Featured Posts
Home » பொதுவானவை » நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகளா?

நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகளா?

திரு.தங்கமணி அவர்களின் சாதி ஒழிப்பிற்கு இந்து மதத்தை ஒழிக்காமல் வேறு எதைச் செய்வது? ” என்ற பதிவில் “உலகத்தில் யார் யார் பெரிய அறிவாளிகளாக இருக்கிறார்களோ, அவர்களெல்லாரும் நாஸ்திகர்கள்தான். நாஸ்திகராக இருக்கிறவர்கள்தான் ஆராய்ச்சியின் சிகரமாக, அறிவு பிரகாசிக்கக் கூடிய மனிதராக ஆக முடிகிறது” என்ற வாசகத்தைக் காண நேர்ந்தது.

கடவுள் நம்பிக்கையற்றவர்களை அறிவாளிகள் என்று விளித்திருப்பதன் மூலம் அதன் எதிர் நிலை நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்ப்பதமாக சொல்லப் பட்டதாகக்கொண்டு, கடவுள் நம்பிக்கைக்கும் அதனை மறுப்பதற்குமுள்ள வித்தியாசத்தை தெளிவு படுத்திக் கொள்ளவும், நாஸ்திகர்களெல்லோரும் அறிவாளிகள் என்ற கூற்று சரிதானா? என்றும் பார்ப்போம்.

வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தோமேயானால் மனிதன் அறியாமையால் இறை நம்பிக்கையில் குறைந்திருந்த காலங்களும் பிறகு ஆன்மீகத்தில் திளைத்து இறை நம்பிக்கையில் மிகைத்திருந்த காலங்களும் மாறிமாறியே இருந்து வந்துள்ளன. மனித இனம் தோன்றியது முதல் ஏதாவது ஒரு நம்பிக்கையில் திளைத்து வந்ததாகவே அறியப்படுகிறது. ஒருபோதும் இறைநம்பிக்கை முற்றிலும் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை.

உலகில் அறிவாளிகள் என்று அறியப்படுபவர்களில் பெரும்பாலோர் ஏதாவது ஒரு நம்பிக்கையை பின்பற்றியே வந்திருக்கிறார்கள். கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் மிகச் சிறுபான்மையினராகவே இருந்து வருகிறார்கள். அறிவாளிகளை, கடவுள் நம்பிக்கையுள்ள அறிவாளிகள் கடவுள் நம்பிக்கையற்ற அறிவாளிகள் என்று வகைப்படுத்தாலமே தவிர கடவுள் நம்பிக்கையற்றவர்களை முற்றிலும் அறிவாளிகளாகவும், அதன் எதிர்நிலையிலுள்ள நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்நிலையிலும் ஒப்பிடக் கூடாது.

கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள், தமது கடவுள் நம்பிக்கை மறுப்பிற்கு அடிப்படையாக அறிவியலைச் சொல்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை, 1) ஆய்வுகளினாலும் சோதனைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை. 2) யூகங்கள், அனுமானங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆனால் நிரூபணமாகாதவை (கோட்பாடுகள்) 3) சோதனைச்சாலை ஆய்வுகளாலும் கோட்பாடுகளாலும் திண்ணமாக வரையறுக்க/நிரூபிக்க இயலாத நம்பிக்கை சார்ந்தவை என வகைப்படுத்தலாம்.

நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் உட்படாதவை நம்பிக்கைச் சார்ந்தவையில் அடங்கும். அந்த நம்பிக்கை சார்ந்தவை, அறிவியல் நிரூபணங்களுக்கும் கோட்பாடுகளுக்கும் முரணாக இல்லாதவரை முற்றிலும் நிராகரிக்கப்படக் கூடியவை அல்ல! அந்தவகையில்தான் இறைநம்பிக்கையும் சாரும். நம்பிக்கைக்களை உண்மையானவை அல்லது உண்மையல்லவை என்று நிரூபிப்பதற்கான ஆய்வுகளின் தொடர்ச்சியே அறிவியல் கண்டுபிடிப்புகளின் பின்னணியாக இருக்கிறது.

பூமி தட்டையானது என்று நம்பப்பட்ட ஒரு கொள்கை ஆய்வுகளின் மூலம் “உருண்டை” என்ற கண்டுபிடிப்பால் தவறென நிரூபிக்கப்பட்டது. நிலவிலும் பிற கோள்களிலும் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பது, ஆய்வு நிலையிலேயே இருக்கும் கோட்பாடுகள். இறைநம்பிக்கை என்பது கோட்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டது. இறைநம்பிக்கையை எந்த அறிவியல் ஆய்வுகளாலும் நிரூபிக்க முடியாது. அறிவியலால் நிரூபிக்க முடியாதவற்றை நிராகரிப்பதைவிட நிரூபணமாகும்வரை தொடர் ஆய்வுக்குட்படுத்துவதே அறிவுப் பூர்வமான செயலாகும். இறை நம்பிக்கைக்கு எதிர்நிலை என்பது இறைநம்பிக்கை இன்மைதானே தவிர முற்றிலும் இறைநம்பிக்கையை மறுப்பதன்று!

உதாரணமாக, பேரூந்து

20 comments

  1. கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
    நற்றாள் தொழாஅர் எனின்.

  2. நீங்கள் தவறாக இங்கு மேற்கொள் காட்டியிருப்பதாக அல்லது புரிந்துகொண்டிருப்பதாக நினைக்கிறேன். பெரியார் அறிவாளி யார் என்பதை முதலில் வரையறை செய்துவிட்டே அம்பேத்காரை, நாத்திகர்களை அறிவுடையவர்கள் என்கிறார். அந்த வரையறையின் கீழ் வருகிறவர் (நாத்திகர்கள்) தான் அறிவாளிகள். அவர் குறிப்பிடுகிற வரையறை:

    //அவருடைய படிப்பும் திறமையும் நமக்குப் பயன்படுகிற தன்மையில் இருப்பதால்தான் அவரை அறிவாளி என்று சொல்ல வேண்டியிருக்கிறது. மற்றவர்கள் படிப்புத் திறமையெல்லாம் வேறு விதத்தில் பயன்படுத்தப்படுகிறது.//

    இதை

    அரம்போல கூர்மையரேனும்
    மரம் போல்வர் மக்கட் பண்பிலார் என்ற குறளோடு ஒப்பிட்டு நான் புரிந்துகொள்கிறேன்.

  3. நல்லடியார்

    சகோதரர்கள் முத்து மற்றும் தங்கமணி,

    தங்கள் வருகைக்கும் பின்னூட்டத்திற்கும் நன்றி.

    பெரியார் பற்றி எனக்கு தவறான அபிப்ராயம் இல்லை. கடவுள் நம்பிக்கையையும் மூடநம்பிக்கையையும் வேறுபடுத்தி அறிய நீண்ட விவாதம் தேவைப்படுகிறது. வாய்ப்பு கிடைத்தால் தொடருவோம்.

    அன்புடன்,

  4. முத்து(தமிழினி)

    நல்லடியார்,

    just to clarify myself i ask you few questions…

    //வரலாற்றை பின்னோக்கிப் பார்த்தோமேயானால் மனிதன் அறியாமையால் இறை நம்பிக்கையில் குறைந்திருந்த காலங்களும் பிறகு ஆன்மீகத்தில் திளைத்து இறை நம்பிக்கையில் மிகைத்திருந்த காலங்களும் மாறிமாறியே இருந்து வந்துள்ளன. மனித இனம் தோன்றியது முதல் ஏதாவது ஒரு நம்பிக்கையில் திளைத்து வந்ததாகவே அறியப்படுகிறது. ஒருபோதும் இறைநம்பிக்கை முற்றிலும் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை//

    என்றுமே வரலாற்றில் பெரும்பான்மையோர் இறைநம்பிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் ஒரு சிறுபான்மையோர் சிந்தித்துகொண்டும் இருந்தார்கள் என்றும் தெளிவாக இருக்கிறது வரலாற்றில்.

    //கடவுள் நம்பிக்கையற்றவர்களை முற்றிலும் அறிவாளிகளாகவும், அதன் எதிர்நிலையிலுள்ள நம்பிக்கையாளர்களை அறிவாளிகளுக்கு எதிர்நிலையிலும் ஒப்பிடக் கூடாது. //

    கடவுள் நம்பிக்கையற்ற அனைவரும் முற்றிலும் அறிவாளிகள் இல்லை என்பதை நானும் ஒப்புகொள்கிறேன்.
    அதே சமயம் கடவுள் பக்தி உள்ள அனைவரும் நல்லவர்கள், நேர்மையானவர்கள் இல்லை என்கிறேன்..ஒத்து கொள்கீறீர்களா?

    //கடவுள் நம்பிக்கையற்ற நாஸ்திகர்கள், தமது கடவுள் நம்பிக்கை மறுப்பிற்கு அடிப்படையாக அறிவியலைச் சொல்கிறார்கள். அறிவியல் கண்டுபிடிப்புகளை, 1) ஆய்வுகளினாலும் சோதனைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை. 2) யூகங்கள், அனுமானங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆனால் நிரூபணமாகாதவை (கோட்பாடுகள்) 3) சோதனைச்சாலை ஆய்வுகளாலும் கோட்பாடுகளாலும் திண்ணமாக வரையறுக்க/நிரூபிக்க இயலாத நம்பிக்கை சார்ந்தவை என வகைப்படுத்தலாம். //

    இது தெளிவாக இல்லை. இந்த மூன்று வகைகளுக்கும் உதாரணங்கள் கொடுக்க முடியுமா?

    //பூமி தட்டையானது என்று நம்பப்பட்ட ஒரு கொள்கை ஆய்வுகளின் மூலம் “உருண்டை” என்ற கண்டுபிடிப்பால் தவறென நிரூபிக்கப்பட்டது. நிலவிலும் பிற கோள்களிலும் மனிதன் உயிர் வாழமுடியுமா என்பது, ஆய்வு நிலையிலேயே இருக்கும் கோட்பாடுகள். இறைநம்பிக்கை என்பது கோட்பாடுகளுக்கும் ஆய்வுகளுக்கும் அப்பாற்பட்டது. இறைநம்பிக்கையை எந்த அறிவியல் ஆய்வுகளாலும் நிரூபிக்க முடியாது. அறிவியலால் நிரூபிக்க முடியாதவற்றை நிராகரிப்பதைவிட நிரூபணமாகும்வரை தொடர் ஆய்வுக்குட்படுத்துவதே அறிவுப் பூர்வமான செயலாகும். //

    பூமி தட்டையானது என்பது அறிவியல் மூலமாக சொல்லப்படவில்லை.பின்பு அறிவியல் மூலமாகத்தான் அது உருண்டை என்று சொல்லப்பட்டது.

    //இறை நம்பிக்கைக்கு எதிர்நிலை என்பது இறைநம்பிக்கை இன்மைதானே தவிர முற்றிலும் இறைநம்பிக்கையை மறுப்பதன்று! //

    இதற்கு என்ன அர்த்தம்?

    //உதாரணமாக, பேரூந்து நிலையத்தில் நிற்கும் பேரூந்துகளில் எந்தப் பேரூந்தில் சென்றால் சரியான ஊருக்குச் செல்லலாம் என்று அறியாதபோது 1) அறிந்தவர்களிடம் கேட்டுச் செல்வோம் அல்லது 2) ஏறக்குறைய மிகச்சமீபமாகச் செல்லும் பேரூந்தில் செல்வோம் அல்லது 3) சரியான பேரூந்து வரும்வரை காத்திருப்போம். இந்த மூன்றில் ஏதாவது ஒன்றுதான் அறிவுடைய செயலாகும். தனக்குத் தெரியவில்லை என்பதற்காக பேரூந்தே இல்லை என்பது சரியாகுமா? //

    அந்த ஊருக்கு பேருந்தே இல்லை என்றால்?

    //மருத்துவத்துறையில் எக்ஸ்ரே (X-RAY) யின் பயன்பாட்டை அறிவோம். எக்ஸ்ரே என்பது கண்ணுக்குத் தெரியாத மின்காந்தக்கதிர்வீச்சு. கண்ணுக்குத் தெரியவில்லை என்பதற்காக அக்கதிரே இல்லையென்று யாரும் சொல்வதில்லை. மாறாக ஏதோ ஒரு கதிர் இருக்கிறது என்பதை அதன் பயன்பாட்டிலிருந்து உணர்ந்து கொள்ளலாம். அதேபோல்தான் இஸ்லாமியக் கடவுள் கோட்பாடு ஒழுங்காக கட்டமைக்கப்பட்ட பிரபஞ்சம், நிலையான பூமியின் இயக்கம், இதர படைப்ப

  5. நல்லடியார்

    தமிழினி முத்து,

    தங்களின் வருகைக்கும் கேள்விகளுக்கும் நன்றி. தமிழ்மணம் நட்சத்திர வாரத்திற்கு முன் உங்களின் ஒரு பதிவின் மூலம் இந்துமத கடவுள் நம்பிக்கை இல்லாதவர் என்று உங்களைப் பற்றி யூகிக்கிறேன். மேலும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி இங்கு வாதிக்கப் படும் விடயங்கள், நான் புரிந்து கொண்டுள்ள மற்றும் என் பகுத்தறிவிற்கு முரணாகப்படாத இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையில் என்பதை மனதில் வைக்கவும். என்னால் முடிந்தவரை உங்கள் கேள்விகளுக்கு விளக்க முயன்றுள்ளேன்.

    //என்றுமே வரலாற்றில் பெரும்பான்மையோர் இறைநம்பிக்கை உடையவர்களாகவே இருந்தாலும் ஒரு சிறுபான்மையோர் சிந்தித்துகொண்டும் இருந்தார்கள் என்றும் தெளிவாக இருக்கிறது வரலாற்றில் .//

    எல்லா மனிதர்களுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்திக்காத மனிதரென்று எவரையாவது குறிப்பிட முடியுமா? (மனநிலை சரியாக உள்ளவர்களில் :-)) தான் சிந்தித்த விடயங்களில் தெளிவான/தீர்க்கமான முடிவு எடுப்பதில் தான் சிந்தனையின் வெற்றி இருக்கிறது. கடவுள் நம்பிக்கையற்ற சிறுபான்மையோர் சிந்தித்துக் கொண்டிருந்ததாகச் சொல்கிறீர்கள். மறுக்கவில்லை. கடவுள் இல்லை என்ற முன்முடிவுடன் சிந்திப்பவர்களால் கடவுள் உண்டு என்ற நேரெதிர் முடிவுக்கு வருவது கடினம்தான்.

    //கடவுள் நம்பிக்கையற்ற அனைவரும் முற்றிலும் அறிவாளிகள் இல்லை என்பதை நானும் ஒப்புகொள்கிறேன் . அதே சமயம் கடவுள் பக்தி உள்ள அனைவரும் நல்லவர்கள் , நேர்மையானவர்கள் இல்லை என்கிறேன்.. ஒத்து கொள்கீறீர்களா?//

    நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்பதற்கு எவற்றை அளவுகோலாகக் கொள்கிறீர்கள் என்பதைச் சொன்னால் உங்கள் கருத்தோடு உடன்பட முடியும். தன்னைப்போல் பிறரும் அமைதியாக வாழ்ந்து இறை உவப்பைப் பெற்று இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தில் மகிழ்வுடன் புக வேண்டும், அதற்கான ஏற்பாடுகளை இவ்வுலக வாழ்விலிருந்தே செய்ய வேண்டும் என்பதற்காக, தான் அறிந்தவற்றைச் சொல்லிச் செயல்படுத்துபவனை விட நல்லவன், நேர்மையாளன் யாருமில்லை என்பது என் கணிப்பு.

    //இது தெளிவாக இல்லை. இந்த மூன்று வகைகளுக்கும் உதாரணங்கள் கொடுக்க முடியுமா?//

    1) ஆய்வுகளினாலும் சோதனைகளாலும் ஒப்புக் கொள்ளப்பட்டவை: தற்கால மருத்துவ ஆய்வுகளைச் சொல்லலாம். உதாரணமாக, வளர்ச்சியடைந்த மனிதனின் தோற்றத்தில்தான் விந்தணு செலுத்தப்பட்டு கருப்பையில் வளர்வதாக நம்பப்பட்டதை அறிவியல் படிப்படியாக சோதனை செய்து வெவ்வேறு படிநிலைகளை நிரூபித்தது. (கருவளர்ச்சி பற்றியும் அதன் படிநிலைகள் பற்றியும் குர்ஆனில் 14 நூற்றாண்டுகளுக்கு முன்பே சொல்லப்பட்டுள்ளது என்பது உபரித் தகவல். நீங்கள் விரும்பினால் கருவளர்ச்சி பற்றிய பதிவுகள் பார்க்கவும்)

    2) யூகங்கள் , அனுமானங்களால் ஒப்புக் கொள்ளப்பட்ட ஆனால் நிரூபணமாகாதவை (கோட்பாடுகள் )
    இதற்கு விண்வெளி ஆய்வுகளைச் சொல்லலாம். உதாரணமாக சூரியனைப்பற்றியும் வெகு தொலைவிலுள்ள பிற கோள்கள் பற்றியுமான ஆய்வுகளுக்கு அனுமானங்களும் பிற கோட்பாடுகளுமே சான்றாக உள்ளன. சில மாதங்கள் வரை சூரியக் குடும்பத்தில் ஒன்பது கோள்கள் என்று சொல்லப்பட்டது. தற்போது பத்தாவது கோள் பற்றிய யூகம் நிரூபிக்கப் படாவிட்டாலும் நிராகரி க்கப்படவில்லை.

    3) சோதனைச்சாலை ஆய்வுகளாலும் கோட்பாடுகளாலும் திண்ணமாக வரையறுக்க /நிரூபிக்க இயலாத நம்பிக்கை சார்ந்தவை:
    கடவுள், சுவர்க்கம், நரகம்,முன் ஜென்மம், பின் ஜென்மம் இப்படி பல நம்பிக்கைகளைச் சொல்லலாம். இங்கு கடவுள் என்று நான் சொல்ல வருவது இஸ்லாத்தின் பார்வையில் சொல்லப்பட்ட கடவுள் கொள்கையை என்று கொள்ளவும். இஸ்லாத்தின் முன்ஜென்மம் இல

  6. முத்து(தமிழினி)

    அன்பு நல்லடியார்,

    //மேலும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி இங்கு வாதிக்கப் படும் விடயங்கள், நான் புரிந்து கொண்டுள்ள மற்றும் என் பகுத்தறிவிற்கு முரணாகப்படாத இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையில் என்பதை மனதில் வைக்கவும். என்னால் முடிந்தவரை உங்கள் கேள்விகளுக்கு விளக்க முயன்றுள்ளேன்.//

    இவ்விடமும் அதுவே…என் மெய்ஞான தேடலில் ஒரு பகுதியாகவே இவ்விதமாக வாதங்களை நான் பார்க்கிறேன்.

    //எல்லா மனிதர்களுமே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். சிந்திக்காத மனிதரென்று எவரையாவது குறிப்பிட முடியுமா?//.

    இதன் அர்த்தம் என்னவென்றால் பெரியவர்கள் சொன்னார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அதை ஏற்றுக்கொள்ளாமல் தாங்களும் அதைப்பற்றி யோசிப்பதே…

    முன்முடிவு , பின்முடிவு எல்லாம் கிடையாது..சர்வ பலம் பொருந்தியது என்று கூறப்படுகிற ஒரு சக்தியை முன்முடிவுடன் அணுகிவிட முடியாது என்று நினைக்கிறேன்.

    //நல்லவர்கள், நேர்மையானவர்கள் என்பதற்கு எவற்றை அளவுகோலாகக் கொள்கிறீர்கள் என்பதைச் சொன்னால் உங்கள் கருத்தோடு உடன்பட முடியும். தன்னைப்போல் பிறரும் அமைதியாக வாழ்ந்து இறை உவப்பைப் பெற்று இறப்பிற்குப் பின்னர் சுவர்க்கத்தில் மகிழ்வுடன் புக வேண்டும், //

    நல்லவர்கள் நேர்மையானவர்கள் என்பது என்னை பொருத்தவரை சமுதாயத்தில் அடுத்தவர் இருப்பையும் கணக்கில் எடுத்துகொண்டு தன்னுடைய நடவடிக்கைகளில் அடுத்தவருக்கு தீங்கு ஏற்படாமல் பார்த்து கொள்ளுபவர் என்பேன்.
    நீங்கள் சொன்ன சுவர்க்கம் என்பது ஹம்பக் என்பது என் கருத்து.அறிவியலால் நிரூபிக்க முடியாதது என்ற கன்டிஷனுடன் நீங்கள் வரும்போது அதற்கு என்னால் எந்த பதிலும் கூறமுடியாதுதான்.என்னை பொறுத்தவரை முன்ஜென்மம், பின்ஜென்மம் எல்லாமே கற்பனையே.
    அறிவியல் பற்றி நீங்கள் கூறுவதில் எனக்கு மாற்று கருத்து உண்டு. என்னுடைய அந்த காலத்திலே என்ற பதிவை படிக்கவும்.கடந்த நூற்றாண்டில் மட்டும் அறிவியல் வளர்ச்சியை பாருங்கள்.

    //ஒவ்வொரு படைப்புகளின் பின்னணியிலும் இறைவன் இருக்கிறான் என்பதை, படைப்புகளின் சிறப்பின் மூலம் உணரலாம். இறைவன் இருக்கிறான் என்பதற்கு இருக்கும் அத்தாட்சிகளை விட, இல்லை என மறுப்பதற்குச் சொல்லப்படும் அத்தாட்சிகள் குறைவு. //

    இது நம்பிக்கை சார்ந்த ஒரு கருத்துதான்.அத்தாட்சிகளை சொல்லுங்கள் .நானும் பார்க்கிறேன்.

    //இறைவன் இருப்பது உண்மையென்றால் சுனாமியும் பூகம்பமும் வந்து ஏன் மக்களைக் கொன்றன? தன்னையே வணங்கி கொண்டிருந்த அப்பாவி மனிதர்கள் கொல்லப்பட்ட போது இறைவன் எங்கு சென்றிருந்தார்? என்று கேட்கும் மேதாவிகளுக்கு என்னிடம் பதில் இல்லை. அதே கேள்வியை சற்று மாற்றி, மனிதனால் முடியாததே இல்லை என்பவர்களால் ஏன் சுனாமியையும் பூகம்பத்தையும் தடுத்து நிறுத்த முடியவில்லை என்று கேட்டால் அவ்விவாதத்தின் அபத்தம் விளங்கும்//

    விவாதத்தை நீங்கள் சரியாக புரிந்துகொள்ளவில்லை என்று அர்த்தம். எப்படி என்றால் மனிதனால் முடியாததே இல்லை என்றெல்லாம் என்னால் ஜல்லியடிக்க இயலாது.ஆனால் இயற்கையின் போக்கு, நிகழ்தகவின் விளையாட்டு ஆகியவற்றை கணக்கில் எடுத்து பார்க்கவேண்டும.
    (அமெரிக்காவில் புயல் வருவதற்கு முன்பெ கணித்து ஊரில் உள்ள எல்லோரும் காலி செய்து போவது, சுனாமி இலங்கையை தாக்கிய உடன் உசார் ஆகியிருந்தால் நாமும் சிறிது சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுவது)

    //பேரூந்து இல்லை என்று முடிவுக்கு வந்தது ஏன்? “தனக்குத் தெரியவில்லை என்பதற்காக பேரூந்தே இல்லை என்பது சரியாகுமா?” என்று நான் கேட்டதற்கு நீங்கள்தான் பதில் சொல்ல வேண்டும். ஒரு நம்பிக்கை தவறு எனில் சரியான நம்

  7. அறிவியலாளர்கள் யாரும் ஒரு நூலில் அனைத்து காலத்திற்குமான விதிகள் உள்ளன என்று கூறுவதில்லை. ஒரு அறிவியல் கோட்பாட்டினை கேள்விக்குட்படுத்தினால் உன் தலையை அறுக்கலாம் என்று பத்வா இடப்படுவதில்லை.அறிவியல் தர்க்க ரீதியான, பரிசோதனைகளால்
    நிரூபிக்கப்பட்ட முடிவுகளின் அடிப்ப்டையில் சிலவற்றைக் கூறுகிறது. இறைவன கூறினான் என்று
    அறிவியலில் எதையும் நீருபமணமாகக் கொள்வதில்லை. சுருங்ககூறின் அறிவியலின் தர்க்கமும்,
    இஸ்லாத்தின் தர்க்கமும் வேறு. பின்னதை கேள்விக்குட்படுத்தினால் இஸ்லாமிய நாடுகளில் மரண தண்டனை உண்டு. அறிவியல் சிந்தனைச் சுதந்திரத்தினை அடிப்படையாகக் கொண்டது, இஸ்லாம்
    அதற்கு நேர் எதிரானது.இது இஸ்லாமிய மூடர்களுக்குப் புரியாது.அதற்கு ஒர் உதாரணம் நல்லடியாரின் இந்தப் பதிவு. மின் காந்த அலைகளை கண்ணால் பார்க்க முடியாது. ஆனால் கருவிகள் கொண்டு அவற்றை அளக்க முடியும், நிரூபிக்க முடியும், உருவாக்கி பயன்படுத்த முடியும். கடவுள் இருந்தால் என்ன செத்தால் என்ன.புயல் உருவாவதை முன் கூட்டிக் கணித்து சேதத்தினை தவிக்கலாம். கடவுளைக் கூப்பிட்டு முறையிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.

  8. சந்திப்பு

    நல்லடியார் தங்கள் விவாதம் சிறக்கட்டும்!

    இங்கே எனது கருத்தையும் முன்வைக்க விரும்புகிறேன்.

    தாங்கள் எடுத்துக் கொண்டே தலைப்பிற்கும், நீங்கள் முன் வைக்கும் வாதத்திற்கும் முரண்பாடு உள்ளது.

    தலைப்பு என்ன? –நாத்திகர்கள் எல்லோரும் அறிவாளிகளா? நீங்கள் இல்லை ஆத்திகர்களும் அறிவாளிகள்தான் என்று வாதாடி அதற்கான பல ஆதாரங்களை முன்வைத்து வலுச் சேர்த்திருந்தால் அதுவே பொருத்தமாக இருந்திருக்கும்.

    அதிலிருந்து தங்களது வாதத்தை துவக்கி கடவுள் இருக்கிறார் என்று நிரூவுகிறீர்கள். அத்துடன் நில்லாமல் இசுலாமிய இறைகொள்கை அறிவுப்பூர்வமானது என்று தாங்கள் கூறுவதன் மூலம் மற்ற மத நம்பிக்கையாளர்களை புண்படுத்தியுள்ளீர்கள். அதாவது, தங்கள் வாதப்படியே எடுத்துக் கொண்டோல் மற்ற மதக் கொள்கைகள், நம்பிக்கைகள் அறிவுப்பூர்வமற்றது நிரூவுகிறீர்கள்! இதை தங்களிடம் உள்ள மூட நம்பிக்கை என்று கூறினால் பொருத்தமாக இருக்கும் என்று கருதுகிறேன். நீங்கள்தான் விளக்க வேண்டும்.

    —ஒரு போதும் இறை நம்பிக்கை முற்றிலும் இல்லாத காலம் என்று ஒன்று இருந்ததாக அறிய முடியவில்லை—

    இந்த இடத்தில் நேரடியாக ஒரு கேள்வியை தங்களிடம் கேட்க விரும்புகிறேன். — காலம் — என்று எதை வரையறுக்கிறீர்கள்! ஐயா, நீங்களும், நானும், நமக்கு முன்னாள் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால், இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு பின்னால் கூட இந்த பிரபஞ்சம் இருந்தது – இருக்கும்! அப்படியிருக்கையில் – தங்களின் அறிவுப்பூர்வமான விவாதம் மிக குறுகிய வட்டத்தில் – சூழலில் மாட்டிக் கொண்டு தவிப்பது வருத்தமாக இருக்கிறது. தங்களைப் பொறுத்தவரை மனிதர்கள் தோன்றிய பின்னர் உள்ளதே காலமாக ஏற்றுக் கொள்கிறீர்கள்! காலம் என்பதே நம் வசதிக்காக உருவாக்கிய ஒன்றுதான். மற்றபடி காலம் இருந்துக் கொண்டேதான் இருக்கிறது…

    அடுத்து, தங்கள் வாதப்படி எடுத்துக் கொண்டாலும் மனிதனின் ஆரம்பகால பரிணாம வளர்ச்சிக்குப் பின்னர் பல கோடிக்கணக்கான ஆண்டுகள் வரை அவனுக்கு மதமோ? கடவுளோ? சிலைகளோ? எதுவுமே தெரியாது… இயற்கையின் விந்தைகளைப் பற்றிக்கூட ஏன் நடக்கிறது, எதற்காக நடக்கிறது என்பதை அறிந்து கொள்ளவே அவன் பல ஆயிரக்கணக்கான ஆண்டுகளைக் கடந்திருக்க வேண்டும். அப்போது இசுலாமோ? இந்து மதமோ (சாரி இந்து மதம் என ஒன்று இல்லை) சீக்கிய மதமோ, கிறித்துவ மதமோ, பெயர் தெரியாத வேறு மதங்களோ, ஏன் ஆரம்பகால நடுகல் வழிபாடுகளோ, சூரிய வழிபாடுகளோ கூட தோன்றியிருக்க வாய்ப்பேயில்லை. இதை தாங்களும் ஏற்றுக் கொள்வீர்கள் என கருதுகிறேன்.
    அது மட்டுமல்ல; மனித குல வளர்ச்சிப் படியில் கடவுள் உண்டு என்று கூறுவதற்கு ஒரு குழு தோன்றிய போதே அப்படி ஒன்று இல்லை என்று கூறுவதற்கும் ஒரு குழு இருந்தது. ஆனால் ஆதிக்க சக்திகள் எந்த காலத்திலும், ஏன் தற்காலத்தில் கூட கடவுள் இல்லையென்று கூறுபவர்களை சாத்தான்கள், பேய்கள், பிசாசுகள், தீய சக்திகள் என்றெல்லாம் கூறி தீயிட்டு, பொசுக்கியதை தாங்கள் தயவு செய்து வரலாற்று பக்கங்களில் இருந்து புரட்டி அறிந்து கொள்ளுங்கள்.

    —அந்த மறைமுகச் சக்தி கடவுளாக இருந்து விட்டுப் போகட்டுமே!—
    ஆகா! என்ன அருமையான விவாதம். முதலில் அறிவு குறித்தும், விஞ்ஞானம் குறித்தும் பேசிய நீங்கள், நழுவி அந்த மறைமுக சக்தி கடவுளாக இருந்து விட்டுப் போகட்டுமே! என்று கூறுவதன் மூலம் கடவுள் இருக்கிறார் என நிரூவ முயற்சிக்கிறீர்கள்.
    உங்கள் வாதத்தை ஏற்றுக் கொண்டால்,
    — கடவுள் இருந்தால் என்ன செத்தால் என்ன. புயல் உருவாவதை முன்கூட்டிக் கணித்து சேதத்தினை தவிர்க்கலாம். கடவுளைக் கூப்பிட்டு முறையிட்டு ஒன்றும் ஆகப்போவதில்லை.—
    என முத்து கூறியுள்ளதை

  9. அழகப்பன்

    முத்து (தமிழினி)

    மெய்ஞான தேடலில் உள்ளீர்கள் என்பதை வெளிப்படுத்தியமைக்கு நன்றி.

    இந்த பிரபஞ்சம் எவ்வாறு உண்டானது என்பது குறித்து சற்று சிந்தித்துப் பாருங்கள். ஒரு பொருளிலிருந்து மற்றொன்று பரிணாம வளர்ச்சி பெற்றது என்று கூறுவீர்களாயின், ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒரு பொருள் உருவாணதல்லவா? அது எப்படி சாத்தியப்பட்டது. அதாவது பரிணாமத்தின் ஆதிமூலம். இந்த ஆதி – அதாவது முதல் பொருள் எப்படி உருவானது. வேதி வினைகள் நிகழும்போது அல்லது நிகழ்த்தப்படும்போது ஒரு பொருள் உருவாகலாம். ஆனால் எதுவுமே இல்லாதிருந்த போது அது எப்படி சாத்தியம். (எனக்கே தலை சுற்றுகிறது…. முடிந்தால் உரிய முறையில் மீண்டும் விளக்குவேன்.)

  10. அட்றா சக்கை

    நல்லடியார்,

    நல்ல ஒரு தலைப்பு தான். கடவுள் நம்பிக்கைக்கும் அறிவுக்கும் தொடர்பு இருந்தே ஆக வேண்டிய அவசியம் உள்ளதா? ஐம்புலன் உணர்ச்சிகள் மூலம் உணர்த்தப் பட்டால் தான் கடவுள் இருக்கிறார் என நம்புவேன் என்பது பகுத்தறிவுக்கு வேலையே வைக்காது. பகுத்தறிவே மேல்நீட்டல் (extrapolate) மூலம் உய்த்துணர்வதே.

    நீங்கள் சொன்ன ஒளி அலைநீள உதாரணத்தை எடுத்துக் கொள்வோம் (முத்து தமிழினி அவர்களே இது ஹைதர் காலத்து வாதமாக இருந்தாலும் அது சரியாகப் பொருந்துவதாக நான் நினைக்கிறேன்)
    புற ஊதா மற்றும் அகச் சிவப்புக் கதிர்கள் உணரும் உணர்விகளால் தான் அவற்றைக் கண்டறிய முடிந்தது. ஒரு பேச்சுக்கு அவ்வகையான உணர்விகள் கண்டு பிடிக்கப் படவில்லை என்றால் உங்கள் வாதப் படி அவ்வகை கதிர்கள் இல்லை என்று தானே பொருள்.

    முத்து தங்களின் தர்க்க நிபுணத்துவம் மெச்சத் தக்கதாக உள்ளது (வஞ்சப் புகழ்ச்சி இல்லை ஐயா!)

    அநாமதேயமாக முகத்தை மறைத்துப் பின்னூட்டமிட்டுள்ள ஒருவர் வாதம் பேத்தலாகத் தான் இருக்கிறது.

    கருவி கொண்டு அளந்தால் தான் நம்புவேன் என்றால் கருவி கொடுக்கப் படவில்லை என்றால் இல்லை என்று தான் பிதற்றுவார் போல இருக்கிறது. இதில் சந்தடி சாக்கில் இஸ்லாத்தின் மீது சேறு வாரி வேறு இறைக்கிறார். வாதமிடும் வகையை வைத்தே இது யார் என ஊகிப்பது ஒன்றும் கடினம் இல்லை.

  11. நல்லடியார்

    // சர்வ பலம் பொருந்தியது என்று கூறப்படுகிற ஒரு சக்தியை முன்முடிவுடன் அணுகிவிட முடியாது என்று நினைக்கிறேன்….கடவுளை எப்படி உணர வைக்க போகிறீர்கள் ?//

    அன்பின் முத்து (தமிழினி),

    நம்பிக்கை பற்றிய விவாதங்களில் ஒரு நம்பிக்கையாளனின் வாதத்தை நிறுவ அவன் பல்வேறு கோணங்களில் சிந்திக்க வேண்டியுள்ளது;தன் நம்பிக்கை சரியென நிறுவ பல்வேறு ஒப்பீடுகளைச் செய்ய வேண்டியுள்ளது. இதற்கு பல ஆதாரங்களையும் திரட்ட வேண்டியுள்ளது. ஆனால் அதற்கு எதிர்நிலை கொண்டவருக்கு அவற்றை மறுத்தால் மட்டும் போதுமானது. இதற்கான எந்த முன்னேற்பாடும் தேவையில்லை. இந்நடைமுறைச் சங்கடத்தை மனிதில் கொண்டால் நம்பிக்கையாளனும் நம்பிக்கையற்றவனும் நேர்கோட்டில் ஒன்றுபடுவதன் சாத்தியம் மிகக் குறைவே. எனினும் உங்களின் நேர்மையான விவாதத்திற்காக என்னால் முடிந்த விளக்கங்களைத் தர முயற்சிக்கிறேன்.

    உங்களின், கடவுள் நிராகரிப்பின் தாக்கம், இந்து மதம் சொல்லும் கடவுள் கோட்பாடுகளின் அடிப்படையில் என்றால் அதற்குப் பகரமாக இஸ்லாமியக் கோட்பாட்டையோ அல்லது வேறு ஏதாவது கடவுள் கோட்பாட்டை வைத்தே அந்த நம்பிக்கை சார்ந்த கோட்பாடுகள் சரியா என்று வாதிட முடியும். ஆகவே இறைவன் உண்டா என்பதை உணர ஏதேனும் மதம் சொல்லும் இறைக் கோட்பாட்டை மையமாக வைத்தே அவை சரியா? தவறா? என்று தர்க்கிக்க முடியும் என்பது என் தாழ்மையான கருத்து.

    இறைநம்பிக்கையாளனின் வாதங்கள் “நம்பிக்கை” என்ற வட்டத்திற்குள் அடங்கி விடுகிறது. அவை சுயமாக உணர்ந்து நம்பியவையாகவோ அல்லது பிறரால் சொல்லப்பட்டவையாக இருக்கலாம். இரு இறைநம்பிக்கையாளர்கள் எந்த நம்பிக்கை சரியென்று வாதிட்டு முடிவுக்கு வரமுடியும். ஆனால் நம்பிக்கையாளனும் நம்பிக்கை இல்லாதவனும் முடிவுக்கு வர முடியாது.

    // இது நம்பிக்கை சார்ந்த ஒரு கருத்துதான் .அத்தாட்சிகளை சொல்லுங்கள். நானும் பார்க்கிறேன் .//

    இறைவனை அறிந்து கொள்வதே உங்களின் நோக்கமாக இருப்பின், படைப்பினங்களைப் பற்றி முதலில் சிந்திக்கக் தொடங்குவோம். மண்ணில் புதைந்தவை மண்ணோடு மண்ணாகி மடிந்து விடும் என்பது விதி. மண்ணில் விதைக்கப்படும் அற்பவிதைகள் இவ்விதியையும் மீறி முளைத்து செடியாகி, மரமாகி, பூத்து, காய்த்து கனியும் அற்புதங்களைப் பற்றி யோசிப்போம். ஒரே மண்ணிலிருந்து வெவ்வேறு தன்மையுள்ள பழங்கள்! இப்படி ஒவ்வொரு படைப்பிலும் மறைந்திருக்கும் உண்மைகளை ஆராய்வோம். அதற்கு அறிவியல் என்று பெயரிட்டழைத்தாலும் ஆட்சேபனை இல்லை.

    // அமெரிக்காவில் புயல் வருவதற்கு முன்பே கணித்து ஊரில் உள்ள எல்லோரும் காலி செய்து போவது, சுனாமி இலங்கையைத் தாக்கிய உடன் உசார் ஆகியிருந்தால் நாமும் சிறிது சேதத்தை தவிர்த்திருக்கலாம் என்று கூறப்படுவது//

    உதாரணத்திற்குத்தான் சொல்லியுள்ளீர்கள். அதுப்போல் எத்தனையோ வானிலை முன்னறிவிப்புகள் பொய்த்துப் போன போதிலும் அத்தகைய அறிவிப்புகளை நாம் நிராகரிப்பதில்லை. சுனாமி, பூகம்பம், காதரினா இவையெல்லாம் வரும் என்று முன்னறிவிப்புச் செய்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் வருகின்றதோ இல்லையோ, ஒவ்வொரு முன்னறிவிப்பின் போதும் அதிலிருந்து தற்காத்துக் கொள்ள தகுந்த ஏற்பாடுகளைச் செய்யப் பழகிக் கொண்டோம்.

    இதே கான்செப்டில் ஒருநாள் முழு உலகமும் பிரபஞ்சமும் அனைத்து ஜீவராசிகளும் அழியும் என்று சொல்லப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் என்னவாக இருக்கும்? சாத்தியமோ சாத்தியமில்லையோ முன்னறிவிப்பு என்ற வகையில் இவற்றையும் ஏற்றுக் கொள்ளத் தானே வேண்டும்? இதைத்தான் மத நம்பிக்கையாளர்களில் முஸ்லிம்கள் செய்கிறோம்.

    இயற்கைப் பேரழிவுகள் பற்றிய எத்தனையோ முன்னறிவுப்புகளைச்

  12. நல்லடியார்

    சந்திப்பு,

    நான் கொண்டுள்ள நம்பிக்கையின் அடிப்படையில் முடிந்தவரை அவற்றிலிருந்து மேற்கோள் காட்டாமல் விவாதிக்க முற்படுகிறேன். திரு.தங்கமணி அவர்கள் நாத்திகர்கள் பெரும்பாலும் அறிவாளியாகவும் ஆராய்ச்சியாள்ர்களாகவும் இருந்திருக்கிறார்கள் என்று சொன்னதற்குத்தான் என் பக்க புரிந்து கொள்ளலை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். என் மதநம்பிக்கையை சரியென்று சொல்லும் அதே நேரம் மற்றவை தவறு என்று சொல்லவில்லையே!

    மற்றபடி என் புரிந்து கொள்ளலின் முரண்பாடுகளை சுட்டினால் அதன் நியாயத்தை ஏற்றுக் கொள்வதில் தயக்கமில்லை.

    அன்புடன்,

  13. நெருப்பு சிவா

    Nalladiyar,

    //மேலும் கடவுள் நம்பிக்கையைப் பற்றி இங்கு வாதிக்கப் படும் விடயங்கள், நான் புரிந்து கொண்டுள்ள மற்றும் என் பகுத்தறிவிற்கு முரணாகப்படாத இஸ்லாமிய நம்பிக்கைகளின் அடிப்படையில் என்பதை மனதில் வைக்கவும்//

    I appreciate this declaration.

    Siva

  14. சந்திப்பு

    அழகப்பன், தங்களது கேள்வி அதிமுக்கியமானது: அதாவது,

    —ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒரு பொருள் உருவானதல்லவா? அது எப்படி சாத்தியப்பட்டது, அதாவது பரிணாமத்தின் ஆதிமூலம், இந்த ஆதி – அதாவது முதல் பொருள் எப்படி உருவானது—
    தங்கள் கேள்வியில் இருப்பதை தலைகீழாக திருப்பிப்போட்டால், பிரச்சினைக்கு தீர்வு கிடைத்து விடும் அழகப்பன். தங்களின் தலைசுற்றலும் நின்று விடும்.

    விஷயம் இதுதான்: யார் சொன்னது ஒன்றுமே இல்லாததிலிருந்து ஒரு பொருள் உருவானதென்று? இன்றைக்கு நாம் அறிந்து கொண்டிருக்கிற பிரபஞ்சம் பல கோடிக்கணக்கான ஆண்டுகளாக (இதற்கு காலத்தை வரையறுக்க முடியாது) இருந்து கொண்டே வந்திருக்கிறது. இதை யாரும் உருவாக்கவில்லை, உருவாக்கவும் முடியாது, இந்த பிரபஞ்சம் இருந்து கொண்டேதான் இருந்தது. அது இனிமேலும் இருந்து கொண்டேதான் இருக்கும். ஆனால் ஒரு விஷயம் இந்த பிரபஞ்சத்தில் தொடர்ந்து மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கும், இன்றைக்கு இருக்கும் பூமி, இன்னும் கோடிக்கணக்கான ஆண்டுகள் கழித்து இல்லாமல் போகலாம், அதே சமயம் அந்த இடத்தில் வேறு ஒரு புதிய கிரகம் உருவாகும். அதாவது விஞ்ஞான ரீதியாக நிகழும் தொடர்ச்சியான மாற்றத்தின் விளைவாகவும், இரசாயண மாற்றங்களின் விளைவாகவும் இது நிகழ்ந்து கொண்டே இருக்கும். இது ஒரு சங்கிலித் தொடர்.

    அடுத்து, ஆற்றல் மாறா கோட்பாடு என ஒன்றை நீங்கள் படித்திருக்கலாம். இது மிக முக்கியமானது. மிக அடிப்படையானது.

    இந்த கோட்பாடு என்ன சொல்கிறது என்றால்,

    –ஒரு ஆற்றலை ஆக்கவோ, அழிக்கவோ முடியாது, ஒரு ஆற்றல் மறைந்தால், அது வேறொரு ஆற்றலாக வெளிப்படும்–

    இதுதான் இயக்கவியல் விதி! ஒரு பொருளில் இருந்துதான் இன்னொரு புதிய பொருள் உருவாகுமேயொழிய, ஒன்றுமே இல்லாத அந்தத்தில் இருந்து, சூன்யத்தில் இருந்து ஒன்றுமே உருவாகாது. உருவாகவும் முடியாது.

    ஒரு உதாரணத்தைப் பார்க்கலாம்:

    ஒரு செங்கல்லை எடுத்துக் கொள்ளுங்கள், அதை உங்களால் முற்றிலும் அழிக்க முடியுமா? ஆம் என்று நீங்கள் சொன்னால் அது தவறு. செங்கல்லை நீங்கள் மிக பொடிதாக நொறுக்கி விடலாம், ஆனால் அதன் அணுத்துகள்களை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது. அது நம் கண்ணுக்கு தெரியாத அளவில் இந்த பிரபஞ்சத்தில் உலவிக் கொண்டிருக்கும். மொத்தத்தில் செங்கல் என்ற வடிவம்தான் அழியுமே ஒழிய, அதன் துகள்கள் வேறொரு வடிவத்தில் எந்தவிதமான அளவு – எடை குறையாமலும் சுற்றிக் கொண்டேதான் இருக்கிறது.

    இன்னும் சொல்ல வேண்டும் என்றால், இந்த பிரபஞ்சத்தில் உள்ள பொருட்கள் கூடுவதும் இல்லை, குறைவதும் இல்லை. எனவே இந்த பிரபஞ்சத்தை யாரும் உருவாக்கவும் இல்லை, உருவாக்கவும் முடியாது. இதுதான் விஞ்ஞானம்.

  15. அறிவியல் தன் கோட்பாடுகளை நிறுவ கடவுளைத் துணைக்கு அழைப்பதில்லை. உலகின் ஆக்கம்,
    பரிணாம வளர்ச்சி குறித்து அறிவியல் விரிவாகக் கூறுகிறது. டார்வின் என்ன சொன்னார் என்பதையும் தெரிந்து கொள்ளாமல், இன்றைய அறிவியல் ஜீனோம் ஆய்வுகள் மூலம் என்ன சொல்கிறது என்பதையும் அறியாமல் யாரோ ஏதோ காலத்தில் சொன்னதை பிடித்துக் கொண்டு தொங்கும் உங்களை நினைத்தால் பரிதாபமாக இருக்கிறது.மத நம்பிக்கை உங்கள் மூளைகளை மழுங்கடித்துவிட்டது. அறிவியலுக்குத் தேவை குரானோ, வேதங்களோ விவிலியமோ அல்ல. ஆனால் இந்த எளிய உண்மை கூட உங்களுக்குப் புரியவில்லை. யூதர்கள் தங்கள் மதத்தினையும், அறிவியலையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. எனவே தான் அவர்க்ளால் அறிவியலில் சாதிக்க முடிகிறது.

  16. முத்து(தமிழினி)

    சந்திப்பு,

    நல்ல கருத்துக்கள்.நன்றி.

    அழகப்பன்,

    பிரபஞ்ச உருவாக்க வாதம் பழமை வாய்ந்ததுதான்.

    கடவுளால் உருவாக்கப்பட்டதுதான் உலகம் என்றால் கடவுளை உருவாக்கியது யார்?கடவுள் தானாக தோன்றினார் என்றால் உலகம் ஏன் தானாக தோன்றியிருக்கக்கூடாது?

    ஆகவே இந்த வாதத்தைவிட்டுவிட்டு நாம் மேலே சென்றோம் என்றால் எந்த பொருளும் உருவாவதில்லை , மாற்றம் அடைகின்றன என்பதே உண்மை என்பதை புரிந்துகொள்வீர்கள்.

    நல்லடியார்,

    நீங்கள் கூறியதுபோல் கடவுள் இல்லை என்று சொல்வது சுலபம்தான்.உண்டு என்று சொல்பவருக்கு நிரூபிக்கவேண்டிய கட்டாயம் இருக்கிறது.ஆனால் சிலர் இதை உல்டாவாக கேட்பார்கள்.நீங்கள் நேர்மையாக கூறுகிறீர்கள்.நன்றி.

    இந்து மதமோ, இஸ்லாமோ, கிறிஸ்துவமோ என்னுடைய நிலை எல்லாவற்றிற்கும் ஒன்றுதான். மனிதனுக்கு மீறிய சக்தியை எப்படி வரையறுத்து கொண்டுள்ளீர்கள் என்பதில்தான் பிரச்சினையே அடங்கியுள்ளது.

    ஒவ்வொரு மதமும் ஒவ்வொரு கதை கூறி மற்ற மதங்களை கேள்விக்குள்ளாக்கும்போதே இது எல்லாமே கதைதான் என்ற முடிவுக்கு வருவது தவிர்க்கமுடியாதது.ஏனென்றால் பல்வேறு காலகட்டததில் தோன்றிய நம்பிக்கை.அதை சுயலாபத்திற்காக தூக்கிபிடித்த நிகழ்வுகள்,பல்வேறு மனித பலவீனங்களால் காப்பாற்றப்பட்டுவரும் நம்பிக்கைகள் ஆகிய அடிப்படையில் நிலைத்து நிற்பதுதான் மதங்கள்.

    //இதே கான்செப்டில் ஒருநாள் முழு உலகமும் பிரபஞ்சமும் அனைத்து ஜீவராசிகளும் அழியும் என்று சொல்லப்பட்டால் அதற்கான ஏற்பாடுகள் என்னவாக இருக்கும்?//

    ஒன்றுமே செய்யமுடியாது நல்லடியார் அவர்களே..ஒன்றுமே செய்யமுடியாது..ஆசைப்பட்டதை செய்துவிட்டு போய்சேர வேண்டியதுதான்

    உங்களால் மாற்ற முடிபவை, மாற்ற முடியாதவை என்று விஷயங்கள் இருக்கின்றன்.இந்த மாற்ற முடியாதவை என்ற விஷயம் அறிவியலின் வீச்சை பொறுத்து மாறிக்கொண்டே இருக்கின்றன்.நடுவில் கடவுள் என்று இருக்கமான கருத்தை கொண்டுவந்து மனித நேயததை மறப்போம் என்றால் அது வரலாற்றில் நமக்கு நல்ல பெயரை கொடுக்காது.

  17. இரா.சுகுமாரன்

    //எக்ஸ்ரே என்பது கண்ணுக்குத் தெரியாத மின்காந்தக்கதிர்வீச்சு. கண்ணுக்குத் தெரியவில்லை என்பதற்காக அக்கதிரே இல்லையென்று யாரும் சொல்வதில்லை.//

    கண்ணால் பார்ப்பது, காதால் கேட்பது. தொட்டு உணர்வது, மூக்கால் நுகர்வது போல புலன்களால் உணரப்படுவது மட்டுமே உலகத்தின் உண்டு. மற்றவை இல்லை. (புத்தர்,மற்றும் சார்வாக்கர்)

    எக்ஸ்ரே பற்றிய விளைவுகளை நாம் பார்க்கலாம். நீங்கள் கூறுவதை பார்க்க முடியாது

  18. இப்னு ஹம்துன்.

    அன்பின் நல்லடியார்,
    இறை நம்பிக்கை – சரியா தவறா? என்ற இவ்விவாதம் சுவையாக ச் செல்கிறது.
    அனுமதிப்பீர்கள் எனில் எனக்கு வந்த ஒரு மின்னஞ்சலை இங்கு அளிக்கிறேன். நன்றி

    AN INTERESTING CONVERSATION .

    An atheist professor of philosophy speaks to his class on the problem
    science has with God, The Almighty.

    He asks one of his new students to stand and …..

    >Prof: So you believe in God?
    >Student: Absolutely, sir.
    >
    >Prof: Is God good?
    >Student: Sure.
    >
    >Prof: Is God all-powerful?
    >Student: Yes.
    >
    >Prof: My brother died of cancer even though he prayed to God
    >to heal him.
    >Most of us would attempt to help others who are ill. But God
    >didn’t. How is
    >this God good then? Hmm?

    >(Student is silent.)

    >Prof: You can’t answer, can you? Let’s start again, youngfellow. Is God good?
    >Student: Yes.

    >Prof: Is Satan good?
    >Student: No.
    >
    >Prof: Where does Satan come from?
    >Student: From…God…
    >
    >Prof: That’s right. Tell me son, is there evil in this world?
    >Student: Yes.

    >Prof: Evil is everywhere, isn’t it? And God did makeeverything. Correct?
    >Student: Yes.
    >
    >Prof: So who created evil?
    >Student does not answer.
    >
    >Prof: Is there sickness? Immorality? Hatred? Ugliness? All these terrible things exist in the world, don’t they?
    >Student: Yes, sir.
    >
    >Prof: So, who created them?
    >Student has no answer.
    >
    >Prof: Science says you have 5 senses you use to identify and
    >observe the
    >world around you. Tell me, son…Have you ever seen God?
    >Student: No, sir.
    >
    >Prof: Tell us if you have ever heard your God?
    >Student: No, sir.
    >
    >Prof: Have you ever felt your God, tasted your God, smelt your God? Have
    >you ever had any sensory perception of God for that matter?
    >Student: No, sir. I’m afraid I haven’t.

    >
    >Prof: Yet you still believe in Him?
    >Student: Yes.
    >
    >Prof: According to empirical, testable, demonstrable protocol, science says your GOD doesn’t exist. What do you say to that, son?
    >Student: Nothing. I only have my faith.
    >
    >Prof: Yes. Faith. And that is the problem science has.

    >Student: Professor, is there such a thing as heat?
    >Prof: Yes.

    >Student: And is there such a thing as cold?
    >Prof: Yes.
    >Student: No sir. There isn’t.
    >
    >(The lecture theatre becomes very quiet with this turn of
    >events.)
    >
    >Student: Sir, you can have lots of heat, even more heat,
    >superheat, mega
    >heat, white heat, a little heat or no heat. But we don’t
    >have anything called cold. We can hit 458 degrees below zero which is no heat, but we
    >can’t go any further after that. There is no such thing as
    >cold. Cold is
    >only a word we use to describe the absence of heat. We
    >cannot measure cold.
    >Heat is energy. Cold is not the opposite of heat, sir, just
    >the absence of
    >it.
    >
    >(There is pin-drop silence in the lecture theatre.)
    >
    >Student: What about darkness, Professor? Is there such a
    >thing as darkness?
    >Prof: Yes. What is night if there isn’t darkness?
    >
    >Student: You’re wrong again, sir. Darkness is the absence of
    >something. You
    >can have low light, normal light, bright light, flashing
    >light….But if
    >you
    >have no light constantly, you have nothing and it’s called
    >darkness, isn’t
    >it? In reality, darkness isn’t. If it were you would be able
    >to make
    >darkness darker, wouldn’t you?
    >Prof: So what is the point you are making, young man?
    >Student: Sir, my point is your philosophical premise is
    >flawed.
    >Prof: Flawed? Can you explain how?
    >
    >Student: Sir, you are working on the premise of duality. You
    >argue there is
    >life and then there is death, a good God and a bad God. You
    >are viewing the
    >concept of God as something finite, something we can
    >measure. Sir, science
    >can’t even explain a thought. It uses electricity and
    >magnetism, but has
    >never seen, much less fully understood either one.
    >
    >To view death as the opposite of life is to be ignorant of
    >the fact that
    >death cannot exist as a substantive thing. Death is not the
    >opposite of
    >life: just the absence of it.
    >
    >
    >Now tell me, Professor. Do you teach your students that they
    >evolved from a
    >monkey?
    >Prof: If you are referring to the natural evolutionary
    >process, yes, of
    >course, I do.
    >
    >Student: Have you ever observed evolution with your own
    >eyes, sir?
    >(The Professor shakes his head with a smile, beginning to
    >realize where the
    >argument is going.)
    >
    >
    >Student: Since no one has ever observed the process of
    >evolution at work
    >and
    >cannot even prove that this process is an on-going endeavor,
    >are you not
    >teaching your opinion, sir? Are you not a scientist but a
    >preacher? (The
    >class is in uproar.)

    >Student: Is there anyone in the class who has ever seen the
    >Professor’s
    >brain?
    >(The class breaks out into laughter.)
    >
    >
    >
    >Student: Is there anyone here who has ever heard the
    >Professor’s brain,
    >felt
    >it, touched or smelt it? No one appears to have done so. So,
    >according to
    >the established rules of empirical, stable, demonstrable
    >protocol, science
    >says that you have no brain, sir.
    >
    >With all due respect, sir, how do we then trust your lectures, sir?
    >
    (The room is silent. The professor stares at the student,
    his face unfathomable.)
    >
    >Prof: I guess you’ll have to take them on faith, son.
    >
    >Student: That is it sir… The link between man & god is
    >FAITH. That is all
    >that keeps things moving & alive.
    >.
    >. WANT TO KNOW WHO THAT STUDENT WAS?

    Our President Dr. A.P.J Abdulkalam.

    (Sorry for a நீண்ட பின்னூட்டம்.:-))!

  19. சுல்தான்

    //இந்த எளிய உண்மை கூட உங்களுக்குப் புரியவில்லை. யூதர்கள் தங்கள் மதத்தினையும், அறிவியலையும் போட்டுக் குழப்பிக் கொள்வதில்லை. எனவே தான் அவர்க்ளால் அறிவியலில் சாதிக்க முடிகிறது.//
    உலகத்தில் முஸ்லீம்களிடமே எல்லா வசதிகளும் (குறிப்பாக எண்ணெய் வளம்) வாய்ப்புகளும் கொடுக்கப்பட்டிருந்தும் அவர்கள் முன்னேறாததும், மற்ற சமூகத்தார் முன்னேறுவதற்கும் ஒரே காரணம்தான். ‘அவரவர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேதத்தை விட்டும் அந்நியமானதுதான்’

  20. மு.மயூரன்

    நல்லடியார்,

    ரொம்ப சீரியசாகத்தான் கேட்கிறேன்,

    1. இஸ்லாம் நம்பிக்கையா, இந்து நம்பிக்கையா, கிறிஸ்தவ நம்பிக்கையா, யூத நம்பிக்கையா, அல்லது மகியங்கனை வேடுவர்களின் நம்பிக்கையா, எந்த நம்பிக்கை சரி?

    2. இவர்கள் எல்லோரும் நம்புவது சரியானால், குர் ஆன் ஏன் மற்றைய மத வழிபாட்டு முறைகளை நிராகரிக்கிறது?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *