Featured Posts
Home » பொதுவானவை » நிகழ்வுகள் » கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

கருத்துச் சுதந்திரமா? ஆணவமா?

Articleகடந்த 2005-ம் ஆண்டு செப்டம்பரில், முஹம்மது நபி(ஸல்) அவர்களை கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் டென்மார்க்கிலிருந்து வெளிவரும் ஜீலன்ட்-போஸ்டன் பத்திரிக்கை 12 கேலிச் சித்திரங்களை வெளியிட்டது.

ஜீலன்ட் பத்திரிக்கை வெளியிட்ட 12 கேலிச்சித்திரங்களில் பதினொன்று நபி(ஸல்) அவர்களைப் பயங்கரவாதியாகவும் மற்றொன்று அவர்களைப் பாலியல் வாதியாகவும் சித்தரிக்கும் வகையில் வரையப்பட்டிருந்தன. துப்பாக்கி, வாள் ஆகியவைகள் பிடித்துக் கொண்டு இருப்பது போன்றும், அவர்கள் தலைப்பாகையில் வெடிகுண்டு இருப்பது போன்றும் கேலிச்சித்திரங்கள் வெளியாயின.

இக்கேலிச் சித்திரங்கள் வெளிவந்தது முதல் உலகெங்கிலும் உள்ள முஸ்லிம்கள் டென்மார்க் நாட்டிற்கும் ஜீலன்ட் பத்திரிக்கைக்கும், அதை வரைந்தவருக்கும் எதிராக எதிர்ப்புகள் தெரிவிக்கப்பட்டிருந்தன. முஸ்லிம்கள் மட்டுமல்லாது மனிதப் பண்புடைய அனைவரும் உலகளவில் டென்மார்க் நாட்டுக்கு எதிராகக் குரல் எழுப்பின. எதிர்ப்புகள் வலுவடையவே அந்த பத்திரிக்கையின் வலைதளத்திலிருந்து 12 கேலிச்சித்திரங்களும் நீக்கப்பட்டன. எனினும் இன்று வரை அப்படங்கள் வெவ்வேறு வலைதளங்களில் இருந்துகொண்டுதான் இருக்கின்றன.

தற்போது அந்தக் கேலிச் சித்திரங்களையே மறுபடியும் செய்தியாக்கி வெளியிட்டு உலக முஸ்லிம்களின் மனதை காயப்படுத்தியுள்ளன.

கடந்த பிப்ரவரி 13, புதன் அன்று மீண்டும் இந்தக் கேலிச்சித்திரங்களை ஜீலன்ட், பெர்லின்கே (Berlingske Tidende) ஆகிய ஐரோப்பிய பத்திரிக்கைகள் வெளியிட்டன. இதனால் உலகெங்கும் மீண்டும் டென்மார்க்கிற்கு எதிர்ப்பு உருவாகியுள்ளது.

இஸ்லாத்தை இழிவுபடுத்துதல், திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளை திரித்து எழுதுதல் போன்ற செயல்கள் தொன்று தொட்டு மேலைநாடுகள் இஸ்லாத்திற்கு எதிராக செய்துவரும் முயற்சிகள் ஆகும். இவர்களுக்கு நன்றாகத் தெரியும் இஸ்லாத்தில் உருவ வழிபாடு என்பதும் இல்லை. முஹம்மது நபி(ஸல்) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் உருவமாக வரைந்தால் இஸ்லாமியர்கள் மனம் புண்படும் அவர்கள் இக்காரியத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும். எனினும் அவர்களின் நோக்கம் இஸ்லாத்தையும், முஸ்லிம்களையும் இழிவுபடுத்த வேண்டும் என்பதேயாகும்.

கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் இத்தகைய ஆணவச் செயலை மீண்டும், மீண்டும் டென்மார்க் புரிந்து வருகின்றது. உலக முஸ்லிம்கள் மற்றும் மனிதப் பண்புள்ள அனைவரும் டென்மார்க்கின் இத்தகைய செயலுக்குக் கடின எதிர்ப்பைத் தொடர்ந்து தெரிவிக்க வேண்டும். பொருளாதாரம் மற்றும் வர்த்தகத்தில் டென்மார்க் வீழ்ச்சியடைய அவர்களின் தயாரிப்புகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும்.

விசுவாசங்கொண்டோரே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் (உங்களுக்கு) நண்பர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள், (உங்களுக்கு விரோதம் செய்வதில்) அவர்களில் சிலர், சிலருக்குப் பாதுகாவலர்களாக இருக்கின்றனர், உங்களில் எவரேனும் அவர்களை(த் தனக்கு)ப் பாதுகாவலராக்கிக் கொண்டால், அப்போது நிச்சயமாக அவரும் அவர்களில் உள்ளவர்தாம், நிச்சயமாக அல்லாஹ் (இந்த) அநியாயக்கார சமூகத்தார்க்கு நேர்வழி காட்ட மாட்டான்’. (திருக்குர்ஆன் 5:51)

5 comments

  1. farooq saudiarabia alrass

    assalamu alaikkum veelvathu naamaga irunthalum vaalvathu islamaaha irukkattum. denmark porutkkal thavirppeer kayavargalukku paadam puhattuveer wassalaam

  2. அஸ்ஸலாமு அலைக்கும் இஸ்லாத்தை நாம் பற்றி பிடித்திருக்கும்வரை நமக்கு வீழ்ச்சி இல்லை. டென்மார்க் நெதர்லாந்து போன்ற நாடுகளிலிருந்து சாமான்கள் உணவுகள் வாங்கக் கூடாது.

    இந்த இரு நாட்டினர்களுக்கும் எந்த தீங்கும் செய்யாத முஸ்லிம்கள். நம் மனம் புண்படும் வகையில் செய்யும் இவர்கள் நோக்கம் ரொம்ப அருமை. இதிலிருந்து தெரிகிறது இவர்களின் சித்தாந்தம் இவர்களுக்கு இதுவரைக்கும் என்னத்தை போதித்துள்ளது? என்று

    ஹும்

    மா சலாம்.

  3. Praise be to Allah, The Beneficent and The Merciful..

    Every action against Islam, willing or unwilling by human race has always blessed the Muslims some way or the other…

    This third rated attack on our Prophet has also brought in some blessing (Al Hamdulillah);

    Please read this article, which is a wake up call and unless we are put to these situation, we would never realise.

    http://www.arabianbusiness.com/502306-saudi-to-take-on-danes-in-insulin-market

  4. Assalamu alaikum
    Dear brothers, I am wondering if you guys can help in finding the denmark products, Can you give us a list of those Items, so we can avoid. I am sorry, I was away from Internet for long time. So I don’t know you have done this already.

  5. Assalamu alaikum.. Dear brother Haji mohammed…

    Hope you all know about the Denmark newspaper who made fun of our holy Prophet and till now they do not regret… let us make them regret for good…

    The Danish Ambassador, Prime Minister and Denmark National Channel; all are trying to do something just to stop the boycott by Muslims since last month through which their losses have reached 2 billion Euro. If we continue to boycott Denmark products 7 months more it could reach around 40 billion Euro’s loss.

    Believers do not let this message stop in your PC. Please forward this text to as many Muslims as possible…

    REMEMBER THE PROPHET (SAW) MIGHT ASK YOU ON THE DAY OF JUDGMENT,’ WHAT DID YOU DO WHEN THEY MADE FUN OF ME? HOW DID YOU DEFEND ME?????’

    7up drink -LEGO – Cadbury chocolates -Hall Chewing gums or any product with barcode no. starting with 57

    Plz convince all Muslims to circulate this to Muslim ummah to ban Danish made products.

    Brother in Faith..
    fardeen

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *