Featured Posts
Home » பொதுவானவை » பெண் குழந்தையும் குர்ஆனும்

பெண் குழந்தையும் குர்ஆனும்

குழந்தைகளை நரபலியிட்டும், வதைத்தும் வழிபடச்சொல்லும் மதங்கள் ஒரு பக்கம். வறுமையாலும், சமூக கண்ணோட்டத்தினாலும் உயிருடன் புதைக்கப் படும் குழந்தைகள் இன்னொரு பக்கம். இப்படி எத்தனை சட்டங்கள், தொட்டில் குழந்தை திட்டங்கள் வந்த போதிலும் சிசுக் கொலைகள் குறைந்த பாடில்லை. குறைந்த பட்சம் மக்களின் மனநிலையைக் கூட மாற்ற முடியவில்லை.

கீழுள்ள செய்தியை அறிந்ததும் இதயம் மறுத்துப் போகிறது. என்று ஒழியும் இந்த அவலங்கள்?

பிறந்த 3 நாட்களே ஆன பெண் குழந்தையை உயிருடன் புதைத்து கொல்ல முயன்ற தாயையும் பாட்டியையும் போலீசார் கைது செய்தனர். மண்ணில் புதைக்கப்பட்டதால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு மயக்கமடைந்த அந்தக் குழந்தை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப் பட்டுள்ளது. இந்தக் கொடூரமான சம்பவம் மதுரையில் நடந்தது.

ஈஸ்வரி என்ற 25 வயது பெண்ணுக்கு மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் கடந்த 21ம் தேதி பெண் குழந்தை பிறந்தது. இரண்டாவது குழந்தையும் பெண் குழந்தையாகப் பிறந்ததால் அதைக் கொல்ல முடிவு செய்தனர் ஈஸ்வரியும் அவரது தாயாரும்.

மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆன ஈஸ்வரி குழந்தையை ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு வைகை ஆற்றங்கரைக்குச் சென்றார்.. கூடவே அவரது தாயாரும் சென்றார். அப் பகுதியில் ரோந்து சென்ற போலீசார், குழந்தையை உயிருடன் பிளாஸ்டிக் பையில் போட்டுக் கொண்டு சென்ற பெண்களைப் பார்த்து சந்தேகமடைந்தனர். இருவரையும் அழைத்து விசாரித்தனர்.

குழந்தையை மருத்துவர்கள் தான் பிளாஸ்டிக் பையில் போட்டு பத்திரமாக எடுத்துச் செல்லும்படி கூறியதாக அவர்கள் கதைவிட்டனர். ஆனால் அவர்களைத் திட்டிய போலீசார் குழந்தையை கையில் எடுத்துச் செல்லுமாறு கூறி அனுப்பி வைத்தனர். இதையடுத்து இரு பெண்களும் குழந்தையை கையில் எடுத்துக் கொண்டு ஆற்றுக்குள் இறங்கினர். ஆனாலும் இருவர் மீதும் சந்தேகம் இருந்ததால், அவர்களை பின் தொடர முடிவு செய்தனர்.

ஆனால், இயற்கை உபாதைக்காக இருவரும் ஆற்றுக்குச் செல்வதாகக் கூறவே அவர்களை போலீசார் உடனே பின் தொடரவில்லை. இரு பெண்களும் தொடர்ந்து ஆற்றுக்குள்ளேயே இருக்கவே, சந்தேகமடைந்த போலீசார் அங்கு விரைந்தனர்.அப்போது அவர்கள் கண்ட காட்சி உயிர் உறைய வைத்தது.

இரு பெண்களும் கையாலேயே ஆற்று மணலில் குழி தோண்டு குழந்தையை புதைத்துவிட்டு மூடிக் கொண்டிருந்தனர். இதையடுத்து ஓடி வந்த போலீசார் குழந்தையை உடனடியாக மண்ணில் இருந்து மீட்டனர். பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டு மண்ணுக்குள் புதைக்கப்பட்ட குழந்தை மயங்கிப் போய் இருந்தது.

உடனடியாக குழந்தையைத் தூக்கிக் கொண்டு அரசு மருத்துவமனைக்கு போலீசார் ஓடி வந்தனர். மருத்துவர்கள் உடனே குழந்தையை தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து சிகிச்சையை ஆரம்பித்தனர்.குழந்தையைப் புதைத்த தாய் ஈஸ்வரியையும் அவரது தாயாரையும் போலீசார் கைது செய்துள்ளனர். அந்தக் குழந்தைக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இது குறித்து போலீசார் கூறுகையில், ஈஸ்வரியின் கணவர் ஒரு கூலித் தொழிலாளி.

தனக்கு பையன் தான் வேண்டும் என அவரது கணவர் கூறியுள்ளார். பெண் குழந்தை பிறந்ததால் ஈஸ்வரியிடம் அவர் பேசக் கூட இல்லை என்று தெரிகிறது. இதனால் வெறுத்துப் போய் குழந்தையை புதைத்துக் கொல்ல முடிவு செய்ததாக ஈஸ்வரி விசாரணையின்போது கூறினார் என்றனர்.

குழந்தையை வளர்க்க முடியாதவர்களுக்கு உதவவே தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை அரசு நடத்தி வருகிறது. குழந்தையை வளர்க்க முடியாமல் சிரமப்படுபவர்கள் அதை அரசிடம் ஒப்படைக்கலாம் என்ற நிலை உள்ளது.

அதைக் கூட செய்யாமல், குழந்தையை கொன்றுவிட முடிவு செய்த ஈஸ்வரியை என்னவென்று சொல்வது? பெண் குழந்தை பிறந்ததால் மனைவியிடம் பேசுவதையே நிறுத்திவிட்ட கணவரை என்ன செய்வது? நன்றி: தட்ஸ்தமிழ்

6:140 எவர்கள் அறிவில்லாமல் மூடத்தனமாக தம் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ¢ இன்னும் தங்களுக்கு அல்லாஹ் உண்ண அனுமதித்திருந்ததை அல்லாஹ்வின் மீது பொய் கூறி (ஆகாதென்று) தடுத்துக் கொண்டார்களோ, அவர்கள் வழிகெட்டு விட்டனர், நேர்வழி பெற்றவர்களாக இல்லை.

6:151 ‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்கள் மீது விலக்கியிருப்பவற்றையும் (ஏவியிருப்பவற்றையும்) நான் ஓதிக் காண்பிக்கிறேன். எப்பொருளையும் அவனுக்கு இணையாக வைக்காதீர்கள். பெற்றோர்களுக்கு நன்மை செய்யுங்கள். வறுமைக்குப் பயந்து உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள் – ஏனெனில் உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கின்றோம். வெளிப்டையான இரகசியமான மானக்கேடான காரியங்களை நீங்கள் நெருங்காதீர்கள். அல்லாஹ் தடுத்துள்ள எந்த ஓர் ஆத்மாவையும் நியாயமானதற்கு அல்லாமல் – கொலை செய்யாதீர்கள் – இவற்றை நீங்கள் உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு (இவ்வாறு) போதிக்கின்றான்.

8:28 ‘நிச்சயமாக உங்கள் செல்வமும், உங்கள் குழந்தைகளும் (உங்களுக்குச்) சோதனையாக இருக்கின்றன. நிச்சயமாக அல்லாஹ்விடத்தில் தான் மிகவும் உயர்ந்த நற்கூலி உண்டு” என்பதை நீங்கள் நன்கு அறிந்து கொள்ளுங்கள்.

17:31 நீங்கள் வறுமைக்குப் பயந்து உங்களுடைய குழந்தைகளைக் கொலை செய்யாதீர்கள். அவர்களுக்கும் உங்களுக்கும் நாமே உணவை (வாழ்க்கை வசதிகளையும்) அளிக்கின்றோம் – அவர்களைக் கொல்லுதல் நிச்சயமாகப் பெரும் பிழையாகும்.

8 comments

  1. நெல்லையன்

    நல்லடியார்,

    மதம் பற்றிய விவாதங்களில் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்குபவர்கள், இது போன்ற சமூக அவலங்களுக்கு தீர்வு காண முன்வருவதில்லை. எல்லாம் சுயநலம்தான். ஒருவேளை அவர்கள் விரும்புவதெல்லாம் உணர்ச்சி வசப்பட்டு வெளியாகும் கருத்துக்களை வைத்து திசை திருப்புவதும் திரிபுவாதங்களும்தானோ?

    மதம் மட்டுமின்றி இதர விசயங்களையும் எடுத்து வையுங்கள்.

  2. Nalladiyar…

    I am confused about the motive (whether you blame a(ny) religion or really posted this for a social cause…..) just bcoz your blog talks nothing but religion.

    Our laws should be made stricter to eradicate these problems.

  3. மு.மயூரன்

    நல்லடியார்,

    குர் ஆன் உருவான காலத்தைய அரேபியாவின் சமூக நிலையை மேற்தந்த வாசகங்கள் அழகாக விபரிக்கின்றன.

    குர் ஆனை எழுதியவர், அல்லது எழுதியவர்கள் மிகுந்த சமூக அக்கறையோடு, சமூகத்தை புரட்டிப்போடும் புரட்சிகர மனநிலையில் இருந்திருக்கின்றனர்.

    சமூகத்தை சீர்திருத்துவதல்ல, புரட்டிப்போடுவதே சாத்தியம் என்பதை அதன் ஆசிரியர்கள் உணர்ந்திருக்கின்றனர்.

    பின்வந்த விஞ்ஞான முறை மெய்யியலுக்கு இதுவெல்லாம் பெரும் உத்வேகம் கொடுத்த விசயங்கள்.

    ஒரு காலத்தைய புரட்சிகர நூல் ஒன்றினை பகுதி பகுதியாக விளங்கக்கூடிய வகையில் தரும் உங்களுக்கு நன்றிகள்

  4. அழகப்பன்

    விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட காலமாகக் கருதப்படும் இன்றைய சூழலிலும் பெண் குழந்தைகளுக்கெதிரான போக்கு அதிர்ச்சியடைய வைக்கிறது. 1400 ஆண்டுகளுக்கு முந்தைய சூழல் எவ்வாறு இருந்திருக்கும் என்று எண்ணிப் பார்க்க இயலவில்லை.

    இதுபோன்று அன்றாடம் நடைபெறும் சமூக அவலங்களையும் அவற்றிற்கு இஸ்லாம் கூறும் தீர்வுகள் குறித்தும் அவ்வப்போது எழுதி வாருங்கள்.

    kirukan said…
    //Our laws should be made stricter to eradicate these problems.//

    இத்தகைய சமூக அவலங்களைக் களைய கடுமையான சட்டங்கள் இயற்ற வேண்டும் என்று கூறிய அன்பரே தயவுசெய்து காழ்ப்புணர்வு இன்றி குர்ஆனை படியுங்கள். குற்றங்கள் குறைவதற்கு அதில் வழிகள் கூறப்பட்டுள்ளன.

    மு.மயூரன் said…
    //குர் ஆனை எழுதியவர், அல்லது எழுதியவர்கள் மிகுந்த சமூக அக்கறையோடு, சமூகத்தை புரட்டிப்போடும் புரட்சிகர மனநிலையில் இருந்திருக்கின்றனர்.//

    முஸ்லிம் அல்லாதவர்கள் குர்ஆனை இறைவனால் அருளப்பட்ட வேதம் என்று ஏற்றுக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. எனவே அது குறித்து சர்ச்சைகள் எதுவும் வேண்டாம். இறைவேதம் என்று ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் குர்ஆனை ஒரு புரட்சிகரமான நூலாக ஏற்றுக் கொண்ட மயூரனுக்கு நன்றி சொல்லும் அதே வேளை குர்ஆனின் மொழிபெயர்ப்பை படிக்குமாறு அன்பு வேண்டுகோள் விடுக்கிறேன்.

  5. நல்லடியார்

    //I am confused about the motive (whether you blame a(ny) religion or really posted this for a social cause…..) just bcoz your blog talks nothing but religion.//

    Kirukkan,
    இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் காழ்புணர்வாக மட்டும் விமரிசிப்பவர்களுக்கு இஸ்லாத்தின் நல்ல பக்கங்களை எடுத்துச் சொல்லவும், இது போன்ற பொதுவான அவலங்களில் மத/மன மாச்சாரியங்களுக்கு அப்பாற்பட்டு சமூக சிந்தனையோடு கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் பொருப்போடும் என்று எடுத்துக் கொண்டால் குழப்பமில்லை சகோதரே.

    இக்கொடுமையில் ஈடுபடுவோர் எல்லா சமயங்களிலும் இருக்கிறார்கள். ஆனால் காரணம்தான் வெவ்வேறு என்பதையும் மறுப்பதற்கில்லை.

  6. நல்லடியார்

    //குர் ஆன் உருவான காலத்தைய அரேபியாவின் சமூக நிலையை மேற்தந்த வாசகங்கள் அழகாக விபரிக்கின்றன.//

    மு.மயூரன்,

    குர்ஆன் அருளப்பட்டது அரேபியப் பகுதி என்றாலும் அது அகில உலக மக்களுக்கும் நல்லுபதேசம் என்றே சொல்லிக் கொள்கிறது.

    அன்றைய காலத்தில் பெண்களுக்கு இருந்த அவல நிலையையும் இன்று அதே பிரதேசங்களில் பெண்களின் நிலையையும் விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து விட்டு பார்த்தால் இஸ்லாம் செய்த சமூகப் புரட்சியை மனசாட்சியுள்ள எவரும் மறுக்க மாட்டார்கள்.

    குர்ஆனை எடுத்துச் சொன்னது மட்டுமே முஹம்மது நபியின் வேலையாக இருந்தது. அதன் ஒட்டு மொத்த உள்ளடக்கத்திற்கும் அல்லாஹ் என்பதே இஸ்லாமிய நம்பிக்கை.

    //பின்வந்த விஞ்ஞான முறை மெய்யியலுக்கு இதுவெல்லாம் பெரும் உத்வேகம் கொடுத்த விசயங்கள்.//

    நன்றி மு.மயூரன்

  7. புலிப்பாண்டி

    ********ஒரு முக்கிய அறிவிப்பு*******

    ஒரு மனம் பிறழ்ந்தவன் என் பெயரில் போலி பின்னூட்டமிட்டு வருகிறான். உண்மையில் புலிப்பாண்டி என்ற பெயர் நானும் ஆரோக்கியமும் பொதுவாக பயன்படுத்தியது. எப்போதெல்லாம் ஆரோக்கியம் திணருகிறாரோ அப்போதெல்லாம் ‘புலிப்பாண்டி’ யாக வேசம் போட்டு பின்னூட்டமிட்டு வந்தேன்.

    பொதுவாக முஸ்லிம்களை திட்டி எழுதுவதற்காக மடத்திலிருந்து பெறப்படும் நிதியை ஆரோக்கியமே பெற்று எனக்கும் சிறு பங்கு கொடுத்து வந்தார். சமீப காலமாக இஸ்லாத்தை திட்டி வந்த ஆரோக்கியம் அவர்கள் அவர் பதிவை படிப்பவர்களை இந்து மதத்துக்கு வரச் சொல்லாமல், புத்த மதத்துக்கு போகச்சொன்னதால் மட நிர்வாகிகள் கடும் கோபம் கொண்டு அவருக்கு நிதி அனுப்புவதை நிறுத்தி விட்டார்கள் என்றும், என் பின்னூட்டங்கள் அவருக்கு தேவை இல்லை என்றும் முகத்தில் அறைந்தாற்போல் சொல்லி விட்டான் (இவ்வளவு தூரம் நயவஞ்சகனாகி விட்டவனுக்கு இனி என்ன மரியாதை வேண்டி கிடக்கு?) இந்த நெருக்கடியால் நான் தனியாக பின்னூட்டமிட்டு வருகிறேன்.

    என் முந்தைய ப்ளாக்கர் எண் 7986293. இதை ஆரோக்கியம் தன் சொந்த விருப்பத்திற்கு மட்டும் பயன் படுத்தி வருவதால், நான் அதில் இனி எழுதப்போவதில்லை. இனி இந்த புதிய ப்ளாக்கர் எண் 11335778 என்ற முகவரியிலிருந்தே என் கருத்தை சொல்வேன். உண்மையில் ஆரோக்கியம் வைத்திருக்கும் புலிப்பாண்டியா நானா என்ற சந்தேகம் வந்தால் எலிக்குட்டியை என் பெயரின் மேல் தடவினால், மேற்கண்ட நம்பர் தெரியாமல், என் புதிய நம்பர் 11335778 தெரியும். ஆகவே ஆரோக்கியம் போன்ற அயோக்கியர்கள் என் பெயரில் அவனை ஜால்ரா அடித்து பின்னூட்டமிட்டால் தயவு செய்து நம்ப வேண்டாம்.

    ஆரோக்கியம் ஒரு அயோக்கியன்.தயவு செய்து என் பின்னூட்டத்தை நீக்க வேண்டாம்.

  8. வியாதி

    (அய்யோ! என் ஸ்ப்லிட் பர்ஸ்னாலிட்டி எனக்கே எதிரா திரும்பிடுச்சே! மேலே உள்ள பின்னூட்ட எழவை எந்த சூழ் நிலையில் நான் எழுதினேன்?)

    இருந்தாலும் விட மாட்டேன்…

    புலிப்பன்றியே! கை நீட்டி காசு வாங்கும்போது இல்லாத புத்தி இப்ப மட்டும் வந்திருச்சா? மடையனே! வச்சிக்கிறேன்அடுத்தமுறை உன்னை மடத்தில சந்திக்கும்போது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *