Featured Posts
Home » பொதுவானவை » பர்தாவும் பைபிளும்

பர்தாவும் பைபிளும்

சிலவருடங்களுக்கு முன் இலண்டனில் இஸ்லாத்தில் இணைந்த சகோதரிகளிடம் பிரபல ஊடக நிருபர், “நேற்றுவரை உங்களின் உணவுப் பழக்கம், நண்பர்கள், உறவுகள் அப்படியே இருக்கின்றன; இஸ்லாத்தில் இணைந்த பிறகு ஏன் உடையில் மட்டும் மாற்றம் ஏற்பட்டது? என்றார். அதற்கு அவர்கள், இவ்வுடையில் எங்களின் தனித் தன்மை பாதுகாக்கப் படுவதாக உணர்கிறோம்” என்றார்கள்.

அதேபோல்,நாகர்கோவில் பகுதியில் நடந்த பெண்ணியக் கருத்தரங்கில் பேசிய பெண் பேச்சாளர் ஒருவர், “இஸ்லாம் பெண்களை பர்தா போட்டு அடிமைப்படுத்துகிறது. இங்கு வந்திருக்கும் சகோதரிகளில் எவராவது தாங்கள் விரும்பியே இந்த பர்தாவை அணிந்தோம் என்று சொல்ல மாட்டார்கள்; தகப்பன்,கணவன்,சகோதரன் என ஏதாவது ஒருவகையில் ஆணாதிக்கவாதிகளால் நிர்ப்பந்தப்படுத்தப்பட்டே பர்தா அணியத் தொடங்கி இருப்பீர்கள்” என்றார்.

அக்கூட்டத்தில் அமர்ந்திருந்த பர்தா அணிந்த சகோதரிகளில் ஒருவர் இதனை மறுத்து, “இல்லை மேடம்! பர்தாவை நான் விரும்பியே அணிகிறேன்; இதில் கிடைக்கும் கண்ணியம் மற்ற உடைகளில் கிடைக்கவில்லை” என்பதை அதனை உணரும் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும்; பர்தாவினால் கண்ணியக் குறைவென்பதற்கு உங்களால் நியாயமான காரணம் எதுவும் சொல்ல முடியாது” என்று அப்பேச்சாளரின் வாயை அடைத்தார்.

தடித்த கருப்புத் துணியால் உடலைப்போர்த்தச் சொல்லி பெண்களை அடக்குமுறைக்கு ஆளாக்குகிறது இஸ்லாம் என்பவர்கள்,சினிமா நடிகையரும் பிரபலமான பெண்களும் மோசடி, விபச்சாரம் போன்ற குற்றச்சாடுகளில் கைது செய்யப்பட்டு காவல் நிலையம் வரும்போது பர்தா அணிந்து முழுதும் மூடிக்கொண்டு வருவதை வேண்டுமென்றே விமர்சிப்பதில்லை.

சினிமா போஸ்டர்களில் நடிகைகளின் படங்கள் ஆபாசமாகக் காட்டப்பட்டிருந்தால் தார்பூசி அளிப்பதில் மட்டுமா பெண்மையின் கண்ணியம் காக்கப்படுகிறது? இதுபோல், ஒருசமூகம் கண்ணியத்திற்காக பின்பற்றும் உடையைத் தவறாகப் பயன்படுத்துவதையும் கண்டிக்க முன்வர வேண்டும். இப்படியாக, வெவ்வேறு காரணங்களுக்காக பர்தா அணியும் பெண்கள் அதில் கண்ணியமும் ஆண்களின் வக்கிரப் பார்வையிலிருந்து பாதுகாப்பும் கிடைப்பதாக உணரும்போது, பர்தாவை எதிர்ப்பவர்களுக்கு எதிர்மறையாகத் தெரிவது ஏன்?

ஐரோப்பிய நாடுகளில் பர்தாவுக்கு எதிரான கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதனைச் சொல்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்! இவர்கள் பர்தாவின் முன்னோடி கிறிஸ்தவமதம் என்பதை அறியாமல் விமர்சிக்கிறார்கள். இயேசுவின் அன்னை மரியம் (அலை..) அவர்களை சித்திரமாகக் காட்டும் போதும் (முஸ்லிம்கள் அவ்வாறு காட்டுவதில்லை) நாம் நன்கறிந்த அன்னை தெரஸா போன்ற கிறிஸ்தவ நானிகள் (NUN) பர்தா அணிந்திருப்பதையும் கண்டிருக்கிறோம். கடந்த 1960 ஆம் ஆண்டு வரையில் தேவாலயங்களிலுள்ள பெண்கள் தலையை முக்காடிட்டு மூட வேண்டுமென்பது கட்டாயமாக இருந்தது.

பெண்களை பர்தா அணியச் சொல்லும் இஸ்லாம் அதில் அவர்களுக்கு கண்ணியம் இருக்கிறது என்கிறது. அந்நிய ஆடவர் முன்பு மட்டுமே பர்தா அணிந்து மறைக்கச் சொல்கிறது. பெண்கள் பர்தா அணிய வேண்டும் என்பது குர்ஆனில் மட்டும் சொல்லப் படவில்லை; பைபிளிலும் சொல்லப் பட்டிருக்கிறது.

I கொரிந்தியர் 11:5 ஜெபம்பண்ணுகிறபோதாவது, தீர்க்கதரிசனஞ் சொல்லுகிற போதாவது, தன் தலையை மூடிக்கொள்ளாதிருக்கிற எந்த ஸ்திரீயும் தன் தலையைக் கனவீனப்படுத்துகிறாள்; அது அவளுக்குத்
தலை சிரைக்கப்பட்டது போலிருக்குமே.

I கொரிந்தியர் 11:6 ஸ்திரீயானவள் முக்காடிட்டுக்கொள்ளாவிட்டால் தலைமயிரையும் கத்தரித்துப்போடக்கடவள்;தலைமயிர் கத்தரிக்கப் படுகிறதும் சிரைக்கப்படுகிறதும் ஸ்திரீக்கு வெட்கமானால் முக்காடிட்டுக் கொண்டிருக்கக் கடவள்.

I கொரிந்தியர் 11:7 புருஷனானவன் தேவனுடைய சாயலும் மகிமையுமாயிருக்கிறபடியால், தன் தலையை மூடிக்கொள்ள வேண்டுவதில்லை; ஸ்திரீயானவள் புருஷனுடைய மகிமையாயிருக்கிறாள்.

I கொரிந்தியர் 11:10 ஆகையால் தூதர்களினிமித்தம் ஸ்திரீயானவள் தலையின் மேல் முக்காடிட்டுக்கொள்ளவேண்டும்.

I கொரிந்தியர் 11:13 ஸ்திரீயானவள் தேவனை நோக்கி ஜெபம் பண்ணுகையில், தன் தலையை மூடிக்கொள்ளாமலிருக்கிறது இலட்சணமாயிருக்குமோ என்று உங்களுக்குள்ளே நிதானித்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாத்தில் பெண்கள் முக்காடிட்டு பர்தா அணிய வேண்டுமென்பது எல்லா சூழலிலும் கட்டாயமில்லை! இஸ்லாம் சொல்லும் பர்தா பெண்கள் கண்ணியப்படுத்தப் படவேண்டும் என்பதற்காகவேயன்றி, பைபில் சொல்வதுபோல் பெண்கள் ஆண்களுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்பதற்காக அல்ல என்பதை அறிந்து கொண்டால், இஸ்லாமியப் பெண்களின் பர்தா, அடக்கு முறைச் சின்னமல்ல என்பது தெளிவாகும்.

வெளிச்சுட்டிகள்:
According to the Scriptures: Headcovering
Biblical Headcovering: The Scarf of Hidden Power
Christian Women’s Headcovering Directory
Headcoverings and the Christian Woman
Is a Woman’s Hair Her Only Covering?
Let Her Be Veiled
Modesty and Christian Living in the 90s
My Testimony Regarding the Headcovering
Nigerian Catholics told to be modest
No Such Custom?
On the Covering of Heads
She Maketh Herself Headcoverings
Should Christian Women Wear a Headcovering?
The Biblical Practice of Headcovering
The Christian Modesty
The Christian Veiling
The Headcoverings of Sisters
The Rites of Submission
The Significance of the Christian Woman’s Veiling
The Veil
Women’s Headcovering and the Glory of God
http://www.tamil-bible.com/

38 comments

  1. \\ஐரோப்பிய நாடுகளில் பர்தாவுக்கு எதிரான கருத்துக்கள் ஒலிக்கத் தொடங்கியுள்ளன. இதனைச் சொல்பவர்கள் பெரும்பாலும் கிறிஸ்தவக் கோட்பாடுகளில் மிகுந்த நம்பிக்கை கொண்டவர்கள்!\\

    ஐயோ நீங்க வேற இவர்களுக்கு மத நம்பிக்கையெல்லாம் கிடையாது. பெரும்பான்மையான மேற்கத்தியர்களுக்கு மத நம்பிக்கை வெறும் கிருஸ்துமஸ், “New Year” மற்றும் சில நேரங்களில் “Sunday Maas” அவ்வளவுதான்.

    இவர்கள் பர்தாவை எதிர்ப்பதற்கு முக்கிய காரணம் இவர்கள் விவஸ்தையில்லாமல் “Swimming Pool”-ல் தங்கள் அழகை இரண்டு இடங்களைத் தவிர காட்டிக்கொண்டு கும்மாளம் அடிப்பதற்கு தற்போதய “Latest Fashion” ஆன தொப்புளில் தோடு குத்துவதற்கு மற்றும் தங்கள் பாதி மார்பகங்கள் தெரிய உடை அணிவதற்காகவும்தான். இதுதான் அவர்கள் பர்தாவை எதிர்ப்பதற்கு நியாமான (?) காரணங்கள்.

    இதில் பெண்ணுரிமைக்காக தாய்ப் பால் கொடுத்து நூதன போராட்டம் வேறு. கொடுமைடா சாமி.

  2. //இஸ்லாமியப் பெண்களின் பர்தா, அடக்கு முறைச் சின்னமல்ல என்பது தெளிவாகும்.//

    நல்லடியார் அய்யா,

    Frank weisner என்ற அறிஞர் எழுதிகிறார்: ” பொதுவாக இஸ்லாமியர்கள் தாடியில்லாத மூஞ்சியை பார்ப்பதை விரும்புவதில்லை.பெண்களுக்கு, பொதுவாக (ஒரு சிலரைத் தவிர) தாடி வளராது.அதனால் மூஞ்ஜியை மூடி விடுவது உத்தமம் என்று அரேபியர்கள் முடிவெடுத்தனர்.”

    இது சரியான கருத்தா? விளக்கமா சொல்லுங்கய்யா.

    பாலா

  3. நல்லடியார்

    //பொதுவாக இஸ்லாமியர்கள் தாடியில்லாத மூஞ்சியை பார்ப்பதை விரும்புவதில்லை//

    பாலா,

    பெண்களை பர்தா அணியச் சொல்லும் குர்ஆன் ……தங்கள் அலங்காரத்தை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக்கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக்காட்டலாகாது…(வசனம்024:31) என்று தெளிவாகச் சொல்லி இருக்கும்போது முகம், கைகள், கரண்டைக்கால் ஆகியவற்றை மூடச் சொல்லவில்லை.

    ஆண்கள் தாடியை வளர்ப்பதை இஸ்லாம் விரும்புகிறது; அவ்வாறு செய்யாதவர்களை வெருப்பதில்லை. ஆண்கள் தாடி வளர்ப்பதைமுஹம்மது நபியும் இதனை மிகவும் விரும்பி இருக்கிறார்கள்.

    //பெண்களுக்கு, பொதுவாக (ஒரு சிலரைத் தவிர) தாடி வளராது.//

    ஹார்மோன் கோளாறுகளால் மீசை வளரும் பெண்களைப் பற்றி கேள்விப் பட்டிருக்கிறேன். தாடி வளரும் (!?!) பெண்கள் பற்றி அறிஞர். Frank weisner சொல்லித் தான் கேள்விப்படுகிறேன். மேலும் அறிஞர். Frank weisner யார்? எந்த துறையில் அவர் அறிஞர்?

    – இவை நான் அறிந்து கொள்வதற்காக மட்டும்! :-)

  4. ஹையோ, நல்லடியார், அநியாயத்துக்கு நல்லடி…யா இர்க்கீங்களே…
    பாலாவெல்லாம் என்னாத்துக்கு கேக்குறாங்கன்னு புரியாம பதில் சொல்லிட்டு இர்க்கீங்களே.
    அவர் சொன்ன அந்த அறிஞர் அவங்கட ராஜாமாதாக்கள் அணிஞ்சிருக்கிற பர்தா போன்ற ஆடைகளப் பத்தியும் எதாச்சும் சொல்லியிருக்காரான்னு திருப்பி கேக்கறத வுட்டுப்போட்டு.!

    அப்புறம் எனக்கு வந்த ஒரு மயில அனுப்பிச்சிருக்கேன். பாத்து சொல்லுங்க!

    One day, a brilliantly beautiful and fragrant flower with
    attractive colors met a pearl that lives far in the bottom of the
    sea and has none of these characteristics.

    Both got acquainted with each other.

    The flower said: “Our family is large; roses and daisies are
    members of the family. And there are many other species that are
    various and countless, each has a distinctive scent, appearance
    .etc.”

    Suddenly, a tinge of distress appeared on the
    flower.

    “Nothing accounts for sorrow in your talk; so why are depressed?”
    The pearl asked.

    “Human beings deal with us carelessly; they slight us. They don’t
    grow us for our sake but to get pleasure from our fragrance and
    beautiful appearance. They throw us on the street or in the garbage
    can after we are dispossessed of the most valuable properties;
    brilliance and fragrance” The flower sighed.

    And then the flower said to the pearl: “Speak to me about your
    life! How do you live? How do you feel it? You are buried in the
    bottom of the sea. ”

    The pearl answered: “Although I have none of your distinctive
    colors and sweet scents, humans think I am precious. They do the
    impossible to procure me. They go on long journeys, dive deep in
    the seas searching for me. You might be astounded to know that the
    further I lay, the more beautiful and brilliant I become. That’s
    what upraises my value in their thought. I live in a thick shell
    isolated in the dark seas. However, I’m happy and proud to be in a
    safe zone far from wanton and mischievous hands and still the
    humans consider me highly valuable”

    Do you know what the flower and the pearl symbolize?

    The Flower is the unveiled woman (who shows her charms)
    and the Pearl is the veiled woman (who conceals her beauties)

  5. மரைக்காயர்

    மிக அழகான உதாரணத்தை தந்த மருது அவர்களுக்கு நன்றி.

  6. சிறில் அலெக்ஸ்

    It’s true that those words are in the bible. These are from the letters written by St. Paul to the early Christians. This requires women to veil ONLY their head (does not include Face) just the head, exposing their face. ONLY during Prayers.

    It is quiet possible that those days it was a distraction and they were required to veil thair head.

    One good thing about the church is that it does not keep traditions just for the sake of it or just because it is in the bible (at least the Catholic church) due diligence is used to determine changes that are required in each soceity in each passing tiime.

    I think any social movement, including a religion should be able to do this. Adaptation is one of the main keys to survival.

    Changes are required by nature. Pardha/Veils helped women in deserts don’t think they are needed anywhere else, since pardha is not the only decent dress around.

    whether a dress is decent or not is determined by an onlooker not so much by the person wearing it. They would not wear it if they were not comfortable about it.

    Having said that, it is a right of every woman to choose what she wants to wear. If it is a pardha then it should be allowed, but no one needs to be forced.

    these are a few arguements.

  7. .whether a dress is decent or not is determined by an onlooker not so much by the person wearing it. They would not wear it if they were not comfortable about it.

    Having said that, it is a right of every woman to choose what she wants to wear. If it is a pardha then it should be allowed, but no one needs to be forced.

    You are telling to fanatic muslims
    like Nallaidiyar who will defend
    making it compulsory.You cant argue with such fundamentalist muslims as they are irrational
    to the core.

  8. நல்லடியார்

    சிறில்,

    //This requires women to veil ONLY their head (does not include Face) just the head, exposing their face. //

    இஸ்லாத்திலும் பர்தா அணியும் பெண்கள் முகம்,கைகள்,கரண்டைக்கால் ஆகியவற்றை மூடத் தேவையில்லை.

    //Changes are required by nature.//

    இயற்கைச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்றுக் கொள்ளச் சொல்லும் நீங்கள், பெண்களின் இயற்கையான உடலமைப்பிற்கேற்ற ஆடையை அணிவதையும் ஏற்றுக் கொள்வீர்கள் என்று நம்புகிறேன்.

    இஸ்லாம் பெண்களை கண்ணியப்படுத்தவே பர்தாவை வலியுறுத்துகிறது.கிறிஸ்தவத்தில் பர்தா கட்டாயமில்லை என்பது மகிழ்சியான செய்தி :-] ஆனால் டூபீஸ், பிகினியில் வலம்வருவது கிறிஸ்தவ நம்பிக்கைக்கு எதிரானதுதானே?

    மற்றபடி,பர்தாவை எதிர்ப்பதில் பெண்களை விட ஆண்கள் மட்டுமே முன்னனியில் நிற்பதன் காரணம்தான் விளங்கவில்லை! :-)

  9. நல்லடியார்

    மருது,

    மரைக்காயர் சொன்னதையே நானும் வழிமொழிகிறேன்.

  10. நல்லடியார்

    //பெரும்பான்மையான மேற்கத்தியர்களுக்கு மத நம்பிக்கை வெறும் கிருஸ்துமஸ், “New Year” மற்றும் சில நேரங்களில் “Sunday Maas” அவ்வளவுதான். //

    ஸயீத்,

    மிகச்சரியாக சொன்னீர்கள். கிறிஸ்தவத்தை சரியாகப் பேணுபவர்கள் மது அருந்தக் கூடாது. அதற்கான பைபிள் வசனங்கள்:

    லேவியராகமம்,10:9.” நீயும் உன்னோடேகூட உன் குமாரரும் சாகாதிருக்கவேண்டுமானால், ஆசரிப்புக் கூடாரத்துக்குள் பிரவேசிக்கிறபோது, திராட்சரசத்தையும் மதுவையும் குடிக்கவேண்டாம்.”

    நியாயாதிபதிகள் 13:4 “ஆதலால் நீ திராட்சரசமும் மதுபானமும் குடியாதபடிக்கும், தீட்டானது ஒன்றும் புசியாதபடிக்கும் எச்சரிக்கையாயிரு”

    ரோமர் 14:21 மாம்சம் புசிக்கிறதும், மதுபானம்பண்ணுகிறதும், மற்றெதையாகிலும் செய்கிறதும், உன் சகோதரன் இடறுகிறதற்காவது, தவறுகிறதற்காவது பலவீனப்படுகிறதற்காவது ஏதுவாயிருந்தால், அவைகளில் ஒன்றையும் செய்யாமலிருப்பதே நன்மையாயிருக்கும்.

    எபேசியர் 5:18 துன்மார்க்கத்திற்கு ஏதுவான மதுபான வெறிகொள்ளாமல், ஆவியினால் நிறைந்து;

    I பேதுரு 4:3 சென்ற வாழ்நாட் காலத்திலே நாம் புறஜாதிகளுடைய இஷ்டத்தின்படி நடந்துகொண்டது போதும்; அப்பொழுது நாம் காமவிகாரத்தையும் துர்இச்சைகளையும் நடப்பித்து, மதுபானம்பண்ணி, களியாட்டுச்செய்து, வெறிகொண்டு, அருவருப்பான விக்கிரகாராதனையைச் செய்துவந்தோம்.

    இப்படியாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பைபிளில் போதனைகளிலிருந்து விலகி விட்டார்கள் என்பது துரதிஷ்டமானது!

  11. //இப்படியாக பெரும்பாலான கிறிஸ்தவர்கள் பைபிளில் போதனைகளிலிருந்து விலகி விட்டார்கள் என்பது துரதிஷ்டமானது//

    நல்லடியார் அய்யா,

    இப்படியே பெரும்பாலான இஸ்லாமியர்களும் குர் ஆனின் போதனைகளிலிருந்து விலகி எல்லாரும் உருப்படியாக வாழ வழி செய்யுங்களேன் அய்யா.

    பாலா

  12. நல்லடியார்

    //எல்லாரும் உருப்படியாக வாழ வழி செய்யுங்களேன் அய்யா.//

    பாலா அய்யா,

    நீங்களே ஒரு வழியைச் சொல்லிடுங்களேன்.அது உருப்படியா / படாததான்னு ஆறஅமர விவாதிக்கலாம்.

  13. நல்லடியார்

    //நீங்களே ஒரு வழியைச் சொல்லிடுங்களேன்.அது உருப்படியா / படாததான்னு ஆறஅமர விவாதிக்கலாம்.//

    கேட்க மறந்துட்டேன்! அறிஞர் Frank weisner எதாச்சும் வேற உருப்படியா சொல்லி இருக்கிறாரா?

  14. சுல்தான்

    நல்லடியார்.
    பாலா அவர்கள் பார்ப்பனீயத்தை வேறு பெயரில் சொல்லக்கூடும்.
    அவரே Frank weisnerஐ கேட்டுச் சொன்னா ஜியோனிஸமென்று சொல்லக்கூடும்.
    எதை விவாதிப்பது. இரண்டு பேரும் சேர்ந்து ஒரு முடிவு செய்திட்டு வரச் சொல்லி அது உருப்படியா / படாததான்னு ஆற அமர விவாதிக்கலாம்.

  15. முஸ்லிம்

    //இப்படியே பெரும்பாலான இஸ்லாமியர்களும் குர் ஆனின் போதனைகளிலிருந்து விலகி எல்லாரும் உருப்படியாக வாழ வழி செய்யுங்களேன் அய்யா.//

    அதுக்குத்தானே தலை கீழா நின்னு தண்ணீர் குடிக்கிறீங்க பாலா

  16. இறையடியான்

    //இப்படியே பெரும்பாலான இஸ்லாமியர்களும் குர் ஆனின் போதனைகளிலிருந்து விலகி எல்லாரும் உருப்படியாக வாழ வழி செய்யுங்களேன் அய்யா//

    பாலா அய்யா

    நீங்க தல கீழ நின்னு தண்னி குடிச்சாலும் சரி இன்னு எதை செய்தாலும் சரி உண்மை முஸ்லீம்கள் தடம் மாற மாட்டார்கள்.

    வாள் முனையில் நின்றாலும் ஈமானை இழக்காதவர்கள் நாங்கள் அது தான் எங்கள் நபி(ஸல்) அவர்கல் கற்றுத்தது அதை தாங்களை போன்ற சிலர் அறியாமல் இஸ்லாத்தின் மீது எழுப்பக்கூடிய கேள்விகளால் நாங்கள் இன்னும் குரான் ஹதீகளொடு நெருங்கத்தான் செய்கிறொமே தவிர தாங்கள் நினைப்பதைப் போல் யாரும் இஸ்லாத்திலிருந்து விலகமாட்டார்கள் அவ்வாறு தாங்கள் மனப்பால் குடிக்க வேண்டாம் என கேட்டுக் கொள்கிறேன்

  17. அட்றா சக்கை

    நல்லடியார் அய்யா,

    Frank weisner எனும் அறிஞர் தன்னுடைய Uncivilized Civilization of Aryans எனும் நூலில் சொல்கிறார்: “தாடி வைத்திருக்கும் முஸ்லிம்களைக் கண்டால் பார்ப்பான்களுக்கு பிடிக்காதாம். அவர்களுக்கு எதிராகச் செயல்பட வேண்டும் என்பதறக்காகவே குடுமி வைக்கிறார்களாம்”

    :))))))

  18. மரைக்காயர்

    //Frank weisner என்ற அறிஞர் எழுதிகிறார்: ” பொதுவாக இஸ்லாமியர்கள் தாடியில்லாத மூஞ்சியை பார்ப்பதை விரும்புவதில்லை.பெண்களுக்கு, பொதுவாக (ஒரு சிலரைத் தவிர) தாடி வளராது. அதனால் மூஞ்ஜியை மூடி விடுவது உத்தமம் என்று அரேபியர்கள் முடிவெடுத்தனர்.” – பாலா //

    ‘பெண்களுக்கு ஏன் மீசை தாடி இல்லை?’
    பாலாவின் இந்து மத புராணங்கள் தரும் அரிய விளக்கத்தைக் காண இங்கே கிளிக்குங்க.

  19. //பாலா அவர்கள் பார்ப்பனீயத்தை வேறு பெயரில் சொல்லக்கூடும்//

    சுல்தான் அய்யா,

    தவறு செய்து விட்டீர்கள்.
    நான் கைபர் /போலான் வழியாக வந்தேறிய பார்ப்பனீய இஸ்லாமியத்தை தான் குறைசொல்வேனே தவிர திராவிட இஸ்லாமியத்தை அல்ல.முதலில் உங்கள் பார்ப்பனீய இஸ்லாமிய பர்தாவை உதறிவிட்டு திராவிட இஸ்லாமிய பர்தாவை அணிந்து கொள்ளுங்கள்.

    பாலா

  20. செந்தழல் ரவி

    நீங்கள் கூறும் கருத்தை நான் ஏற்க்கவில்லை…அதனால் “பர்தா அடக்குமுறையின் சின்னம்” என்று ஓட்டு போட்டுவிட்டேன்…

    கிறிஸ்தவ மதத்தில் இருந்த முக்காடு பழக்கம், மொட்டையடிக்கறது ( கண்ணியாஸ்திரிகளை மொட்டச்சிகள் என்று முன்பு வழங்கினார்களாம்) எல்லாம் தூக்கி எறியப்பட்டுவிட்டன…

    இன்னும் இஸ்லாம் பர்தாவை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கவேண்டுமா நன்பரே ? காலத்திற்கேற்ப மாறாத எந்த மதமும் நிலைக்காது…சுருங்கித்தான் போகும்…இப்போது இந்தியாவில் புத்தமதத்தின் நிலையை எண்ணிப்பாரும்…

  21. \\இன்னும் இஸ்லாம் பர்தாவை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கவேண்டுமா நன்பரே ? காலத்திற்கேற்ப மாறாத எந்த மதமும் நிலைக்காது…\\

    சகோதரரே! சரி ஆனால் மனிதன் இன்னும் மாறவில்லையே காலங்கள் மற்றும் விஞ்ஞான வளர்ச்சிதானே மாறிக் கொண்டுவருகிறது. இன்னும் பெண்ணை ஒரு போகப் பொருளாகத்தானே மிகப் பெரும்பான்மையோர் பார்க்கின்றனர். இஸ்லாத்தில் கருப்பு அங்கி ஒரு புகுத்தப் பட்ட விஷயம் மற்றவர்களுக்கு கவர்ச்சி தறாத வகையில்தான் இஸ்லாம் ஆடை அணியச்சொல்கிறது. மிகப் பெரும்பான்மையோர் நல்லவர்களாக இருந்தாலும் கூட ஒரு சிலர் கெட்டவர்களாகத்தானே இருக்கிறார்கள் அவர்களிடமாவது ஜாக்கிரதையாக இருக்கலாம் அல்லவா?. காலம் மாறினாலும் கற்பழிப்புகள் இன்றும் தொடர்கதையாகத்தானே உள்ளது.

  22. ரவி அவர்களே, நீங்கள் பர்தா அடக்கு முறையின் சின்னம் என்று ஓட்டு போட்டதை ஏற்றுக் கொள்கிறேன், அது உங்களது கருத்து என்ற அடிப்படையில்,
    ஆனால் அதே சமயத்தில் கிறிஸ்தவ மதத்தில் இருந்த முக்காடு பழக்கம் தூக்கி எறியப்பட்டு விட்டது என்றால் அதன் பிறகு முக்காடு இல்லாமல் இருப்பதை எப்படி கிறிஸ்தவ மதம் என்று சொல்ல முடியும், கிறிஸ்து சொன்னதை தூக்கி எறிந்து விட்டு அப்புறம் கிறிஸ்தவ மதம் எங்கேயிருந்து வந்தது? அதுவும் தவிர, காலத்திற்கு ஏற்ப மாறாதது நிலைக்காது என்று கூறுகிறீர்கள், நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த காலத்திற்கு தான் பர்தா உடை அவசியம் என்று நினைக்கிறேன், அந்த உடை அடக்கு முறையின் சின்னமல்ல நண்பரே, அந்த உடை தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடையாளம், இஸ்லாம் மேற்கத்திய நாடுகள் உள்பட உலகெங்கும் வளர்ந்து தான் வருகிறது. நாகூர் இஸ்மாயில்

  23. செந்தழலாரே! அப்டீன்னா கிறிஸ்தவ கன்யாஸ்திரீகள் ‘காலத்துக்கேற்ப’ உடை அணியறதில்லேங்கறீங்களா?

  24. நல்லடியார்

    பர்தா இஸ்லாத்திற்கு முன்பிருந்தே பின்பற்றப்படுகிறது என்பதை பைபிள் வசனங்களிலிருந்து கண்டோம். இஸ்லாம் வலியுறுத்தும் பர்தா முறையும், அதற்கான காரணமும் பைபிளில் சொல்லப்படும் காரணத்தை விட நியாயமானது என்பதை நடுநிலையாகச் சிந்தித்தால் உணரமுடியும்.

    மூடப்பழக்க வழக்கங்களிலிருந்து முற்றிலும் மாறச்சொன்ன இஸ்லாம், பெண்களை மூடி இருக்கச் சொல்வதில் முரணில்லை.ஆணையும் பெண்ணையும் சமமாகக் கருதும் இஸ்லாம் பெண்ணின் உடலியல் அமைப்பைக் கருத்தில் கொண்டே பெண்ணுக்கு பர்தாவையும் ஆணுக்கு வேறுசில கட்டுப்பாடுகளையும் விதிக்கிறது. ஆண்களெல்லாம் உத்தமர்களாக இருந்து விட்டால் பர்தாவிற்கு அவசியம் இருந்திருக்காது.

    ஒழுக்கச் சீர்கேட்டை தடுக்கும் கட்டுப்பாடுகள் அடக்குமுறையின் சின்னம் என்றால் எயிட்ஸ் ஒழிப்பு விளம்பரங்களையும் அடக்குமுறை என்றே கருத வேண்டும்.

    செந்தழல் ரவி,

    //காலத்திற்கேற்ப மாறாத எந்த மதமும் நிலைக்காது…சுருங்கித்தான் போகும்…இப்போது இந்தியாவில் புத்தமதத்தின் நிலையை எண்ணிப்பாரும்… //

    கிறிஸ்தவத்திற்குப் பின் வந்த இஸ்லாத்தினால் கிறிஸ்தவம் அழியவில்லையே! இஸ்லாத்திற்குப் பின்னர் எத்தனையோ மதங்கள் தோன்றறியபோதும் இஸ்லாம் அழியவில்லை!

    மாற்றம் என்பது அவசியம்;எத்தகைய மாற்றம் என்பது அதைவிட அவசியம். வாழ்வியலை நெறிப்படுத்தும் நியாயமான எந்த மாற்றத்தையும் இஸ்லாம் விட்டு வைக்கவில்லை. அத்தகைய மாற்றங்களை ஏற்றதினால் தான் பெண் சிசுக்கொலை, வரதட்சினைக் கொடுமை,ஸ்டவ் வெடிப்பு, மாமியார் கொடுமைகள் அரேபியர்களிடம் இல்லை.

    //நீங்கள் கூறும் கருத்தை நான் ஏற்க்கவில்லை…அதனால் “பர்தா அடக்குமுறையின் சின்னம்” என்று ஓட்டு போட்டுவிட்டேன்…//

    உங்களின் வெளிப்படையான பின்னூட்டத்திற்கு நன்றி. (பதிலுக்கு நானும் உங்கள் பதிவில் ஒரு (-) ஓட்டு போட்டிருப்பேன். பாவம் பிழைத்துப் போங்க! :-)

  25. \\உங்களின் வெளிப்படையான பின்னூட்டத்திற்கு நன்றி. (பதிலுக்கு நானும் உங்கள் பதிவில் ஒரு (-) ஓட்டு போட்டிருப்பேன். பாவம் பிழைத்துப் போங்க! :-)\\

    ஐயய்யோ! அப்படியெல்லாம் செய்யாதீங்க. நம்ம நட்சத்திர தல எவ்வளவோ நல்ல காரியங்களெல்லாம் செய்யுறாரு. அவர் இன்னும் நெறயச் செய்யனும். வேணும்னா நம்ம ப.க.ச தலைவர்கிட்ட சொல்லி கண்டிச்சிரச்சொல்லுவோம்.
    :)))))))))

  26. சுல்தான்

    பார்ப்பனீய, திராவிட இஸ்லாமென்று எந்த வேறுபாடும் இஸ்லாத்தில் இல்லை பாலா ஐயா.
    அல்லாஹ் சொன்னதும் அவன் தூதர் காட்டித்தந்த வழிமுறையுமே இஸ்லாம். அதிலே குறையாக நடப்பவர்கள்தம் இஸ்லாத்தில் குறைபாடுண்டு அவ்வளவே.

  27. Dear Nalladiyar,

    It is not only Muslim and Christian women practiced Veil, also hindu women must wear veil.

    For eg. Namboodiri Brahmin women of Kerala were surrounded by an entire screen carried by female servants.

    “Nambudri women carry with them an umbrella whereever they go out, to prevent them from being seen by men. They also should be covered with a cloth from head to foot, and should not wear jewels.

    A Nayar woman should precede her and watch her movements.

    All these were rules laid down by Parasu Rama.” [ Thurs 5.153-154 ]

    The Nambudiris observe 64 anacharams, or irregular cusotms introduced by Shankaracharya, of which some are [ Thurs 5.185 – 189 ]

    “Brahman women must not look at any persons other than theier husbands”

    “Brahman women must not go out, unless accompanied by women servants.”

    “Brahman women must wear only white clothing”

    As usual, several observers, seeing Arab women veiled, assumed the Brahmin veil must be due to Muslim `contamination’. They are not aware that Arabs practice this due to the Judeo-Christian influence (cf. the Catholic nuns and the Medieval tiara), and are ignorant of Indian scriptures.

    Sanskrit literature mentions the abundant use of veils by Aryan Hindu women (although it appears that Sudra women were not secluded) :

    “The practice of using veils by women, particularly in well-to-do families, was in vogue.

    Prabhakaravardhana’s daughter Rajyasri put on a veil when she met her husband, the Maukhari Grahavarman of Kanauj, for the first time. It is known from Vacaspati Misra (9C AD) that women in good families observed the purdah system and did not appear in public without veils … However, Dhoyi, the author of the 12 C poetical work the Pavanaduta, relates that the women of Vijayapura (in Bengal) did not observe the purdah system ”
    [ Gang, p.595 ]

    The Bengali liberalism is due to Mongoloid `nastik’ Shakta and Tantric influence. With the advent of Brahmanism (ie. Hinduism) in the 7th-8th centuries, the status of women naturally deteriorated.

    Regarding the dress of Hindu women, it is merely a derivative of the dhoti. Thus Vedic women wore paridhanam and vasahantaram [ Nand 28 ] [ Alt. 279-81 ]. Later dress consisted of uttariya( upper portion), kancuka (bodice) and a candetaka (petticoat) sari.

    Contemporary literature has numerous references to prove that veiling is an ancient Indo-Aryan custom and was used by the Brahmins to crush non-Brahmin women :

    Bhavabuti – Bhavabhuti in his Mahaviracharita gives a vivid evidence of purda. When Rama sees Parasurama coming towards him, he directs his consort Sita, `Dear one, he is our elder, therefore turn aside and veil yourself’ [ Mah.Ch. Act II, p.71 ] [ 1200, p.70 ] This indicates that veiling was practiced during the Ramayanic Dark Age.

    Grants – The Kalibhana grant also tells us that the women of the royal household observed purda in Orissa [ 1200, p.70 ] [ In.H.Qu. XX (1944) p.242 ]

    Vacaspati – Vachaspati tells us that women of good families did not come without a veil in public [ Vach. ] [ 1200, p.70 ].

    Some women were so much devoted to their husbands that they would not even look at the Sun regarding him as a `parapurusa’.

    If the servants were found seeing the faces of queens, they feared punishment. [ Sis. XII.20.17 ] [ 1200 p.70 ]. This shows that even the servants could not see the faces of the ladies of the house.
    Sriharsha – The free mixing of men and women was considered bad in Sriharsha’s works [ Nais.Ch. XV.3 ] [ 1200, p.70 ].

    Numismatic studies have also confirmed that veiling was universal amongst Aryan women :
    `Harsha’s [1099-1101 ] [Lohara dynasty] coins [depict] a half cross-legged goddess [and ] a veil appears on the head ‘
    — [ Coin.39]

    `Gangayadeva’s [one of the Kalachuri rulers of Dahala, the country around Jabalpur in MP] (1019-1042AD) coins … the female is shown as having a veil on her head which hangs down to the shoulders and upper arms’
    — [ Coin.39]

    `Many of the female figures on the gold coins, like the sculpture and literature of the [Gupta] age, do reflect a somewhat new idea of feminine beaty which we now call classical [thinner and more slender]

    — [ Coin.21 ]
    It is now generally accepted that the purdah ( seclusion and veiling ) was existent in India since ancient Aryan times. [ Alt.167-70 ] [ Indra 73 ] [ Shamram 24 ] [ Ojha.66-67] In fact, certain high-class women refused to entertain strangers at all [ Alt.175 ] [ Nand 5-6 ].

    These reference show that ancient India was akin to medieval Europe, with Indian women living lives similar to nuns under strict Manuite laws.

    The European travellers made abundant references to the veil worn by Indo-Aryan women and the severe restrictions placed upon them.

    It seems that the bodice was imported by Muslims :

    `In several parts of India … bodices [are worn by ladies under the cloth] … this, i am told, is a modern innovation, and borrowed from the Mohamedans.’
    — [ DuB.p.341]

    This means that Indian women fell into two categories : the Aryan women who had to be covered from head to foot, and the indigenous Sudra women went about topless. The latter were indeed forced to do so as a result of high-caste enforced customs related to Devadasism. This was merely another aspect of the exploitation of native women by Brahmin men.

    NOT SURPIRSINGLY,ALL MAJOR RELIGIONS TEACHES VEIL TO WOMEN. ISLAMIC VEIL IS HAIL!

  28. நீங்கள் பைபிளிருந்து ‘முக்காடு’ மற்றும் ‘பர்தா’ பற்றிய கருத்துக்கள் பவுல் (சின்னப்பர்) அவர்களால் கூறப்பட்டுள்ள கருத்துக்கள்.. இந்த வசனங்கள் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடாகத்தான் உணர்ந்துகொள்ள முடிகிறதேயன்றி , இயேசு கிறிஸ்துவின் ‘அன்பு’ நற்செய்தியை உணராதவராகத்தான் என்னால் பார்க்க முடிகிறது ..

    // கிறிஸ்து சொன்னதை தூக்கி எறிந்து விட்டு அப்புறம் கிறிஸ்தவ மதம் எங்கேயிருந்து வந்தது? //

    கண்டிப்பாக இவ்வாறு கேணத்தனமாக கிறிஸ்து சொல்லவில்லை ..கன்னியாஸ்திரிகள் மொட்டை அடிப்பது பர்தா போன்ற உடைகளை அணிவது இதையெல்லாம் கிறிஸ்து கூறவில்லை ..இதெல்லாம் இவர்களுக்குள் செய்துகொண்ட பைத்தியக்காரத்தனம். இப்பொது இதை உணர்ந்த் கன்னியாஸ்திரிகள் சேலை உடுத்துவதை பார்த்த்தில்லையா .

    //அத்தகைய மாற்றங்களை ஏற்றதினால் தான் பெண் சிசுக்கொலை, வரதட்சினைக் கொடுமை,ஸ்டவ் வெடிப்பு, மாமியார் கொடுமைகள் அரேபியர்களிடம் இல்லை//

    அரேபியர்கள் மட்டுமா முஸ்லீம்கள்.. இந்திய, பாகிஸ்தானிய , இந்தோனிஷிய முஸ்லீம்களிடையே இல்லை எனக்கூறமுடியுமா? இந்த கொடுமைகள் அமெரிக்க , சிங்கப்பூர் கிறிஸ்துவர்களிடமும் இல்லாமலிருக்கலாம்.. இதற்கு கிறிஸ்தவ மதம் பெருமைப்பட அவசியமில்லை . இந்த கொடுமகள் எல்லாம் சமுதாய சார்புடையவை சகோதரரே. எந்த மதத்தினாலும் ஒரு புடலங்காயும் பறிக்கமுடியாது

  29. முஸ்லிம்

    //நான் என்ன நினைக்கிறேன் என்றால் இந்த காலத்திற்கு தான் பர்தா உடை அவசியம் என்று நினைக்கிறேன், அந்த உடை அடக்கு முறையின் சின்னமல்ல நண்பரே, அந்த உடை தான் இஸ்லாமிய நாகரீகத்தின் அடையாளம், இஸ்லாம் மேற்கத்திய நாடுகள் உள்பட உலகெங்கும் வளர்ந்து தான் வருகிறது. நாகூர் இஸ்மாயில்//

    இதுதான் நாகூர் இஸ்மாயிலின் ”பஞ்ச்”

  30. முஸ்லிம்

    //இன்னும் இஸ்லாம் பர்தாவை தாங்கி பிடித்துக்கொண்டிருக்கவேண்டுமா நன்பரே ?//

    இது இஸ்லாம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்.

    //காலத்திற்கேற்ப மாறாத எந்த மதமும் நிலைக்காது…சுருங்கித்தான் போகும்…//

    காலத்துக்கேற்றவாறு மாறும் குட்டை பாவாடை அரை மார்பு ஆடை கலாச்சாரங்கள் இஸ்லாத்துக்கு அவசியமில்லை. அதனால் இஸ்லாம் சுருங்கும்ங்கறதும் மேதாவித்தனமில்லை ஏன்னா இதெல்லாம் புதுசா இன்னைக்கு சொல்லப்படவில்லை. எல்லாம் பழைய விமர்சனங்கள். இதனால் இஸ்லாம் சுருங்கிடவில்லை வளரத்தான் செய்கிறது. செந்தழல் ரவி கொஞ்சம் பிந்திய வரலாறையும் திரும்பி பார்க்கட்டும்.

    அது என்னய்யா பெண்களின் ஆடை மட்டும் மேலிருந்து கீழாகவும் கீழிருந்து மேலாகவும் சுருங்கிக் கொண்டு வருகிறது.? அதுக்கு வக்காலத்து வாங்கவும் சிலர்.

    //இப்போது இந்தியாவில் புத்தமதத்தின் நிலையை எண்ணிப்பாரும்…//

    இப்படித்தான் சிலபேரு கனா காண்கிறார்கள் புத்தமத மாதிரி இஸ்லாத்தின் நிலையையும் ஆக்கிடலாம்னு. மனப்பால் குடிப்பதில் செந்தழல் ரவியும் ஒருவர்.

    _ முஸ்லிம்

  31. முஸ்லிம்

    //பர்தா போன்ற உடைகளை அணிவது இதையெல்லாம் கிறிஸ்து கூறவில்லை ..இதெல்லாம் இவர்களுக்குள் செய்துகொண்ட பைத்தியக்காரத்தனம். இப்பொது இதை உணர்ந்த் கன்னியாஸ்திரிகள் சேலை உடுத்துவதை பார்த்த்தில்லையா// லா ல தாஸு

    லால தாஸு பார்தவென்றால் என்னவென்றே விளங்காமல் எழுதிக் கொண்டிருக்கிறார்.அதனால்தான் ‘கன்னியாஸ்திரிகள் சேலை உடுத்துவதை பார்த்ததில்லையா’ என்ற கேள்வியை எழுப்புகிறார் சேலையின் முந்தானையைத் தலையில் போட்டு கொண்டால் அதுவும் பர்தாதான் என்பதை லால தாஸு விளங்கயிருக்கவில்லை போலும்.

    -முஸ்லிம்

  32. \\கண்டிப்பாக இவ்வாறு கேணத்தனமாக கிறிஸ்து சொல்லவில்லை ..கன்னியாஸ்திரிகள் மொட்டை அடிப்பது பர்தா போன்ற உடைகளை அணிவது இதையெல்லாம் கிறிஸ்து கூறவில்லை ..இதெல்லாம் இவர்களுக்குள் செய்துகொண்ட பைத்தியக்காரத்தனம். இப்பொது இதை உணர்ந்த் கன்னியாஸ்திரிகள் சேலை உடுத்துவதை பார்த்த்தில்லையா .\\

    சரி.. கன்யாஸ்திரிகள் பட்டுச்சேலையோ அல்லது கண்ணைக்கவரும் கலர் கலர்ச் சேலைகளோ கட்டுவதில்லையே!.. மேலும் சர்ச்சுக்குள் “யேசுவை” வணங்கும் பொழுது கிருஸ்த்துவப்பெண்கள் தங்கள் தலைய மறைக்கிறார்கள் சகோதரர் சிறில் அவர்கள் கூற்றுப்படி. கடவுளுக்கு முன்னால் இருக்கும் ஒரு ஒழுக்கத்தை சமுதாயத்தின் முன்னாலும் காட்டலாம்தானே.

    கன்னியாஸ்திரிகளைக் காணும்பொழுது ஒரு கண்ணியம்தானே பிறக்கிறது நல்லவர்களுக்கு மட்டும். (பாவிகள் இவர்களையும் விட்டு வைக்கவில்லையே!).

    நீங்கள் கூறுவதுபோல் யாரோ செய்துவிட்டுச்சென்ற கேணத்தனமான செயல்களான பர்தாவை கன்னியாஸ்திரிகள் எப்பொழுது பயன்படுத்தினார்கள்?. இது நான் தெரிந்து கொள்வதற்கு மட்டும்.

  33. முஸ்லிம் அவர்களே

    சேலைக் கட்டும் கன்னியாஸ்திரிகள் கோவிலைத்தவிர வெளியிடத்தில் முக்காடு போடுவதில்லை ..கோவிலில் முக்காடு போடுவது , முழங்கால் போடுவது போன்ற வழிமுறைகள் தான் கிறிஸ்தவம் என நினைக்கும் மடத்தனமும் எனக்கில்லை . கன்னியாஸ்திரிகள் போடுவதற்கு பெயர் பர்தாவாக இருந்தாலும் , அல்லது என்ன இழவு பெயர் சொல்லி அழைத்தாலும், அந்த உடையை கிறிஸ்தவ மதத்தின் பெயரால் அணிவதை , ஒரு கிறிஸ்தவனாக , வெட்கப்படுகிறேன். இதற்கு மேல் இங்கு சொல்ல எதுவுமில்லை .

  34. //இது இஸ்லாம் தீர்மானிக்க வேண்டிய விஷயம்//

    இல்லை அய்யா,

    இஸ்லாமிய சகோதரிகள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்..இஸ்லாம் என்று கூறிக் கொண்டு சில முல்லாக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அல்ல.

    பாலா

  35. Forcing any dress in the name of religion is not a correct approach.
    Let woman decide what they want to wear, when and where. For most women in many countries in Europe and North America this is a non-issue.

  36. முஸ்லிம்

    //சேலைக் கட்டும் கன்னியாஸ்திரிகள் கோவிலைத்தவிர வெளியிடத்தில் முக்காடு போடுவதில்லை ..கோவிலில் முக்காடு போடுவது , முழங்கால் போடுவது போன்ற வழிமுறைகள் தான் கிறிஸ்தவம் என நினைக்கும் மடத்தனமும் எனக்கில்லை . கன்னியாஸ்திரிகள் போடுவதற்கு பெயர் பர்தாவாக இருந்தாலும் , அல்லது என்ன இழவு பெயர் சொல்லி அழைத்தாலும், அந்த உடையை கிறிஸ்தவ மதத்தின் பெயரால் அணிவதை , ஒரு கிறிஸ்தவனாக , வெட்கப்படுகிறேன். இதற்கு மேல் இங்கு சொல்ல எதுவுமில்லை.//

    லால தாஸு அவர்களே அதுக்குள்ளேயும் சலித்து கொண்டால் எப்படி? நீங்கள் கிறித்தவராக இருந்து கிறித்தவ மதத்தில் சொன்னதை நீங்கள் வெறுப்பது உங்கள் தனிப்பட்ட உரிமை.

    இஸ்லாத்தில் பர்தாவென்பது பெண்கள் வெளியில் செல்லும் போது அவர்கள் சேலை கட்டும் கலாச்சாரத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தால் சேலையின் முந்தானையை தலையில் போட்டுக் கொள்ள வேண்டும் அவ்வளவுதான். இதை முஸ்லிம்களும் வெறுக்க வேண்டுமென்பது உங்கள் உரிமைக்குட்பட்டதல்ல.

    – முஸ்லிம்

  37. //Let woman decide what they want to wear, when and where.//

    They decide already despite your wishes :
    http://maricair.blogspot.com/2006/11/blog-post_28.html

    OK!Mr. Ravi Srinivas, So, Stop crying that Muslim women are oppressed.

    In this era, Nobody can oppress others and almost all Muslim/Hindu/Chrisitian/Athiest are following on their own wishes only. The point is the political cry on others like a wolf on goats.

    Also pls visit the link to know the fact on Muslim womens desire on veils.
    http://maricair.blogspot.com/2006/11/blog-post_28.html

  38. முஸ்லிம்

    //இஸ்லாமிய சகோதரிகள் தீர்மானிக்க வேண்டிய விஷயம்..இஸ்லாம் என்று கூறிக் கொண்டு சில முல்லாக்கள் தீர்மானிக்க வேண்டிய விஷயம் அல்ல.//

    பாலாய்யா
    முஸ்லிம்களை பொறுத்தமட்டில் அது முஸ்லிம் சகோதரியானாலும் சகோதரனனாலும் அவர்கள் ஒழுக்க நெறிகளை இஸ்லாம்தான் தீர்மானிக்க வேண்டும்.

    -முஸ்லிம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *