Featured Posts
Home » பொதுவானவை » பறவைக் காய்ச்சல்: ஜீவகாருண்யம் கிலோ என்ன விலை?

பறவைக் காய்ச்சல்: ஜீவகாருண்யம் கிலோ என்ன விலை?

ஏவியான் ஃப்ளூ வைரஸால் பறவைக் காய்ச்சல் பீதி ஒரு பக்கமிருக்க இன்னொரு பக்கம் தங்கள் வாழ்வாதாரம் நசிந்துவிடுமோ என்ற பீதியில் கோழிப்பண்ணை உரிமையாளர்களும் அவற்றை நம்பி தொழில் நடத்துபவர்களும் “சிக்கன் மேளா” நடத்திக் கொண்டிருக்கிறார்கள். பறவைக் காய்ச்சல் பீதிக்கு முன் கிலோ 75-85 ரூபாய்க்கு விற்கப்பட்ட கறிக்கோழிகள் கிலோ 15/= என்றளவுக்கு சரிந்தது. கோழி முட்டை கிலோக் கணக்கில் விற்கப்பட்டதும், வீடு வீடாக எடுத்துச் சென்றும் தெருவில் கூவி விற்கப்பட்டன.

பிறப்பினாலும் செய்யும் தொழிலினாலும் மனிதர்களை வர்ணப்படுத்தி பாகுபாடு காட்டும் மதங்களுக்கு மத்தியில், இறைவனின் படைப்பில் அனைத்து மனிதர்களையும் சமமாகவும் பிற உயிரினங்களைவிட மேலான படைப்பென்றும் இஸ்லாம் சொல்கின்றது. மனிதன் உயிர்வாழ்வதற்காகவே இறைவனின் படைப்புகள் மனிதனுக்கு அனைத்தும் வசப்படுத்திக் கொடுக்கப் பட்டுள்ளன. அதேசமயம் இக்காரணம் கொண்டு வரம்பு மீறியும் தேவையின்றியும் அவற்றை துஷ்பிரயோகம் செய்வதையும் இம்சிப்பதையும் இஸ்லாம் தடுக்கிறது.

மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், இயற்கையின் சமநிலைக்கு ஒப்பவும் உணவுக்குக்கு ஏற்ற உயிரினங்களைக் கொல்வதையும் அவற்றின் மாமிசத்தை புசிப்பதையும் அனுமதிக்கும் இஸ்லாம் அதற்கான நெறிமுறைகளையும் காட்டத் தவறவில்லை. அதே சமயம் எந்த உயிரினத்தையும் அவை கொடிய விஷமுடையவையாகவே இருந்தாலும் தீயிலிட்டு கொளுத்துவதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை.

ஒரு போர்க்களத்திற்குச் செல்லும் வழியில் குறுக்கிட்ட எறும்புக் கூட்டத்தை நபித் தோழர்களில் ஒருவர் தீயிட்டுக் கொழுத்தியதைக் கண்ட முஹம்மது நபியவர்கள் “இறைவனை தியானித்துக் கொண்டிருக்கும் ஒரு சமூகத்தை அழித்து விட்டீரே தோழரே” என்று கடிந்து கொண்டார்கள்.

அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிப்பதாவது:

“இறைத்தூதர் அவர்களே! மிருகங்களுக்கு உதவும் விஷயத்திலும் எங்களுக்கு (மறுமையில்) நற்பலன் கிடைக்குமா?’ என்று கேட்டார்கள். அதற்கு நபி(ஸல்) அவர்கள், ‘(ஆம்:) உயிருடைய பிராணி ஒவ்வொன்றின் விஷயத்திலும் (அதற்கு உதவும்பட்சத்தில் மறுமையில்) அதற்கான நற்பலன் கிடைக்கும்” என்று கூறினார்கள் (புகாரி-6009)

உதாரணமாக, ஒரு மனிதனும் ஒரு மாடும் உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் போது மனிதனையோ அல்லது மாட்டையோ மட்டுமே காப்பாற்ற முடியும் என்ற சூழலில் பகுத்தறிவுள்ள எவரும் முதலில் மனிதனைக் காப்பாற்றவே முன்னுரிமை கொடுப்பர். மனிதர்களுக்கு ஆபத்து என்ற சூழலில் அவற்றைக் கொல்லவும் தயங்குவதில்லை. ஜீவகாருண்யம் என்ற காரணம் சொல்லி மனிதனைவிடவும் மிருகங்களை நேசிப்பதில்லை. எதார்த்ததில் மனிதன் மற்ற படைப்புகளைவிட உன்னத படைப்பு என்பதை மாற்றுக் கருத்தின்றி ஏற்கிறோம்.

சென்னையிலுள்ள கிங் இன்ஸ்டியூட்டில் குதிரைகளுக்கு பாம்பு விஷத்தைச் செலுத்தி ஆய்வு செய்து அதன் மூலம் மனிதர்களுக்குத் தெவையான விஷமுறிவு மருந்தைக் கண்டுபிடிக்க ஆய்வு செய்வதை எதிர்க்கும் அளவுக்கு சிலருக்கு மனித உயிர்களை விட மிருங்களின் உயிர் மேலானதாகிவிட்டது. மனிதர்களின் நலத்தை விட மிருகங்களுக்காக குரல் கொடுக்கும் மத்திய அரசில் ஒரு அமைச்சரகமும், அமைச்சரும் கூட இருந்தனர்.

உலகம் முழுவதும் சமீபத்தைய பறவைக் காய்

4 comments

  1. இன்று உங்கள் பதிவைப் பார்த்தேன். என்ன சொல்ல வருகிறீர்கள்? புலால் உண்பது தவறில்லையென்றா அல்லது கோழிகளைக் கொன்று நோய் பரவாமல் தடுப்பது தவறென்றா?
    “மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், இயற்கையின் சமநிலைக்கு ஒப்பவும் உணவுக்குக்கு ஏற்ற உயிரினங்களைக் கொல்வதையும் அவற்றின் மாமிசத்தை புசிப்பதையும் அனுமதிக்கும் இஸ்லாம்”. இதில் எந்த குறையும் இல்லை. ஆனால் திருக்குரான் எழுதப்பட்ட காலம்
    எப்போது? அப்போதிய சூழ்நிலை என்ன? நாகரீகம் என்ன? சற்றே யோசித்துப்பாருங்கள். இஸ்லாம் / திருக்குரான் தோன்றிய பல நூற்றாண்டுகள் முன்பே நம் நாட்டில் புத்தரும், மகாவீரரும், வள்ளுவரும், திருமூலரும்
    ஜீவகாருண்யத்தைப் பற்றி தெளிவாக விளக்கியுள்ளார்கள்.
    ”மனிதன் உயிர் வாழ்வதற்காகவும், இயற்கையின் சமநிலைக்கு ஒப்பவும் உணவுக்குக்கு ஏற்ற உயிரினங்களைக் கொல்வதையும் அவற்றின் மாமிசத்தை புசிப்பதையும் அனுமதிக்கும் இஸ்லாம்” மனதைத்தொட்டு சொல்லுங்கள், இன்றைய உலகில் மாமிசமின்றி உயிர் வாழ
    இயலாதா? கோழிப்பண்ணைகளும், மீன் பண்ணைகளும் இல்லையென்றால் இயற்கை சமநிலை தானாகவே ஒப்பும். அதை விடுத்து இஸ்லாம் சொல்வதால் புலால் உண்கிறோம் என்பது, நாவை அடக்க இயலாமல் பிற உயிர் படும் துன்பத்தை
    மதிக்காதவர்களின் நொண்டிச்சாக்கே!

  2. சம்மட்டி

    //உணவிற்காக இப்பிராணிகள் சாத்வீக முறையில் அவை கொல்லப்படும் போது கூக்குரலிடும் மிருகாபிமானிகள் (?) மனிதர்களுக்கு பாதிப்பு வரும் என்ற சூழலில் அவை கொல்லப்படும் போது எந்த சலனமும் காட்டுவதில்லை.//
    கொலைகாரணின் கொலையும், நீதிபதி கொடுக்கும் மரணதண்டனையும் ஒன்றா ?
    சாத்விக பிரியர்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். எல்லோரும் பறவைக் காய்ச்சலை எப்படி சமளிக்க முடியும், உங்களுக்கு மட்டும் எப்படித்தான் எப்படி அதற்குள்ளும் இஸ்லாமிய சிந்தனையை விதைக்கலாம் என்று தோன்றுகிறதோ. உங்கள் இந்த பதிவில் இன்னொரு செய்தியையும் விட்டுச் சென்றிருக்கிறீர்கள், நீங்கள் கேட்பது போன்று, சில நாலு கால் மிருகங்களை பல்வேறு இனத்தவரும் உண்ணும் போது நீங்கள் தீண்டத்தகாதவாறு பார்ப்பது ஏன் என்று கேட்டீர்களேயானால் என்ன பதில் சொல்வீர்கள். அறிவியல் காரணங்களால் முன்னமே தீர்க்க தரிசனத்துடன் நாடப் புழுக்கள் இருப்பதை அறிந்து தவிர்க்க வேண்டியிருக்கிறது என்ற பதிலை எழுதி சமாளிக்க முடியும். தின்பவர்கள் அனைவரும் செத்தா போகிறார்கள்.

  3. மாற்றுமத சகோதரர்களே, நடுநிலையோடு சிந்தியுங்கள், வாதிடுங்கள்! நீங்கள் இஸ்லாத்தில் இணையவேண்டும், உங்களை மதமாற்றம் செய்யவேண்டும் என்ற நோக்கில் இங்கு ஆக்கம் அமையவில்லை… இஸ்லாத்தில் பலாத்காரம் கூடாது என்பதை அழ்ழாஹ்வே அறிவுறுத்தியுள்ளான். அழ்ழாஹ் (இறைவன்) இறைத்தூதர்களுக்கு கட்டளையிட்டதெல்லாம் “உண்மையை எத்திவைக்குமாறு” மட்டுமே. மனிதர்கள் அதை (உண்மையை) ஏற்றுக்கொள்வது அழ்ழாஹ்வின் நாட்டத்தில் உள்ளது.

    எனவே, நீங்கள் மனச்சாட்சிக்கு வழிகொடுத்து உண்மையை அறியுங்கள். அதுவே போதும்!

  4. “கொலைகாரணின் கொலையும், நீதிபதி கொடுக்கும் மரணதண்டனையும் ஒன்றா ?
    சாத்விக பிரியர்கள் என்ன செய்யவேண்டும் என்று எதிர்பார்க்கிறீர்கள். எல்லோரும் பறவைக் காய்ச்சலை எப்படி சமளிக்க முடியும், உங்களுக்கு மட்டும் எப்படித்தான் எப்படி அதற்குள்ளும் இஸ்லாமிய சிந்தனையை விதைக்கலாம் என்று தோன்றுகிறதோ. “….
    பறவைகள் கொலை செய்து கொலைகாரன் பட்டம் சுமப்பது நீதியாகும்போது நீதிபதி கொடுக்கும் மரணதண்டனையும் நீதியாகுமோ? பறவைகளின் நீதிபதி என்ன செய்ய?சாத்வீக பிரியர்கள் சாத்வீகத்தை கடைபிடிக்க வேண்டும்.எல்லோரும் பறவைக் காய்ச்சலை எப்படி சமாளிக்க முடியும்,என்பதை நீதிபதிகள் பார்த்துக்கொள்வார்கள்…பறவைக்காய்ச்சல் பறவைகளைக் கொல்வதற்கு நீதி கண்டவர்களுக்கு இயற்கை சமனிலையில் உணவுக்காக கால்நடைகளைக் கொல்வதற்கு அநீதி காண்பத்ற்க்கு எப்படி சாத்வீகக் கொள்கை உயிரினப் பிரியர்களுக்கு இடம் கொடுக்கிறதோ?..”தின்பவர்கள் அனைவரும் செத்தா போகிறார்கள்.”..அப்படியா !! நாடாப்புலுக்களை சத்துப்பட்டியலில் சேர்த்துக்கொள்வோமா?…அறிவுப்பூர்வமான இயற்கையான ஒரு விசயத்தில் சாத்வீக போர்வையில் துவேசம் கலக்க எப்படித்தான் இவர்களுக்கு தோன்றுகிறதோ?….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *