்கிற agnerக்கு கோபம் வந்துவிட்டது.

    யாரையும், எதையும் தாக்காமல் இஸ்லாமின் சரியான விளக்கத்தை நீங்கள் தந்துவருவதை ஜயராமன்@agner போன்றவர்களால் ஏன் தாங்க முடிவதில்லை?

    முயூஸ் போன்றவர்களாவது நியாயம் பேசலாமே.

  29. அமெரிக்காவில் சில தடைகள் அனைவருக்கும் பொதுவானவை.உதாரணமாக நிகழ்ச்சிகளில்,
    விழாக்களில் வெடிகள் வெடிப்பது.அனுமதி பெற்று அதைச் செய்யலாம்.ஒரு மதத்தினைச் சேர்ந்தவர்
    என்பதால் ஒருவர் இரண்டாம்தரக் குடிமகனாக நடத்தப்படமாட்டார்.சில முஸ்லீம் நாடுகளில் இவ்வாறு இல்லை.மத அடிப்படையில் மக்கள் பாகுபாடு காட்டப்படுகின்றனர்.மேலும் முஸ்லீம் ஒருவர்
    கிறித்துவத்தை தழுவியதற்காக அவரை கொல்ல வேண்டும் என்று ஆப்கானிஸ்தானில் எழுந்த
    சர்ச்சையும், வேறு பல உதாரணங்களும் இஸ்லாமிய நெறி என்ற பெயரில் அடிப்படை உரிமைகள்
    மறுக்கப்படுவதையே காட்டுகின்றன.இன்றைய உலகில் மத சார்பற்ற, சமத்துவம் என்பதன் அடிப்படையில் அரசுகள் செயல்படுவதே மத அடிப்படையில் பாகுபாடுகள் காட்டுவதை விட
    சிறப்பானது. இந்த அடிப்படையில் பார்த்தால் இஸ்லாத்தின் பெயரில் செய்யப்படும் பல பாகுபாடுகள்
    சரியானவை அல்ல.அரசு மத நம்பிக்கை அடிப்படையில் வரி வசூலிக்கக்கூடாது.மாறாக அனைவருக்கும் வரித்திட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும். ஒரு புறம் காபிர் என்பதை
    தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம் அது பிற மததவரை அவமதிக்கும் சொல் அல்ல என்று சொன்னாலும் கசப்பான உண்மை என்னவென்றால் இந்த அடிப்படையில் (இஸ்லாம்,பிறர்)இஸ்லாமிய நாடுகளில்/சமூகங்களில் பல பாரபட்சங்கள் இருந்தன, இருக்கின்றன என்பதுதான்.

  30. இறை நேசன்

    //தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல யாரையும் பிறப்பின் அடிப்படையில் உயர்த்துவதோ தாழ்த்துவதோ கூடாது என்பது ஹிந்து மதங்களின் கருத்து.//

    சில நேரங்களில் அறிவுப்பூர்வமாக வாதங்களை வைக்கும் சகோதரர் மியூஸ் அவர்கள் ஒரு சில நேரங்களில் இது போன்று காமெடி செய்வதற்கும் தவறுவதில்லை.

    ஒரு முன் அனுமதி/கோரிக்கை:

    நான் கேட்கப்போவதை இப்பதிவுக்கு தொடர்பில்லை என்றோ அல்லது எங்கள் மதத்தில் தலையிட நீ யார் என்றோ கேள்விகள்/வசைகள் வருமாயின் நான் இங்கு வைக்கும் கேள்வியை திரும்பப்பெற்றுக் கொள்கிறேன்.

    சகோதரர் மியூஸ் அவர்கள்

    யாரையும் பிறப்பின் அடிப்படையில் தாழ்த்துவதோ/உயர்த்துவதோ கூடாது என்பது இந்து மதங்களின் கருத்து எனக் கூறியிருக்கிறார்.

    அவர் என்னுடைய சில கேள்விகளுக்கு பதிலளிப்பாரா?

    1. இந்து “மதங்களின் எனக் கூறியிருக்கிறாரே? அப்படியெனில் எத்தனை இந்து மதங்கள் உள்ளன?

    2. யாரையும் உயர்த்துவதோ/தாழ்த்துவதோ கூடாது எனக் கூறியிருக்கிறார் எனில் பார்ப்பன மதம் இந்து மதங்களில் ஒன்று இல்லையா?

    3. இல்லை பார்ப்பன மதமும் இந்து மதங்களில் ஒன்று தான் என அவர் கூறினால் பிரம்மா/சிவனின்(என்னடா காக்கும் கடவுளை படைப்பு விஷயத்தில் சேர்க்கிறானே என நினைக்க வேண்டாம். சிலர் சிவனின் தலை,தோள்,தொடை,கால் எனக் கூறுவதால் அவரையும் சேர்த்துக் கொண்டேன்) தலை/முகம், தோள், தொடை, கால் இவற்றிலிருந்து பிறந்தவர்கள் என மனிதனை பாகுபடுத்தி ஒருவனை விட மற்றவன் தாழ்ந்தவன் எனவும் இப்பிறவியில் எப்பிரிவில் ஒருவன் பிறந்தானோ அவன் அப்பிரிவிலேயே தான் மரணிப்பான்; அவன் எவ்வளவு நல்ல காரியங்கள் செய்தாலும் தலை/முகத்திலிருந்து பிறந்தவன் ஆக முடியாது என பாப்பான் மதம் கூறுவதாக பாப்பானின் வேதம் கூறுகிறதே? இதற்கு என்ன பதில் வைத்துள்ளீர்கள்.

    4. பாப்பானின் மதத்தில் மனிதர்கள் அனைவரையுமே நான்கு வர்ணத்தில் பிரித்து எழுதி வைத்திருக்கிறானே! எனில் இந்து மதங்களில் உட்படாத மற்ற மத மனிதர்கள் எவ்வர்ணத்தில்/பிரிவில் வருகின்றனர் எனக் கூற முடியுமா?

    அதாவது இந்து மதங்களில் படாத மற்ற மதத்தவர்கள் பிரம்மா/சிவனின் தலை/முகத்திலிருந்து பிறந்தவர்களா?, தோளிலிருந்து பிறந்தவர்களா?, தொடையிலிருந்து பிறந்தவர்களா? அல்லது காலிலிருந்து பிறந்தவர்களா?

    5. இது தொடர்பில்லாத ஆனால் தொடர்புள்ள கேள்வி: இந்து மதங்களில் ஒன்றான பார்ப்பன மதம் கூறும் தத்துவமே சரி என இந்து மதங்களில் உட்படாத ஒருவன் நம்பி பார்ப்பன மதத்துக்கு மதம் மாறுவதற்கு நினைக்கிறான் என வைத்துக் கொள்ளுங்கள். அவனை அந்த நான்கில் எப்பிரிவில் சேர்ப்பீர்கள்: தலை/முகத்திலிருந்து பிறந்தவன் எனக் கொண்டு ஆடாமல் அசையாமல் வெகுளிகளின் இறைவிசுவாசத்தை கருவியாகக் கொண்டு உண்டு கொழுக்கும் பாப்பான்கள் வர்க்கத்திலா? அல்லது தன் கையில் என்றும் அதிகாரத்தை வைத்திருக்க மக்கள் பணத்தை பாப்பானுக்கு வாரி இறைத்து அந்தபுரத்தில் கூத்தடிக்கும் சத்திரிய வர்க்கத்திலா? அல்லது மேற்கூறிய இரண்டு வர்க்கத்திற்கு நாள் தவறாமல் வாய்க்கரிசி இட ஏழைகளின் இரத்தத்தை உறிஞ்சும் வியாபார ஒட்டுண்ணிகளான வணிக வர்க்கத்திலா? அல்லது தான் என்ன தான் நல்லவனாக இருந்தாலும் நற்கருமங்கள் செய்தாலும் தலையிலிருந்து பிறந்தவனுக்கு இப்பிறவி முழுவதும் ஊழியம் செய்வது தான் பிறவிப்பலன் விதிக்கப்பட்ட சூத்திர வர்க்கத்திலா?

    முதலில் இவற்றிற்கு பதில் கூறுங்கள். அதன்பிறகு,

    //ஆனால் எல்லாரும் இப்படித்தான் நடைமுறையில் உபயோகிக்கிறார்கள் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை.//

    முஸ்லிமல்லாதவர்களை அழைக்க முஸ்ல
    ிமல்லாதவர்கள் என்ற அர்த்தத்தில் தான் முஸ்லிம்கள் காஃபிர் என்ற சொல்லை பயன்படுத்துகிறார்களா? இல்லையா? என்ற ஆழ்மன ஆராய்ச்சிகளை தேர்ந்த மனோ தத்துவ நிபுணர்களை வைத்தோ அல்லது பொய்யுரைப்பதை கண்டறியும் கருவியை வைத்தோ நாம் ஆராய்ச்சி செய்து முடிவுக்கு வருவோம்.

    இறை நேசன்

  31. Muse (# 5279076)

    இறை நேசன்,

    தாங்கள் கேட்டிருந்தவற்றுள் பல கேள்விகள் சரியானவை. பல விளக்கங்கள் தேடுபவை. கடைஸி கேள்வி நெத்தியடி.

    இந்த கேள்விகளை உங்கள் பதிவில் போடுங்களேன். நாம் அங்கே கலந்துரையாடுவோம். ப்ளீஸ்.

  32. அபூ முஹை

    //முஸ்லீம்கள் அல்லாதோரை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துப்படுவது இஸ்லாத்தின் படி சரி
    என்று ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறியிருந்ததை நேசக்குமார் தன் பதிவில் இட்டிருந்தார்.அந்தக் கருத்து சரியா.இஸ்லாமிய நாடுகளில் பிற மதத்தவருக்கும் அனைத்து உரிமைகள் வழங்கப்பட்ட
    வேண்டும் என்பதை நீங்கள் ஏற்கிறீர்களா.தலிபான்கள் பிற மதத்தவர் மீது விதித்த கட்டுப்பாடுகள்
    இஸ்லாமியக் கோட்பாடுகளுக்கு இயைந்தவைதானா.இஸ்லாமிய அரசர்கள் பிற மதத்தவர் மீது விதித்த ஜெஸியா வரி மத அடிப்படையில்தானே விதிக்கப்பட்டது.இப்படி காபிர்களை வேறு விதமாக, முஸ்லீம்களுக்கு சமம் இல்லாதவர்கள் என்று நடதப்படுவதை நீங்கள் ஏற்கிறீர்களா.//

    //முஸ்லீம்கள் அல்லாதோரை இரண்டாம் தரக் குடிமக்களாக நடத்துப்படுவது இஸ்லாத்தின் படி சரி
    என்று ஒரு இஸ்லாமிய அறிஞர் கூறியிருந்ததை…//

    ரவி சரினிவாஸ்,
    இது பற்றி விளக்கம் கேட்டு விமர்சனம் – விளக்கம்
    பதிவுக்கு பின்னூட்டம் வந்தது. ஒரு ”டாக்டர்” அப்படிச் சொன்னதாக, கேட்ப்பட்டது. டாக்டர், கம்பவுண்டர், வார்டு பாய் – (இதை நான் கேலியாகச் சொல்லவில்லை) – சொன்னதெல்லாம் இஸ்லாம் ஆகாது என்பதால் மெளவுனம் சாதிக்க வேண்டி வந்தது.

    இந்திய அரசாங்கம் விதிக்கும் வரிகள் நாட்டின் ”குடி மக்கள்” என்ற உரிமை இருப்பதாலேயே விதிக்கப்படுகிறது. ஜிஸ்யா வரியும் நாட்டின் குடி மகன் என்ற ரீதியில்தான் அரசாங்கத்தால் விதிக்கப்படுகிறது. முஸ்லிம் அராசங்கம் என்பதால் இது மத அடிப்படையில் விதிக்கப்படும் வரியாக நீங்கள் நினைப்பது சரியல்ல.

    முஸ்லிம் ஆட்சியளர்களின் கீழ் வாழும் மாற்று மதத்தினருக்கு மிக சொற்பமானத் தொகையாகவே ஜிஸ்யா என்ற வரி விதித்து வசூலிக்கப்பட்டது. இதில் வசதியற்றவர்கள் என அதிகமானோர் இந்த வரியிலிருந்து விதி விலக்குப் பெற்றனர்.

    வசதி படைத்தவர்களிடம் மட்டுமே – வரி செலுத்தத் தகுதியுடையர்களிடமே ஜிஸ்யா வரி வசூலிக்கப்பட்டது நாட்டு மக்கள் என்று அவர்களுக்கும், வசதிகளைச் செய்யவும் பாதுகாப்பு வழங்கும் பொறுப்பும் அரசாங்கத்துக்கு இருப்பதால் மிக சொற்பமான தொகையே வசூலிக்கப்பட்டது.

    இந்த வரி வசூலிக்கப்படவில்லை என்றால் அதுதான் இரண்டாந்தர குடி மக்கள் என்ற கருத்தை கொண்டிருக்கும்.

    முஸ்லிம்களுக்கு மதரீதியாக வரி வசூலிக்கப்பட்டது. ”ஜகாத்” ஜிஸ்யா வரி போல் குறிப்பிட்ட தொகையை வசூலிக்கவில்லை. மாறாக ஜகாத் கொடுக்கும் அளவுக்கு பொருளாதாரம் உள்ளவர்கள் அந்தத் தொகையைக் கணக்கிட்டு கொடுக்க வேண்டும். முஸ்லிம்களிலும் ஜகாத் கொடுக்கும் அளவுக்கு செல்வத்தை பெற்றிராதவர்கள் மீது ஜகாத் கடமையில்லை. ஜிஸ்யா வரி செலுத்த வசதியில்லாதவர்கள் மீது ஜிஸ்யா வரியும் செலுத்த வேண்டிய அவசியமில்லை.

    திருக்குர்ஆன் ஜிஸ்யா வரி வசூலிக்கச் சொல்வதால் இது மதம் சார்ந்தது அல்ல. இஸ்லாமிய ஆட்சியின் கீழ் வாழும் முஸ்லிமல்லாதவர்களிடம் – வரி கொடுக்கும் தகுதியுடையர்களிடம் வரி வசூல் செய்ய வேண்டும் என்று ஆட்சியாளருக்கு இடும் ஒரு உத்தரவு. இதற்கு நியாயமான காரணங்களும் உண்டு.

  33. அபூ முஹை

    ரவி சிரினிவாஸ்,
    // அரசு மத நம்பிக்கை அடிப்படையில் வரி வசூலிக்கக்கூடாது.மாறாக அனைவருக்கும் வரித்திட்டம் பொதுவானதாக இருக்க வேண்டும்.// இது எல்லா மதத்தினரும் சேர்ந்து வாழும் மதசார்பற்ற நாட்டில் சரி.

    பல்வேறு மதத்தினர் வாழ்ந்தாலும் ஒரு மதம் சார்ந்த அரசு அமைக்கப்பட்ட நாட்டில் அந்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு, மத நம்பிக்கையின் அடிப்படையில் கூடுதலான வரியும், அரசு என்று மாற்று மதத்தவர்களிடம், மிக சொற்பமான தொகையே வரியாக வசூலிக்கப்பட்டது. இது நியாயமும் கூட. இது சம்பந்தமாக இஸ்லாமிய ஆதாரங்களைத் திரட்டி வாருங்கள் சாவகாசமாக நாம் பேசுவோம்.

    //காபிர் என்பதை தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்// காஃபிர் என்பது ஒரு வேற்று மொழிச் சொல். அரபு மக்கள் அதை சரியாகப் புரிந்து கொண்டார்கள். தமிழில் காஃபிர் பதத்தை மொழி பெயர்க்காமல், காஃபிர் என்று அப்படியே சொல்லி திருக்குர்ஆன் முஸ்லிம் அல்லாதவர்களை காஃபிர் என்று கேவலப்படுத்துவதாக ஒரு மாயையை ஏற்படுத்தியுள்ளார்கள். அதை உடைத்திருக்கிறார் நல்லடியார். இதுதான் கசப்பான உண்மை.

    மேலும் நீங்கள் எழுதிய மற்ற விபரங்கள் நாட்டு நடப்பாகவும், சில உங்கள் சொந்தக் கருத்தாகவும், இருப்பதால் அப்படியே விடுகிறேன், நன்றி!

    அன்புடன்,
    அபூ முஹை

  34. நல்லடியார்

    //அமெரிக்காவில் சில தடைகள் அனைவருக்கும் பொதுவானவை. உதாரணமாக நிகழ்ச்சிகளில்,விழாக்களில் வெடிகள் வெடிப்பது.அனுமதி பெற்று அதைச் செய்யலாம்.ஒரு மதத்தினைச் சேர்ந்தவர் என்பதால் ஒருவர் இரண்டாம்தரக் குடிமகனாக நடத்தப்படமாட்டார்.சில முஸ்லீம் நாடுகளில் இவ்வாறு இல்லை//

    வழிபாட்டு உரிமையில் நாடுகளின் மாறுபட்ட கண்ணோட்டத்தையும் சட்டதிட்டங்களையும் பேசிக் கொண்டிருக்கிறோம். நீங்கள் குறிப்பிடும் வெடி வெடித்து மகிழும் கொண்டாட்டங்கள் வழிபாடுகளில் வராது. எனக்குத் தெரிந்து சவூதி தவிர்த்து இதர முஸ்லிம் நாடுகளில் மாற்றுமத வழிபாடுகளுக்கும் கொண்டாட்டங்களுக்கும் பொதுவில் அனுமதி உண்டு. மலேசியாவில் இந்துக்கடவுள்களுக்குக் காவடி எடுக்கவும், தேர் இழுக்கவும், கும்பாபிஷேகம் நடத்தவும் சட்டப்படி அனுமதி உண்டு. துபாய், குவைத், பஹ்ரைன், ஒமான், கத்தார் போன்ற நாடுகளில் கிட்டத்தட்ட அனைத்து மதக் கோவில்களும், வழிபாடுகளும் சுமூகமாகவே நடந்து வருகின்றன. ஆக, கடுமையான கட்டுப்பாடுகள் உள்ள முஸ்லிம் நாடுகளில், மாற்று மதத்தவர்கள் இரண்டாம்தரக் குடிமக்களாக நடத்தப் படுகிறார்கள் என்பது மிகையான குற்றச்சாட்டே.

    அமெரிக்காவின் Tolerance பற்றிப்பேசும் நீங்கள் Alien என்பதைக் கண்டு கொள்ளாமல் செல்கிறீர்கள். அமெரிக்க விசாவுக்கு விண்ணப்பித்த முஸ்லிம்களில் தாடி வைத்திருந்த காரணத்திற்காக விசா மறுக்கப் பட்டவர்கள் பற்றியும் அறிந்திருப்பீர்கள் என்று நம்புகிறேன்.

    ஜிஸ்யா வரியைக் குறைசொல்லும் நீங்கள், இந்தியாவில் வருமான வரி கட்டும் முஸ்லிம்கள், மார்க்கக் கடமையாக ஜகாத்தையும் தனியாகக் கொடுத்து இரட்டை வரிகள் செலுத்தி வருவதை அறிவீர்களா?

    – நல்லடியார்

  35. நல்லடியார்

    //நடைமுறையில் துலுக்கன், பார்ப்பான் போன்ற வார்த்தைகள் ஒரு குறிப்பிட்ட குழுவை சேர்ந்தவரை அவமரியாதை செய்யும் வகையில் உபயோகிக்கப்படவில்லை என்று தாங்கள் கூறுகிறீர்களா? //

    முயூஸ்,

    நடைமுறையில் மேற்சொன்ன வார்த்தைகளில் ‘பார்ப்பனர்’ தவிர மற்றவை அவமரியாதை செய்யும் வகையில்தான் உபயோகிக்கப் படுகின்றன. பார்ப்பனர்கள் தங்களை பார்ப்பனர் என்பதில் பெருமிதப்படுவது அது உயர்வான அர்த்தத்தில் சுட்டப்படுகிறது என்பதே. பள்ளர் என்றோ பறையர் என்றோ அழைக்கப்படுவதை எவரும் பெருமையாகக் கருதுவதில்லை.

    இந்து சமூகத்தில் தாழ்த்தப்பட்ட மக்களை காந்தியார், ஹரிஜன் (கடவுளின் குழந்தை) என்றார். இதுவும் கூட காலங்காலமாக அவர்களைப் பாவப்பட்ட ஜென்மங்களாய் நீடிக்கக் காரணமாகி விட்டது. என்னதான் கடவுளின் குழந்தை என்று அரவணைத்து நடந்தாலும் உண்மையான அங்கீகாரம் சமூக விடுதலையில்தான் இருக்கிறது. (தங்கக் கூண்டில் அடைத்தாலும் கிளிக்கு சொர்க்கம் மரக்கிளைதானே!)

  36. அருண்மொழி

    //தாழ்த்தப்பட்டவர்கள் மட்டுமல்ல யாரையும் பிறப்பின் அடிப்படையில் உயர்த்துவதோ தாழ்த்துவதோ கூடாது என்பது ஹிந்து மதங்களின் கருத்து. //

    வழக்கம் போல museன் amuse.

  37. Muse (# 5279076)

    நல்லடியார் அவர்களே,

    பதிலளித்தமைக்கு நன்றி.

    அருண்மொழி,

    என் கருத்து தங்களை மகிழ்வித்தது அறிந்து நானும் மகிழ்கிறேன் (வழக்கம்போல).

  38. அன்புள்ள நன்பா நல்ல விளக்கம் அளித்துள்ளீர் இத்த்ஹ்ய பதிவுகலை நன்றாக மருபடியும் எள்தவும் அனைவருக்கும் பயன் தரும் இப்படிக்கு

    அன்பு சகொதரர்
    நிஹ்மத்

  39. இறை நேசன்

    //இந்த கேள்விகளை உங்கள் பதிவில் போடுங்களேன். நாம் அங்கே கலந்துரையாடுவோம். ப்ளீஸ்.//

    சகோதரர் மியூஸ் உங்களின் இந்த கோரிக்கையை ஏற்று பதிந்து மூன்று தினங்கள் கடந்து விட்டன.

    ஒருவேளை தாங்கள் கவனிக்கவில்லையோ என்னமோ. வாருங்களேன். கலந்துரையாடலாமே.

    இறை நேசன்

  40. சுவனப்பிரியன்

    Nalladiyar!

    பல பயனுள்ள தகவல்கள். பாராட்டுக்கள்.

    என்றும் அன்புடன்
    சுவனப்பிரியன்

  41. தங்களுடைய விளக்கங்கள் மிக அழகாக அமைந்துள்ளன

    பதிலளித்தமைக்கு நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *